Home Blog Page 48

Foreword to Lakshmi Saravanakumar’s novel, Huntsman

0

The beauty of Lakshmi Saravanakumar’s novel, Huntsman, lies in how masterfully Saravanakumar weaves issues of ecology and wildlife, rights of forest dwellers, and the clash between the traditional and the modern in a plot that is as gripping as the moments one might spend sitting on a machan on a tall tree in a dense forest on a full moon night, anticipating the arrival of a tiger. Besides this, Huntsman is a study in masculinity and how an indigenous community – with their roots in forest and nature – works and the interpersonal relationships between the members of such a community. In Huntsman, there is the thrill of going on a hunt; there is concern for the environment and people who have traditionally lived in forests as the forests provide them everything that they need for their survival; and the cruelty and indifference of the moneyed and the powerful. But these are the big things. What I specifically loved in Huntsman were the details that built up the novel when the bigger issues were not being narrated. For example, the naturalness with which polygamy and polyamoury has been depicted. I am afraid I might give out spoilers, but I cannot not mention the relationship that Thangappan – the leading man, the eponymous “huntsman” of the novel – has with his three wives – Mari, Sagayarani, and Chellayi – and the feelings about other men that the wives might have. Then there is Thangappan’s masculinity which is fragile enough to be hurt by the disapproval of a child. I would just say that these details – apart from the important bigger parts which are already there – are what make Saravanakumar’s Huntsman such an engrossing and – I believe it is – important read.

The Old Man Who Read Love Stories by Luis Sepúlveda (the version I read was an English translation by Peter Bush) is one of my favourite novels and reading Saravanakumar’s Huntsman quite reminded me of Sepúlveda’s novel. Like Antonio José Bolívar, the eponymous “old man” in Sepúlveda’s novel, Thangappan too is a huntsman. Bolívar’s quarry is an ocelot, while Thangappan hunts a tiger. Just like the ecology in Sepúlveda’s Ecuadorian Amazon is shown to be facing an onslaught from the outside world, the Agamalai forest in Saravanakumar’s novel too is being threatened by the government-businessmen nexus. I read both these novels in their English translations and feel fortunate for it for both are such memorable works. Aswini Kumar’s translation from Tamil to English, from Kaanagan to Huntsman, embraces the translated-into language in such a way that there seems to be no gap between the language in which the story was originally written and the language in which I ultimately got to read it. The devotion to Goddess Palichi, Sadayan’s madness and visions of butterflies, and life in the settlement of Mokkanilai are, I am certain, as evocative in the Tamil original as I read in the English translation.

I often come away from the books and stories I read with my favourite lines from those works. My favourite line in Huntsman is this:

“Each star was the soul of a dead tribal.”

We are living in such bizarre times where, on the one hand, indigenous women are being recognised and honoured for their work in the preservation of seeds while, on the other hand, mangrove forests are being destroyed. The world appears a bleak place now and I hope stories like Lakshmi Saravanakumar’s Huntsman give us the insights that our world so badly needs at this time.

Hansda Sowvendra Shekhar:

For his debut novel, The Mysterious Ailment of Rupi Baskey, Shekhar won the 2015 Yuva Puraskar, was shortlisted for the 2014 Hindu Literary Prizeand the 2014 Crossword Book Award, longlisted for the 2016 International Dublin Literary Award,and jointly won the 2015 Muse India Young Writer Award.The Mysterious Ailment of Rupi Baskey was named by The Hindu in December 2019 as one of the ten best fiction books of the decade.

For his second book, The Adivasi Will Not Dance: Stories, Shekhar was shortlisted for the 2016 Hindu Literary Prize.

இவரது நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘ஆதிவாசிகள் இனி நடனமாட்டார்கள்’ என்று வெளியாகி (எதிர் வெளியீடு) நல்ல கவனம் பெற்றது.

லஷ்மி சரவணகுமார் சிறுகதைகளில் பெண் பாத்திரங்கள்

0

ஜெயந்தி சங்கர்

சில மாதங்களுக்கு முன்னர் ‘மாயா’ இலக்கியவட்டம் சார்பில் பேசுவதற்காக என்னை அழைத்தார் அமைப்பின் தலைவர் ரமா சுரேஷ். ஆறாண்டுகளாக எழுதுவது ஆங்கிலத்தில் என்றானபிறகு நான் தமிழில் வாசிப்பது குறைந்து கிட்டத்தட்ட இல்லாமலே போனது என நான் மிகத் தயங்கியதை எளிதில் புறந்தள்ளிவிட்டு படிக்கச் சொல்லி லஷ்மி சரவணகுமார் எழுதிய பத்து கதைகளைக் கொடுத்தார். அதில் உள்ள பெண் பாத்திரங்களைக் குறித்துப் பேசுமாறும் வேண்டினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வாசித்ததால் ஏற்பட்டதொரு வித்தியாசமானதோர் உணர்வோடுதான் வாசிக்கவே தொடங்கினேன். 

உண்மையில், எந்த முன்முடிவும் இல்லாமலே கதைகளுக்குள் போனேன் என்று முதலில் சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில், கதாசிரியரை முன்னரே அறிவேன் என்றாலும் அவரது ஆக்கங்களை ஆங்காங்கே முன்பெப்போதோ உதிரியாக வாசித்திருந்தேன் என்றாலும், ஒட்டுமொத்தமாக, ஒரு நாவலாக வாசித்திருக்கவில்லை.

ஒன்றிரண்டு கதைகளை வாசிக்கையிலேயே அவை என்னை நிமிர்ந்து உட்கார வைத்தன என்பதை முதலில் உணர்ந்தேன். முகத்தில் அறைவதைப் போல அவற்றில் ஒழுகிய எதார்த்தத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதோ பார், இப்படி ஓர் உலகமும் இருக்கிறது, இப்படியான பெண்களும் இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு கதையிலும்  பொங்கி வழிந்த கசக்கும் உண்மைகள் அடுத்துவந்த சிலநாட்களுக்கு என் உறக்கத்தைப் பிடுங்கின. அக்கதைகளிலிருந்து வெளியேற எனக்கு நாட்கள் பல ஆனது. ‘எப்படி இவரால் இதுபோல பெண் பாத்திரங்களைத் திரட்டி உருட்டி செதுக்கிவிட முடிகிறது?’ என்ற கேள்வி தொடர்ந்து எனக்குள் சுழன்றது. 

’முகமற்றவள்’ கதையின் முக்கிய கதாபாத்திரமான மாலதி அந்தத் தெரு ஆண்களாலும் விடலைகளாலும் சதா துன்புறுத்தப்பட்டும், ஏளனப்படுத்தப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும் வருகிறாள். காரணமே இல்லாமல், பெண் என்ற ஒரே காரணத்துக்காக மாலதி நடத்தப்படும் விதம் பல பெண்களைப் பிரதிநிதித்துதான் புனையப்பட்டுள்ளது. அவள் மனத்தைக் காணத்தவறிய தெருக்காரர்களுக்கு அவள் அவ்விடம் விட்டு வேறு இடத்துக்குக் குடி போனதும் அவள் முகமும் மறந்து போகிறது. ஒருதடவை இளைஞர் குழாம் செய்துவிடுவோம் என்று மிரட்டியதிலிருந்தே அவளுக்குக் கிடைக்கும் யோசனையை இறுதியில் சடாரென்று செயல்படுத்துவது மிரட்டலாய் வெளிப்பட்டிருக்கிறது. 

சமீபத்தில் நான் கண்டதொரு திரைப்படத்தின் பகுதியை நினைவு படுத்திய ஒரு கதையும் இதில் உண்டு. அதை வாசித்ததுமே அந்தத் திரைக்கதையில் கிளை எனக்கு நினைவுக்கு வந்தது ஆச்சரியம்தான். எது முதலில் வந்தது என்பதுபோன்ற ஆராய்ச்சிகளுக்குள் என் மனம் செல்லவில்லை. உண்மையில், படைப்பூக்கச் சிந்தனைகளில் சிலவேளைகளில் ஏற்படக்கூடிய தற்செயலான ஒற்றுமைகளாக நான் சிலவற்றை வாசித்ததும் கண்டதுமுண்டு. 

யாரையுமே சடாரென்று உலுக்கிவிடக்கூடிய கருவைக் கொண்டதான ‘பிங்கி’ கதை சற்றே நீண்டதாகத் தோன்றினாலும், மையக்கதாபாத்திரத்தை திடமாக, உறுதியாக வடித்து நிறுத்துவதற்கு அது தேவைப்பட்டிருக்கலாம் என்று புரிந்தது. இறுதியில் நடக்கும் சம்பவத்துக்கும், உளவியலுக்கும் வாசகரை இட்டுச் செல்லும் அழகிய கடல் பின்புலமும் நவீன சுதந்திர சிந்தனை கொண்ட பெண்மொழியுமாக பின்னணி அழுந்தவே விழுந்திருக்கின்றன. இறுதியில் உதறிக்கொண்டு எழும் பிங்கி  என்ற அந்தப் பெண் யோசிப்பது அசலாய் ஒரு பெண்ணால் மட்டுமே யோசிக்க முடியக் கூடியது. 

ஓர் ஆணால் எந்த அளவுக்கு பெண் மனதைப் புரிந்துகொள்ள முடியும்? தேய்ந்து போன கேள்வியாக இல்லை நான் இதனை இங்கே முன்வைப்பது. கதையில் வரும் பெண் பாத்திரத்தை உணரமுடிவதாக எத்தனை ஆண் கதாசிரியர்களால் படைத்துவிட முடிகிறது? பெண்ணுடைய உளச்சிக்கல்களை, குமுறல்களை, சதா அச்சுறுத்தலாய் முன்நிற்கும் சமூகத்துடனான போராட்டத்தை எத்தனை ஆண் எழுத்தாளர்களால் எழுத்தில் கொண்டு வந்துவிட முடிகிறது? 

நான் நிறையவே வாசிப்பவள். நேரடி ஆங்கில ஆக்கங்கள் மட்டுமின்றி பிறமொழி ஆக்கங்களை ஆங்கில மொழிபெயர்ப்புகளாகவும் தமிழிலும் ஏராளமான கதாசிரியர்களுடைய ஆக்கங்களை வாசித்தவள் என்ற அளவில் லஷ்மி சரவணகுமார் உருவாக்கியுள்ள விளிம்புநிலைப் பெண்களைப் போன்ற கதாபாத்திரங்களை கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ போன்ற அரிய சில படைப்புகளில் மட்டுமே ரத்தமும் சதையுமாக, சமூகத்தோடு சதா போராடுபவளாக நாம் உணரலாம். ஆண் பெண்ணை சக மனுஷியாக உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியம். லஷ்மி சரவணகுமாரின் கதைகளை வாசித்து முடித்ததுமே, முக்கியமாக எனக்குள் தோன்றியதோர் உணர்வு இதுவாகவே இருந்தது.   

அலங்காரங்களில்லாமல் அவலங்களைச் சொல்கிறார். அதே நேரத்தில் உண்மையான கதைகளையும் பாத்திரங்களையும் வடித்துவிட முடிகிற லஷ்மி சரவணகுமார் பெண்களை உற்று கவனிப்பதோடு அவர்களின் வலிகளை, துயர்களை, கொண்டாட்டங்களை, கொடுமைகளைத் தனதாக்கி உணர்கிறார் என்பது கதைகளில் நான் உணர்ந்து கொண்டேன். இல்லாவிட்டால், இவ்வளவு அழுத்தமாக வாசகரை உணர வைத்துவிட முடியாது. பாத்திரமாய்  வடிக்க முடியாது போனாலும்  இப்படி பெண்ணை கவனிக்க, உணர முடிந்த இது போன்ற ஆண்கள் நம் சமூகத்தில் இன்னும் இன்னும் நிறைய பேர் இருந்தால் எவ்வளவு அழகான உலகமாக இது மாறிவிடும் என்றெல்லாம் தோன்றாமல் இல்லை.

***

ஜெயந்தி சங்கர், மதுரையில் பிறந்தவர். தற்பொது சிங்கப்பூரில் இருக்கிறார். 1995 ஆம் ஆண்டிலிருந்து சிறுகதைகள், கட்டுரைகள், நெடுங்கதைகள், புதினங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆகிய அனைத்துத் தளங்களிலும் எழுதி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இவரது பல நூல்கள் பல விருதுகள் பெற்றுள்ளன.

இவரது வலைப்பூ : http://jeyanthisankar.blogspot.com/

பெருவனத்தில் சுற்றியலையும் புள்ளிமானும் ஒரு பட்டாம்பூச்சியும்

0

ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்

கொமோரா ஒரு பெருங்காடு. அத்தனை விதமான வேட்டை மிருகங்களும் பெரும் பசியுடன் சுற்றியலையும் அடர்காடு. அந்தக் காட்டு மிருகங்களின்  மாமிச வேட்டையில் இருந்து தப்பிப்பிழைத்து உயிர்வாழ வேண்டுமானால், காட்டுத்தனமாக ஓடி ஒளியத் தெரியவேண்டும். அல்லது மிருகங்களைப்போல் சண்டையிட வேண்டும். முதலில் ஓடி ஒளியும் அழகரும், கதிரும், பின் யாருக்கும் அடங்கா வேட்டை மிருகங்களாக உருமாறுவது, தொடர்ந்து தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளால் தான். தன்னை வேட்டை மிருகமாக மாற்றிய சமூகத்தை எதிர்த்து அழகரின் வேட்டையும், அழகர் எனும் கட்டுக்கடங்கா மிருகத்தை எதிர்த்துக் களமாடும் புள்ளிமானாகக் கதிரும், தங்களை இந்தப் பெருங்காட்டில் பொருத்திக் கொள்வது இப்படியாகத்தான்.

கானகனில் பழியின் வெப்பம் கொண்ட வேங்கையின் மூலமாக, வாசி தன் அப்பன் மீதான வேட்டையை நிகழ்த்துகிறான் என்றால், கொமோராவில் கதிரே அந்த வேட்டைக் கருவியைத்  கையில் எடுக்கிறான். ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொள்ளும் பெருங்காட்டில் தப்பிப்பறக்க நினைக்கும் பட்டாம்பூச்சியாக மாற நினைப்பது ஜோதியாகத்தான் இருக்க வேண்டும்.   

கொமோராவில் இருந்து ரூஹ் வேறுபடும் புள்ளியும் இதுதான். கொமோராவைப் போலவே ரூஹ் நிகழ்வதும் ஒரு பெருங்காட்டில்தான். பல்வேறு வேட்டை மிருகங்கள் சுற்றியலையும் அந்தப் பெருங்காட்டினுள் பின்னப்பட்ட சிறிய கூட்டில் வசிக்கும் பறவைகளுக்கு இடையே நிகழும் கதையிது. அந்தக் கூட்டை விட்டுப் பறக்கவும் வேண்டும், உயிரும் முக்கியம் என்ற இரு கோடுகளுக்கு இடையே நிகழும் வாழ்க்கை ‘ரூஹ்’வில் காட்சியாக்கப்பட்டிருக்கும் சித்திரம். பசியின் வேட்கை கொண்ட மிருகங்களின் வன்முறைக்குப் பழகி, பலியாகி, பின் அவற்றில் இருந்து தப்பிப் பிழைத்து தங்களுக்கான வானில் உயரப் பறக்கும் பறவைகளின் கதையிது. இந்தக் கதையின் உன்னதமான சித்திரம் ராபியா – ஓர் அன்னப்பறவை என்றால்,  அவளின் மூலம் மீட்டெடுக்கப்படும் ஜோதி –  பட்டாம்பூச்சி.

வெறிகொண்ட புள்ளிமான், மதங்கொண்ட வேட்டை மிருகத்தைக் கொன்று அழிக்கும் அதே கானகத்தில், ஒரு பட்டாம்பூச்சி தாய்மையைத் தேடியலையும் கதை ரூஹ்.

இந்தப் படைப்புகளின் மைய கதாபாத்திரங்களாக வலம் வரும் அழகர், கதிர், ஜோதி என்ற மூன்று சிறுவர்களின் வாழ்க்கையையும் மூன்று தனித்தனிக் கதைகளாகவோ அல்லது ஒருவரோடு ஒருவர் தொடர்புடைய மூன்று இணை மனிதர்களாகவோப் பார்க்கலாம். இதன்மூலம், பல்வேறு அடுக்குகளாகக் கட்டப்பட்டிருக்கும் கொமோராவின் தொடர்ச்சியாக ரூஹ் இடம்பெறுவதும், இந்த மூன்று கதைகளுமே மூன்று தனித்த வாழ்க்கையை ஒரே புள்ளியை நோக்கி இழுத்துச்  செல்வதையும் புரிந்துகொள்ள முடியும். அது எந்த ஒற்றைப் புள்ளி என்பதுதான் லஷ்மியின் படைப்புகள் நம்மிடம் எழுப்பும் கேள்விகளும் அதன் மூலம் நாம் தேடும் பதில்களுமாக  நிற்கின்றன.    

எளிய மனிதர்கள் தனித்துவிடப்பட்ட போதிலும் சரி, கூட்டமாக வாழும்போதும் சரி, துரத்தப்பட்டும் அலைக்கழிக்கப்படவும்தான் செய்வார்கள் என்ற எளிய உண்மையில் இருந்தே ஆரம்பமாகிறது கொமோராவும் ரூஹ்’வும்.

கம்போடியாவில் இருந்து பெயர்த்தெடுக்கப்படும் பெருமக்கள் கூட்டமாகட்டும், தங்கள் குழந்தைமையில் இருந்து பிடுங்கி எறியப்படும் அழகரும் கதிருமாகட்டும், இதற்கான மிகப்பெரும் உதாரணங்களாகவே இந்த நாவலில் கட்டமைக்கப்பட்டுள்ளார்கள். கொமோராவின் தொடக்கத்தில் வரக்கூடிய,  பாறைச்சாமியின் திருவிழாக் கொண்டாட்டத்தில், வேரில் இருந்து அகற்றப்பட்ட மக்கள், தொலைவில் இருந்துகூட தங்கள் குலச்சாமிக்கான படையலைக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள் –  அவர்களை இந்த மண்ணில் இருந்து அகற்றியவர்கள்.

இதே போன்ற காட்சியைத்தான் கம்போடியாவிலும் காண முடிகிறது. கம்போடிய மக்கள், தங்கள் குலதெய்வ வழிபாட்டினைக் கொண்டாடத் தடைசெய்த கெமர்ரோஜ் படையினருக்கும், இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது? அங்கே துப்பாக்கிக் குண்டுகளின் மூலம் சாத்தியப்படுத்திய ஒரு விஷயத்தை, இங்கே வேரில் நஞ்சைப் பாய்ச்சுவதன் மூலம் பிடுங்கி எறிந்திருப்பார்கள். இரண்டு இடங்களிலும் மக்களின் மனதில் விதைத்த பயம் என்னும் உணர்வே அவர்களை அந்த நிலத்தில் இருந்து விரட்டி இருக்கும். பயத்தை உருவாக்குவாதற்காக எடுக்கப்பட்ட கொலைக்கருவிகள் வேண்டுமானால் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் நோக்கம் ஒன்றுதான். மராட்டிய நிலத்தில் இருந்து ஆங்ரேவின் தளபதியின் மூலமாக இடம் மாற்றப்படும் தோல்பாவைக் கலைஞர்களும் அவர்களின் தொடர்ச்சியாக அலைகழிக்கப்படும் ஜோதியின் குடும்பமும் வேரில் இருந்து பிடுங்கி வேறு நிலத்தில் நடப்பட்டவர்கள்தாம்.

இதுபோன்ற காட்சிப்படுத்தல்களின் மூலமாக, லஷ்மியின் படைப்புகளில், ‘தொடர்ந்து தூரத்தப்பட்டுக் கொண்டே இருக்கும் மக்களையும், அதன் பின் இருக்கும் அரசியலையும், அந்த அரசியல் ஏற்படுத்தும் சிக்கல்களையும்’ கவனிக்க முடியும். உப்புநாய்களில் ஆதம்மாவின் குரலாக, கானகனில் அடித்து விரட்டப்படும் பூர்வக்குடிகளின் குரலாகவும் ஒலிப்பது, தொடர்ந்து தூரத்தப்பட்டுக் கொண்டே இருக்கும் மக்களின் குரலைத்தான்.

கொமோரா, முழுக்க முழுக்க விலகலுக்கான, வெறுப்பிற்கான, எதுவும் வேண்டாமெனக் கலைந்து ஒடுவதற்கான எழுத்து என்றால், கொமோராவில் பேசப்பட்டுவதைப் போலவே தனிமனித, சமூக ஒழுக்கச் சிக்கல்களைக் கொண்டிருக்கும் ரூஹ், இணைந்து, இணக்கமாக வாழ்வதற்கான, தனிமனித, சமூக ஒழுக்கச் சிக்கல்களையும் கடந்த ஆன்ம ஒளியின் பாதையில் வழி நடத்தும் அன்பு அன்பு அன்பு என்று அன்பை மட்டும் கொடுக்கவும் எதிர்பார்க்கவும் செய்யும் படைப்பு. இந்தப் புள்ளியில் இருந்து விலகிப் பார்த்தால் இந்தப் படைப்பில் பேசப்படும் அன்பு, சற்றே அதிதீமாகவும், திகட்டுவதாகவும் இருக்கக்கூடும். உண்மையென்னவென்றால், எதையும் எதிர்பாராமல் கொடுக்கப்படும் அன்பு, அதீதமாகவும் திகைப்பூட்டச் செய்வதாகவும்தான் இருக்கும்.

அழகர், கதிர், ஜோதி என்ற இந்த மூன்று குழந்தைகளையும் சில விஷயங்கள், சில தருணங்கள் ஒற்றுமைப்படுத்துவதையும், வேற்றுமைப்படுத்துவதையும் கவனிக்க முடியும். இந்த மூவருமே பிறழ்வடைந்த பால்யத்தைக் கொண்டவர்கள். எந்நேரமும் பசியை உணரும் வயிறு அவர்களுடையது. அதிகாரத்தின் கால்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களை நசுக்கக்கூடும். பாலியல் கரங்கள் எந்த வேளையிலும் அவர்கள் உறுப்புகளின் மீது படரக்கூடும். அடக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, ஒடுக்கபட்ட பால்யம் அவர்களின் சுதந்திர மனவெளியைச் சிதைத்திருப்பதை நம்மால் உணரக்கூடும்.

இந்த மூவரில் சற்று அதீதமான வதைகளுக்கு ஆளான சிறுவன் அழகர்தான். ஒருமாதிரி மரத்துப் போன இதயத்தைக் கொண்டவன். தங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை தாங்காமல் எதிர்வினையாற்றும் கதிருக்கும் ஜோதிக்கும் கிடைத்த வாய்ப்பு கூட அழகருக்குக் கிடைத்திருக்கவில்லை.  தொடர் தாக்குதல்களின் மூலமாகவும், தூரத்தல்களின் மூலமாகவும், சமூகம் அவனை விரட்டிக்கொண்டே இருக்கிறது. அவனும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டே இருக்கிறான். அதுவே அவனை எல்லைகளற்ற வெளியை நோக்கி துரத்திவிடுகிறது. அத்தனை சமூக ஒழுங்கிற்கும் அப்பாற்பட்டவனாக, அவற்றைப் பொருட்படுத்தாதவனாக மாறிவிடுகிறான். அடுத்தவர்களைப் பற்றி யோசிப்பதற்கு அங்கே இடமில்லை. அடுத்தவர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதைப் பற்றியும் கவலை கொள்வதில்லை. அழகர்சாமியின் இந்த சித்திரம் இறுதிவரைக்கும் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கும். அழகர்சாமியின் உலகத்தை மிக நெருக்கமாகப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. இதற்கான அர்த்தம் அழகர்சாமி, தன்னை யாரும் நெருங்கிவர அனுமதிக்கவில்லை என்று புரிந்து கொள்ளலாம்.

ஆனால் கதிரைச் சுற்றி மிகப்பெரிய உலகமிருக்கிறது. பல தருணங்களில் அந்த உலகமே அவன் எதிர்கொள்ளும் சிக்கல்களில் இருந்து அவனைக்  காப்பாற்றுகிறது. இதில் காட்சிப்படுத்தப்படும் சிறிய வித்தியாசம் என்னவென்றால், கதிரைக் காப்பாற்றுவது கதிரைச் சுற்றி உருவான உலகமென்றால், கதிரைப் பலியாடாக்குவது, அவன் கட்டமைக்க முயன்ற உலகம். கதிர் வாங்கி வந்த வரமும் இதுதான்.  கொமோராவாகட்டும், ரூஹ் ஆகட்டும், சுய விமர்சனங்களுக்கு இணையான விமர்சனங்கள் சக கதாபாத்திரங்களின் மீது வைக்கப்படுகிறது. கதிர் குறித்தோ ஜோதி குறித்தோ நாம் நினைப்பதை, அவர்களைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் பேசுகிறார்கள். சில சமயங்களில் நாம் நினைத்துப் பார்க்காத அகவெளி குறித்தும் அவர்கள் உரையாடுகிறார்கள். நாவல் கட்டமைப்பின் மிகமுக்கியப் புள்ளியாகக் கருதுவது இதைத்தான். முருகன், சந்திரன், சக்தி, லதா, ஆண்ட்ரூ சாமி எனப் பலரும் கதிரின் சுயம் மீது வைக்கும் விமர்சனங்கள் கதிர். அவனே மறுக்க முடியாத சுயம்தான் அவர்களின் வார்த்தைகள். எவ்வளவு முறை விலகல் குறித்து யோசித்த போதும் மீண்டும் மீண்டும் அவர்களைச் சுற்றியே தன்னைக் கட்டமைத்துக் கொள்வதும் இதன் காரணமாகத்தான். தனக்கென ஒரு வீடு, ஓர் உலகம் வேண்டுமென அவன் கொள்ளும் ஆசைகளும் முயற்சிகளும் தோற்கும் போதெல்லாம் அவன் அப்பாவின் மீதான கோபம் வெறியாக மாறுகிறது. அப்பாவைக் கொல்ல வேண்டும் என்னும் அதீத வெறுப்பை நோக்கி இழுத்துச் செல்கிறது. ஜோதி வெறுக்கும் மனிதனும் அவனது அப்பாவாகத்தான் இருக்கிறார். குழந்தைகளின் உணர்வுகளை உலகத்தைப் புரிந்து கொள்ளாத அப்பாக்கள் அவர்கள்.          

இந்தத் தனிமனித வெறுப்பிற்குப் பின் ஒரு சமுதாயமும் காரணமாக இருக்கிறது என்பதைத்தான் இந்த இரு படைப்புகளும் பல இடங்களில் வழியுறுத்திச் சொல்கின்றன. குழந்தைகளை  மட்டம் தட்டும் உலகில், அவர்களைச் சுற்றி இருக்கும் சமூகத்தின் செயல்பாடு,  சமூகமான நம் செயல்பாடு என்ன என்ற கேள்வியையும் நம்மீதே வைக்கிறார் ஆசிரியர்.

கதிரின் அப்பா செய்த குற்றத்திற்கு, கொலைகாரனின் பிள்ளை என்று மட்டம் தட்டப்படும் இடமாகட்டும், எச்சித்தட்டுக் கழுவுகிறான் என்று கதிரை அவமானப்படுத்தும் பிள்ளைகளாகட்டும், முறை வைத்து வஞ்சம் தீர்க்கும் கணக்கு வாத்தியார் ஆகட்டும், ஒரு பிள்ளையை நம் சமூகம் எப்படி வார்த்தெடுக்கிறது என்ற கேள்வியை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். ஜோதிக்கு உள் இருக்கும் பெண்மைத் தன்மையைக் கேலிப் பொருளாக்கி, சமூகமும், அதில் உள்ளடக்கிய சக மாணவர்களும் வாத்தியார்களும் கேலி பேசிய தருணமும், அவன் அப்பாவின் மூலமே அது வழிமொழியப்படும் போது ஜோதி அடையும் வலியும் இந்தச் சமூகம் தன் பிரஜைகளின் மீது தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டே இருக்கும் அவலம். சமூகம் எனும் இந்தப் பூனைக்கு மணிகட்ட வேண்டியது யார் பொறுப்பு? அதில் கொஞ்சத்தை ராபியா பார்த்துக் கொள்கிறாள். கொஞ்சத்தை சந்திரனும், முருகனும், மணியும், சக்தியும் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனாலும் அந்த வலி? எவன் ஒருவனும் பிறப்பால் குற்றவாளி இல்லை. தன்னுடைய தொடர் தாக்குதலினாலும், அதிகார போதையினாலும் இந்தச் சமூகமே அவர்களைக் குற்றவாலிகளாகப் பிறழச் செய்கிறது. பின் தன்னுடைய நீதிக் கூண்டிலேற்றி, பின் கழுவில் ஏற்றுகிறது. அது சரியா என்ற கேள்வியை முன்வைக்கிறது லஷ்மியின் படைப்புகள்.

கொமோரா ஒரு பெருங்காட்டில் நடக்கும் கதை என்பதால் அதில் பல்வேறு விதமான மனிதர்களின் கதைகளும் அவர்களுக்கான கிளைக்கதைகளும் வந்து போகின்றன. நாவலின் பிரதான பேசுபொருளின் தன்மையை இந்தக் கிளைக்கதைகளும் தீவிரப்படுத்துகின்றன. நான்கு சுவருக்குள் நடக்கும் காட்சிகளை விட, பெரிய வெளியில் நடக்கும் காட்சிகளே அதிகம் என்பதால், இந்த உலகம் நமக்கு அறிமுகப்படுத்தும் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணமும், உலகமும் இருக்கிறது. அவர்களும் நம்மைச் சுற்றித்தான் இருக்கிறார்கள் என்ற உண்மை நம் முகத்தில் அறைகிறது. ரூஹ் சின்னஞ்சிறிய கூட்டுக்குள், வெகுசில மனிதர்களைச் சுற்றி  நிகழும் கதை. இங்கே மனிதர்களின் கதைகளைவிட அவர்களுக்கிடையே ஏற்படும் உணர்வுகள் தீவிரமாகப் பேசப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த நாவலுக்கு ஒரு கவிதைத் தன்மை இயல்பாகவே கைகூடி இருப்பதை நாம் காணலாம்.

இவ்விரண்டு படைப்புகளுமே பாலியல் அத்துமீறல்களைப் பேசியதைப் போலவே, பாலியல் உணர்வு மீறல்களையும் வெளிப்படையாகப் பேசுகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் கதிர் பிற பெண்களுடன் கொள்ளக்கூடிய ஊடல் பிரதானமாகத் தெரியலாம். பாலியல் கிளர்ச்சியையும் தூண்டலாம். இங்கே கேள்வி கேட்க வேண்டியது படைப்பின் மீதோ படைப்பாளியின் மீதோ அல்ல. ஒரு மனிதனுடைய பாலியல் தொகுப்புகளைப் பேசியதைப் போலவே, அவன் எதிர்கொண்ட பல்வேறு உளச்சிக்கல்களை, மிகத்தீவிரமாகவும், வீரியமாகவும் பேசியிருக்கிறார் ஆசிரியர். சொல்லப்போனால் நாவலின் பிரதான பிரச்சனைகளாக வந்துபோவதும் அவைதான். அவை ஏற்படுத்தாத அதிர்வுகளை இந்தப் பாலியல் வரிகள் மட்டும் ஏற்படுத்தும் என்றால், நாம் முதலில் கேள்வி கேட்க வேண்டியது யாருடைய அகத்தை என்பதை நாம் தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.    

கொமோரா எதைச் சரியெனச் சொல்ல வருகிறது என்ற கேள்விக்கான பதில், எந்தத் தவறை, யார், எங்கே, எப்போது, எப்படித் தடுத்திருக்க வேண்டும் என்ற பதிலாக ‘ரூஹ்’வில் வெளிப்படுகிறது.

இங்கே யாரும் பிறழ்ந்தவர்கள் இல்லை
அமைதி என்றால் எப்படியிருக்கும் என்று
அறியாதவர்களே அவர்கள்…!

ஆன்மாக்களுக்கு உள்ளும்
ஆன்மாக்களுக்கு வெளியேயும் நிகழும்
சண்டைகள் தேடுவது
அமைதியைத்தான்…!
      
ஒழுங்கில்லாத சமூகம்
எழுப்பும் இரைச்சலுக்களுக்கு மத்தியில் அவை இவர்களின் குரல்கள்
அமிழ்ந்து போகின்றன..!

அந்தக் குரல்களின் ஓசைகளை, அவர்களின் தேம்பல்களை, கேள்விகளை மேலெடுத்து வரும் வேலையைச் செய்திருக்கிறது கொமோராவும் ரூஹ்வும்.

(கொமோராவை முதல்முறை வாசித்து அதற்கான விமர்சனம் எழுதிய தருணத்தில், இந்த நாவல் தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத நாவல் என்று எழுதி இருந்தேன். என்னுடைய மறுவாசிப்பும் அதையே உறுதி செய்துள்ளது. காத்திரமான படைப்பை அதற்கே உரிய கனத்துடன் எழுத்தாக்கிய எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும்)

***

ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன், சாபக்குமிழ், தற்செயல்களின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் ஆகிய நூல்களின் ஆசிரியர். 

விடுபடும் எத்தனம்

0

இல.சுபத்ரா

லக்ஷ்மி சரவணகுமாரின் நீலப்படம், கொமோரா மற்றும் ரூஹ் நாவல்களில் நிகழும் பயணம்..

“அவன் காத்திருப்பது ஓர் அற்புதம் நிகழ்வதற்காக”- ரூஹ்

வஞ்சிக்கப்பட்ட பால்யம்:

இந்த உலகம் பெரியவர்களுக்கானதாக இருக்கிறது. ‘சீக்கிரம் பெரியவனா/ளாகு, எனது பிரச்சனைகளைப் புரிந்து நடந்துகொள்’ எனச் சிறுவர்களை வெவ்வேறு வடிவங்களில் வற்புறுத்திக் கொண்டே இருக்கும் குடும்ப அமைப்பினால் அது ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இது எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்கும் அடிப்படைப் பிரச்சனை. ஆனால் இதையும் விடக் கொடுமையாக, உளவியல் ரீதியாக, பாலியல் ரீதியாக, உழைப்பு ரீதியாக அவர்கள் துன்புறுத்தப்பட்டு சுரண்டப்படுகிறபோது அங்கே ஓர் அழகிய உலகம் சிதைவதோடு மட்டுமில்லாமல் வாழ்வின் மீதான நம்பிக்கையையே அவர்களிடமிருந்து அது பறித்துக் கொள்கிறது.

எந்தவிதப் பகுத்தறிவினாலும் வாதங்களாலும் நியாயப்படுத்தவும் ஆற்றுப்படுத்தவும் முடியாத வன்முறைகளை எதிர்கொள்ளும் சிறுவர்களும் சிறுமிகளும் லக்ஷ்மி சரவணகுமாரின் படைப்புகள் முழுக்க நிறைந்திருக்கிறார்கள். அத்தகைய சூழலில் அவர்கள் சிக்கிக் கொள்வதற்கு ஏழ்மை மிக முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது.

நீலப்படம் நாவலில் பாலியல் தொழிலாளியின் மகளான ஆனந்தி பதிமூன்று வயதிற்குள் 10-க்கும் மேற்பட்டோரை அப்பா என அழைத்து விட்டதாகக் கூறுகிறாள். தன் அன்னை புணர்ச்சியில் ஈடுபடும்போது அதே அறைக்குள் இருக்க நேரிடும் பதின்ம வயதே அவளுக்கு வாய்க்கிறது. வெகு சீக்கிரமே ஒரே துணையாக இருந்த அந்த அன்னையையும் இழக்கிறாள். அதன்பிறகு பி-கிரேடு படங்களின் நாயகியாக புகழ்பெறும் அவள் அதிலிருந்து வெளியேறி தானே ஒரு திரைப்படம் இயக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறாள். அவளுடைய ஒட்டுமொத்த வாழ்வின் துயரத்திலிருந்து வெளியேற்றி அவளுடைய வேறொரு பரிமாணத்தை உலகிற்கு நிரூபிக்கும் இந்த முக்கியமான முயற்சிக்குத் துணை நிற்கிறான் நண்பன் பாபு. ஆனால் அவன் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் வழக்கம் உடையவன் என அறிகிறபோது அது அவளுக்கு பெருத்த அதிர்ச்சியைத் தருகிறது. அவனை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மிகக் கடுமையாகத் துன்புறுத்தி நினைவிழக்கச் செய்து ஊரை விட்டே வெளியேற்றுகிறாள். குழந்தைகளைத் துன்புறுத்துபவர் மீதான அவளது கசப்பும் கோபமும் வெறியும் மிகத் தீவிரமாகவும் நுணுக்கமாகவும் விவரிக்கப்பட்டிருக்கிற அத்தியாயங்களே சிறுவயதில் அவள் அடைந்த துயரின் அதீதத்தை நமக்கு விளக்கிவிடும்.

கொமொரா நாவலின் கதிர் சிறுவயதிலேயே விடுதிக்கு அனுப்பப்படுகிறவனாக, அங்கே தரும் உணவு போதாமல் பனங்கருப்பட்டியுடன் உப்பு சேர்த்து உண்டு உடல் நலம் சீர்குலைபவனாக, அப்பா செய்யும் வன்கொலையை அருகிருந்து காண்பவனாக, பிரியமான இடங்களில் நிலைத்திருக்க முடியாமல் இடப்பெயர்வுக்கு ஆளாகிக் கொண்டே இருப்பவனாக இருக்கிறான். உணவின் பொருட்டும், பாதுகாப்பின் பொருட்டும் அம்மாவால் விட்டுச் செல்லப்படும் விடுதியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறான். அங்கே இருக்கும் காமாட்சி உள்ளிட்ட பெண் குழந்தைகளுக்கும் அது நிகழ்கிறது. அவனது அப்பா அழகர்சாமியின் பால்யமும்கூட பசியும் அச்சமும் மிகுந்த போர்காலத் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவே இருக்கிறது. தன் பால்யத்தையும் வாழ்க்கையையும் சிதைத்த அப்பாவைக் கொலை செய்வதே கதிரின் ஒற்றை நோக்கமாக இருக்கிறது. அந்தப் பழிவாங்குதல் மட்டுமே தன்னை ஆற்றுப்படுத்தும் என நம்புகிறான்.

ரூஹ் நாவலின் ஜோதிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இல்லாவிடினும் “ஏழ்மையும் வறுமையும் நஞ்சுக் கொடியைப் போல அவனது வீட்டைச் சுற்றிப் படர்ந்திருக்கின்றன”. 300 ரூபாய்க்காக மலை உச்சிக்கு காஸ் சிலிண்டரைத் தூக்கிச் செல்லும் பணி செய்கிறாள் அவனது அம்மா. செருப்பு ஆடம்பரமாய் இருக்கிறது அவனுக்கு. சற்றே பெண் தன்மை கொண்ட அவனுக்கு தந்தையின் தோல்பாவைக் கூத்தினை கையிலெடுத்து முன்செல்லும் ஆர்வமும் தோன்றவில்லை. துயர்மிகுந்த இவ்வாழ்விலிருந்து அவனை விடுவிக்கும்படியாக ஏதேனும் அதிசயம் நிகழக் காத்திருக்கும் அவன் அது அன்புமிகு ராபியாவின் மூலமாக நிகழக்கூடும் என நம்புகிறான்.

விடுதியில் விடப்பட்ட இரவில் கொமோராவின் கதிர் உணர்கிறபடி இந்தக் குழந்தைகளின் வாழ்வில் நட்சத்திரங்களே இல்லை. நிலவு இல்லை. வானம் இல்லை. ஆதரவற்ற நிலையில் ஒரு குழந்தையின் மீது செலுத்தப்படும் வன்முறைக்கு இணையான துயரம் இந்த உலகில் வேறென்ன இருக்க முடியும்?” எனத் தவிக்கிறது கதாசிரியரின் குரல்.

விடுபடும் எத்தனம்

ஆனால் எத்தனைத் துயரங்களுக்குப் பிறகும் இந்தக் குழந்தைகள் நம்பிக்கை இழப்பதில்லை. எதன் மூலமாவது வாழ்வினைப் பற்றிக்கொள்ளவே விரும்புகிறார்கள். பெரியவர்களாகிவிட்டால் தங்களால் இந்தத் துயரங்களிலிருந்து விடுபட்டுவிட முடியும் என நம்புகிறார்கள்.

குழந்தைப் பருவத்திலிருந்தும் அது தரும் வடுக்கள் நிறைந்த நினைவுகளிலிருந்தும் விடுபட, விடாது எத்தனித்துக் கொண்டே இருக்கிறார்கள் அவர்கள். பெண்ணின் அன்பு, தெய்வ நம்பிக்கை, இடப்பெயர்வு, பழிவாங்குதல் போன்ற பௌதீக முயற்சிகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாது இந்த உலகின் வாதைகளொன்றும் தீண்ட முடியாத உச்சியை நோக்கி தன்னால் உயரப் பறந்துவிட முடியுமென்கிற கற்பனைகளையும் அவர்கள் வரித்துக் கொள்கிறார்கள்.

விதிக்கப்பட்ட வாழ்வின் சாபங்களிலிருந்து விடுபடும் எத்தனமானது இவரது படைப்புகளில், சப்தமாகத் துடிக்கும் இதயத்தின் ஓசை போல் நம் செவிகளில் மோதிக்கொண்டே இருக்கிறது.

நீலப்படம் நாவலில் ஆனந்தியிடம் வந்து சேரும் சத்யா என்கிற சிறுமி, கதையின் இறுதியில் பூப்பெய்துகிற போது ஆனந்தியிடம் கதை சொல்லும்படி கேட்கிறாள். அப்போது அவள் சொல்லும் கதையில் தனக்கு இறக்கைகள் முளைப்பதாகக் கனவு கண்ட ஒரு சிறுமி நிஜமாகவே இறக்கைககள் முளைத்து கடலின் மேல் உயரப் பறந்து கொண்டிருக்கும்போது பூப்பெய்துகிறாள்”. என்றால் நானும் பறந்து விடுவேனா” எனக் கேட்கிறாள் சத்யா. சரி எது தவறு எது எனத்தெரிந்து கொள்ளவும், தனக்கு நிகழ்கிற சரி தவறுக்கு ஏற்ப வினையாற்றவும் முடிகிற தெளிவு வாய்க்கிற முதிர்ச்சியை, விடுபட்டுப் பறப்பதற்கான வாய்ப்பு என உருவகம் செய்கிறாள் அவள்.

கொமோரா நாவலின் கதிர் தன் ஒட்டுமொத்த வாழ்வின் துயரத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருந்த அப்பா அழகர்சாமியைக் கொலை செய்த பிறகு, பறந்து கடல்கடந்து கம்போடியா செல்கிறான். பழிவாங்குதல் மூலமாகவும் இடப்பெயர்வு மூலமாகவும் விடுபடலை நோக்கி நகர்கிற அவன் அங்கேயும் சென்று நிம்மதியுற முடியவில்லை. அந்த ஊரில் தன் முன்னோர் எதிர்கொண்ட வன்முறையையும் அனுபவித்த துயரத்தையும் பற்றி அறிய நேர்கிறவனுக்கு மிகுந்த மன உளைச்சலே எஞ்சுகிறது. ஆறுதல் வேண்டி மீகாங் ஆற்றில் பயணிக்கும் அவன் அது அப்படியே மேலெழுந்து தன்னைச் சுருட்டிக் கொண்டு விடுதலை அளிக்கக்கூடாதா என பிரயாசைப்படுகிறான். ஆனால் அது அவனை ஸ்வீகரித்துக் கொள்ள மறுக்கிறது. இறுதியில் தன் காலடியில் தவறுதலாகச் சிக்கிக் கொள்ளும் மீனொன்றை மிதித்துக் கொல்லும் வன்மத்திடமே அவன் தன்னைத் தோற்க நேர்கிறது.

ரூஹ் நாவலின் ஜோதி ராபியாவைப் பற்றிக் கொள்கிறான். அவளிடமிருந்து வெளியேறும்படியாக வாழ்க்கை நிர்ப்பந்திக்கிற போது, அவளையே அடையாளம் காணமுடியாமல் போய்விடுகிற நிலையை எட்டும்படியாக பக்கீர் ஆகிவிடுகிறான்.  நன்மையை நோக்கிச் செல்கிறவர்களுக்கு ஒளியாக இருக்கப் போகிறான் அவன் என்கிற ஆசிரியருக்கு அதுவும் முழுமையான விடுபடலாய் திருப்தி அளிக்கவில்லை.  அடுத்த கட்டமாக இறுதி அத்தியாயத்தில் அந்த ஒளியை கடலோடு கலக்கச் செய்துவிடுகிறார். இனி அவன் தாகம் கொண்டவர்கள் அருந்தும் நீராக……. ஒளிதரும் வெளிச்சமாக இந்தப் பூமியோடு என்றென்றுமிருப்பான். வசந்த காலத்தில் பூக்கத் துவங்கும் செடிகளில் அவன் உதிரத்தின் ஒவ்வொரு துளிகளும் வசீகரமான மலர்களாய்ப் பூக்கத் துவங்கும். என்னும் படியாக முடிகிறது நாவல்.  

கால வரிசைப்படி அடுத்தடுத்து எழுதப்பட்டிருக்கும் நீலப்படம், கொமோரா, ரூஹ் நாவல்களில் வரும் இந்தத் துயருறும் ஆன்மாக்களின் விடுபடும் எத்தனத்தில் ஒரு தொடர்ச்சி இருப்பதாகவே எனக்குப் படுகிறது. தனக்குத் துயரம் தரும் சுற்றத்திலிருந்து காணாமல் போய்விடுகிற விடுபடுதலை எண்ணி ஏங்கி இறுதியில் பறப்பதாய் கற்பனை செய்கிறாள் ஆனந்தி, பழிவாங்குதல் மூலம் தன்னை ஆற்றுப்படுத்த முயலும் கதிர் நிஜமாகவே தன் நிலத்தை விட்டு நீங்கி கம்போடியாவிற்குப் பறக்கிறான். ஜோதியோ லௌகீக வாழ்வை விட்டு நீங்கி பக்கீரான பிறகும் அதில் திருப்தியுறாமல், இவ்வுலகை விட்டும் தன் பிறவியை விட்டும் நீங்கி இறுதியில் கடலோடு கலக்கிறான். ஒளியாக, உயிராக நிரம்புகிறான்.

இத்தனைத் துயர் மிகுந்த வாழ்வில் உழன்ற இந்தக் கதாப்பாத்திரங்கள் விரும்பிய இறுதி விடுபடல் ஜோதியின் மூலம் நிகழ்ந்திருக்கிறதோ? எனில் அவை அங்கனமே நிம்மதியுறட்டும்.

மீட்பு

ஆனால் கொமோராவின் கதிர் வாசிக்கும் பைபிள் வசனம் ஒன்று பின்வருமாறு சொல்கிறது, “எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடி திரும்பும் என.

கடலில் ஒளியாய் கலந்த அந்த ஜீவன் லக்ஷ்மி சரவணகுமாரின் இன்னொரு நாவலின் வழியாக இப்பூமிக்குத் திரும்பட்டும். அங்கே அது துயரங்கள் அற்ற ஒரு பால்யத்திலும் வாழ்விலும் மகிழ்ந்திருக்கட்டும்.

இல. சுபத்ரா
subathralakshmanan@gmail.com

Rethinking Dehumanization and Rediscovering Society: A Review on the Novel, Uppu Naigal, written by Lakshmi Saravanakumar

1

Riophilla Alfred

Lakshmi Saravanakumar’s Uppu Naigal is a novel that unfolds stories of sorrows and sufferings of the downtrodden and the marginalized people of the Indian society. It retells the tale of the dehumanizing forms of social discrimination and conflict of class hierarchy. This novel can be considered as a critical statement against human suffering, poverty and ignorance and the author evidently delineates the shackles of degradation. Having three different plots intertwined, each, however, is the portrayal of the problems of the age – the degradation of man by poverty, the ruin of women by starvation and the dwarfing of childhood by physical and spiritual darkness.

Many of the characters are involved in theft, drug trafficking, extra marital affairs, prostitution and homosexual relationship because of the wretchedness caused by poverty and are condemned to abjectness, apathy and despair. The characters Sampath, Shivani, Chelvy, Thavidu Aadhamma and her mother are all victims of the malice deeply rooted into the society and their resistance shows their attempt to free themselves from the shackles of social evils. One of the protagonists, Sampath, working for the drug dealers in the underworld slowly employs himself in criminal operations including child trafficking. He degrades himself first to distributing dog meat to food stalls and then to becoming a dog butcher to sell the dog meat.

However, through the embodiment of the character, the author, brings to light the hypocrisy and fallacy of religious institutions such as Armenian Church and its priests. Shivani is a portrayal of immorality and her dishonesty is honest as she is ruined by the social constructs. The law and order are questioned in this novel by the character of Chelvy as she is a pickpocket and later becomes another victim of drug trafficking. Even though Thavidu is a sufferer of her fatality in terms of poverty, she acts by listening to her conscience and chooses the right paths. Adhamma and her family are the settlers in Chennai and she is a manifestation of childhood innocence. Even though Chennai is a hub for the Marwari and Telugu settlers and extends its hand for their trade and settlement, the city is another example for how the society jeopardizes the positions of human stances.

Thus the setting of the novel is the microcosm of India. The author criticizes the society which admits poverty and its wretchedness. Similar in theme is the novel, Les Miserables written by one of the greatest French novelists, Victor Hugo. In a letter to a friend describing why he wrote Les Miserables, Hugo said:

“If the radical is the ideal, yes, I am a radical… A society which admits poverty, a religion which admits hell, a humanity which sanctions war – seem to me an inferior society, an inferior religion and humanity. And it is towards the higher humanity and religion that I turn: society without a king, humanity without frontiers, and religion without a book… I condemn slavery, I banish poverty, I teach ignorance, I treat disease, I lighten the night, and I hate hatred. That is what I am, and that is why I have written Les Miserables.” The same is the voice of the author in this novel, Uppu Naigal. As a novelist he expounds the inferior society, religion and humanity that act vindictively because of the social divisions and hierarchy.

The author of the novel, Saravanakumar, reiterates the concept of how poverty and hunger make men as beasts and he questions inequality and injustice prevailed in the society.

“Nobody had the fear or sorrow of having empty stomach. It seems that an ordinary man does not think of hunger till the day when a hungry man becomes a beast… During the days the town which was creating a society tormented by hunger was not aware that the society would be turned into that of beasts.” (Saravanakumar, p. 80). The theme embedded all throughout the novel is that hunger and desire turn men into beasts.

What made them turned into beasts? At this point the novel draws the readers to a question of moral philosophy. Most of the compelling characters of the novel are morally ambiguous. According to Haidt & Kesebir  (2010) morality indicates what is the “right” and “wrong” way to behave, for instance, that one should be fair and not unfair to others. This is considered of interest to explain the social behavior of individuals living together in groups (Gert, 1988). To talk something about moral philosophy in depth– Thomas Hobbes, a 17th century philosopher assumes that human nature is violent and competitive. He insists on individualism and finds that the society becomes meaningful because of the individuals. He further tends to state that humans are selfish creatures who only concern their self-preservation. Therefore, human beings are always without an “absolute sovereign” to control the desires and always in a “state of war”, which is “solitary, poor, nasty, brutish and short”. The novel, Uppu Naigal contains the same philosophy in it. The behaviours and actions of the characters reflect that they wish to persist on self-preservation and choose paths that are so mean.

According to Starobinski, a well-known literary critic and psychiatrist, evil is not in human nature but in social structures. Rousseau, as an Enlightenment philosopher stated that humans are naturally good; the society tampers with us, and thereby corrupts us. For him, human nature is good and pure. Accordingly, it is the society that corrupts and transforms ‘natural man’ into a beast who is always obsessed with his own desires. He further stated that one is born neither good nor bad. It is only with the birth of social institutions that his weakness became timidity or his strength a menace to his neighbours. It is the society, according to the author, Saravanakumar, that has made its individuals act as how they did. However, it is obvious throughout the novel that the author did not judge any characters and leaves the judgment to the readers.

Moreover, materialism in the novel promotes the philosophy of nihilism that rejects family, societal bonds and emotional and aesthetic concerns in the characters. It delineates the idea that there is no “mind” or “soul” outside the physical world. The characters, Chelvy and Muthulakshmy, in search of carnal love lose not only their families in the first phase but also their “mind” and “soul”. Sampath’s homosexual desires and his mother’s extra marital affairs with Mani can also be related to this.

In socioeconomic perspective, capitalism produces inegalitarian social structures. The social geography of the city is made up of a hierarchy of community environments reproducing the hierarchical class structure. Change in the system results from change in the demand of labor. Chennai is not exceptional. The author clearly showcases the demand of labour in the city of Chennai and the exploiting nature of capitalism. The inhabitants of Chennai go to the extreme ends to survive in the capitalist state and the characters, Udayar, Muthulakshmy and the Marwaris exemplify capitalists in this novel.

The plot threads are interwoven masterfully by the author throughout the story. The way the characters are portrayed balances the storyline. Even though many of the major characters are the victims of social evils, the characters like Thavidu, Aadhamma and Arthy spread love and hope in this novel. The titles given for each of the chapters are thought provoking and evocative. The author, according to his accustomed style, uses rich figurative quotes in the beginning of many chapters that validate the content of what is yet to come in the chapter. The author never fails to put the readers right in the heart of his story even though the reality the novel speaks of is harsh and the emotions it outlines are intense and the punishments are raw.

Although many of the Indian writers like Basheer, Kamala Markandaya and Mulkraj Anand have spoken of the same subjects, Saravanakumar stands aside in his own perspective. He proves to be ideal by being radical. The former speak the issues in the manner of questioning the society while Saravanakumar speaks the same in the way of disturbing the conscience of the society. He condemns it when it admits poverty; he condemns religion when it admits hell; he condemns humanity when it admits injustice. He perceives the society inferior when it turns its men into beasts, into dogs, and into sour dogs (Uppu Naigal) as the title itself puts it in. He stands as another Hugo in giving his voice for reforming the Indian society.

To conclude, Uppu Naigal is a scathing critique of the society and a true depiction of human struggles and sufferings. Credited with the gripping portrayal, Uppu Naigal would remain a fine story for all the ages as it calls for the regeneration and renewal of not only the Indian society but also of all the “sick” societies in the world through the rediscovery of the beliefs and perspectives towards humanity.

Riophilla Alfred –
Lecturer,
Department of English Language Teaching,
University of Jaffna,
Sri Lanka
email – riophilla12@gmail.com

லஷ்மி சரவணகுமாரின் ‘போர்க்குதிரை’

0

தமிழ் சுப்பிரமணியம்

கால எல்லைகளில் சிறுகதைகளின் வடிவம் மாற்றம் கண்டுகொண்டே இருக்கும். புதிய புதிய எழுத்தாளர்கள் தங்கள் பாணியிலான கதைகளைச் சொல்லப் பிரயத்தனப்படுவார்கள். நாவலின் தொடக்கமே அதிலுள்ள சிறு சிறு கதைகளின் கோர்ப்புகள்தான். சிறுகதைகள் வாழ்வின் ஓட்டங்களோடு தொடர்புற்று இருந்தால் அது யுகங்கள் தாண்டியும் மானுட சமூகங்களால் தொடர்ந்து பேசப்பட்டு விவாதிக்கப்படும். எழுத்தாளன், தன் நிலையை சிறுகதை என்ற எளிய கடத்தியின் மூலம் வாசகனுக்குள் கடத்துகிறான். அந்நிலை அரசியல், தத்துவம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒவ்வொரு கதைகளுக்குப் பின்னும் இப்படி ஒரு நிலை இருப்பதை நான் முழுமையாக நம்புகிறேன். எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின் கதைகளிலும் இத்தன்மையெல்லாம் இருப்பது வாசகர்கள் அனைவரும் அறிந்ததே. அவரின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான ‘போர்க்குதிரை’ அதற்கு சான்று. இதில் கையாளப்பட்டுள்ள தன்மைகள் முன்னிலிருந்து சற்று வேறுபாடோடும் உள்ளது. பயணம், இசை, ஆன்மீகத்தன்மை, உடலரசியல், பகடி என இக்கதைகள் பன்முகத்தன்மையாக (Versatile) உள்ளன.

இத்தொகுப்பில் உள்ள பல கதைகளில் பயணம் ஒரு பிணைப்பாய் இருக்கிறது. முதன்மைப் பாத்திரங்கள் அனைத்தும் வாழ்வின் துயரங்களிலிருந்து விடுபட விடியலை நோக்கி ஆன்மாவைக் கொண்டுசெல்ல பயணத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. அதன்வழி கதைகள் நகர்கின்றன. லஷ்மியின் அறிமுக பகுதியில் ‘ஊர் சுற்றுவதை பிரதான வேலையாக கொண்ட இவர்’ என்ற வரிகளை அடிக்கடி பார்க்கலாம். பயணம் வாழ்வின் ஒரு பகுதியாய் அமையப்பெற்ற எழுத்தாளரின் கதைகளில் பயணம் இல்லையென்றால்தான் ஆச்சரியத்திற்குரியது.  பயணங்களின் வழி பெற்ற அனுபவ வார்த்தைகளாக இவரின் கதைகள் விளங்குகின்றன.

‘வீடு திரும்புதல்’ கதை பயணத்தின் பிராதன கதை என்று சொல்லலாம். மற்ற கதைகளில் சிறிய சிறிய பயணம் வந்துபோகத்தான் செய்கின்றன. ஆனால் ‘வீடு திரும்புதல்’ கதையிலுள்ள ஆத்மார்த்தமான தன்மை அக்கதையை முன்னிறுத்திக் காட்டுகிறது. விரக்தியின் பாதையில் பயணிப்பவனுக்கு ஞானத்தின் பாதையை நோக்கி உந்தச் செய்கிறது. இதே போன்ற ஒரு சிறுபயணம் ‘குருவைத்தேடி’ கதையிலும் காணலாம். அதில் உள்ள கதைமாந்தனின் இருப்புநிலை வேறு. ஆனால் உள்ளக் கொதிப்புநிலை இரு கதைகளிலும் சம அளவாகத்தான் இருக்கும். இவையிரண்டும் பேசிய களம் வேறு. தமிழ் இலக்கியத்தில் நிலக்காட்சிகளை வாசகனின் கண்களுக்கு விஸ்தரிக்கச் செய்வது சாதரணமானதல்ல. க.நா.சு, மௌனி போன்ற எழுத்தாளர்கள் அகவயமாக நிலக்காட்சிகளை கடத்துவார்கள். கி.ரா போன்ற எழுத்தாளர்கள் நிலக்காட்சிகளை புறவய அழகியலோடு படைப்பார்கள். லஷ்மியின் நிலக்காட்சி அமைப்புகள், புறவயத்தின் அழகியலை பயணக்கதைகள் மூலம் வெளிப்படுத்துகின்றன. “நிலங்களின் வழியாய் கதைகளை அணுகுவதை எப்போதும் நான் முக்கியமானதாய்ப் பார்ப்பேன்” என்று முன்பொரு கட்டுரையில் லஷ்மி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘கம்பமத யானை’ கதையில் வருகின்ற மஹாலிங்க மலை நோக்கிய பயணம், ‘தடியன் சேகரில்’ சாப்டூரைத் தாண்டிய சாலையின் இருளும் மலைகளும், ‘குருவைத் தேடி’ திருவண்ணாமலை பயணமும் சேர்த்து இம்மூன்று கதைகளின் வழி Spritual தன்மை பொதிந்த கதைகளை பயணங்களின் வழியாய் கூறியிருக்கிறார். ‘ஆலமரத்துயில்’ கதையில் பஞ்சம் பிழைக்க மக்கள் திருப்பூர் போவார்கள். இது பயணம் என்ற வகைமைக்குள் வராமல் போனாலும் ஒரு இடப்பெயர்வு இக்கதையில் இருக்கிறது. நூலின் தொடக்க உரையில் “பயணங்களிலும் நண்பர்களுடனான உரையாடல்களிலும் பெற்றுக்கொண்டவைகளில் இருந்துதான் எனது கதைகள் உருவாகின்றன” என்கிறார் லஷ்மி.

லஷ்மியின் கதைகளில் இரண்டாவதாக அதிகம் தென்படுவது இசை. இசை குறித்து உரையாடக்கூடிய சமீபத்திய எழுத்தாளர்களில் லஷ்மியும் ஒருவர். இத்தொகுப்பின் கதைகளில் இசை பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. ‘வீடு திரும்புதல்’ கதையில் லஷ்மணின் நேபாள மனைவி பாடும் நேபாள நாட்டுப்புறப்பாடல், ‘ஆதாமின் துரோகம்’ கதையில் வரும் ப்ளூஸ் இசை (‘Bobby blan! ‘I wouldn’t treat a dog’ (the way you treated me)), ‘போர்க்குதிரை’ கதையில் வருகிற தாந்திரிக் இசை, ஓம்னியாவின் பேகன் ஃபோக் இசைத் தொகுப்பு, ஹூ பேண்டின் பாடல்கள், ‘ரகசியத்தின் அரூப நிழல்கள்’ கதையில் வரும் தர்காக்களில் பாடப்பட்ட ஹுவ்வாலிப் பாடல்கள் என்று இக்கதைகளில் ஆங்காங்கு இசை குறித்து எழுதியுள்ளார்.

லஷ்மியின் மூன்றாவது தன்மை அவரின் கதைகளில் காணப்படும் குற்றம், உடலரசியல் தன்மை. கதைகளில் உடல் குறித்தான நுட்பமான அறிவு முதிர்ச்சியோடு மனிதர்களின் நுண்ணுணர்வுகளை பிசகாமல் மெய்த்தன்மையோடு காட்டக்கூடியவர். கம்பமதயானை, போர்க்குதிரை, ரகசியத்தின் அரூப நிழல்கள், ஆதாமின் துரோகம், இப்படியாக அவளின் சில காதலர்கள் போன்ற கதைகளின் அணுகுமுறையில் உடல் சார்ந்த மானுடத்தின் தாத்பரியம் வெளிப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து பைத்திய நிலை குறித்த சித்திரத்தை லஷ்மியின் நாவல்களில் ஒருசில பாத்திரம் வழி காணலாம். அத்தன்மையிலும் ‘கிறுக்கு கன்றுக்குட்டி’ என்ற கதை இத்தொகுப்பில் உள்ளது. பைத்திய நிலையில் இருக்கும் மனிதனுக்கு அவனின் கடந்த காலச் சித்திரம் பிரதிபலித்துக்கொண்டே அவனைப் பின் துரத்தும். அது நீக்கமுடியா சாபமாகவும் இருக்கும். அத்தகு கதையாகத்தான் இது உள்ளது.

லஷ்மியின் நான்காவது பாய்ச்சலாக அரசியல் மற்றும் பகடித்தன்மையை சொல்வேன். குருவைத் தேடி, போர்க்குதிரை பகடித்தன்மை என்றால், ஆலமரத்துயில், இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல என்ற இரு கதைகளும் அரசியல் பேசக்கூடியவை. எளிய வாழ்க்கை வாழக்கூடிய மனிதர்களின் கதைகள் இவை. லஷ்மியை விளிம்புநிலை மனிதனின் குரலாக நான் பார்க்கிறேன். திருநம்பிகள் குறித்து பெரிதாக யாரும் எழுதாத நிலையில் அவர்களின் உள்ளுணர்வு நிலையை எழுதும் லஷ்மியை விளிம்புநிலை மனிதனின் குரல் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தத் தொகுப்பிலுள்ள மனிதர்கள் அந்நியமானவர்களாக ஆக்கப்பட்டவர்கள்.  இவர்களைக் குறித்து தினந்தோறும் செய்திகளிலே மட்டுமே தெரிந்த நமக்கு அவர்களை பரிச்சயமானவர்களாக ஆக்கும் பாலமாக லஷ்மி சரவணகுமார் இருக்கிறார். ஜென் கவிதையில் வருகிற பயணியைப் போல் யாவற்றையும் நோக்குபவராக பயணங்கள் தொடரட்டும்.

போர்க்குதிரை – சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் – லஷ்மி சரவணகுமார்
வெளியீடு – ஜீரோ டிகிரி

***

தமிழ் சுப்பிரமணியம்
கட்டுரை ஆசிரியர் தொடர்புக்கு – tmani0921@gmail.com

ரூஹ் – மனம் காட்டும் கண்ணாடி

0

தயாஜி

வாசித்து முடித்ததும் அழுதுவிட்டேன். உண்மையில் வாசிக்கும் போதே அழ ஆரம்பித்துவிட்டேன். நமக்குள் இருக்கும் நமது பலவீனங்களையும் அதன் நகர்வுகளையும் லஷ்மி சரவணகுமாரால் எளிதில் கண்டறிய முடிகிறது.  அப்படித்தான் ‘ரூஹ்’ எனது பழைய நினைவுகளையும் எனது நண்பர்களின் வாழ்க்கையையும் மீள் செய்வதாக அமைந்திருந்தது.

ல.ச.கு-வின் எழுத்துகளில் நமக்கு தெரியாத மனிதர்கள் பற்றிய அறிமுகம் எப்போதுமிருக்கும். அவர்களின் வன்மம், காமம், கனிவு, அன்பு, நம்பிக்கை, அழுகை என பல திசையிகளிலிருந்து கதாபாத்திரங்களை அவரால் ஒரு மையப்புள்ளியில் இணைக்க வைக்க முடிகிறது. வாசகர்களையும் அதில் சேர்ந்து பயணிக்க வைக்கிறது. தொடர்ந்து ல.ச.கு-வின் எழுத்துகளை வாசிக்கின்ற வாசகன் என்கிற முறையில் அவரது ‘ரூஹ்’ நாவலை பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தைப் பகிர நினைக்கின்றேன்.

‘ரூஹ்’, தன்னை வெளிகாட்டிய வடிவம் புதுமையாக இருந்தது. காலத்தை முன்னும் பின்னும் நகர்த்தி அதனை ஒற்றை மையத்தில் கொண்டுவரும் யுக்தி நாவலை ஆர்வத்துடன் வாசிக்க வைக்கிறது.

மலாய் மொழியில் ரூஹ் (ROH) என்றால் ஆவி, ஆன்மா என்பதைக் குறிக்கும். புனித ஆத்மாவையும் அப்படி அழைப்பார்கள். இந்நாவலில் அப்படியான புனித ஆன்மாவாக ராபியாவைப் பார்க்க முடிகின்றது.

பதினெட்டாம் நூற்றாண்டில் விலை மதிப்பற்ற பச்சை நிறக் கல்லை அதற்கான இடத்திற்கு சேர்ப்பதற்கு அஹமத் என்னும் தேர்ந்த மாலுமியுடன் சில ஞானிகள் பயணமாகிறார்கள். அக்கல் கொள்ளை போகிறது. அதனை மீட்க எதனையும் சந்திக்கத் துணிவுடன் அஹமத்தும் ஞானிகளும் மீண்டும் அந்தக் கடற்கொள்ளையர்களிடமே செல்கிறார்கள். அந்தக் கல்லால் ஈர்க்கப்பட்ட அரசன் அக்கல்லைக் கொடுக்க மறுக்கிறார். ஆனால் அந்த அரண்மனையில் இருந்தே கல் வெளியேற்றப்படுகிறது. அந்த பச்சை நிறக் கல், அரண்மனையில் இருந்து ஊர் ஊராய் செல்லும் பொம்மலாட்டக் கலைஞருக்கு கிடைக்கிறது. அக்கல் வேறொரு பயணத்தை ஆரம்பிக்கிறது.

இதன் ஊடே இன்னொரு கதையாக, ஜோதியின் வாழ்க்கையும் நகர்கின்றது. ஜோதிக்கு பெண் குரல். அதனால் பல அவமானங்களையும் உதாசீனங்களையும் சந்திக்கின்றான். தன் மூதாதையர்கள் தொன்று தொட்டு செய்து வைத்த பொம்மலாட்ட கூத்தில் அவனால் பங்காற்ற முடியவில்லை. ஜோதியை வாசிக்கும் போது நம்மால் அதனை எளிதில் கடந்துவிட முடியாது. மனமும் அதன் கட்டற்றத் தன்மையை ஒரு மனிதன் எதிர்க்கொள்வது சமயங்களில் ஆபத்தில் முடிந்துவிடுகிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆண்களால் ஜோதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறான். ல.ச.கு அதனை எழுதியிருக்கும் விதம் நம் தூக்கத்தைத் தொலைக்கிறது. மனிதனுள் இருக்கும் மிருகம் வேட்டையாட வெளிவரும் பொழுதுகளை அவரால் எளிதில் வாசகர்களுக்கு கடத்திவிட முடிகிறது. என் நண்பர்களில் சிலர் இதுபோன்ற சிக்கல்களால் காணாமலே போய்விட்டார்கள். அந்த வயதில் என்னால் புரிந்தும் புரியாமல் போன பல கேள்விகளுக்கு ஜோதியின் வாழ்க்கை மூலமாக பதில்களைக் கொடுத்திருக்கிறார்.

இன்னொரு பக்கத்தில், ஒரு தேவதை போல, எல்லோர்க்குமான அன்பை தானே சுமந்து கொண்டிருப்பதாக ராபியா அறிமுகம் ஆகிறாள். ஒவ்வொருவர் வீட்டிலும் இப்படியான ஒருத்தி இருக்க வேண்டும் என ஆசைப்படும் அளவிற்கு ராபியாவைக் காட்டியுள்ளார். ராபியாவின் கணவன் அன்வரை நம் அன்றாட வாழ்க்கையில் சந்திப்போம். அன்வர் எல்லா துடிப்புமிக்க இளைஞர்கள் போலவே தானே செயல்பட நினைத்து, முனைந்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். அன்வருக்கும் ராபியாவிற்கும் திருமணமாகிறது. அழகான மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்கிறார்கள். வாழ்க்கை சமயங்களில் நமது எந்த நிலையையும் தூக்கியெறிந்துவிடும். ராபியாவிற்காக நம்மை அழவும் வைக்கிறார். நல்லவர்களுக்குத்தான் எத்தனை சோதனைகள், எத்தனை வேதனைகள் என நினைக்கும் போது நம்மால் எப்படி அழாமல் இருக்க முடியும்.

கொள்ளை போகும் மரகதக்கல் – அமானுஷ்ய பயணம், ஜோதியின் நிலையற்ற தன்மை – மனப் போராட்டம், ராபியாவின் அன்பும் அழுகையும் என மூன்று முடிச்சுகளும் ஒரு மையத்தில் வந்து நிற்கிறது. நாவலில் ஆங்காங்கு வாசித்தவைகள் ஒரு கோட்டில் வருகின்றன.

பாலோ கொய்லோவின் ‘ரசவாதி’ என்னும் நாவலை சில இடங்களில் ரூஹ் நினைக்க வைத்தது. இரண்டிலுமே மையமாக இருப்பது மானிதனின் மனம் நம்பும் ஒன்றிற்கான பயணத்தை இப்பிரபஞ்சம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்கின்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம்.

ரூஹ் – வாழ்க்கையின் விளையாட்டு எங்கிருந்தும், அடுத்ததொரு பயணத்தைக் கொடுக்கும் என்கிற நம்பிக்கையைக் கொடுக்கிறது. லாபங்களை போன்றதே இழப்புகளும், சிரிப்பைப் போன்றே அழுகையும் என்கிற தேற்றுதலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றது.

வழக்கத்திற்கு மாறாக இந்நாவல் வாசிப்பைக் குறித்து குறைவாகவேஎழுதியுள்ளேன். ஒரு கண்ணாடி போல பல இடங்களில் என்னை எனக்கு காட்டிய இந்நாவலில் பல நாட்கள் தொலைந்திருந்தவன் நான். நீங்களும் உங்களைக் கண்டுணர்ந்து தொலைய வேண்டும் என்பதற்காகவே நாவலின் முழு சித்திரத்தையும் கொடுக்க விரும்பவில்லை. நான் எதை, எப்படிச் சொல்லியிருந்தாலும், வாசிப்பவர்களுக்கு வேறொரு வாசிப்பு அனுபவத்தையே கொடுக்கக்கூடிய நாவல்  இது.

***

தயாஜி மலேசியாவைச் சேர்ந்தவர். புத்தகச் சிறகுகள் எனும் பெயரில் மலேசியாவில் புத்தகங்கள் விற்பனை செய்து வருகிறார். இவரது குறுங்கதைகள் தொகுப்பு வெகுவிரைவில் வர இருக்கிறது.

இவரது மின்னஞ்சல் முகவரி :tayag17@gmail.com

அநேகத்துவத்தின் மொழி

0

லஷ்மி சரவணகுமாரின் கதைகள் ஒரு பார்வை – ஷாலினி பிரியதர்ஷினி

கதை சொல்லிகள் ஆபத்தனாவர்கள். அடக்குமுறையின் அம்சங்களை எதிர்ப்பவர்கள். விடுதலைக்கான உரிமையை களவாடுபவர்களை எதிர்த்து நிற்கும் போராளிகள்.”

               – சினுவ அச்சிபி

மனிதனின் கலை சார்ந்த யாதொரு வெளிப்பாட்டையும் அந்தக் கலையின் வாயிலாக அணுக முற்படாமல், அதைப் படைத்த அவனது மனநிலையின் வாயிலாக அணுகும் பொழுது அவன் படைத்த கலைக்கு அதுவே சிறந்த அடையாளமாக அமையும் என்று தாகூர் தனது ஓர் உரையில் கூறியிருப்பார்.

லஷ்மி சரவணகுமாரின் படைப்புகளை உணர்வு தளத்திலிருந்து அணுகியவள் என்பதால் அவரது எழுத்தில் சித்தரிக்கப்படும் மனித மனத்தின் இருளும் ஒளியும் கலந்த அறைகளுக்குள் அவருடனேயே பயணிப்பது போன்ற அனுபவம் பலமுறை எனக்கு வாய்த்ததுண்டு.

அவரது புதினங்களைக் குறித்து அநேகர் சிலாகித்து எழுதியிருப்பதை வாசித்திருக்கிறேன். என்னளவில் அவரது சிறுகதைகளை வாசிப்பது ஒரு அலாதியான அனுபவம். ஒரு துண்டு வானம், ஒரு துளிக்கடல், ஒரு கீற்று வானவில், ஒரு கொடிய மரணம் அதைவிட கொடிதானவொரு துரோகம் என்று அவரது சிறுகதைகள் உலவும் களங்களும் அவை நமக்கு அறிமுகப்படுத்தும் மனிதர்களும் நேற்றோ இன்றோ நாளையோ நாம் சந்தித்த அல்லது இனி சந்திக்கப் போகும் களமும் மனிதர்களுமாகவே தெரிவர்.

வெற்றுக் கற்பனை உலக வார்ப்புகளாக மட்டுமே அவரது கதாப்பாத்திரங்கள் இருப்பதில்லை. யதார்த்தமான மனிதர்களும், அன்றாட அயர்ச்சிகளினிடையே காதலித்துக் கொள்ளும் சாமானியர்களும் நமதருகே அமர்ந்து கதைப்பது போன்ற உணர்வை அவரது சிறுகதைகளில் பெற முடியும். மகத்தான அனுபவங்களிலிருந்து பிறக்கும் உயிருள்ள சொற்களுக்கு காலம் முடிவுரை எழுதுவதில்லை என்று எங்கோ படித்த நினைவு. லஷ்மியின் சிறுகதைகளில் அத்தகைய உயிருள்ள வரிகளை நிரம்பச் சுட்ட இயலும்.

என் இருப்பிற்கான அவசியம் இருப்பதை எவரேனும் உணர நேர்ந்தால் சந்தோசம். உண்மையில் எனக்கு இருப்பு என்பதன் இருப்பே போலியானதோ என்று தோன்றுகிறது. இது என்ன வாழ்க்கை என்கிற எண்ணம் ஒருபோதும் தோன்றுவதில்லை, ஏனெனில் வாழ்வதான ஓர் அனுமானம் தோன்றுகிற மனிதனால் மட்டுமே இதென்ன வாழ்க்கை என்கிற தவிப்பை உணர முடியும், அப்படியேதும் எனக்கில்லை

        – மரணத்திற்கான காத்திருப்பில் (சிறுகதை)

சிறுகதை கதாபாத்திரம் சார்ந்து அமைவதாகும். சிறுகதையைப் படைக்கும் பொழுது ஒரு எழுத்தாளன் எழுதுகோலும் கையுமாக அவனது கதாபாத்திரங்களைப் பின்தொடர்கிறான். அவர்களது ஒவ்வொரு அசைவையும், சொல்லையும் குறிப்பெடுத்துக் கொண்டு பின்பு அக்குறிப்புகளைத் தன் சொற்களில் வார்த்தெடுக்கிறான் என்று வில்லியம் ஃபாக்னர் கூறியிருக்கிறார். புதினம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி என்றால் சிறுகதையை வாழ்க்கையின் சாளரம் எனலாம். சாளரத்தின் வழியாகக் காணும் காட்சி பல நேரங்களில் பிரதிபலிப்பை விட ஆழமானதாக அமைவது போல், லசகுவின் சிறுகதைகளில் காணக் கிடைக்கும் மனிதர்கள் நிஜத்திற்கு மிக நெருக்கமானவர்களாக இருப்பதை உணரலாம். கதைமாந்தர்களுடன் கைக்கோர்த்து உலவும் அரூப கதாபாத்திரம் போல் எழுதுபவரின் குரலும் இருக்க வேண்டும் என்று புதுமைப்பித்தன் தனது சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் எழுதியிருப்பார். லசகுவின் சிறுகதைகளில் பல இடங்களில் அக்குரல் சற்று ஓங்கி ஒலிப்பது போல தெரிவதுண்டு. ஆனால் அது கதையின் ஆன்மாவோடு இசைந்து கரைசேர்ந்து விடுவதையும் பார்க்க முடியும்.

மனிதனின் சிறுமைகள் தப்பிதங்கள், மன்னிப்பின் வழி சரணடைதலின் மேன்மை என்று அவனது மீட்சியை நோக்கியே அவரது கதைகள் பயணிப்பதை காணக் கூடும். What is Art that leads not the human mind towards salvation?

பேராற்றலின் நிழலாக பெருந்துயரொன்று இருக்கும் பொழுது அத்துயரமே அவ்வாற்றலுக்கான உந்துசக்தியாக மாறிவிடும். லஷ்மி சரவணகுமார் சந்தித்த குழந்தைப் பருவ இன்னல்களும், தயாராகுமுன்னரே வாழ்க்கை அவரை விரட்டிய வேகமுமே அவரது எழுத்தின் வீரியத்தைத் தீர்மானித்த காரணிகளாக மாறின.

நான் கடந்து வந்த பாதையை நீயும் கடந்து வர நேர்ந்திருந்தால் வன்மமும் கருணையும் ஒரே வண்ணத்தின் சாயல்களே என்பதை உணர்ந்திருப்பாய் என்கிறார் காலித் ஹுசைனி.

லசகுவின் கதைகளில் வரும் பெண்கள் எப்படி தனித்தன்மை பொருந்தியவர்களோ அதேபோல் அவரது கதைகளின் சிறுவர்களும் தனித்துவமானவர்களே. ‘ஆவாரம்பூ கதையில் வரும் சிறுவன் அப்பு, ‘அஜ்ஜிகதையில் ராமு, ‘அத்தைகதையில் வரும் மஞ்சள் நிற சர்பத் விரும்பியான அழகர் என்று அவரது சிறுவர்கள் எந்த மிகையான குணாதிசயங்களையும் வெளிப்படுத்தாமல் அவர்களது பருவத்திற்கேயுரிய அப்பாவித்தனத்தோடு உலவுவதைக் காண முடியும்.

அவரது சிறுவர்கள் மகன்களாக, பதின்பருவச் சிக்கல்களுடன் தவிக்கும் இளைஞர்களாக மாற்றம் பெறும்பொழுது அவர்களது பாத்திரப் படைப்பை லசகு கூர்தீட்டும் பாணியில் இருக்கும் நேர்மையை அண்மை காலத்தில் வேறெந்த படைப்பாளரிடத்திலும் கண்டதில்லையெனக் குறிப்பிடத் தோன்றுகிறது.

இயற்கையையும் பெண்மையையும் அதனதன் உண்மையுருவில் எழுதுவதென்பது பல சமயங்களில் இருமுனைகளும் கூர் தீட்டப்பட்ட கத்தியை கையாளுவதற்கு ஒப்பான செயல். இரண்டுமே தீவிரத்தன்மையில் நிஜமானவை. அப்படி எழுதினால் மட்டுமே அவற்றுக்குரிய நியாயத்தை ஒருவனால் வழங்க இயலும். அதை விடுத்து மென்மை, இனிமை போன்ற அழகியல் கூறுகளைக் கொண்டு மட்டுமே இயற்கையையும் பெண்மையையும் வருணிக்க முற்படுபவன் சொற்களை விரயமாக்குகிறான். உணர்வுகளுக்கு பொய் கொண்டு வண்ணம் தீட்டுபவனாகிறான். லஷ்மி சரவணகுமாரின் படைப்புகளிலிருந்து அவர் ஒரு myriad minded writer என்பது விளங்கும். குறிப்பாக அவர் பெண்களை எழுதும் பொழுது மனதின் அடைக்கப்பட்ட எல்லாக் கதவுகளையும் அடித்து நொறுக்கி விட்டு அவரது பெண்கள் சுதந்திரமான வெளியில் உலவுவதையே அவர் விரும்புவதாக எனக்கு பல நேரங்களில் தோன்றும். அவரது பெண்களுக்கு நிச்சயம் ஆளுமை இருக்கும்.

எதிர்மறைக்காரிகளாகவும், சாட்டையைச் சுழற்றும் சூத்திரதாரிகளாகவும், பாவைத்தனங்களற்ற மிருகச் சாயல்களோடு வலம் வருபவர்கள். தாய்மை, காமம் எனும் உணர்வுகளுக்கு இவர் புனிதமெனும் முலாம் பூசுவதில்லை. பெண்களை இவர் வருணிப்பதில்லை, மாறாக உணர்கிறார். உணர்ந்த பின் எழுதுகிறார். அவ்வுணர்தலில் தெய்வீகமும் கீழ்மையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்ளாக இருக்கின்றன அவ்வளவே.

அந்த அறையைக் கடக்கிற போது மிக மோசமான முனகல்களும், சர்ப்பத்தின் நீண்ட மூச்சுகளுமாய் அறை அதிர்ந்தது. உறக்கம் பிடிக்காமல் ஜன்னல் வழியே தொலைந்து போன நிலவைத் தேடித் துழாவினான். நீண்ட நேரத்திற்குப் பிறகு மெல்லிய இருள் வெளிச்சத்தில் வீட்டின் பின்புறச் சுவரைப் பற்றியபடி அம்மா மூத்திரம் பெய்து கொண்டிருந்தாள். ஆடையைக் கூட சரி செய்யாமல் நின்றிருந்த அவளைப் பார்க்க சகிக்கவில்லை

     – எஸ். திருநாவுக்கரசிற்கு இருபத்தைந்து வயதானபோது (சிறுகதை)

வங்காளம் மற்றும் மலையாள மொழி இலக்கியங்களில் பெண் முகத்திற்கு வழங்கப்படும் வலிமையும் சுதந்திரமும் போல் தமிழ் படைப்புலகில் அரிதாகவே காணக்கூடும். அதற்கு காரணங்களாக பல கலாச்சாரக் கூறுகளைச் சுட்டிக் காட்டி நியாயம் பகர்ந்தாலும் அவை பெண்ணினத்திடம் வரவேற்பைப் பெறப்போவதில்லை என்று தெரிந்திருந்தும் பெண்களை எழுதுவதில் எல்லைக் கோடுகளைத் மீற யாரும் முற்படுவதில்லை. ஆனால் லசகுவின் எழுத்து அவற்றிலிருந்து விலகி பெண்மையைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு பிரதிபலிப்பதைக் காணலாம். பெண்மையின் மறைக்கப்பட்ட முகம் லசகுவின் பல கதைகளில் மின்மினிப் பூச்சிகளின் ஒளியில் பெருவனமொன்று தனது இரகசியங்களோடு வெளிச்சம் பெறுவது போல் வெளிச்சம் பெறுகின்றன. நிஜம் பழகும் பெண்களுக்கு இவரது கதைகள் பிரியமாகிப் போவதில் வியப்பேதுமில்லை.

என் கதைகளை உங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லையென்றால் இச்சமூகம் அவ்வாறிருப்பதை உணரவும். எப்பொழுதோ அம்மணமாகிவிட்ட இந்த சமூகத்தின் ஆடைகளை களைவதற்கு நான் யார். அதை மறைப்பதற்கும் நான் முற்படுவதில்லை. அது ஒப்பனக்காரர்களின் வேலை.” என மண்ட்டோ தன் படைப்புகள் குறித்து எழுதியிருப்பார்லஷ்மி சரவணகுமாரின் கதையுலகும் மண்ட்டோவின் இக்கூற்றை ஆமோதித்து எழுதப்பட்டவை என்னும் புரிதல் அவரை வாசிக்கும் பொழுது ஏற்படும் என்பது திண்ணம்.

***

ஷாலினி பிரியதர்ஷினி ..

ஆசிரியர் தொடர்புக்கு — shalinidarshini@gmail.com

யவனிகா ஸ்ரீராம் கவிதை

0

மாற்று வழியில் செல்லவும் ஆண்கள் வேலை செய்கிறார்கள்

ஒருவாறான முன் நிபந்தனையற்ற
உரையாடல்களுக்கிடையே நொதித்தப்
புரதங்களோடு வடிக்கப்பட்ட தேறல்
வகை மதுவைப் பகிர்கையில்
பெண்களின் உதரவிதானங்களும்
செய்நேர்த்தியுடன்
வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களும்
பூர்த்தியானவுடன்
இறந்து விடுகின்றன என்றான்
கவிஞனானவனும் கட்டிடக்கலை
நிபுணனுமாகிய ஒரு கலைஞன்
இன்னொரு பெக்கிற்கு வினயம்
கொண்டிருந்த நாடோடி தன் பயண
வழியில் அதை ஆமோதித்துப் புரிந்தான்
சமகாலத்தை உல்லாசமாக்கிக்
கொண்டிருந்தது
அன்றாட நாளின் மிகச்சிறந்த
மரணவாய்ப்பு
பெண்களின் மீதான முதலீடுதான்
உலகத் தேனீர்ப்பிரச்சனை அல்லது
குளங்களில் மீன்களை வளர்ப்பது
என கடைசிப் பெக்கில் அழுகையுடன்
ஒத்துக்கொண்டாயிற்று
நாளை அவனோ கட்டிடங்களின்
முன்வாயிலில்
நாடோடியோ மதுக்கடைச்சந்தடியில்
ஆங்காங்கே
தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறது
மத்திய காலப் பெருநகரம்

நவீனத் தமிழ் கவிதையில் யவனிகா ஸ்ரீராமின் கவி மொழி தனித்தது. அரசியல் கூர்மையுள்ள அவரது கவிதைகள் இதுவரை ஏழு கவிதைத் தொகுப்புகளாகவும் இரண்டு தொகுப்பு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. – ஆசிரியர் தொடர்புக்கு yavanikaramasamy@gmail.com

மந்தாரம்

0

சுஷில் குமார்

தூரத்தில் இருந்து பார்த்தபோதே அந்த உச்சிப் பாறைகளின் இடுக்கில் சிறிய முக்கோண வடிவில் தெரிந்தது மந்தார மலைக்குகை. இருபுறமும் அளவெடுத்தது போன்று இரு பாறைகள் சாய்ந்திருக்க, அவற்றை மேலாக மூடியிருந்தது உயர்ந்த மரங்களின் காலடியில் கிடந்த ஒற்றைப் பெருங்கல். ஒவ்வொரு முறை அந்தச் சாலையைக் கடந்து செல்லும் போதும் அனிச்சையாக என் கண்கள் அக்குகையை நோக்கி மேலெழும். விரல்கள் தானாக நெஞ்சுக்குழியைத் தொட, கண்கள் ஒரு கணம் மூடி என் முதல் அனுபவத்தை நினைவு கூறும். குகைக்கோயிலின் அந்த சிறு குடைவில் நிற்கும் ஏதென்றறியா தெய்வமும், அதன் காலடி மணலும்.  

பேருந்திலிருந்து இறங்கியது முதல் ஒன்றும் பேசாமல் நடந்து கொண்டிருந்தான் ஏசுவடியான். எத்தனையோ முறை நான் அழைத்தும் இங்கே வந்திராதவன் முந்தைய நாள் இரவில் அழைத்து, “நாளைக்கி காலம்பற மந்தார மலைக்கி போணும் மக்கா. ரெடியா இரி.” என்றான். சரி, அவனுக்கே ஓர் ஆர்வம் வந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். மந்தார மலையின் இரகசியங்கள் மீது யாருக்குத்தான் ஆர்வமில்லாமல் இருக்கும்.

எல்லா ஊரிலும் உள்ளதைப் போலவே மந்தார மலைக்கும் ஓர் அனுமார் கதை உண்டு. சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு இலங்கைக்குப் பறந்து சென்ற அனுமனின் கையிலிருந்து தவறி விழுந்த ஒரு சிறுதுண்டு கல் இங்கே ஊன்றிப் பெருகி வளர்ந்து மந்தார மலையாகிப் போனது. இம்மலையின் ஒவ்வொரு செடியும், மரமும், அவற்றின் ஒவ்வொரு இலையும், வேரும், பட்டையும் மனிதகுலத்தின் பிணி தீர்க்கும் மருந்துகள். மலையேறும் செங்குத்துப் பாதையின் நடுவே தானாய்த் தோன்றி தானாய் பெருகிக் கிடக்கும் அக்னி தீர்த்த ஊற்றின் நீரைப் பருகினால் உடல் சூடும் மனச்சூடும் குறைந்து தெளிவு கிடைக்கும். பதினெட்டு சித்தர்கள் பலநூறு ஆண்டுகள் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த குகைகளும் புற்றுகளும் சில தெரிந்தும் சில மறைந்தும் உள்ளதாகவும் நம்பிக்கை. தேவையான நேரத்தில் ஏதேதோ வடிவில் உருவில் அச்சித்தர்கள் தோன்றி தேவையானவர்களுக்கு வரம் கொடுப்பதாகவும் சொல்வதுண்டு. அவர்களின் சீடர் பரம்பரையில் வந்தவர்களென இரு சித்தர்கள் இன்னும் இம்மலையில் வாழ்வதாகவும் பேச்சுண்டு.

பிரதான சாலையிலிருந்து இறங்கி சற்று நடந்து குறுக்கே ஓடிய சிறு கால்வாயைக் கடந்தோம். ஏசுவடியான் என் பின்னால் மெதுவாக நடந்து வந்தான். பொதுவாகவே அவன் அமைதியானவன் தான். ஆனால், அன்று ஏதோ கூடுதலாக வித்தியாசமாகப்பட, நின்று அவனை நோக்கிக் கேட்டேன், “லேய், நில்லு. ஒனக்கென்ன பேய் புடிச்சிருக்கா? ஒரு மாரியால்லா வார!”

ஏதோ நினைவிலிருந்து மீண்டு வந்தவனாக, “என்ன? என்ன சொன்ன?” என்றான்.

“அது செரி, ராவு எவ கூடயாம் போனியான்னு கேட்டேன். மூஞ்சி செத்த பய மாறி இருக்கு, என்னல மேட்டர்?”

“ஒன்னுல்ல மக்கா, நா ஏதோ யோசனைல வந்தேன்.”

“ஓஹோ, இவரு பெரிய பண்ணையாரு, தென்னந்தோப்புல தேங்கா வெட்டு, நூறு ஏக்கரு வயலறுப்பு, எல்லா மயிரயும் இவருதான பாக்காரு?” என்று அவன் கையைப் பிடித்து முறுக்கினேன்.

கையை வெடுக்கென இழுத்தவன், “சரவணா, எங்க அத்தயப் பத்தி சொன்னேன்லா, ஓர்ம இருக்கா?” என்று கேட்டான். அவன் என்னைப் பார்க்காமல் பக்கத்தில் வேறு யாரையோ பார்த்து கேட்பதைப் போலவிருந்தது.

“அத்தையா? எந்த அத்த?”

அவனிடமிருந்து பதிலில்லை. என்னை விடுத்து முன்னே நடக்க ஆரம்பித்தான். குழம்பியவாறு எட்டு வைத்து அவன் அருகே சென்று அவனைப் பிடித்து நிறுத்தினேன்.

“லேய், என்னல? என்னாச்சி ஒனக்கு?”

“எனக்கா? ஒண்ணுல்ல. வா, செனம் போவம்.”

“லேய், அத்தயப் பத்தி ஏதோ சொன்னல்லா, பாதில விட்டுட்டு ஒம்பாட்டுக்குப் போவம்ங்க, என்னல பிரச்சன, சொல்லு மக்கா.”

அப்படியே நின்று தனக்குள்ளாக ஏதோ பேசியவாறு என் முகத்தைப் பார்த்தான். பின் அமைதியாக தலைகுனிந்து நின்றான். பின், மீண்டும் என்னைப் பார்த்தான், முன் நோக்கி மலையைப் பார்த்தான்.

“அப்பாவோட தங்கச்சி இருந்தால்லா, நீ பாத்ததில்லன்னு நெனைக்கேன். எவ்ளோ அழகா இருப்பா தெரியுமா? எனக்கு கல்யாணம் பண்ணா அவள மாறி பொண்ணுதான் பாக்கணும்னு எங்கம்மாட்ட சொல்வேன்.”

“ஆமா, செத்துப் போய்ட்டாங்கல்லா, அவங்க தான?”

ஒன்றும் பேசாமல் நின்றான் ஏசுவடியான். சட்டென என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான். ஓவென்று கத்தினான். கதறி அழுதான். எனக்கு கைகால் நடுங்கி விட்டது. சுற்றி யாரும் வருகிறார்களா என பார்த்தேன். மலையடிவார பெட்டிக்கடையைத் தவிர அப்பகுதியில் வேறேதும் கிடையாது. தூரத்தில் வந்த ஒரு சைக்கிள் மெல்ல மெல்ல எங்கள் அருகே வந்து கடந்து சென்றது. நல்ல பதநீர் வாசம்.

அவனாகவே அமைதியடைந்தான். நான் அவனருகே அவன் கையைப் பிடித்து நின்றேன். மீண்டும் மலையைப் பார்த்தவன் என்னைப் பார்த்து, “அத்த சாகதுக்கு முந்துன நாள் ராவு எம்பக்கத்துல தான் படுத்துக் கெடந்தா பாத்துக்கோ. என்னிக்கும் இல்லாத ஒரு ஐஸ்வர்யம் அவகிட்ட அன்னிக்கி பாத்தேன். என் தலைல கைய வச்சி கோதிட்டே இருந்தா. நா சொகமா கெடந்தேன். எனக்கு அவள ரொம்ப புடிக்கும் மக்கா. நா ஒறங்கி விழுந்தப்போ அவ என்கிட்ட என்னல்லாமோ பேசிட்ருந்தா? என்ன பேசுனான்னு முழுசா தெரில, ஆனா அவ சிரிச்சி சிரிச்சி பேசுனா. எடைல என் கைய புடிச்சி முத்துனா, என் தலைய அவ மடில வச்சி ஏதோ பாட்டு பாடினா. இதெல்லாம் நெஜமா நடந்தான்னு எனக்கு தெரில, ஆனா, அப்டியே கண்ணுல அடிக்கடி வரும் பாத்துக்கோ. நல்லா சிரிச்சிட்டே இருந்தவ திடீர்னு அழ ஆரம்பிச்சா, நா என்ன ஏதுன்னு யோசிச்சிட்டே கெடந்தேன். அத்த என் கையப் புடிச்சி அவ நெஞ்சுக்கூட்டோட வச்சி புழுங்கிப் புழுங்கி அழுதா. நா நல்லா ஒறங்கிட்டேன்னு நெனச்சி அவ மனசுல உள்ள எல்லாத்தயும் கொட்டிட்டான்னு நெனைக்கேன் மக்கா. எனக்கு வெப்ராளமா வந்து, கண்ண இறுக்கிட்டு படுத்துக் கெடந்தேன் பாத்துக்கோ. ஒருவேள எல்லாமே கனவாவும் இருக்கும்.” என்றான். எனக்கு குழப்பம் மேலும் அதிகமாகியது.

“செரி மக்கா. விடு, அத்த பாவம். என்ன பண்ண? போய்ட்டாங்க.” நான் கேட்க நினைத்தது அத்தை என்ன சொன்னார்கள் என்றுதான். ஏனோ அதை கேட்காமல் விட்டுவிட்டேன்.

“இல்ல சரவணா, அத்த என்கிட்ட சாகப்போறேன்னு சொன்னா.”

எனக்கு நெஞ்சு படபடத்தே விட்டது. “லேய், என்னல சொல்லுக?”

“கேளு மக்கா. அடுத்த நாளு விடியக் காலைல, லேசா முழிப்பு தட்டிச்சி, அத்த அப்பவும் எம் பக்கத்துல தான் இருந்தா, குத்த வச்சி ஒக்காந்து கால் முட்டிய கட்டிப்புடிச்சி அழுதுட்டே இருந்தா. பொறவு நல்லா சிரிச்சா. என் காதுகிட்ட வந்து ரகசியமா ‘மக்ளே, அத்த கர்த்தர் கிட்ட போகப் போறேன், என்னா’ன்னு சொன்னா. அவ சொன்னப்போ நா நல்லா கொறட்ட விட்டு ஒறங்கிட்டு தான் இருந்தேன். ஆனா, அவ சொன்னது எனக்கு கேட்டு பாத்துக்கோ. அத்த வேண்டாம்.. அத்த வேண்டாம்.. அத்தன்னு தூக்கத்துலயே சொல்லுகேன்.”

ஒரு நொடி நிறுத்தியவன் தன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “லேய், உச்சிக்கிப் போக எவ்ளோ நேரமாவும்?” என்று கேட்டான்.

“ஒரு மூனு மணிக்கூர், யாம்ல கேக்க?”

மீண்டும் தன் கடிகாரத்தைப் பார்த்தான்.

“அத்த இன்னும் நெறைய சொன்னா மக்கா. எனக்கு எல்லா வார்த்தையும் உள்ள திரும்பத் திரும்ப கேக்கு. ஆனா, சொல்ல வரமாட்டுக்கு. ஆனா, சாகப்போறேன்னு சொன்னவ எப்பிடி மக்கா சிரிச்சிட்டே இருந்தா? அதான் எனக்குப் புரியல பாத்துக்கோ.” என்றவன் விருவிருவென்று என் முன்னால் நடக்க  ஆரம்பித்தான்.

“யேசு, லேய், நில்லு, யேசு.” அவன் தனக்கேயான பாதையில் நடப்பதாகத் தெரிந்தது. என்னவென்று சொல்ல முடியாத ஒரு பயம் எனக்குள் சட்டென தொற்றிக் கொண்டது. திரும்பிப் போய்விடலாமா என ஒரு கணம் யோசித்தேன். இல்லை, அவனை விட்டுவிட்டுப் போக முடியாது. எப்போதும் போலில்லாமல் மந்தார மலை அன்று என்னைப் பார்த்து உறுமியது. தன் நெடிய கைகளை நீட்டி என்னை வாவாவென்று அழைத்தது.

விரைந்து சென்றவன் அந்தப் பெட்டிக்கடையில் நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தான். நான் ஓடிச்சென்று அவனருகே நின்றேன். தண்ணீர் பாட்டில்களும் நொறுக்குத்தீனியும் வாங்கியிருந்தான்.

“இவ்ளோ போதும்லா மக்கா?” என்று கேட்டான். நான் தலையாட்டினேன். இருவரும் மலையடிவார புற்றுக்கோயிலுக்குச் சென்றோம். கைவிரல்களைக் கோர்த்துக் கொண்டு நின்று கண்மூடி வேண்டினான் ஏசுவடியான். நான் இன்னும் குழப்பத்திலிருந்து வெளிவராமல் புற்றுச்சித்தர் முன்னால் நின்றேன். அரைப் பனை உயரப் புற்றின் சிறு துளைகளில் பால்வடிந்து காய்ந்த தடங்கள் தெரிந்தன. கூர்ந்து பார்த்தபோது அவை தோலுரிக்கப்பட்ட பாம்புச் சட்டைகளாக மாறின. உடலெங்கும் புல்லரித்து விட்டது. 

“சரவணா, மேல இருக்க அந்தக் குகைல என்ன நெனச்சாலும் நடக்கும்னு சொன்னேல்லா?”

ஏசுவடியானின் ஒவ்வொரு கேள்விகளும் எனக்கு புதிராகவே தெரிந்தன. “அது, எதாம் நெனச்சிட்டு கண்ண மூடி இருந்தா, அந்த சாமி முன்னால இருக்க மண்ணுல ஒரு கொழந்த பாதம் தெரியுமாம். அப்பிடி தெரிஞ்சா நம்ம நெனச்சது நடக்குமாம்.”

“ஓ, தெரியலன்னா?”

“இல்லாட்டா கோழி கிண்டுன மாறி தடம் தெரியுமாம்.”

“தெரிஞ்சா?”

“அப்பிடித் தெரிஞ்சா நம்ம நெனச்சது நடக்காதுன்னு சாமி சொல்லுகுன்னு அர்த்தம்.”

“சூப்பர், செனம் ஏறுவோம்.” என்று சொல்லிவிட்டு மலையேறும் படிக்கட்டை நோக்கிச் சென்றான். புற்றின் அருகே படுத்துக் கிடந்த கருத்த நாயொன்று வாலாட்டியவாறு என்னருகே வந்து நின்றது. தயங்கித் தயங்கி மோப்பம் பிடித்து என் கால் பாதத்தைத் தொட்டு நக்கியது. நான் என் காலை இழுக்க, மீண்டும் வாலாட்டிவிட்டு ஏசுவடியானை நோக்கிச் சென்றது. முதல் படியில் உட்கார்ந்திருந்த அவன் ஏதோ நீண்ட கால நண்பனைப் பார்ப்பதைப் போல அந்த நாயைப் பார்த்து சிரித்துக் கொண்டே கையசைத்துக் கூப்பிட்டான். அது ஓடிச்சென்று அவன் காலடியில் படுத்து அங்குமிங்கும் உருண்டது. அவன், அதைத் தூக்கி தன் மடிமீது கிடத்தி தடவிக் கொடுத்தான். எனக்கு நடப்பதெல்லாம் அதிசயமாகத் தெரிந்தது. யாரையும் முகம்பார்த்து பேசக்கூட மாட்டான் ஏசுவடியான். எப்போதும் குனிந்த தலை, ஒடுங்கிய நடைதான். அன்று எல்லாமே புதியதாய்த் தோன்றின. நான் அவனருகே சென்றதும் அந்த நாய் துள்ளியேறி மலைப் படிக்கட்டில் செல்ல ஆரம்பித்தது. ஒரு பத்து படிகள் கடந்து நின்று திரும்பி எங்களைப் பார்த்தது. அது எங்களுக்காக காத்துதான் நின்றது. பாறைகளைச் செதுக்கி, கற்களை அடுக்கி ஏற்படுத்தப்பட்ட படிகள். ஏசுவடியான் உற்சாகமாக ஏற ஆரம்பித்தான். நானும் தொடர்ந்தேன்.

மலைப் படிக்கட்டின் இருபுறமும் பச்சைப் பசேலென புதர்கள். சற்று முன் சென்றதும் சிறு மரங்கள், மேல் செல்லச்செல்ல உயர்ந்து வான் மறைத்து நின்ற மரங்கள். சில நூறு படிகளைக் கடந்து ஒரு திருப்பத்தில் நின்றோம். சற்று மேலே ஒரு சுற்றுச்சுவர் தென்பட்டது. பூதலிங்க சாமி கோவிலைச் சுற்றி புதிதாகக் கட்டியிருந்தார்கள். அதன் வழி மேலேறியதும் ஒரு துண்டு நிலம், அதன் நடுவே ஒற்றை வேப்பமரம் அதன் பின்னால் இருந்த சிறிய கோயிலை முழுவதும் மூடியவாறு நின்றது. இருவருக்கும் வேர்த்து சட்டை ஈரமாகி விட்டது. அந்த நாய் வேம்பின் அடியில் சென்று குத்தவைத்து உட்கார்ந்திருந்தது. ஏசுவடியானும் நானும் கோயிலுக்குள் சென்றோம். வெளியேயிருந்ததைக் காட்டிலும் மிக குளிர்ச்சியான காற்று கோயிலின் பக்கவாட்டிலிருந்த பாறையிடுக்குகளின் மூலம் உள்வந்தது. கருவறையின் வெம்மை மெல்ல நீண்டு வந்து எங்களை இழுத்தது. அச்சிறு லிங்கத்தின் முன்னமர்ந்து கண்மூடி தியானம் செய்ய ஆரம்பித்தேன். அதுவரையிருந்த பயமும் பதட்டமும் மெல்ல வெளியேறி என் சுவாசம் என் கவனத்தில் வந்தது. சில கணங்கள் அப்படியே லயித்திருந்தேன். திடீரென, என் காதிற்குள் ஒரு விசும்பல் சத்தம். அந்த ஆழ்நிலையிலிருந்து வெளிவர விருப்பமில்லாமல் அச்சத்தத்தைத் தவிர்த்து உள்ளத்தைக் குவியச் செய்ய முயற்சித்தேன். அவ் விசும்பல் இன்னும் இரைந்து கோயிலின் கற்சுவர்களில் பட்டு எதிரொலித்து என் முகத்தில் வந்து அறைந்ததைப் போலிருந்தது. அது ஏசுவடியானின் குரல்தான் எனத் தோன்ற, சட்டெனக் கண் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். அவனைக் காணவில்லை. வெளியில் அந்த நாயின் குரைப்புச் சத்தம் கேட்க, பதறி எழுந்து ஓடினேன்.

ஏசுவடியான் அவ்வேப்பமரத்தைச் சுற்றி ஓடி அந்த நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தான். நான் வந்து நின்றதைப் பார்த்ததும் அந்த நாய் கோயிலின் இடப்புறமாக மேலேறும் பாதையில் சென்று நின்று எங்களைத் திரும்பிப் பார்த்தது. இதென்ன நமக்கு வழி காட்ட வந்திருக்கிறதா? இதுவரை எத்தனையோ முறை வந்திருக்கிறேனே? இந்த நாயைப் பார்த்ததேயில்லையே?

“என்ன டே, ஏறுவோமா?”

“இரி மக்கா, இங்க வந்து பாரு, ஸ்ரீ இந்திரம் கோயில் கோபுரம் ஒரு குச்சி மாறி தெரியி பாரு.”

“லேய், எங்கிட்டயேவா? வா, வா, இன்னும் நெறைய காட்டுகேன்.”

தலையாட்டி என்னருகே வந்தவன், “ஒனக்கு ஞாபகமிருக்கா மக்கா, எங்க வீட்டுக்கு மொத மொத நீ வந்தேல்லா?” என்று கேட்டான்.

“ஆமா, ஆச்சிக்கி ராவு முழிப்பு சமயம் தான அப்போ?” என்று பதில் சொல்லும்போதே எனக்குள் மீண்டும் ஒரு நடுக்கம் வந்தது.

“ம்ம். அப்போ எங்க அப்பா ஒன்ட்ட என்னவோ கேட்டால்லா?”

“தெரிலயே? எந்த ஊரு, என்னான்னு கேட்டுருப்பாங்கோ. யாம்ல கேக்க?”

ஏசுவடியானின் முகம் இறுகியது. இல்லையெனத் தலையாட்டினான். மீண்டும் ஆட்டினான். தனக்குள்ளாக முனகியவாறு மீண்டும் மீண்டும் தலையாட்டினான். நான் அவன் கையைப் பிடித்து உலுக்கி, “யேசு, என்ன செய்ய?” என்று கேட்டேன்.

“என்ன மக்கா? ஒன்னுல்ல…” என்றவன் சற்று நேரம் அப்படியே நின்றான். “எங்கப்பா ஒரு ஃபிராடு மக்கா, அயோக்கிய ராஸ்கல், கொலகாரப்பய.” என்று கத்தினான். அவனது முகம் கோவத்தில் நடுங்கியது. சட்டென வியர்த்து வழிந்தது.

“லேய், என்னல சொல்லுக? வீட்ல எதாம் பிரச்சினயா மக்கா? வந்ததுலேந்து நீ ஒரு மாறி நடக்க? என்ட்ட சொல்லு மக்கா, என்னாச்சி?”

“என்ன சொல்ல ல? அந்த வீட்டுல இருந்தேன்னா அந்தாள நா அடிச்சே கொன்னுருவம் பாத்துக்கோ. பெரிய மிலிட்டரி மயிருன்னா நா ஒன்னும் பயப்பட மாட்டேன், கேட்டியா?”

எனக்கு பிரச்சினை ஓரளவு புரிந்தது மாதிரி இருந்தது. ஏசுவடியானின் அப்பா பயங்கர கோவக்காரர், அவர் வீட்டில் அவர் வைத்ததுதான் சட்டம், ஒழுக்கம், கட்டுப்பாடு என்று எல்லோரையும் தன் கையசைப்பில் வைத்திருப்பார். இதெல்லாம் நண்பர்கள் சொல்லியும், என் அப்பா அம்மா சொல்லியும் கேள்விப்பட்டதுதான். ஏசுவடியான் பெரிதாக ஒன்றும் சொல்லிக் கொண்டதில்லை. ஆனால், அவன் வீட்டிற்கு நான் சென்றபோதெல்லாம் அவர் நன்றாக சிரித்துப் பேசிதானே இருந்தார்? சாப்பிடாமல் போக விடவே மாட்டாரே?

“எங்க ஆச்சி நல்லாதான் இருந்தா மக்கா.. சாவதுக்கு முந்துன நாள் நாந்தான் அவ கூட சர்ச்சுக்குப் போனேன். பாஸ்டர் கிட்ட போயி ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தா. திரும்பி வரும்போ எனக்கு ஒரே அட்வைசு. நல்லா படிக்கணும், அம்மாவ நல்லா வச்சி பாக்கணும், அம்மா சொல்பேச்சக் கேக்கணும்னு, என்னல்லாமோ சொன்னா பாத்துக்கோ. நைட்டு தூங்கும்போ என் நெத்தில வந்து கிராஸ் போட்டுட்டு ஜெபம் சொல்லிட்டு போனா, எப்பவும் அவ கைய விட்டு போவாத்த மாலயும் வச்சிருந்தா.   அடுத்த நாளு காலைல பாக்கேன், செத்துக் கெடக்கா.”

அவன் முகத்தைப் பார்த்து அப்படியே நின்றேன்.

“அவருக்கு வக்கணையா எல்லாம் செஞ்சி வைக்கணும், ஓராயிரம் கொற மயிரு, ஏட்டி வெந்நீர் போடு, ஏட்டி சட்டைய எடு, ஏட்டி செருப்பத் தொட, ஏட்டி வெத்தலய கொண்டா, ஏட்டி கால அமுக்கு. ஒருநாளு சூடு ரசத்த எங்கம்மா மூஞ்சிலயே ஊத்திட்டாரு மக்கா.”

“என்ன மக்கா சொல்லுக? எதுக்கு?”

“ரசத்துல உப்பு இல்லயாம். இன்னொரு நாள் ராவு அம்மாவ ஓங்கி ஓங்கி மிதிச்சாரு, நா எடைல போயி தடுக்கப் போனேன், என்னப் புடிச்சி சொவத்தோட வச்சி நெருக்கிட்டாரு. அம்ம வந்து அவரு காலப்புடிச்சி கெஞ்சுகா, விட மாட்டுக்காரு. எனக்கு கண்ணு சொருகி மயக்கமே வந்துட்டு. ஒரே விஸ்கி வாட வேற.”

“யேசு, நெஜமாவா? அப்பா மிலிட்டரி ஆபீசருன்னு நீதான பெருமையா சொல்லுவ?”

“மிலிட்டரில இவர எப்பிடி எடுத்தான்னு யாருக்குத் தெரியும்?”

“லேய், விடு, அப்பா எதாம் கோவத்துல அப்பிடி செஞ்சிருப்பாரு.”

“இல்ல மக்கா, ஒனக்கு ஒன்னும் தெரியாது. எங்க அத்த… எங்க ஆச்சி… எங்க அம்மா.. எந் தங்கச்சி..” என்றவன் மீண்டும் அழ ஆரம்பித்தான். நான் ஒன்றும் செய்ய வேண்டாமென அப்படியே அவனருகே நின்றேன். பெருமூச்செறிந்து அழுது ஓய்ந்தவன் மேலேறும் பாதையில் நடக்கத் தொடங்கினான். நான் அவனைத் தொடர்ந்து ஏதேதோ யோசித்தவாறு நடந்தேன். அந்த நாய் அதே உற்சாகத்தோடு எங்கள் முன்னால் துள்ளி ஓடியது.

அடுத்த ஒருமணி நேரம் தொடர்ந்து ஏறினோம். ஏசுவடியான் திரும்பிக் கூட பார்க்காமல் அந்த நாயைப் பின்தொடர்ந்து சென்றான். அவர்கள் இருவரும் தங்களுக்குள்ளாக பேசிச்சென்றதைப் போலிருந்தது. சில பாறைகளின் அருகே அந்த நாய் நின்று சுற்றிலும் மோப்பம் பிடித்தது. ஓரத்துச் செடிகளில் மூத்திரம் கழித்தது.

ஒரு பாறையின் அருகே நின்று அதைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஏசுவடியான். அருகே சென்று பார்த்தபோது அதில் வெட்டப்பட்டிருந்த எழுத்துக்களை ஒவ்வொன்றாக சேர்த்து வாசிக்க முயற்சித்தான். மலையாள எழுத்துகள், அருகே சிவப்பும் பச்சையுமாக குறியீட்டு ஓவியங்கள்.

“கர்த்தர் எத்தனை மலை, எத்தனை குகை, எத்தனை பாலைவனம்லாம் பாத்துருப்பாரு என்ன மக்கா? நம்மெல்லாம் கன்னியாரிய தாண்டி ஒரண்டயும் போனதில்ல. என்ன நம்பிக்கைல அவரு அப்பிடி திரிஞ்சிருப்பாரு? நமக்கு கும்புட சாமி இருக்கு.. அவரு யாரு மேல நம்பிக்க வச்சி அலஞ்சாரு? கல்லால அடிச்சானுவோ, காட்டிக் குடுத்தானுவோ. கொன்னே போட்டானுவளே மக்கா. ஒன்னும் வெளங்க மாட்டுக்கு பாத்துக்கோ.” சொல்லிவிட்டு நடையைத் தொடர்ந்தான்.

பாதி மலையைக் கடந்து விட்டோம். சுற்றியிருந்த சுக்குநாறிச் செடிகளின் மணமும், சிறுவண்டுகளின் க்ரீச் ஒலியும், சூரியனை மறைத்த உயர் மரங்களின் நிழலும், இடையிடையே கருத்து உயர்ந்து நின்ற பாறைக் குன்றுகளின் கனத்த மௌனமும் சேர்ந்து சூழல் முற்றிலும் மாறியது. எனக்குள் எதற்கென்றில்லாத நடுக்கமும் ஏசுவடியான் அடுத்தது என்ன சொல்லப் போகிறான் என்கிற ஆர்வமும் சேர்ந்து ஒருவித கலவையான மனதுடன் அங்கிருந்த ஊற்றுச்சுனையின் அருகே நின்றேன். நாயுடன் சீசரும் அவ்வூற்றில் நீரெடுத்துக் குடித்துக் கொண்டிருந்தான்.

“சரவணா, ஒனக்குத் தெரியும்லா? இந்த ஊத்துத் தண்ணி ஒரு மருந்தாக்கும். என்ன நோய் இருந்தாலும் செரி ஆயிருமாம், பாத்துக்கோ. நெறைய வேருக்கு பைத்தியம் கூட தெளிஞ்சிருக்காம். ஹா ஹா ஹா..” என்று சிரித்தவன் தொடர்ந்து சிரித்துக் கொண்டேயிருந்தான். அந்த நாய் மேலேறி பாதையின் நடுவே நின்று வாலாட்டிக் கொண்டிருந்தது.

“எங்க அத்தயையும், ஆச்சியையும் இங்க கூட்டிட்டு வந்திருக்கலாம் மக்கா. நீ எத்தன வாட்டி கூப்ட்ட, நாந்தான் வரல்ல.” என்றான் ஏசுவடியான்.

நான் அவன் சொல்வதையெல்லாம் சேர்த்து கூட்டிக்கழித்து ஒரு முடிவிற்கும் வரமுடியாமல் நின்றேன். ஊற்று நீரை அள்ளி முகத்தைக் கழுவி, தலையை நனைத்தேன். திடீரென தாகம் உடலெங்கும் பரவியதைப் போலிருந்தது. கூடிய மட்டும் அள்ளியள்ளிக் குடித்தேன். 

“அம்மாவையாவது கூட்டிட்டு வந்துருக்கலாம் சரவணா.” என்று சொல்லிவிட்டு ஏசுவடியான் விரைந்து ஓட, அவன் முன் பாய்ந்தோடியது அந்த நாய்.

அதற்கு மேல் பாதை தெளிவின்றி பாறைகளில் செதுக்கப்பட்ட அம்புக்குறிகளைச் சார்ந்தே இருந்தது. ஓராள் மட்டுமே செல்லும் அளவு குறுகலான பாறை இடுக்குகள், திடீரென செங்குத்தாக மேலேறும் முரட்டுக் குத்துக்கற்கள், தடத்தை மறைத்து திரைபோல படர்ந்திருக்கும் பலவித கொடிகள், முற்செடிகள், நிறம் ஒன்றி ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லிகள், பூச்சிகள், அட்டைகள் என வான் நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு காடாக மேற்சென்றது. சில குடைவுகளின் உட்சென்று வெளிவருவதற்குள் இதயத்துடிப்பு என் காதுகளில் அதிர்வாகக் கேட்க, வானமற்ற அந்தப் பாறைக் குடைவுகள் எத்தனை ஆயிரமாண்டு மௌனத்தைத் தாங்கி நிற்கின்றன என்று எண்ணம் தோன்ற தொண்டை அடைத்துக் கொண்டது. ஏசுவடியானோ நான் உடனிருப்பதையே மறந்தவன் மாதிரி தீவிரமாக ஏறிக்கொண்டிருந்தான். ஏதோ பலமுறை வந்து பழக்கப்பட்டவனைப் போல, துளியும் யோசிக்காமல் திருப்பங்களைக் கடந்து சென்றான். நான் அவனை அழைத்து வந்திருக்கிறேனா? இல்லை அவன்தான் என்னை கூட்டிச் செல்கிறானா?

மந்தார மலையின் மூன்றாம் அடுக்கில் இருந்தோம். எங்கள் கால்களுக்குக் கீழே பரந்து விரிந்து தரை தெரியாத அளவிற்கு இருந்தன முதலிரண்டு மலைகள். காற்று குளுமையேறியிருந்தது. இன்னும் சில நிமிடங்கள் நடந்தால் மேகங்கள் எங்கள் தலைமீது மோதும் போலிருந்தது. அன்று சூரியன் மேகங்களுக்குள்ளேயே இருக்க விரும்பியது. எப்போது வேண்டுமானாலும் சிறு சாரலோ, மழையோ வரக்கூடும். ஏசுவடியான் சட்டையைக் கழற்றி இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டான். கைகளை விரித்துப் பறப்பதைப் போல தாவித்தாவிச் சென்றான். அப்போதுதான் கவனித்தேன் அந்த நாயைக் காணவில்லை. ஆனால், ஏசுவடியான் அந்த நாயுடன் சேர்ந்து சென்றதைப் போலவும் இருந்தது. சில கணங்களில் அவனும் என் கண்ணிலிருந்து மறைந்து விட்டான். படபடத்து நடையில் வேகம் கூட்டினேன்.

முக்கோணக் குகையின் மேல் கல்லை நான் அடைந்தபோது ஏசுவடியான் அதன் முனையில் நின்று கீழே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நாய் அவன் காலருகே படுத்துக் கிடந்தது. அது காய்ந்த மரக்கட்டையொன்றைக் கடித்துக் கொண்டிருந்தது. ஏசுவடியான் நிற்பதைப் பார்த்ததும் என் கைகால்கள் பரபரக்க ஆரம்பித்தன. ஒன்றும் பேசாமல் நான் வந்ததை காட்டிக் கொள்ளாமல் மெல்ல அவனருகே சென்றேன். அவனது முகம் இறுகிப் போயிருந்தது. மூச்சு வேகம்கூடி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

“என்ன டே, ஒம்பாட்டுக்கு பாஞ்சு வந்துட்ட, நீ இங்க வந்ததில்லல்லா மக்கா? பொறவு எப்பிடி அசால்ட்டா ஏறி வந்துட்ட?”

ஏசுவடியான் பதில் சொல்லாமல் கீழே பார்த்து நின்றான்.

“நல்லா குளுருகுல்லா மக்கா? கீழ செம வெக்கையா இருக்கும். இங்க சொர்க்கம் மாறில்லா இருக்கு, என்னா?”

ஏசுவடியான் திரும்பி என்னைப் பார்த்தான். “நான் கீழ குதிச்சிருவேன்னு நெனச்சியோ?” அவன் முகத்தில் சிரிப்பில்லை.

“ஆமா, தோனிச்சி. ஆனா, சாவதுக்கு இது எடமில்ல மக்கா, பால் ஊத்ததுக்கு எலும்பு கூட தேறாது. ஆமா, ஒங்க இதுல பால் எல்லாம் ஊத்துவீங்களா?”

அப்படியே அக்கல்லின் மீதமர்ந்து என்னையும் உட்காரச் சொன்னான்.

“போன வாரம், ஒருநாள், எந்தங்கச்சியும் நானும் செஸ் வெளயாடிட்டு இருந்தோம்.  அவ பயங்கர மண்ட, தெரியும்லா? ஜெயிக்கப் போறோம்னு தெரிஞ்ச ஒடனே, என்ன போட்டு கொமைக்க ஆரம்பிச்சா. கொஞ்ச நேரம் நானும் மாத்தி அவள ஒட்டிட்டு இருந்தேன். கடைசில ஒரு செக் மேட் வச்சிட்டு சொன்னா, ‘ஆமாமா, மிலிட்டரி மூள தான உள்ளருக்கு, பொறவு எப்பிடி ஜெயிப்ப?’. ‘நா மிலிட்டரி மூளைன்னா நீ யாராக்கும்?’ன்னு நா கேட்டு அவ கையப்புடிச்சி நுள்ளி விட்டேன்.”

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தேன் நான்.

“ஓங்கி ஒரு சமுட்டு சமுட்டிட்டாரு மக்கா. அவ்ளோ நேரம் நின்னு ஒட்டு கேட்டுட்டு இருந்துருக்காரு. எந்தங்கச்சி வந்து அவர புடிக்கப் போறா, அவள பச்ச பச்சயா ஏசிட்டாரு. அதெல்லாம் ஒரு அப்பன் பேசுக வார்த்தையா மக்கா? அதுவும் அண்ணன் தங்கச்சியப் பத்தி! எனக்கு ‘சீ’ன்னு ஆயிட்டு பாத்துக்கோ. அவளுக்க அறிவுக்கும் குணத்துக்கும் இந்தாளு அவ பக்கத்துல வர முடியுமா மக்கா? அப்பன்னா என்ன வேண்ணா பேசுவாரா? பிட்டு பட தேட்டர்ல இவர பாத்துட்டு வந்து சிரிக்கானுவோ பையம்மாரு. மிலிட்டரி ஒழுங்கு மயிரெல்லாம் மத்தவொளுக்கு மட்டுந்தானா, கேக்கேன்?”

“பொறவு நீ என்ன செஞ்ச ல?”

“வா, கொகைக்குள்ள போவம்.” என்று சொல்லிவிட்டு எழுந்தான். அந்த நாய் மெல்ல இடப்புறமாக இறங்கி அப்பெருங்கல்லின் ஓரத்தில் தெரிந்த இடுங்கிய துளையில் நுழைந்தது. ஏசுவடியான் பக்கத்துப் பாறை நீட்சிகளைப் பிடித்து இறங்கினான். பாறை பிசிபிசுப்பாக பாசி படிந்து இருந்தது. சற்று கவனமின்றி ஓரடி வைத்தாலும் முடிந்தது. அந்த இடுக்கில் நுழைந்து சில அடிகள் சென்றதும், பாறையோடு படுத்துத் தவழ்ந்து இறங்க வேண்டும். துளி வெளிச்சமும் கிடையாது. வானமும் நிலமும் காடும் காற்றும் ஏதுமற்ற இருள் பாறைக்கூடு போல.

கீழிறங்கி தளமாகவிருந்த பாறையில் நின்றோம். இருபுறமும் சாய்த்து வைக்கப்பட்ட மாதிரி இரு பெரும் பாறைகள். ஆங்காங்கே குங்குமம் சாற்றிய மாதிரி சிவப்புத் திட்டுக்கள். முன்னால் வானம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வானம் மட்டுமே. இடப்புறப் பாறையில் குடைந்து உருவாக்கப் பட்டிருந்த அச்சிறு குகையைப் பார்த்து ஏதோ யோசித்தவாறு நின்றான் ஏசுவடியான்.

“நா போய் கேட்டுட்டு வாரேன் மக்கா.” என்று சொல்லிவிட்டு குனிந்து அக்குடைவின் உள்ளேறி உட்கார்ந்தான். சரியாக இருவர் உட்காரும் அளவு தான் அக்குடைவு. அதன் சுவர் பகுதியில் ஒரு புடைப்புச் சிற்பம், உருவத் தெளிவின்றி இருந்தது. பார்ப்பதற்கு கையில் கமண்டலம் தாங்கி நிற்கும் ஒரு முனிவரைப் போல இருந்தது. அதன் முன் தளமாக ஆற்று மணல், தோண்டி விளையாடும் அளவிற்கு இருக்கும். ஏசுவடியான் உள்ளமர்ந்து அசையாமல் இருந்தான். அந்த நாய் அக்குடைவின் அருகே சென்று உற்றுப் பார்த்து நின்றது.

நான் தனியாக வெட்டவெளி வானத்தைப் பார்த்தபடி உட்கார்ந்தேன். ஏசுவடியான் என்ன நினைத்து உள்ளே போயிருக்கிறான்? அவனுக்கு குழந்தைப் பாதமா? கோழிக் கீச்சலா? மெல்லிய குளிர்காற்று என் முகத்தில் வந்து தீண்டியது. மலையேறிய களைப்பில் உடல் நீட்டி நிமிர்ந்து படுக்கச் சொன்னது. அப்படியே சரிந்து படுத்தேன். சில நிமிடங்களில் நான் உறங்கியிருக்க வேண்டும். என்னென்னவோ கனவாக வந்ததாக நியாபகம். ஒரு கடற்கரையில் நானும் ஏசுவடியானின் தங்கையும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம், ஏசுவடியான் நீண்ட தாடியுடன் எங்கோ புறப்பட்டுச் செல்கிறான், அவன் அப்பா நடுவீட்டில் உட்கார்ந்து விஸ்கி குடித்துக் கொண்டிருக்கிறார், அம்மா வந்து அப்பளப் பொரி வைக்கிறாள், அத்தையின் உடல் அவரது காலடியில் கிடக்கிறது, ஆச்சி அருகே உட்கார்ந்து ஒப்பாரி வைக்கிறாள், பின், அதே ஆச்சி பிணமாகக் கிடக்கிறாள், தங்கை உட்கார்ந்து அழுகிறாள், ஏசுவடியானும் நானும் மந்தார மலைக் குகையில்  கண்மூடி உட்கார்ந்திருக்கிறோம், பக்கத்தில் ஒரு வெள்ளை நாய், பனித்துளி போன்ற வெண்மை.

நாய் குரைப்பதைக் கேட்டுக் கண்விழித்த போது மனம் முதலில் ‘ஏசுவடியான்’ என்றது. என்னைச் சுற்றிலும் ஒரே புகை மூட்டம். இல்லை, மேக மூட்டம். வெண்ணிறப் பெரும் மேகமொன்று அந்தக் குகையோடு சேர்த்து எங்களை மூடிக் கொண்டிருந்தது. உடல் நடுங்குமளவு குளிர். கைகளை அசைத்து மேகமூட்டத்தை விலக்கப் பார்த்தேன். மேகத்திலிருந்து மேகம் விலகி மேகமாக மாறிக்கொண்டேயிருந்தது.

பயத்தில், “யேசு, லேய் யேசு, மக்கா” என்று கத்தினேன். நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தது.

“யேசு, எங்கருக்க யேசு?”

எந்த பதிலுமில்லை. இருக்குமிடத்தை விட்டு எழுந்து நிற்கக்கூட தைரியமின்றி அப்படியே உட்கார்ந்திருந்தேன். எசுவடியானின் உடல் பாறையில் மோதி தலை சிதறிக் கிடக்கும் காட்சி என் கண்முன் வந்து போனது.

“லேய், பயமாருக்கு மக்கா, யேசு, யேசு.”

அப்போது அந்த வெண்ணிற மேகத்தின் வெளிப்புறம் சரசரவென சத்தம். கூர்ந்து கவனித்துக் கேட்டேன். மழை! சாரல்! அச்சாரல் துளிகள் மேகத்தைத் துளைத்து என்மீது விழுந்தன. உடல் சிலிர்க்க மெல்ல கையூன்றி எழுந்து நின்றேன். கைநீட்டி மேகத்தின் ஊடாக அச்சாரல் துளிகளைப் பிடித்து என் முகத்தில் தேய்த்தேன். அக்கணம் நிச்சயமாக  ஏசுவடியானை மறந்துவிட்டிருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த நாயின் குரைப்புச் சத்தம் அடங்கியபோது அவன் நினைவு வர அதிர்ந்து அப்படியே உட்கார்ந்தேன்.

“யேசு, யேசு.”

மேகத்தின் ஊடே அந்த நாய் மெல்ல வந்து என்னருகே நின்றது. அதன் கூடவே மெல்லிய ஓசையாய் என் காதுகளை வந்தடைந்தது வலப்புறமிருந்து ஒரு குரல். ஒரு பாடல். ஏசுவடியான்தான்! 

“எந்தன் ஆத்ம நேசரே, வெள்ளம்போன்ற துன்பத்தில்,

தாசன் திக்கில்லாமலே தடுமாறிப்போகையில்,

தஞ்சம் தந்து, இயேசுவே, திவ்விய மார்பில் காருமேன்

அப்பால் கரையேற்றியே மோட்ச வீட்டில் சேருமேன்.”

ஏசுவடியான் நீலாம்பரியில் மனமுருகி பாடிக் கொண்டிருந்தான். நான் அப்படியே கண்மூடி உட்கார்ந்திருந்தேன். என் மூச்சு என் கவனத்தில் வந்தது.

“வல்ல தேவரீர் அல்லால் வேறே தஞ்சம் அறியேன்

கைவிடாமல் நேசத்தால் ஆற்றித் தேற்றித் தாங்குமேன்

நீரே எந்தன் நம்பிக்கை, நீர் சகாயம் செய்குவீர்

ஏதுமற்ற ஏழையை செட்டையாலே மூடுவீர்.”

பாடல் நின்றது. ஏசுவடியான் அழுதுகொண்டிருந்தான். அந்தக் குகை முழுதும் அவனது அழுகை எதிரொலித்து நிறைந்தது. நான் அசையாமல் இருந்தேன். சில நிமிடங்கள் கழித்து எங்களைச் சூழ்ந்திருந்த வெண்மேகம் மெல்ல கலைய ஆரம்பித்தது. எனக்கு ஐந்தடி தூரத்தில் நின்று கொண்டிருந்தான் ஏசுவடியான். என்னைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தான்.

“மலைக்கு மேல, மழைக்கும் மேல நாம இருந்தோம்லா மக்கா? அப்போ, மழையா பெஞ்சது நாமதான், என்ன?” என்று கேட்டு என் பதிலுக்காகக் காத்திராமல் என்னைக் கடந்து சென்று மேலேறினான்.

கீழிறங்கும் வழியில் ஒரு சொல்கூடச் சொல்லாமல் நடந்தான் ஏசுவடியான். முகத்தில் அப்படியொரு பிரகாசம், நீங்காப் புன்னகை. அடிவாரத்தில் சென்று அந்த பெட்டிக்கடைக்காரரிடம் ஏதோ பேசினான். ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி அந்த நாய்க்குக் கொடுத்தான். அது சாப்பிட்டு முடித்து அவனது காலருகே அணைந்து நின்றது. ஏசுவடியானிடம் குழந்தைப் பாதமா? கோழிக் கீச்சலா? என்று கேட்கத் துடித்தது என் மனம். ஆனால், கேட்க வேண்டாமெனவும் தோன்றியது. அடுத்த சில வாரங்களில் ஏசுவடியான் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டுப் போய்விட்டான். அது அப்படித்தான் நடக்கும் என்பது ஒருவேளை எனக்கும் தெரிந்திருந்ததோ என்னவோ!

***

சுஷில் குமார் – 35க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளி வந்திருக்கிறது. இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்”..
ஆசிரியர் தொடர்புக்கு : sushilkumarbharathi2020@gmail.com