அலங்கோல அறைக்குள் எந்த நிமிடத்திலும் எந்த இடத்திலிருந்தும் நெளிந்து கடக்கும் கருநிற பாம்பு வாழ்கிறது. இங்கே பெரும் வனாந்திரம் வரப்போகிறது என்றும் தசைகளை அறுத்து எடை போட்டவனின் காலம் எதுவென்றும் கேட்கிறது.
உள்ளாடைகளை களையும் போது பெருமூச்சு.
வலுத்து பெய்யும் மழையில் காஃபி வித் ராஜா கேட்கிறது.
சட்டென்று காஃகாவின் உருமாற்றம் கண்ணாடி முன் நின்றேன் இருவருமே தெரிந்தோம்.
புலால் உண்பதில்லை. கலவிக்கு அழைத்து வந்தவர்களில் பெண்கள் எழுவதற்குள் கிளம்பி விட்டதாக நம்பினேன்.
“பெண்கள் புலால் வகைமையில் வருவதில்லை, நண்பா” எனும் வரை..
***
2. பரம ரகசியம்
ரெண்டு நாளிலேயே தாலியறுத்த அத்தை புழக்கடையில் செத்துக் கிடந்தாள் அவள் சொன்ன பாம்பு கதைகள் அத்தனை அழகானவை அவள் கனவின் அழகிய பாம்புகள் புழக்கடை வந்திருக்குமோ?
பள்ளிக்கு அரைதினம் விடுப்பு எடுத்து வருமாறு அம்மா கூறியிருந்தது ஐந்தாம் வகுப்பு படிக்கும் அட்சயாவுக்கு நினைவுக்கு வர, ஆசிரியையிடம் ஓடினாள். அம்மா வரச்சொன்னதாக அட்சயா கூறியபோது உடனே அனுமதி கொடுத்து விட்டு உணவு டப்பாவை எடுத்து மேசை மீது வைத்தார். அட்சயா புத்தகப்பையை முதுகில் சுமந்து கொண்டு நடந்து வெளியேறுவது தெரிய, ‘பாவம்’ என்பது போல முணுமுணுத்துக் கொண்டாள். வீட்டுக்கு வந்தபோது அம்மா கிளம்பி நின்றிருந்தாள். இவளைக் கண்டதும் “சாப்டீயாடீ..” என்றாள். இருவரும் செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினர். மதிய வெயிலில் கண்களை சுருக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினர். அம்மாவின் கையிலிருந்த நெகிழிப்பையில் அவர்கள் வினவக்கூடிய சான்றுகள், மற்றும் சான்றிதழும் இருந்தன. மதிய நேரமென்பதால் பேருந்தில் கூட்டநெரிசல் இல்லாமலிருந்தது. ரவிக்கையின் மேற்புறத்தில் கை விட்டு பணப்பையை எடுத்து, அதிலிருந்த தாளொன்றை உருவி கையால் தேய்த்து, நடத்துநரிடம் பேருந்துச்சீட்டு வாங்கிக் கொண்டாள்.
அவர்கள் அங்கு போய் சேர்ந்தபோது கூட்டம் வந்திருக்கவில்லை. அவள் அந்த மண்டபத்தில் மேடை அலங்காரம் செய்து கொண்டிருந்தவரிடம் விசாரித்துக் கொண்டு அவரை அணுகினாள். அவர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று தோதாக ஒரு பதவியைப் பெற்றவர். அவர்தான் அவளை இந்த அரங்கிற்கு வரவழைத்திருந்தார். அவள் கணவனின் இறப்புக்கு தலைமையை அழைத்து வந்ததும் அவர்தான். சொல்லப்போனால், அந்நேரத்தில் கட்சிக்கு அதுமாதிரியான இறப்பு தேவைப்பட்டிருந்தது. இவளைப் பார்த்து கனிவுடன் சிரித்து “மக தானே.. அன்னைக்குப் பாத்தேன்..” என்றார். மகள் “ஆமா சார்..” என்றாள். “சாப்டீயாம்மா..?” என்றார் பொதுப்படையாக. “ஆச்சு சார்..” கேன் டீ வைத்திருந்தவரிடம் “இங்க ரெண்டு டீ குடுய்யா..” என்றார் அவர். வெள்ளை வேட்டியின் கரை அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சியை சொன்னது. வெள்ளைச்சட்டையின் பையில், தலைவரின் படம் வெளியே தெரியுமாறு வைத்திருந்தார். அவர் நகர்ந்து விட, அவர்கள் இருவரும் அந்த மண்டபத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளுக்கும் சுவற்றுக்கும் நடுவிலிருந்த இடத்தில் நின்று கொண்டனர். நேரமாக ஆக நாற்காலிகள் நிறையத் தொடங்கின. வந்தவர்களின் கவனம் சம்பந்தமின்றி நின்றிருந்த இருவர் மீதும் ஒரு கணம் பட்டு நகர்ந்தது. சமீபத்தில் செய்தித்தாளில் பார்த்த முகம் என்பதாலோ அல்லது கட்சித்தலைவரின் கவனம் அவர்களின் மீது விழுந்ததாலோ அதில் சிலருக்கு இவர்களை அடையாளம் தெரிந்திருக்கலாம். யாரோ ஒருவர் ”நல்லாருக்கியாம்மா..” என்றபோது “இருக்கோம் சார்..” என்றாள். வெள்ளைவேட்டிக்காரர் அவரை அழைத்ததாக சேதி வர மகளை அழைத்துக் கொண்டு சென்றாள்.
“இங்க பாருங்கம்மா.. தலைவர் வந்துகிட்டேயிருக்காரு.. பெரியாளுங்கல்லாம் பேசி முடிச்ச பிற்பாடு ஒங்களை கூப்டுறோம்… அதுவரைக்கும் பொறுமையா ஒக்காந்திருக்கணும்…” என்றார் வெள்ளை வேட்டிக்காரரின் பக்கத்திலிருந்த நபரொருவர்.
அவள் தலையாட்டினாள். வெள்ளைவேட்டிக்காரர் ”மேடையேறும்போது பாப்பாவெல்லாம் கூட்டீட்டு போயிடாதம்மா..” என்றார். “பாப்பா.. நீ போயீ வெளில நின்னுக்க.. அம்மா வந்துரும்..” என்ற அந்த நபர் “நா சொல்றதை கவனமா கேட்டுக்கம்மா.. வருசயா சேர் போட்டுருக்குல்ல.. அதுல நடுசென்டர்ல தலைவரு ஒக்காந்திருப்பாரு.. மேடையில ஒங்க வீட்டுக்காரரு பேரை சொல்லும்போது இதோ இப்டி பீச்சாங்கை பக்கமா மேடையில ஏறுணும். தலைவர் எந்திரிச்சு நின்னு உதவிய வழங்கும் போது கால்ல வுளுவுணும்.. ஞாபகம் வச்சுக்க.. பீச்சாங்கை பக்கம் ஏறி சோத்தாங்கை பக்கமா எறங்கணும் புரியுதா..?” என்றார். அவள் எல்லாவற்றுக்கும் சேர்த்து மொத்தமாக சரியென்று தலையாட்ட “அங்கபோயீ இப்டி தலையெல்லாம் ஆட்டிக்கிட்டு நிக்கக் கூடாதும்மா… உதவிய வாங்கின பிற்பாடு ரொம்ப நன்றிங்கய்யான்னு கையெடுத்து கும்புடுணும் கேட்டுக்க..” என்றார் மற்றொருவர். “ஒன் வீட்டுக்காரங்க பேரு நாச்சிமுத்துதானம்மா..?” என்றார் அந்த வெள்ளை வேட்டிக்காரர். அவள் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
கூட்டம் பெருகிக் கொண்டே போனபோது அவள், அவர்கள் கண்களில் தென்படாது போய்விடுமோ என்ற எண்ணத்தில் மேடைக்கு சற்று முன்பாகவே தோது பார்த்து நின்று கொண்டாள். தேநீர் நிரம்பிய கப்புகள் தாம்பாளம் ஒன்றில் இருக்கைக்கு இருக்கை நகர்ந்து கொண்டிருந்தது. சலசலப்பாக கிடந்த மண்டபம், திடீரென்று சப்தமிழக்க, ஆரவாரங்களுக்கும், வாழ்த்தொலிகளுக்கும் மத்தியில் தலைவர் இதழ்களைப் பிரித்த வண்ணம் கைகளைக் கூப்பியபடியே மேலேறினார்.
கூட்டம் “தலைவா..” என்று உணர்ச்சிவயப்பட, அவர், தனது இருக்கையின் அருகே வந்து நின்று கூட்டத்தை நேருக்குநேர் பார்த்து கைகளை தலைக்கு மேல் தூக்கி வணங்கி, உடலை முப்புறமும் திருப்பினார். அன்று கதறிக் கொண்டிருந்த தன்னை சமாதானப்படுத்தியது இத்தனை பெரிய ஆளா.. என்பது போல வியந்து பார்த்தாள் அவள். அதற்கேற்ப, ஒலிபெருக்கியைப் பிடித்த ஒவ்வொருவரும் அவர் பெருமைகளைப் பேசிக் கொண்டே போக, எப்படியோ அவர்களின் பேச்சை நிறுத்தி, தலைவருக்கான நேரத்தை ஒதுக்கித் தந்தபோது அவள் உடல் முறுக்கி நிமிர்ந்தது. எந்நேரமும் தான் அழைக்கப்படலாம். ஒவ்வொருவராக ஒலிபெருக்கியை ஆக்கிரமித்துக் கொண்டேயிருக்க, இறுதியாக தலைவர் பேச எழுந்தார். அவர் தனக்குத்தானே சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த வேளையில், கூட்டத்திலிருந்து சலசலப்பு தோன்றியது. என்னென்னமோ சொன்னார்கள். அவளுக்கு எதுவுமே புரியவில்லை. அவள் தலைவரையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். அந்நேரம் இடப்புற மேடையில் தாவியேறிய காவலர்கள் அவரை சூழ்ந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றபோது, அவர் திரும்பி வருவார் என்றே அவள் எண்ணிக் கொண்டிருந்தாள்.
மறுநாள் அட்சயாவை பள்ளிக்கு அனுப்பி விட்டு, அவள் வெள்ளைவேட்டிக்காரின் கட்சி அலுவலகத்துக்குச் சென்றாள். அங்கிருந்த காவலாளி “அய்யா சென்னைக்கு போயிருக்காரும்மா..” என்றார், இவளை அடையாளம் தெரிந்தவராக. பிறகு இரண்டொரு முறை சென்று பார்த்தபோதும் அவர் சென்னையிலிருந்து திரும்பியிருக்கவில்லை. “சாப்பாட்டுக்கு ஒண்ணும் பெரச்சனையில்லையே..” என்றார் அந்தக் காவலாளி. பிறகு இவளின் பதிலை எதிர்பார்க்காமலேயே “போறவேங்க போயி சேந்துடுவாங்க.. இருக்கறவங்க பாடுதான் திண்டாட்டமா போவுது… அய்யா அடுத்தவாரம் வந்துடுவாரு.. வந்து பாரும்மா…” என்றார். “வந்துடுவாருள்ள..” என்றாள். அவள் முகத்தை ஆராய்ந்தவராக “நல்ல மனுசம்மா… அவராதான் இந்த விசயத்த தலைவர் காதுக்கு கொண்டுட்டு போயீ அந்த குடும்பத்துக்கு எதாது பண்ணும்னு சொன்னாரு…” என்றார். ஆனால் அண்டைவீட்டுக்கார தாத்தா “எலக்சன் வருதுள்ள… அதான் சாவு வூட்ல பூந்துக்கிட்டு அத்த செய்றேன்.. இத்த செய்றேன்னு வாக்குறுதியா அள்ளி வுடுறானுங்க.. செய்ற பயலுவோன்னா அன்னைக்கேல்ல செஞ்சுருக்குணும்.. அவனுங்களுக்கு வுட்ட ஆச்சிய புடிக்கணும்.. போட்டாவுக்கு போஸ் குடுத்து பேப்பர்ல டிவில போட்டு வௌம்பரம் தேடிக்குணும்.. வேறென்ன… த்த்தாரி பயலுவோ..” என்றார். அவள், அவரைப் பார்த்தபோது “நா பொதுவாதான் பேசறன்… ஒன் புருசன அந்த கணக்கில கொண்டாரல தாயீ…” என்றார்.
இம்முறை வெள்ளைச்சட்டைக்காரரை பார்க்க முடிந்தது. எல்லா நாளுமே அவர் வெள்ளைச்சட்டையே அணிந்திருந்தார். இரண்டு சட்டைகளை வைத்துக் கொண்டு துவைத்து துவைத்து அணிந்துக் கொள்வாரோ..? இன்று அவரிடம் தனது கஷ்டங்களை சொல்லி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். “ரெண்டு தடவ வந்துட்டு போனேங்கய்யா..” என்றாள். “ஒண்ணும் கவலப்படாதம்மா… அன்னைக்கு கூட்டத்தில ஏதோ கசமுசா ஆயி பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டதால கூட்டத்த முடிக்க வேண்டியதாப் போச்சு… கூடிய சீக்கிரம் வர்றதா தலைவரு சொல்லியிருக்காரு… அன்னைக்கு செஞ்சுடலாம்…” என்றபடியே அவர் நகர்ந்து விட, இவள் கிளம்ப வேண்டியதாயிற்று. கந்தசாமியிடம் வாங்கிய கடன் இந்த மாதத்தோடு, ஒரு வருடத்தை கடந்து விடும். கூட்டுவட்டி போடுவதற்குள் அதை அடைத்து விட வேண்டும். மாரிசாமி, இந்த நிவாரண உதவியை நம்பிதான் வீட்டு ஒத்தியை நீட்டி விட சம்மதித்திருந்தார். அவள் வீட்டுக்கு வருவதற்குள் அட்சயா சோற்றை வடித்து விட்டிருந்தாள். பசி நிறைந்த வயிறு அதிகளவு உள்வாங்கிக் கொண்டது. அறுவடைக் காலம் நெருங்கிவிட்டதென்பதால் இனி உழவுக்கூலி வேண்டி ஆளனுப்புவார்கள். அட்சயா ஆறாம் வகுப்புக்கு வெளிபள்ளிக்குத்தான் சென்றாக வேண்டும். அதற்கு சைக்கிள் தேவைப்படலாம். கூலிக்காசை மிச்சம் பிடிக்க வேண்டும். அந்த நேரத்தில்தான் தலைவர் இந்தப் பக்கம் வருவதாக ஏதோ சேதி காதில் விழ, வயக்காட்டிலிருந்து இவள் நேராகவே கட்சி அலுவலகம் சென்றாள். வேறு ஒரு வெள்ளை வேட்டிக்காரர் அங்கிருந்தார்.
அவரும் வெள்ளைச்சட்டைக்காரருடன் இருப்பவர்தான். “தலைவரு வாராருன்னு கேள்விப்பட்டேங்கய்யா… அதான் நாவகப்படுத்திட்டு போலான்னு வந்தேன்…” என்றாள். “எளவு வீட்ல சொன்ன உறுதிமொழிதானே.. எல்லாம் நெனப்பு இருக்கும்மா… தலைவரு கட்டாயம் நெறவேத்திடுவாரு… எலக்ஷன் நேரம்… ஆளுங்கட்சிக்காரங்க நாம எப்போ அசருவோம்னு பாத்துக்கிட்டு திரியிறான்.. பண்ணி வச்சிருக்க ஊழல் அப்புடீ..” அவளிடம் அரசியல் பேசினார். பிறகு ”கவலப்படாதம்மா… பிரச்சாரத்துக்கு தலைவர் வந்துதானே ஆவுணும்.. அப்ப கேட்டு வாங்கிடுவோம்..” என்றார். அவள் கிளம்பியபோது ”மறக்காம நம்ப கட்சிக்கு ஓட்டு போட்டுடும்மா…” என்றார்.
தலைவர் வருகை உறுதியானதிலிருந்து ஊர்கள் பரபரத்தன. நோட்டிசுகளும், நகரத்தில் இருப்பது போன்று சுவரொட்டிகளும் விளம்பரப் பதாகைகளும் கட்சிக் கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டு ஊரே கலகலத்திருந்தது. அவள் சோற்றை வடித்து விடும்போது கயிற்றுக்கட்டிலின் தொங்கலில் நார் போல அமர்ந்திருந்த தாத்தா “இருந்து குடுத்தானோ இல்லியோ செத்து குடுக்கிறான் ஒம் புருசன்.. எப்டியோ வெடிஞ்சா செரி…” என்றார். “இந்த தடவ இவிங்கதான் செயிப்பாங்கன்னு பேசிக்கிறாவோ…?” என்றாள் தாத்தாவின் மனைவி. “நமக்கென்ன…? எவேன் கூடுதலா காசு குடுக்கிறானோ அவனுக்கு ஓட்ட குத்திட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்..” என்றார். அந்த மெல்லிய தேகத்துக்கே கயிற்றுக்கட்டில் தரை வரை தொங்கியது.
அந்த ஊரை தொட்டுக் கொண்டு செல்வது போன்று தலைவரின் தேர்தல் சுற்றுப்பயணம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக பேச்சு அடிப்பட்டது. சரியாக மாலை நான்கு பதினைந்துக்கு அவர் அந்த ஊருக்கு வந்து விடுவாராம். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் பதினைந்து நிமிடங்கள் தோன்றுவாராம். அப்போது நிவாரண உதவிகள் அளிப்பதாகவும் திட்டமாம். சரியாக இருபதாம் நிமிடத்தில் அந்த ஊரை விட்டுக் கிளம்பி விடுவார் என்று அவள் கட்சி அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அவளை இரண்டு மணிக்கெல்லாம் மேடை இருக்குமிடத்துக்கு வந்து விடுமாறு கூறியனுப்பினர். அன்றும் அட்சயா பள்ளியில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அம்மாவுக்கு துணையாக வந்திருந்தாள். மேடை இருந்த மைதானத்தைச் சுற்றி தொண்டர்கள் கூட்டம் அலையலையாய் நின்றிருந்தது. அவை பேரிரைச்சலாக மாறியபோது, அவள் தலையை நீட்டி என்னவென்று செவிகளால் துழாவினாள். தலைவர் வந்து விட்டாராம். வரும்வழியில் மாரியப்பன் டீக்கடையில் காரை நிறுத்தச் சொல்லி, கண்ணாடி கிளாஸில் டீ வாங்கிக் குடிப்பதாக தொண்டர்கள் மகிழ்ச்சியாக கூவினர். டீக்கடையருகேதான் அவள் வீடுமிருந்தது. தலைவரைப் பார்க்க வந்த கூட்டம் இங்கிருப்பதா..? அங்கு செல்வதா..? என அங்குமிங்குமாக அலைமோதியது.
அவள் அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு மேடைக்கருகே சென்று நின்று கொண்டாள். அப்போதுதான் வெள்ளை வேட்டிக்காரரோ, வெள்ளைச்சட்டைக்காரரோ கட்சி அலுவலர்களோ அவளைப் பார்த்து விட முடியும். தலைவர், வண்டியில் ஏறாமல், கால்நடையாக வீதியில் நடந்து வருகிறாராம். அப்படியாயின், இங்கு வர எப்படியும் அரை மணி நேரமாவது ஆகி விடும். அங்கிருந்த வீடொன்றில் நுழைந்து, பழைய சோற்றை பிசைந்துருட்டி உள்ளங்கையில் வைக்கச் சொல்லி ஆசையோடு உண்டதாக சேதி பரவியது. டீக்கடைக்கார மாரியப்பன் பின்னோடே வந்து சூடான பஜ்ஜியை நீட்ட, அவர் அங்கு நடமாடவியலாது படுத்திருந்த பாட்டிக்கு ஊட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்பட ஒளியில், பாட்டி கண்கள் கூசி மூடிக் கொண்டாராம். “பொறவு காருங்கெல்லாம் எங்க விறுவிறுப்பா போவுது..?” என்றாள். “தலைவர் கௌம்பிட்டாராம்.. ஆரத்தி தாம்பாளத்த எடுத்துக்கிட்டு பொம்பளையாளுங்க கூட்டம் நவுர மாட்டேனுடுச்சு.. நாலு எடம் போறவரு இங்கேயே நின்னுக்கிட்டிருந்தா கதைக்காவுமா… ஆளுக்கு நூறு ரூபா தட்டுல போட்டுடுன்னு கச்சியாளுங்கட்ட சொல்லீட்டு அவரு கௌம்பீட்டாரு…” அதன்பிறகு ஒருநாள் அவள் கட்சி அலுவலகம் சென்று அங்கிருந்தவரிடம் விலாவாரியாகக் கூற, அவர் உடனே யாருக்கோ அலைபேசினார். பேசப் பேச அவர் முகம் மலர்ந்தது போலிருந்தது. “ஒண்ணும் பெரச்சனையில்ல.. ஒதவி வீடு தேடி வந்துடும்…” என்றார்.
தேர்தல் நெருங்க நெருங்க ஊர் இரண்டுபட்டுக் கொண்டிருந்தது. நியாயவிலைக்கடையிலும் வயக்காட்டு கூலியோடும் வைத்து பணப்பட்டுவாடா நடந்தது. திடீர் காதுகுத்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு கறி விருந்தும் தொடர்ந்து குடிவிருந்தும் அமர்க்களப்பட்டன. அவள் வீட்டில் ஒரே ஓட்டு மட்டுமேயிருந்தது. சிறியதாக குக்கர் ஒன்று அவளுக்குக் கிடைத்தது. இளைஞர்கள் திண்ணைகளை விடுத்து விட்டு இறக்கைகளைக் கட்டிக் கொண்டும் புதர்க்காடுகளில் கால்பரப்பிக் கொண்டுமாக பரபரத்துக் கிடந்தனர். வெள்ளை வேட்டியும் வெள்ளைச்சட்டைகளுமாக கட்சி அலுவலகமும் பரபரப்பிலாழ்ந்தது. தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டதால், இனி நிவாரண உதவிகள் அளிக்க அனுமதிக்கமாட்டார்கள் என கட்சி அலுவலகத்தில் சொன்னார்கள். அட்சயாவுக்கு முதலில் நல்லதாக இரண்டு துணிமணிகள் வாங்க வேண்டும். அவளுக்கும்தான். கட்சி அலுவலகத்துக்கு அலைவதற்காகவாவது வேண்டும். ஆனால் உதவி கிடைத்ததற்குப் பிறகு அங்கு போக வேண்டிய தேவை ஏன் எழ போகிறது? அலுமினிய சோற்றுப்பானையொன்று புதிதாக வாங்க வேண்டும். கதவின் வழியாக காற்று உள்ளே நுழைந்து உடலின் வியர்வையை வழித்துக் கொண்டு போக, இவள் கதவை நோக்கி உடலை திருப்பிக் கொண்டாள். அதற்குள் அட்சயா உறங்கி விட்டிருந்தாள். அதைப் பார்த்தபோது அவளுக்கும் உறக்கம் வந்தது. கதவை சார்த்தி விட்டு மகளை நோக்கி மேசை மின்விசிறியைத் திருப்பி வைத்து விட்டுப் படுத்தபோது, கதவின் ஓட்டை வழியே பிடிவாதமாக நட்சத்திரமொன்று எட்டிப் பார்த்து கண் சிமிட்டியது.
தேர்தல் முடிவுகள் வந்திருந்தன. இம்முறை எதிர்க்கட்சிக்கு ஆளும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. வெள்ளை சட்டைக்காரரின் மைத்துனருக்கு மந்திரிப்பதவி கிடைக்கும் என்று ஊருக்குள் பேச்சு அடிபட்டது. “மச்சினன் மந்திரியாயிட்டா இவரே ஆன மாதிரிதான்… ஒரு நடை கட்சியாபீஸ் போய் பாத்துட்டு வந்துரு…” என்று ஊர் சொல்லும்முன்பாகவே, இவள் இரண்டு முறை கட்சி அலுவலகத்திற்கு நடந்திருந்தாள். கட்சி அலுவலகம் முன்னால் பந்தல் போடப்பட்டு, நீர்மோர், தேநீர், குளிர்பானம் விநியோகம் நடந்து கொண்டிருந்தது. புதிது புதிதாக நிறைய ஆட்கள் அங்கிருந்தனர். அவளை அடையாளங்கண்டு கொண்ட காவலாளி “அய்யாவ நாளைக்கு பத்து மணிக்கா வந்து பாரும்மா..” என்றார். அவள் அதை அனுசரித்து மதியமாக அட்சயாவையும் அழைத்துக் கொண்டு அலுவலகம் சென்றாள்.
வெகுநேரமாக வெளியே நின்றிருந்த அவளை யாரோ விசாரித்தார்கள். அவள் விஷயத்தைக் கூற, சீட்டு எழுதித் தருமாறு கூறினார்கள். அட்சயா, பெயர் என்றிருந்த இடத்தில் அம்மாவின் பெயரையும், நோக்கம் என்றிருந்த இடத்தில் நிவாரண உதவி என்றும் எழுதிக் கொடுத்தாள். ஆளுயர எடுப்புச் சாப்பாட்டு கேரியரொன்று தூக்கமுடியாத கனத்தோடு உள்ளே போனது. நெடுநேரமாகியும் அவளை யாரும் அழைக்கவில்லை. அங்கிருந்த செம்பருத்தியும் பவளமல்லியும் அதிக ஊட்டத்தில் மரமாக மாறியிருந்தன. வேம்பின் தாழ்ந்த கிளைகளிலிருந்து பழவாசம் வீசியது. நிறைய வெள்ளைவேட்டிச் சட்டைகள் உள்ளே வருவதும் பந்தலில் நின்று பேசுவதுமாக இருந்தனர். அவள் மகளோடு அங்கேயே நின்றிருந்தாள். திடீரென்று வேட்டியின் பின்பக்க நுனியை கெந்தி அதைக் கையால் பிடித்தவாறு வெள்ளை வேட்டிக்காரர் வெளியே வர இவள் விறுவிறுப்பாக முன்னேறி அவரிடம் சென்றாள். அவர் இவளைப் பார்த்து நெற்றியை சுருக்கியபோது அவள் நிவாரண உதவி என்றாள். “ஒண்ணும் பிரச்சனையில்லம்மா.. ஏற்பாடு பண்ணிடுலாம்…” என்றார் அவர்.
அவர்கள் மரத்தோரம் வைத்திருந்த சான்றுகள் அடங்கிய நெகிழிப்பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். குதியாட்டம்போல போட்டுக் கொண்டு பின்னால் வந்த அட்சயா, அங்கு உதிர்ந்துகிடந்த வேம்பின் பழங்கள் நாலைந்தை போகிறபோக்கில் குனிந்து கையியெடுத்துக் கொண்டாள். பந்தலுக்கு வெளியே வெயில் கடுமையாக ஒளிர்ந்தது. அவள் ”இத்த என்னாத்துக்குடி பொறுக்கியாந்தே…” என்றபடியே மகளின் கையிலிருந்த பழமொன்றை நாசிக்கருகே கொண்டு சென்று “நல்லா வாசமடிக்குது..” என்றாள்.
***
கலைச்செல்வி – எட்டுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார், இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட சில முக்கிய விருதுகள் வாங்கியுள்ளார். தொடர்புக்கு – kalaiselvi312try@gmail.com
சுசீலாத்தைக்கு கன்னிக்கு வைத்துக் கொடுக்க வேலைகள் நடந்துகொண்டிருந்தன. பக்கத்து கோவில் ஒலிபெருக்கியில் வில்லுப்பாட்டு தொடங்கியிருந்தது.
“பெண்ணே பகவதி, அறைக்குள்ளே இருந்தாலும்.. அறைக்குள்ளே இருந்தாலும்…. ..ஆமம்மா… அரணறியா மாயமுண்டோ? ..ஆமம்மா… சிமிழுக்குள்ளே இருந்தாலும்.. சிவனறியா மாயமுண்டோ? என்று அந்த பகவானும்.. என்று அந்த பகவானும்.. இன்னுமென்ன சொல்லுகிறார்?…”
**
“ஏல நண்டா, அழுக்குக் கால கொண்டு வீட்டுக்குள்ள வராத..ல.. பொறவாசல்ல போயி காலக் கழுவு.. தொடச்சி தொடச்சி முதுகு ஒடயி எனக்கு.”
அம்மா சொல்வதைப் பொருட்படுத்தாமல் சூர்யா அழுக்குக் காலோடு வீட்டிற்குள் ஓடினான். சூர்யா என் அண்ணன் மகன். மற்ற நாட்களென்றால் கூட அம்மா பொறுத்துக் கொள்வார், ஆனால் புரட்டாசி மாதம் பௌர்ணமி அன்று எங்கள் வீடு பரிசுத்தமான கோவிலாகவே மாறும். வீடு துடைக்கும் துணியை எடுத்துக் கொண்டு வந்து மறுபடியும் வீட்டைத் துடைத்தார்.
“இந்தப் பயலோட… என்னா பாடு படுத்துகாம்மா…தாத்தா வரட்டும்.. சொல்லிக் கொடுக்கேன் பாரு… பெல்ட்டால ரெண்டு வாங்குனா தான் நீ செரிப்பட்டு வருவ…” என்று எரிச்சலில் கத்தினார் அம்மா.
“தாத்தா என்ன அடிக்க மாட்டாலே.. ஐ..ஐ..” என்று வலிச்சம் காட்டிக்கொண்டே புறவாசலுக்கு கால் கழுவப் போனான்.
“தங்கக் கொடம்லா.. வா மக்கா… சோக்கேடு வந்துராம மக்கா…” அம்மாவின் கண் கலங்க ஆரம்பித்தது.
…
சூர்யாவிற்கு கடந்த இரண்டு மாதங்களாக சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருக்கிறது. அடிக்கடி வலி பொறுக்காமல் துடிதுடிக்கிறான். வீட்டு வைத்தியங்கள் எதுவும் பலனளிக்காததால் சென்ற வாரம் மத்தியாஸ் வார்டில் சென்று பெரிய டாக்டரைப் பார்த்தோம். ஸ்கேன் எடுக்கச் சொன்னார்.
ஸ்கேன் முடிவைப் பார்த்த டாக்டர் அதிர்ச்சியாகி கேட்டார், ”பயலுக்கு இதுக்கு முன்னாடி ஒண்ணும் பிரச்சன வரலியா?”
“வாய மூடிக்கிட்டு கெட.. மனுசன டென்சன் ஆக்கப்புடாது.. பொறவு வேற மாறி ஆயிரும்..”
“ஒங்களுக்கு சாமி வேண்டான்னா நீங்க சும்மா இரிங்கோ.. சாமி கொண்டாடி சொன்னதுலேந்து மனசே செரியில்ல.. ஒரே கெட்ட சொப்பனம்.. நீங்க கெட்டாட்டா மூத்தவன் கெட்டுவான்..லே, நீ கொத்தமார கூட்டிட்டு வா..ல… பத்தாயிரமோ.. இருவதாயிரமோ.. என் செயின வச்சி செய்வோம்..” என்று அண்ணனைப் பார்த்து சொன்னார் அம்மா.
அப்பாவின் கோபம் உச்சத்தை அடையப் போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. கண்கள் சிவக்க, “செறுக்கிவுள்ள நீ வாய மூடுட்டி.. சொவரு மயிரு.. எல்லாத்தயும் தூக்கிப் போட்டுக் கொளுத்திருவேன்.. எப்பவும் ஒரு மாறி இருக்காது பாத்துக்கோ..” என்று கத்திவிட்டு வெளியே சென்றார். அண்ணன் சென்று அம்மாவை சமாதானப் படுத்தினான்.
அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டால் எங்கள் வீடு வேறு ஒரு வீடாக மாறிவிடும். இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள், மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு இருப்பார்கள். நாங்கள் எல்லோருமே அப்பா இல்லாதபோது ஒரு மாதிரியும் அவர் இருக்கும்போது வேறு மாதிரியும் தான் இருப்போம். ஒரு வார்த்தை கூட பெரிய விளைவுகளுக்கு வழி வகுத்துவிடும்.
**
எங்கள் வீட்டு சுற்றுச் சுவர் நான்கு அடி உயரமிருக்கும். மேற்கு நோக்கிய பிரதான வாசல். வடக்குப் பார்த்த வீடு. வீட்டின் கிழக்குச் சுவரைத் தொட்டடுத்து சக்தி வாய்ந்த அம்மன் கோவில். ஒரு குடும்ப சமூகத்தினரால் நடத்தப்படும் கோவில். மூல தெய்வங்களாக காட்டாளம்மன், பத்திரகாளி அம்மன், முத்தாரம்மன் என மூன்று பெண் தெய்வங்கள் உட்கார்ந்த நிலையில் சிலைகளாக நடுக்கட்டிடத்தில் கம்பீரமாக வீற்றிருப்பார்கள். சுற்றிலும் நூற்றியெட்டு சிறு தெய்வங்கள். சிறு தெய்வங்கள் என்றால் வரிசையாக நடப்பட்ட சிறு சிறு கருங்கற்கள் தான். அவை வெள்ளையடிக்கப் பட்டிருக்கும். சிலவற்றிற்கு தலைப் பகுதியில் காவி அடிக்கப்பட்டிருக்கும்.
**
சிறு தெய்வக் கற்களுக்கு இடையில் ஆளுயர கரிய சிலை ஒன்று நிற்கும். கோவத்தில் வெறித்துப் பார்க்கும் கண்களோடு, வேட்டைக்குப் போகும் தோற்றத்தில் அது நிற்பதைப் பார்க்கும் எவருக்கும் ஒரு நொடி நெஞ்சு படபடக்கும். அந்த சுடலை மாடன் சிலைக்கு நேர் எதிராக எங்கள் வீட்டுப்பிரதான அறையின் சன்னல் இருந்தது.
**
செவ்வாய் வெள்ளி என்றால் அந்த ஊரே அங்கு கூடி விடும்.நண்பகலில் உச்சிகாலப் பூஜை, மாலையில் அந்திகாலப் பூஜை. பூஜைக்குத் தேவையான ஒத்தாசைகளைச் செய்து கொடுக்க என் அம்மாவும் மைனியும் செல்வார்கள். கோவிலுக்குத் தேவையான தண்ணீர் எங்கள் புறவாசல் தண்ணீர்க் குழாயில் இருந்து ஒரு ஹோஸ் குழாய் போட்டு எடுப்பார்கள். எல்லா சாமி சிலைகளையும் சுத்தமாகக் கழுவி சந்தனம், களபம் தெளித்துப் பூவைத்து முடித்து, பின் படையலுக்குத் தேவையான நைவேத்தியப் பண்டங்களைத் தயாரிப்பார்கள். காலையிலேயே சுடலை மாடன் கதை வில்லுப் பாட்டாக ஒலிபெருக்கியில் ஆரம்பிக்கும். ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறை என்றாலும் முழுக் கதையையும் கேட்பது ஒரு தனி சுவாரஸ்யம்.
**
அந்தப் பாட்டு அந்த ஊரில் எல்லோருக்கும் மனப்பாடம். மிக பயங்கரமான ஒரு பெண் கவர்தல் மற்றும் பழிவாங்கல் கதை. தம் பொக்கிஷங்களைக் கொள்ளையிட்டுச் சென்ற மந்திரவாதிப் பெரும்புலையனான காளிப்புலையனின் கன்னிப்பெண் மாவிசக்கியை சபதமிட்டு மாயாண்டி சுடலைமாடன் எறும்பு உருவத்தில் வந்து கற்பழித்துச் சென்ற கதை.
**
நான் அந்த கோவிலுக்குப் போவது சாமியாட்டம் பார்க்கத்தான். பாக்கியலட்சுமி அக்கா மீது அந்த மூன்று பிரதான தெய்வங்களும் ஒவ்வொன்றாக இறங்கி வந்து ஆட, மக்கள் எல்லாரும் பயபக்தியோடு நிற்பார்கள்.
நாக்கைத் துருத்திக் கொண்டு ‘ஏய்..ஏய்’ என சத்தமிட்டுக் கையால் பல சைகைகள் செய்வார். பூசாரி ஓடிப் போய் ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து கொடுப்பார். எலுமிச்சை, மூங்கில் பிரம்பு, திருநீர்க் கொப்பரை, பெரிய அரிவாள், பூ மாலை, பூச்சரம். படையல் வைத்த பொங்கல் சோறு அல்லது அரவணை.
ஆட்டம் உச்சம் பெற்று அக்கா கிட்டத்தட்ட மயங்கிய நிலையில் தள்ளாடி நடப்பார். அப்போது சுற்றியுள்ள நபர்களில் குறிப்பிட்ட சிலரைப் பார்த்து கையசைத்துக் கூப்பிடுவார். பயபக்தியோடு அவர் முன்னால் சென்று நின்றால் சிலரை ஏற இறங்கப் பார்த்து திருநீறு பூசி விட்டு அனுப்புவார். சிலருக்கு ஒரு கைப்பிடி சுடு பொங்கலையோ அல்லது வாழைப்பழத்தையோ கையில் திணிப்பார். பெண்களுக்கு தன் மாலையிலிருந்து பூக்களைப் பிடுங்கிக் கொடுப்பார்.
அவர்களில் சிலர் உறைந்து போய் நிற்பார்கள். தவறு செய்து மாட்டிக்கொண்டது போல. சிலர் அக்காவை நேருக்கு நேர் பார்த்து தைரியமாகப் பேசுவது ஆச்சரியமாக இருக்கும். அது சாமிக்கும் பக்தனுக்குமான ஓர் ஒப்பந்தம்.
என் அம்மா அம்மன் ஆடுவதைக் கண்டுகொள்ளாதது போல நிற்பார். ஆனால், பக்கத்தில் பயங்கரமாக கத்திக்கொண்டு ஆட ஆரம்பிக்கும் சுடலைமாட சாமியையே பார்த்துக் கொண்டிருப்பார். ராஜேந்திரன் மாமா பகல் வேளைகளில் மொடாக் குடிகாரர், ஒரு மாதிரியான ரௌடியும் கூட. ஆனால், பூஜை நேரங்களில் அவர் வேறு ஒரு உருவமாக மாறி நிற்பார். ஆராசனை வந்து சுடலையாக அவர் துள்ளிப் பாய்வதைக் கண்டு குழந்தைகள், பெண்களெல்லாம் கண்களை மூடிக் கொள்வார்கள். ஆனால், என் அம்மா அவரை பிரமித்துப் பார்த்து நிற்பார்.
ஒவ்வொரு முறை சுடலை ஆடி வரும்போதும் முதலாவதாக என் அம்மாவை தான் அழைத்துப் பிரசாதம் குடுப்பார். கூட்டத்தில் அம்மா எங்கு இருந்தாலும் அவர் சரியாகக் கண்டுபிடித்துக் கையை அசைத்துக் கூப்பிடுவார். அம்மா துளியும் பயம் இல்லாமல் முன்னால் செல்வார். ஒவ்வொரு முறையும் அம்மாவிடம் அவர் ஏதேனும் குறி சொல்லிவிட்டுத்தான் மற்றவர்களிடம் செல்வார்.
அப்படி ஒரு வெள்ளிக் கிழமை அம்மாவை அழைத்த சுடலை கொஞ்ச நேரம் பேசாமல் அவரது சிலையை சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தார். அம்மா கையெடுத்து அந்த சிலையைக் கும்பிட்டு நின்றார். ஒன்றும் புரியாமல், “நீங்கதா பிள்ளேல நல்லாக்கி விடணும்..” என்றார் அம்மா.
சுடலை தலையை இல்லை என்பதுபோல அசைத்து மீண்டும் அவரது சிலையைக் காட்டி பின் எங்கள் வீட்டைக் காட்டினார்.
அம்மா குழப்பமாக, “மனசுலாவல..என்ன செய்யணும்…” என்று கேட்டார்.
“ஓ..ஊ…மக்க வீட்டுச் சொவர ஏத்திக் கெட்டுன்னேன்.. எம் பார்வைல ஒரு கன்னி இருக்கா.. மாத்து.. மாத்து…” அவரது கண்கள் செக்கச்செவேலென தீப்பிழம்பாக இருந்தன.
அம்மாவுக்கு ஏதோ புரிவதாகத் தெரிந்தது. “அது.. அது எங்க மைனிலா.. இவ்வோ அக்கா.. அவள வச்சுதா கும்புடுகோம்…”
“மாத்து.. எம் பார்வ படுது.. மாத்து.. மறிச்சுப் பேசாத.. ம்ம்ம்.. நல்லாக்கி வப்பேன்.. மாத்து..” என்று சொல்லி நகர்ந்தார் சுடலை.. அம்மாவிடம் எப்போதுமே இந்த மாதிரி உரையாடலில் அவர் எதாவது செய்யச் சொல்லிக் கேட்பார். பாயசம், வேட்டைக்கான சல்லடம், வல்லயம், வாழைக் குலை, அல்லது சில சமயம் ஒரு முழு படையலைக் கேட்பார். அம்மாவும் ஒத்துக்கொண்டு பதிலுக்கு ஒரு கோரிக்கையை வைப்பார். அப்படி அண்ணனின் திருமணத்திற்காக அம்மா வாங்கி வைத்த வெள்ளிக் கண்கள் தான் சிறப்புக்கொடை நாட்களில் அவரை அலங்கரிக்கும்.
சாமி விசயத்தில் மட்டும்தான் அப்பா அப்படி. ஆனால் சுசீலா அத்தையை மனதில் அவர் சாமிக்கும் மேல்தான் வைத்திருக்கிறார். அத்தையை நாங்கள் யாரும் பார்த்ததில்லை, அம்மா கூட பார்த்ததில்லை. அப்பாவும் அத்தையும் இரட்டைப் பிள்ளைகள். ஊரே கண் போடும் அளவுக்கு இருவரும் எப்போதும் சேர்ந்தேதான் இருப்பார்களாம். அவ்வளவு பாசம். நல்ல வசதியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சீரழிஞ்ச குடும்பம். அப்பாவின் சிறு வயதிலேயே தாத்தா இறந்து விட, குடும்பப் பொறுப்பேற்க படிப்பை விட்டுவிட்டு அப்பா பல வேலைகள் செய்திருக்கிறார். அப்பா அத்தையுடன் சேர்த்து ஏழு பிள்ளைகள். எல்லாரையும் நிமர்ந்து வரச் செய்து, அப்பா ஒரு கப்பலில் கிடைத்த வேலைக்காக பாம்பேவிற்குச் செல்லப் புறப்படவிருந்த சமயத்தில் அத்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆயிருக்கிறது. ஒரு வாரம் அரசாங்க ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்த்திருக்கிறார்கள். திடீரென ஒரு நாள் மூச்சுத்திணறி அப்பாவின் மடியிலேயே அத்தையின் உயிர் பிரிந்திருக்கிறது.
இன்று எங்கள் வீட்டில் உள்ள கருப்பு வெள்ளைப் புகைப்படம் தான் எங்களுக்கு அத்தை. அவர் பெயரைத்தான் எனக்கு வைத்திருக்கிறார் அப்பா. சுசீலா சுசில் ஆகிப் போனது. ஒவ்வொரு வருடமும் அத்தைக்கு கன்னிக்கு வைத்துக் கொடுப்பது எங்கள் வீட்டில் மிக முக்கியமான சடங்கு. அத்தை படத்திற்கு மாலை போட்டு, பொட்டு வைத்து, தாம்பாளத்தில் ஒரு பட்டுப்புடவை, ஜாக்கெட் துணி, வளையல்கள், சாந்துப்பொட்டு, கண் மை, முகம் பார்க்கும் கண்ணாடி, நெயில் பாலீஷ்,மல்லிகைப் பூ போன்றவற்றை வைத்து, தலை வாழை இலையில் உப்பு, நேந்திரங்காய் வத்தல், வாழைக்காய் துவட்டல், தயிர் வெள்ளரிக்காய் பச்சடி, இஞ்சிப் பச்சடி, நார்த்தங்காய் பச்சடி, அவியல், சேனைக் கிழங்கு எரிசேரி, சாதம், பருப்பு, சாம்பார், ரசம், புளிசேரி, மோர், அடை பாயாசம், பால் பாயாசம், பப்படம், பழம், போளி எல்லாம் படைத்துக் கும்பிடுவது வழக்கம்.
அன்று முழுதும் அப்பா யாரிடமும் பேச மாட்டார். மதியம் படையல் முடிந்து குடும்பமாக சாப்பிட்டு, பின் மாலை உளுந்தவடை, அரிசி முறுக்கு, நெய்யப்பம் செய்து மீண்டும் ஒரு படையல். சாயங்கால பூஜை முடிந்து எல்லோரும் பயபக்தியோடு காத்திருப்போம். ஒவ்வொரு நிமிடமும் மனதிற்குள் பதற்றம் ஏறிக்கொண்டே போகும். சரியாக ஏழு மணிக்கு அப்பாவின் முகம் பிரகாசமாகும். அம்மா கண்களை மூடி எதையோ வேண்டிக் கொண்டிருப்பார்.
சொல்லி வைத்தாற்போல் அத்தையின் படத்தின் மீது வந்து அமரும் அந்த மின்மினிப் பூச்சியைப் பார்த்து நானும் வணங்கி நிற்பேன். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, இந்நிகழ்வு ஒரு வருடம் கூட தவறியதில்லை. மற்ற எந்த நாட்களிலும் எங்கள் வீட்டில் அப்படி நிகழ்வதில்லை. வளர்ந்ததும் இது என்ன விதமான நம்பிக்கை என்றெல்லாம் நான் குழப்பிக்கொள்ளவில்லை. அத்தை வருவார், ஆசீர்வாதம் செய்து செல்வார் என்றுதான் நானும் நம்பினேன். இன்றும் நம்புகிறேன். சாமியை நம்பாத அப்பாவும் அதை உறுதியாக நம்புகிறார்.
…
அண்ணனும் மைனியும் வீட்டில் நுழையும் போது அம்மா சூர்யாவின் உடலைத் துடைத்து விட்டுக்கொண்டிருந்தார். சூர்யா அம்மாவிடம், “ஆச்சி, அப்பாட்ட சொல்லாத..” என்று சொல்லி அம்மாவிடம் செல்லமாக நடித்தான். அம்மா அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சமையல் வேலையைக் கவனிக்கச் சென்றார். மைனியும் சென்று சேர்ந்து கொண்டாள்.
“மலையாளம் தன்னதிலே.. அங்கே தன்னதிலே.. மாந்த்ரவாதி பெரும்புலையன்.. இருநூறுப் புலையனுக்கும்.. அறுநூறுப் புலையனுக்கும்.. எஜமான் காளிப் பெரும்புலையன்.. அந்த எஜமான் காளிப் பெரும்புலையன்.. ”
சூர்யா சன்னதம் வந்தது போல நாக்கைத் துருத்திக் கொண்டு ஆட ஆரம்பித்தான். அம்மாவும் மைனியும் “வந்தாச்சா.. வாங்க.. வாங்க.. இன்னும் சோறு பொங்கலயே சொடல..”
“ஆமா, நல்ல ஆளப் பாத்த.. அவன் அவ்வொளுக்கு மேல.. ஒண்ணுன்னா ஒம்போதும்பான்.. சத்தமா பேசாத.. முன்னாடிதான் இருக்கான்..”
திடீரென்று மைனி ‘ஆ’வென கத்தினாள். காய்கறி வெட்டும்போது கை விரலில் பட்டு ஒரே ரத்தம். காப்பிப் பொடி வைத்துக் கட்டி விட்டோம். அவள் போய் படுத்துக் கொண்டாள். அம்மாவின் முகம் இன்னும் இருண்டு போனது. அண்ணனிடம் போய் மைனி அந்தச் சுவர் விசயமாகப் பேசுவது கேட்டது.
“எண்ணி எட்டு நாளைக்குள்ளே.. நாளைக்குள்ளே.. திட்டமுடன் கற்பழிப்பேன்.. எண்ணி எட்டு நாளைக்குள்ளே.. நாளைக்குள்ளே.. சத்தியமாய் கற்பழிப்பேன்..”
…
வெளியே சென்றிருந்த அப்பா உள்ளே நுழையும்போது அடுப்பில் ஏதோ தீயும் வாடை அடித்தது. நான் ஓடிப்போய் சமையலறையில் பார்க்க, அம்மா சுவர் ஓரமாக கண்களை மூடி சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நெடுமூச்சுகளாக விட்டுக் கொண்டிருந்தார். அடுப்பில் பாயாசம் அடியில் பிடித்து பாத்திரம் கருகி புகை எழ ஆரம்பித்திருந்தது. அப்பா ஓடி வந்து அம்மாவின் நெஞ்சில் தடவி விட்டு தண்ணீர் கொடுக்கச் சொல்லி என்னிடம் சைகை செய்தார். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை அம்மாவின் வாயில் விட்டேன். தண்ணீர் இறங்க இறங்க அம்மா மெதுவாகக் கண்களைத் திறந்தார். தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.
அப்பாவின் முகம் கோவத்தில் சிவந்தது. வெளியே சென்று வீட்டு முற்றத்தில் அங்குமிங்கும் நடக்க ஆரம்பித்தார். அம்மா என்னிடம் புலம்பிக் கொண்டே இருந்தார். இதுவரை ஒரு நாள் கூட அவர் சமையல் இப்படி ஆனதில்லை. அவ்வப்போது படபடப்பு வருவதுண்டு என்றாலும் இந்த மாதிரி மயங்கி விழுந்ததெல்லாம் இல்லை.
“மாவிசக்கி எப்படிப் புலம்புகிறாள்? எப்டி, எப்டியம்மா புலம்புகிறாள்? ..எந்தகப்பா பெரும்புலையா.. என்ன மோசம் வந்ததடா?.. எந்தகப்பா பெரும்புலையா.. என்ன மோசம் வந்ததடா?.. சண்டாளப் பண்டாரம் சொன்ன வார்த்தை பலித்திட்டதே.. சண்டாளப் பண்டாரம் சொன்ன வார்த்தை பலித்திட்டதே..”
மறுபடியும் பாயாசம் வைத்து அத்தைக்கு படையலிட்டுக் கும்பிடும்போது யாருடைய மனதிலும் நிம்மதி இல்லை. அப்பாவின் முகமும் குழப்பமாகவே இருந்தது. சூர்யா வேறு அன்று சாப்பிட மாட்டேனென அடம் பிடித்து ஒரே அழுகை.
**
மாலை பூஜை.. சாம்பிராணி காட்டி, தீபாராதனை கொடுக்கும்போதும் அம்மா கண்கலங்கிக் கொண்டே இருந்தார்.. ஏழு மணியை நெருங்க நெருங்க எல்லோர் மனதிலும் படபடப்பு.. வழக்கத்தை விட இன்று ஒரு படி அதிகமாக. திடீரென்று அப்பா அத்தை படத்தின் முன்னால் இருந்து நகர்ந்து வெளியே சென்றார். நாங்கள் ஒவ்வொருவரும் மற்றவர் முகத்தை மாறி மாறிப் பார்த்தோம். ஏழு மணி ஆனது. அம்மா கண்களை மூடி வேண்டிக் கொண்டிருந்தார்.
அன்று அப்படித்தான் நிகழும் என எங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்ததோ என்னவோ! மின்மினிப் பூச்சி வரவேயில்லை.. எட்டு மணி ஆகி விட்டது.. அத்தை வரவில்லை.. எனக்கு கண் கலங்கிக் கொண்டு வந்தது..
திடீரென்று அப்பா வெளியே இருந்து கத்தினார்.. “சுசீ..”
நான் ஓடிப்போனேன், “அப்பா.. என்னப்பா?”
“நாளக்கி அந்தக் கொத்தன வரச் சொல்லு”.. சொல்லிவிட்டு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து வெளியே சென்றார்.
“தலை வாலை இலை வைத்து மாயாண்டி அமர வைத்து.. பாளை அருவாளால் தன் மகளை நெஞ்சு கீறி.. ஈரக்குலை தாமரக்கா எடுத்து வைத்தார் மாயாண்டிக்கு..”
**
ஒரு வழியாக எங்கள் வீட்டுச் சுற்றுச் சுவர் இரண்டடி உயர்த்திக் கட்டப்பட்டது. கோவிலுக்குத் தண்ணீர் எடுக்க ஹோஸ் குழாய் போடுவதற்கு வசதியாக சுவற்றில் ஓர் இன்ச் அளவிற்கு ஓர் ஓட்டை விட்டுக் கட்டியிருந்தார் கொத்தனார். எதேச்சையாக அந்த ஓட்டையில் கண் வைத்துப் பார்த்த போது சுடலை மாடன் என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கிழக்கில் நிகழ்வது ஒருவகைப் பங்காளிச் சண்டை தான் — சோமிதரன்
சோமிதரன்.ஈழத்தின் ஊடகவியலாளர்.சிங்கள இனவெறி அரசினால் தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம் குறித்து இவர் இயக்கிய “எரியும் நினைவுகள்” என்ற ஆவணப்படத்தின் மூலம் வெகுவாக அறியப்பட்டவர். பல ஆவணப்படங்களை இயக்கிய இவர் இப்போது திரைப்படம் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.
ஈழத்தில் கவிஞர்கள் அதிகம், எழுத்தாளர்களுக்கும் குறைவில்லை. ஆனால் உங்கள் துறையான ஆவணப்பட இயக்கம் சார்ந்து செயற்படுவதற்கு செயற்பாட்டாளர்கள் பெரியளவில் முன் வருவதில்லை. எப்படி ஆவணப்படங்களை உருவாக்க வேண்டுமென தோன்றியது. அதுவும் ஈழத்தின் மிக முக்கியமான பிரச்சனைகளை தொட்டு இருக்கிறீர்களே?
ஆவணங்களை பெருமளவில் இழந்து விட்டவர்கள். நாங்கள் இண்டைக்கு ஒரு வேர்ச்சுவல் ரியாலிட்டியில் வாழுகின்ற இனக்குழுமம். எங்கள் கதைகளை, வாழ்வை, வரலாற்றின் உண்மைகளை இந்த தலைமுறைக்கும் இனி வரும் தலைமுறைக்கும் ஆவணப்படுத்தலின் ஊடாகக் கொண்டு சேர்க்க வேண்டும்.
இன்று நான் எடுக்க நினைக்கிற ஒரு கற்பனைக் கதைப்படத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் இன்று எடுக்கத் தவறும் ஒரு ஆவணப்படம் நாளை அதனைக் காட்சிப்படுத்த முடியாதபடி வேறொன்றாக மாறலாம். நாங்கள் இன்று இந்த புதிய உலகில் புனைவுகளின் வரலாற்றில் வாழ்பவர்கள்.
பல புனையப்பட்ட கதைகளைத்தான் வரலாறு எண்டு நம்ப வைக்கப்படுகிறோம். நானும் ஆரம்பத்தில் கதை கவிதை என்று எழுதத் தொடங்கியவன் தான். ஆனால் அது என்னுடைய வேலையல்ல என்று தெளிவு பெற்ற பின்னால் என் பயணத்தை மாற்றிக் கொண்டேன்.
நான் அடிப்படையில் ஒரு ஊடகவியலாளன். தினக்குரல் பத்திரிகையில் தொடங்கிய பணி பின்னர் தராக்கி சிவராம், திஸ்ஸநாயகம் ஆகியோரோடு “நோர்த் ஈஸ்டன் ஹெரல்ட்” ஆங்கில வாரப் பத்திரிகையில் தொடர்ந்தது. அந்த காலப்பகுதியில் பிபிசி ஆங்கில சேவைக்காக தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி ஆவணப்பதிவுகளில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது.
பிரான்சிஸ் ஹாரிசனோடு இணைந்து ஆவணப்படங்களில் வேலை செய்தேன். குறிப்பாக காணாமல் போனவர்கள் குறித்து நான் எழுதிய கட்டுரை ஒன்றை அடியொற்றி பதிவு செய்யப்பட்ட ஆவணப்படம்தான், நான் முதன்முதலில் வேலை பார்த்தது.
அந்த படத்தின் கமெராமென் ஈராக் போர் மற்றும் ஆப்கான் போர்களில் பிபிசிக்காக களத்தில் வேலை பார்த்தவர். அவரிண்ட அனுபவங்களைக் கேட்கவும் இந்த ஆவணப்படுத்தல்களில் ஈடுபடும் போது எனக்குள்ள உருவான காட்சி ஊடகம் மீதான ஈர்ப்பும் தான் எனக்குள் விழுந்த முதல் விதை எண்டு நினைக்கிறன்.
இதற்குப் பிறகு நாம் சுயாதீனமாக ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று நானும் சரிநிகர் ஆசிரியர் சிவகுமாரும் முயற்சிக்கத் தொடங்கினோம். யாழ்ப்பாண நூலக எரிப்பை முதன் முதலில் ஆவணப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால் என்ர முதல் படம் யாழ் நூலக எரிப்பு பற்றியதல்ல. போபால் நச்சு வாயுக் காசிவால் பாதிக்கப்பட்ட வாழ்விழந்தவர்கள் குறித்த படம்தான் .
அதன் பின்னர் கடலூரில் சிப்காட் இரசாயனத் தொழிற்சாலைகளால் உருவான சூழலியல் பற்றிய ஆவணப்படம். அதற்குப் பிறகு 2004 சுனாமி போரழிவு குறித்து ஒரு படம். இவைகளை எடுத்த பின்னர்தான் யாழ் நூலக எரிப்பு பற்றிய “எரியும் நினைவுகள்” ஆவணப்படத்தை எடுத்தேன்.
2006 இல் இலங்கையில் மாற்றமுற்ற அரசியல் சூழல் அந்தப்படத்தை திட்டமிட்டபடி எடுத்து முடிப்பதில் பெரும் தடங்களை ஏற்படுத்தியது. ஆனால் அந்த நூலகம் எரிக்கப்பட 25 ஆவது ஆண்டில் அந்த படத்தை எடுத்தோம். அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த கையோடு ஒரு ஆவணப் படத்தை எடுத்தேன். “முல்லைத் தீவின் பெருங்கதை (mullaithivu saga)” என்ற அந்த ஆவணப்படம் தான் போர் முடிந்த பின்னர் எடுக்கப்பட்ட முதல் படம். இலங்கையில் வாழ்வதை விட சற்று சவுகரியமான ஆனால் அதே கண்காணிப்புக்குள் தமிழகத்தில் வாழ்ந்த ஈழத்தமிழனான எனக்கு அந்த படத்தை உலகெங்கும் பிரச்சாரப்படுத்த அப்போது முடியவில்லை. கடும் புற நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
தமிழகத்தில் வாழும் ஈழச் செயற்பாட்டளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி உங்களுக்கும் தெரிந்ததுதானே அகரன். அதன் பின்னர் இலங்கையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் குறித்த எனது ஆவணப்படம். வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி என்ற ஈழ வரலாற்றுப் படம் என இப்போது வரை என் ஆவணப்பட வேலைகள் தொடர்கிறது. இன்னும் சில படங்களை போர் முடிந்த கடந்த பத்தாண்டுகளில் பதிவு செய்திருகிறேன். அவற்றின் பிற தயாரிப்பு வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது.
இலங்கை அரசுக்கும் – தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் நிலவியகாலத்தில் ஊடகவியலாளராக செயற்பட்டீர்கள் என நிறையத் தருணங்களில் கூறியிருக்கிறீர்கள். அந்தக்காலத்தில் இலங்கைத் தீவெங்கும் நிறைய ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் எந்த மாதிரியான நெருக்கடிகளைச் சந்தித்தீர்கள்?
இலங்கையில் ஊடகவியலாளராக அந்த நாட்களில் வேலை செய்வது என்பது துப்பாக்கிகளுக்கு நடுவிலே வேலை செய்வது. 2004 இல் முதல் தடவையாக நான் சென்னைக்கு வந்தேன் ஆனாலும் என் பணி இங்கும் அங்குமாகவே இருந்தது. 2007 வரை நோர்த் ஈஸ்டன் ஹெரல்ட்டில் எழுதிக் கொண்டிருந்தேன். 2007 இற்கு பிறகான சூழல் என்னை சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்கச் செய்தது.
நான் இறுதியாக வேலை செய்த நோர்த் ஈஸ்டன் ஹெரல்ட் பத்திரிகை இலங்கை அரசால் தடை செய்யப்பட்டு அதன் ஆசிரியர் திசநாயகம் கைது செய்யப்பட்டார். இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்பட்டதற்காக அவருக்கு 20 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. அந்த பத்திரிகையில் 2003 இல் என்னைச் சேர்த்துக் கொண்டவர் தராக்கி என்கிற சிவராம். இலங்கையின் மூத்த பத்திரிகையாளர். தமிழ்நெற்செய்தித் தளமும் அவரின் நெறிபடுதலில்தான் செயற்பட்டது. 2005ஏப்பிரல் இறுதியில் ஒருநாள் நான் வவுனியாவில் இருந்து இரவுப் பேருந்தில் கொழும்புக்கு வந்து கொண்டிருந்தேன்.
அப்போது சரிநிகர் சிவகுமார் போன் பண்ணி, சிவராம் கடத்தப்பட்டதாகச் சொன்னார். அந்த இரவு முடிந்த போது அவருடைய உடல் கொழும்பில் உள்ள இலங்கைப் பாரளுமன்றத்திற்குப் பின் புறமாக வீதியோரத்தில் வீசப்பட்டுக் கிடந்தது. 2002 இல் இலங்கையில் உருவான அமைதிப் பேச்சுக்காலத்திற்கு முன்னரும் பல ஊடகவியலாளர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். பேச்சுகள் தொடங்கி அமைதிக்காலம் வந்த பின்னர் கிழக்கில் கருணா – புலிகள் பிளவால் உருவான நெருக்கடி ஊடகவியலாளர்களைக் காவு வாங்கத் தொடங்கியது.
2004 இல் மட்டக்களப்பில் பத்திரிகையாளர் நடேசன் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகு கிழக்கில் பத்திரிகையாளர்களே போக முடியாத சூழல் ஒன்று இருந்தது, சிவராம் கொலை தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பெரும் அச்சுறுத்தலாகவே மாறியது. எல்லோரிடமும் ஆயுதம் இருந்தது. ஆகவே யாரைக் குறித்தும் அல்லது எந்தவொரு தரப்பையும் விமர்சித்தோ அல்லது யாருக்கேனும் விரும்பமில்லாதவாறு எழுதினாலோ பேசினாலோ யார் வேண்டுமானாலும் துப்பாக்கிகளால் நமக்கு பதில் தருவர்கள் என்பதே நியதியாகிவிட்டது.
அமைதி காலத்திலேயே இந்த அச்சுறுத்தல் இருந்தது. அமைதி காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் தினக்குரலில் பணியாற்றிய போது ஒரு செய்தி போட்டேன். அமைதி காலம் தொடங்குவதற் கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆயுதங்களோடு இருந்த அரச ஆதரவு இயக்கம் ஒன்றின் அலுவலகத்தில் இருந்து அழைப்பெடுத்தார்கள். எதிர் முனையில் பேசியவர் “என்ன பயம் விட்டுட்டுது போல கண்டபடிக்கு செய்தி போடுறியள்” எண்டார். உண்மைதான் 2002 இற்கு முதல் எண்டால் அந்த தொலைபேசிக் குரல் கடும் அச்சுறுத்தல்தான். இந்த அச்சுறுத்தல்களைப் பொருட்படுதாமல் பணியாற்றியதால்தான் அந்த காலப் பகுதியில் நிமலராஜன் போன்ற பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டர்கள்.
அரசாலும், அரசு சார்பு தமிழ் ஆயுதக் குழுக்களாலும் மட்டுமல்ல புலிகளாலும் கருத்து நிலை வேறுபாடுடைய ஊடகவியலாளர்கள் சிலர் அந்த நாட்களில் கொல்லப் பட்டிருகிறார்கள். ஆனால் யாரை யார் சுட்டார்கள் என்று யாருக்கும் தெரியாது எந்த விசாரணையும் இருக்காது. கொல்லப்பட்டவர் செய்த வேலை அவரின் அரசியல் ஆகியவற்றைக் கொண்டே இவர் யாரால் சுடப்பட்டார் என்ற முடிவுக்கு நாம் வரமுடியும். இலங்கையில் ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் “இனம் தெரியாத ஆயுததாரிகள்” என்றே காலகாலமாக அழைக்கப்பட்டார்கள்.
உங்களுடைய “எரியும் நினைவுகள்” ஆவணப்படமானது யாழ்ப்பாண நூலக எரிப்பையும் அதன் அரசியல் பின்னணியும் பதிவு செய்தது. அந்த வகையில் அது ஈழத்தமிழருக்கும் ஒரு அரசியல் ஆவணமே. இந்தியளவில் அந்த ஆவணப் படத்திற்கு எப்படியான வரவேற்பு இருந்தது?
அந்த ஆவணப் படம் 2008 இன் ஜூன் ஒன்றாம் திகதி வெளியானது. அந்த காலப்பகுதியில் போரும் உச்சமாக இருந்ததால் அந்த படம் பரவலான கவனத்தைப் பெற்றது. தமிழகத்தில் பரவலாகத் திரையிடப்பட்டது. நான் அப்போதைய நிலையில் அதிக டிவிடிக்கள் விற்பனையான தமிழ் ஆவணப்படமாக அது இருக்கும் என்று நினைக்கிறேன். புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில்தான் இன்னும் அதிகமாக ஆவணப்படங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
எரியும் நினைவுகள் ஆவணப்படம் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, ஜேர்மன்-டொச் மொழிகளில் தயாரிக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தமிழில் சரிவர புரிந்து கொள்ள முடியாத எங்கள் அடுத்த தலைமுறைக்கும் கூட அது போக வேண்டும். தமிழர் அல்லாதவர்களுக்கும் அது சென்று சேர வேண்டும் என்பதே. அந்த படம் ஜேர்மன், போலந்து, அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகளிலும் இந்தியாவின் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டது .
தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் திரையிடப்பட்டது. அதே போல் கேரளாவிலும் இருபதிற்கும் அதிகமான இடங்களில் அது திரையிடப்பட்டது. எரியும் நினைவுகளைவிடவும் முல்லைதீவு சாகா கேரளாவில் அதிக இடங்களில் திரையிடப்பட்டது. அதற்க்கு காரணம், அந்த படம் புலிகளுக்கு பிரச்சாரம் செய்வதற்காக நான் திரையிடுகிறேன் என்று கேரள உளவுத்துறையை ஆதாரம் காட்டி மாத்ருபூமியில் வந்த முதல் பக்கச் செய்தியும் அதனைத் தொடர்ந்து கேரள பத்திரிகையாளர் மன்றத்தில் கருத்துரிமைக்கு சார்பாக நிகழ்ந்த போரட்டம் மற்றும் அந்த படத்தை திரையிடுவதற்கு கட்டுப்பாடுகளை கேரள காவல் துறை விதித்ததும்தான்.
பிறகு அந்தப்படத்திற்கு கேரள திரைப்பட விழாவில் முதலமைச்சரால் விருது வழங்கப்பட்ட போது இந்த நெருக்கடிகள் தளர்ந்து அது பல இடங்களில் திரையிடுவதற்கு வழியேற்பட்டது. அதன் பின்னர் அது இந்தியா முழுவதும் நூற்றுக்கு அதிகமான திரையிடல்களைக் கண்டது. நம் அழிவைக் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எமது அரசியலைக் குறித்து பேசும் வாய்ப்பை அது ஏற்படுத்தியது.
முள்ளிவாய்க்கால் போன்றதொரு பேரழிவின் பின்னராக இன்றைக்கிருக்கும் ஈழத்தமிழர் அரசியலின் போதாமைகளை கவனிக்கிறீர்களா? குறிப்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பினரின் பரிவு தேடும் மிதவாதம் தமிழர்களுக்கு தீர்வை பெற்றுத் தருமா?
எதையும் யாரிடமும் இறைஞ்சிப் பெற முடியாது அரசியல் செய்துதான் பெற முடியும். நாம் நமக்கான நீதியையும் அரசியல் தீர்வையும் பெறுவதற்கு எந்த வகையான அரசியலைச் செய்தோம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சீர்தூக்கிப் பார்த்தால்) எங்கட அரசியல் ராஜதந்திரத்தின் வங்குறொத்து நிலை தெரியும்.
உலகில் போர் நடந்த பல நாடுகளிலும் பிற்போர்காலம் என்பது சீரழிவுகளையும் துயரங்களையும் கொடுத்திருக்கிறது. பல இனக்குழுக்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட நுகர்வுப் பண்பாட்டுக்குள் சிக்குண்ட மக்களாக மாற்றப் பட்ட உதாரணங்கள் வரலாற்றில் நமக்கு முன்னான பாடங்களாக இருந்தன. பல இடங்களில் போர் முடிவு என்பது அரசியல் போராட்டமாகவோ அல்லது அரசியல் தீர்வாகவும் கூட மாறியிருக்கிறது. ஆனால் ஈழத்தின் பிற்போர்காலம் என்பது ஒரு கதம்பமாக கழிந்திருக்கிறது. உலகம் சிறிதளவும் கரிசனம் கொள்ளாத ஒன்றாகவே பிற்போர்க்காலம் இருக்கின்றது. பிற்போர்கால அரசியலை முன்னெடுக்கக் கூடிய தலைமைகள் இல்லாமல் குழப்ப அரசியலே அதிகம் இருந்திருக்கிறது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஈழத்தில் உள்ள தமிழர்கள், தமிழகத்தில் உள்ளவர்கள், புலம்பெயந்தோர் என மூன்று தளங்களாக பிற்போர்காலத்தில் அரசியலைப் பேச ஆரம்பித்தார்கள். ஈழத்தில் ஒற்றை அரசியல் சக்தியாகவும் , தமிழகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் பல குழுகளாகவும் செயல்பட ஆரம்பித்தனர். காலப் போக்கில் ஈழத்திலும் பல குழுக்களாகப் பிரியத் தொடங்கினர். தமிழகம் பிற்போர்கால ஈழத்தை மறந்து தமிழகத்தின் நெருக்கடிகளை எதிர் கொள்வதை நோக்கித் திரும்பிவிட்டது.
புலம்பெயர்ந்த நாடுகளில் அரசியல் லாபிகளை தாம் வாழும் நாடுகளில் உருவாகுவதன் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளை போதிய அளவு முன்னெடுக்கவில்லை. மாறாக இலங்கையில் லாபிகளை உருவாக்கி தமக்குத் தோதாக அரசியல் அமைப்புகளை கட்டமைத்து புதிய குழு அரசியலைச் செய்வதும் அதேபோல் புலத்திலும் குழுகளாக பிரிந்து எமக்குள்ளேயே லாபி செய்வதையும் அதிகமாக சிரத்தை எடுத்து முன்னெடுக்கிறார்கள்.
ஈழத்தில் மிக முக்கியமான 10 ஆண்டு கால பிற்போர்க்காலத்தில் எந்த அரசியல் முன்னேற்றமும் நடைபெறவில்லை. போர் நடந்த போது இந்தியா, அமேரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. அதே போல போர் முடிவுறும் நிலையில் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளிடம் சர்வதேச சமூகமும் இந்தியாவும் ஈழத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து சில வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. போருக்கு பிறகு அரசியல் தீர்வுகள் குறித்து எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை.
ஐநா மனித உரிமை அவையில் சம்பிரதாயச் சடங்காக அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டன. ஒரு வேளை உலகின் ஒழுங்கு இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து மாறும் போது அவர்கள் புதிய நாட்டைக்கூடப் பெற்றுக் கொடுக்கலாம். ஆனால் அதற்காக நாம் இலவு காத்த கிளிகளாக ஐநா மனித உரிமை அவை வாசலையே மட்டும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பத்தாண்டுகளை சாவகாசமாக இலங்கை அரசு காலம் கடத்துவதற்கே மனித உரிமை அவை உதவியிருக்கிறது.
இப்போது மீண்டும் ஒரு சிறு ஓய்வுக்குப் பிறகு ராஜபக்சே வம்சத்திடம் இலங்கையின் அத்தனை அதிகாரங்களும் போயிருக்கிறது அவர்களாகப் பார்த்து ஏதும் செய்தால் உண்டு. இந்த நிலையில் அவர்களோடுதான் திரும்பவும் பேச வேண்டியிருக்கிறது. முறுக்கி கொண்டு நாங்கள் மீண்டும் சண்டையிட்டு பிடித்துவிடலாம் என்பது போன்ற கற்பனைகளில் தமிழ்நாட்டில் சினிமா மனோநிலையில் அரசியல் பேசும் வாய் வீரர்கள் வேண்டுமானால் நினைக்கலாம் நான் நாம் நினைக்க முடியாது.
ஆங்… நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றி ஏதோ கேட்டீங்கள். தங்களுக்கு அரசியல் செய்வதற்கு கிடைத்த சிறந்த காலமொன்றை அவர்கள் தவறவிட்டு தமிழர்களின் தலைமைக் கட்சியாக தங்களைத் தக்க வைக்கும் அதிகாரப் போட்டியில் அதிக கவனம் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் அரசியல் செய்ய தெரிந்த அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்.
போர் வாழ்க்கை தொடர்ச்சியாக எழுதப்ட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் இன்னும் ஈழத்தமிழரின் திரைக்கலை முழுத்தீவிரத்தோடு ஆரம்பிக்கவில்லை. நாவல்களும்,சிறுகதைகளும் திரைப்படமாக உருவாக்கப்பட வேண்டுமென நிறைய பேர் என்னிடமே கூறுகிறார்கள்.உங்களுக்கு அது போன்று முழுநீளத் திரைப்படம் இயக்க ஆசை இல்லையா?
நான் என்னுடைய முதல் முழு நீளப்படத்திற்கான வேலையில்தான் தற்போது இருக்கிறேன். அது என் மக்களின் கதையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே காத்திருக்கிறேன். எனது முதல் முழுநீளப்படம் எனக்கு நெருக்கமான கதையாக இருக்க வேண்டும் என்கிற விருப்பு உண்டு. முடிந்தவரை என் நண்பர்களில் படங்களில் திரைக்கதை சார்ந்து வேலை செய்கிறபோது ஈழம் பற்றிய எதாவது ஒரு விசயம் வருவதற்கு முயல்கிறேன். ஈழம் பற்றிய கதைகள் உரையாடல்களில் உள்ள அந்நியத் தன்மை இதன் மூலம் சினிமாவில் இருந்து விலகும். அது தமிழ் வணிக சினிமாவிலும் ஈழக் கதைகள் வரும் காலத்தை உருவாக்கும்
80களில் பாலுமகேந்திரா சேர் எடுக்க நினைத்த கதையை அவரால் எடுக்க முடியாது போய்விட்டது.
ஈழப்பிரச்சனையை மையப்படுத்தி, அல்லது அதனை ஊறுகாயாக தொட்டுக்கொண்ட தமிழ்நாட்டு திரைப்படங்கள் பெரிதும் கற்பனையாக எமது வாழ்க்கையை அணுகியிருக்கின்றன. மேலும் “நந்தா” போன்ற ஆத்மார்த்தமான திரைப்படத்திலும் புரிதலற்ற தன்மைகள் இருக்கின்றன. குறிப்பாக படகுகளில் வந்த ஈழ அகதிகள் – தாயகம் திரும்பிய மக்கள் என சுட்டும் ஓரிடம் அந்தப்படத்தில் வருகிறது. இதுபோன்ற சிந்தனைகள் இன்றும் தொடர்கின்றனவா?
இன்றைக்கு ஈழத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் நிறைய குறும்டங்கள் எடுக்கப்படுகின்றன. சில குறும்படங்கள் உலகின் மிகப்பெரிய திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டிருக்கின்றன. ஆனால் பெருமளவிலான குறும்படங்கள் தமிழகத் திரைப்படங்களின் பாதிப்பில் உருவாகி இருக்கின்றன. உரையாடல்கள் “பேசப்படுகிறது”, கதைக்கப் படுவதில்லை. இதுபோன்ற சீரற்ற போக்குகளை அவதானிக்கிறீர்களா?
மலையாளத் திரைப்படங்களில் இருக்கிற “தமிழ்வெறுப்புவாதம்” தமிழகத்தின் எல்லையைக் கடந்து ஈழத்தமிழ் மக்களையும் இழிவுபடுத்தத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டில் வெளியான மலையாள திரைப்படத்தில் நாயொன்றுக்கு “பிரபாகரா” என பெயர் சூட்டப்பட்டிருப்பது அதில் ஒன்று. இதன் பின்னணியில் இயங்கும் மனநிலை எந்த அரசியலில் இருந்து உருவாகிறது என எண்ணுகிறீர்கள்?
தமிழகத்திற்குவெளியேஈழஅரசியலைநாட்டுநிலவரங்களைஅதிகம்தங்கள்ஊடகங்களில்பதிவுசெய்யும்இந்தியமாநிலம்கேரளம்தான். நான் 2007 இல் “மிசன்நைன்றிடேய்ஸ் ” என்றமலையாளப்படத்தில்வேலைசெய்தேன். அதுராஜிவ்கொலைபற்றியபடம். மேஜர்ரவிஎன்கிறமுன்னாள்ராணுவஅதிகாரிஇயக்கியபடம். அவர்ஆளவந்தான்திரைப்படத்தில்கமலுடன்நடித்தவர். இப்போதுநீங்கள்உங்கள்கேள்வியில்சொல்லியிருக்கும்படத்திலும்கூடசுரேஷ்கோபிநண்பராகநடித்திருக்கிறார். அவர்இந்தியஅமைதிகாக்கும்படையிலும்இருந்தவர்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டார். அவர் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்த படுகொலைகளை கண்டித்து எழுதியவர் கிடையாது. மாறாக அன்றைய அரசின் குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக காட்டமாக எழுதியவர். இதுபோன்ற பத்திரிக்கையாளர் படுகொலைகளுக்கான நீதியைக்கூட சர்வதேச சமூகம் பெற்றுத்தர முன்வரவில்லையே, அதற்கான காரணம் எதுவாக இருக்கும்?
தமிழ் – முஸ்லிம் உறவானது இன்றைக்கு இன்னும் விரிசலடைந்து இருக்கிறது. தமிழ் மக்களின் சுடுகாடிருக்கும் காணிகளை வன்கவர்ந்து அதற்குள் மசூதி கட்டி, அதனையே தேர்தல் பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டி வாக்குகள் வாங்கும் அளவிற்கு கிழக்கில் இனத்துவேச அரசியல் கொதிக்கிறது. ஆனால் இதனை ஜனநாயக சக்திகள் யாரும் கண்டிப்பதில்லையே ஏன்?
புலிகள் – ரணில்அமைதி காலத்தில்இருஇனமக்களுக்குமானஉறவைப்பலப்படுத்தஎடுத்தமுயற்சிகளையும்குறிப்பிட்டாகவேண்டும். குறிப்பாககெளசல்யன்மட்டக்களப்புஅரசியல்துறைப்பொறுப்பாளராகசெயற்பட்டபோதுமுரண்பாடுகளைக்களைவதற்க்குமுயற்சிகள்எடுக்கப்பட்டது. ஆனால்அதுதொடரப்படுவதற்குமுன்னர்அவரும்கொல்லப்பட்டுஎல்லாமும்மாறிவிட்டது.
முஸ்லிம் ஊர்காவற்படையினர் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செய்த வன்முறையில் பாதிக்கப்பட்ட அனுபவம் உங்களுக்கிருக்கிறது.ஆனால் இதனைச் சொன்னால் உங்கள் மீதும் “தமிழ் இனவெறியன்”என்ற குற்றச்சாட்டு எழுமே?இன்றைக்கும் முஸ்லிம்களின் “ஒடுக்குதல்”தமிழர்களை நோக்கி இருக்கிறதே?
ஆனால்காலப்போக்கில்ஒருஅன்னியத்தன்மைஉருவக்கப்பட்டுவிட்டது. அரேபியபேரிச்சைமரங்களைஅரேபியாவில்இருந்துதருவித்துகாத்தான்குடியில்நட்டதும்தமிழ்மட்டுமேதெரிந்தமுஸ்லிம்ஊர்களில்அரேபியஎழுத்துகளில்தெருப்பெயர்களையும்விளம்பரதட்டிகளையும்வைக்கஆரம்பித்ததும்இந்தஅன்னியத்தன்மையைவெளிப்படையாக்கி விட்டது. மட்டக்களப்பில்வருசத்திற்குஒருகால்கதவுதிறந்துகலையாடிசாராயம்படைத்துபலியிட்டுகுளிர்வித்துப் பாடி, சடங்குமுடிந்துநேர்த்திக்குவந்தகோழி,ஆடுகளைஏலத்தில்எடுத்துஆக்கித்தின்பதோடுமுடியும்மக்கள்வழிபாட்டிடங்கள்பலவும்இப்போதுஆறுகாலப்பூசையும்புரியாதசமஸ்கிருதமந்திரமும்பிராமணக்குருக்களும்என்றுமாறிவிட்டதைப்போலத்தான்முஸ்லிம்களும்புரியாதஅரபிக்குள்என்றும்சொல்லலாம். இவைஇரண்டுமேமதகாலனியாதிக்கம் தானே.
தமிழீழ விடுதலைப் புலிகளை வெறுமென இராணுவவாத கண்ணோட்ட மிக்க இயக்கமாக சித்தரிக்கும் போக்குகளை தமிழ்நாட்டில் சில இடதுசாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். அ.மார்க்ஸ் போன்றவர்கள் அதற்கும் மேலாக தமிழ்தேசியம் என்பதே வெள்ளாளத்தேசியம் என்கிறார்களே?
ஈபிஆர்எல்எவ்இயக்கத்தின்முக்கியஸ்தரும்ஈழப்போராட்டத்தின்ஆரம்பகாலசெயற்பாட்டாளரும்ஈழப்போராட்டத்தில்எனதுசாட்சியம்நூலைஎழுதியவருமானபுஸ்ராஜாவை, அவர்இறப்பதற்குசிறிதுகாலம்முன்புஒருநீண்டபேட்டிகண்டேன். அந்தப்பேட்டியில்இயக்கங்களில்சாதியம்பாற்றிபேசியபோதுஅவர்சொன்னார். “ஈழத்தில்உருவானஇயக்கத்தலைவர்களிலேயேவெள்ளாளர்அல்லாதசாதியைச்சேர்ந்தஒரேதலைவர்பிரபாகரன்மட்டும்தான். அத்தோடு, நாங்கள்அனைவரும்கட்டமைக்ககனவுகண்டஒருஇராணுவபலமிக்கஇயக்கத்தைஉருவாக்கியிருக்கிறார்” என்றார்.
சரிஅதுஇருக்க, ஒருசம்பவத்தைமட்டும்சொல்கிறேன்.
2002 இல்விடுதலைப்புலிகளின்ஏற்பாட்டில்ஈழம், தமிழகம், தமிழ், முஸ்லிம், சிங்களம்எனஅனைவரும்இணைந்த“மானுடத்தின்தமிழ்கூடல்“என்றமாநாடு நடந்தது. அதில்தமிழகத்திலிருந்து வந்து கலந்துகொண்ட தொல்.திருமாவளவன்அவர்கள் தனது உரையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இனஒடுக்குமுறைக்கு எதிரானது மட்டும் தானா என்று கேள்வி எழுப்பியதன் பின்னால் ஈழத்துச் சாதியம் தொடர்பாக புலிகளின் நிலைப்பாட்டை அறிய முற்பட்டார்.
நாவலர்வழிவந்தசைவமும்அந்தசைவம்பாதுகாக்கும்யாழ்ப்பாணவெள்ளாளக்கட்டமைப்பும்அவரின்இந்தகேள்விக்கானபின்புலமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.ஆனால் அதே மேடையில்புலிகளால்ஒருபிரகடனம் பதிலாகச்சொல்லப்பட்டது. அதுவே இந்தக் கூற்று.
போருக்கு பிறகான ஈழத்தில் கிறிஸ்தவ மதமாற்ற சபைகள் உருவெடுத்து, போரில் பாதிக்கப்பட்ட சனங்களை மூளைச்சலவை செய்துவருகின்றனவே, இது பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?
உண்மைதான் புற்றீசல் போல நிறையச் சபைகளை போர் தின்ற பூமியெங்கும் காணமுடிகிறது. எப்படி புதிய அய்யப்பன் கோயில்களும் கல்கிபகவான் முதல் கொண்டு இந்தியாவில் உள்ள எல்லாச் சாமியர்களுக்கும் மடங்களும் நிலையங்களும் உருவாக்கப்படுகிறதோ அப்படி நாம் இதுவரை கேள்விப்படாத பெயர்களில் எல்லாம் கிறிஸ்தவ சபைகள் அங்கே உள்ளது. எல்லோராலும் கைவிடப்பட்ட மக்கள் எங்கே போவார்கள்.
அவர்களுக்கு அருகே வந்து ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வார்த்தைகளை யார் சொல்கிறார்களோ அவர்களைத் தஞ்சமடைவார்கள். மனதளவிலும் பொருளாதார வலுவிலும் தளர்ந்து கைவிடப்பட்ட நிலையில் உள்ள மக்களை இத்தகைய மத நிறுவனங்கள் இலகுவில் வசியப்படுத்திவிடுகின்றன. இது அவர்களுக்கு ஒரு வியாபாரம். பாவப்பட்ட மக்களை வைத்து அரசியல் வியாபாரமும்,மத வியாபாரமும் நடப்பது ரகசியமானதல்லவே.
காணாமல் போன மகன் இத்தனையாம் திகதி உங்களிட்ட வருவான் என்று சொல்லும் சோதிடரை நம்பிக் காசை செலவழித்து, அந்த நம்பிக்கையின் தைரியத்தில் வாழும் தாய்களும், உறவுகளும் வாழும் மண் அது. ஒரு வேளை பழையகடவுள் கைவிட்டுவிட்டார் என புதிய கடவுளர்களைத் தேடியும் அவர்கள் இந்த சபைகளில் விழக் கூடும். பழைய அரசியல்வாதி சரியில்லை என புதிய அரசியல்வாதி நாந்தான் மீட்பர் எனக் குதிப்பது போலத்தான் இதுவும்.
ஆனால் அதற்காக இந்திய இந்துத்துவ கருத்தியல்களோடு குதித்துள்ள இந்துத்துவ அமைப்புகள் வடக்கில் உருவாக்க முனையும் மதப் பதற்ற நிலை ஆபத்தானது.
இன்றைய காலகட்டத்தில் ஈழப்போராட்டம் தேக்கம் அடைந்திருப்பதாக ஒரு கருத்துண்டு.என்.ஜி.ஓக்களின் அரசியல் அதிகரித்திருக்கிறது. அவர்கள் இதுபோன்ற கருத்துக்களை உருவாக்குகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
என்ஜிஓகளின் அரசியல்தானே இன்று உலகம் முழுவதையும் வியாபித்துள்ளது. அவை உருவாக்கும் கருத்தியல்தானே உலகநாடுகளின் கொள்கைகளாகவும் திட்டங்களாகவும் உருமாறுகிறது. நமது உணவில் இருந்து மருந்துகள், தடுப்பூசிகள் வரை நமது பண்பாடு விவசாயம் எல்லாவற்றையும் அவைதான் முடிவு செய்கிறது. இந்த என் ஜி ஓ லாபி இலங்கை இனச்சிக்கலில் மட்டும் எப்படி இல்லாது போகும். எந்த ஒரு இனமும் தமக்கான தனித்துவத்தைப் பேணமுடியாத தங்கி வாழும் கைப்பாவைகளாக மனித உயிரிகள் உருமாற்றப்படுகின்றது.
உதாரணமாக 20 ஆண்டுகள் கடும் பொருளாதாரத் தடைகளை எதிர் கொண்ட போதும், தற்சார்ப்பு பொருளாதார அமைப்பு முறையால் தாக்குப்பிடித்து நின்றது புலிகளின் போராட்டம். எதுவுமே வெளியில் இருந்து வராவிட்டாலும் வாழமுடியும் என்ற நிலை இருந்தது ஆனால் இன்று கொரொனா ஊரடங்குக்கே பதட்டமாகும் நுகர்வுநிலையில் இருக்கிறோம். போர் முடிந்த கையோடு நடந்த முதல் அழிப்பு இந்த தற்சார்பு கட்டமைப்புத்தான். செயற்கை உரங்களாலும் மருந்துகளாலும் பாழ்படாத வன்னி நிலத்தில் வகைதொகையின்றி கிருமிநாசினிக்கடைகளையும் விதைக் கடைகளையும் ஆரம்பித்ததுடன் தொடங்குகிறது புதிய யுத்தம். சரி வேறு பதிலுக்காக கேட்ட கேள்விக்கு நான் இந்த பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
ஈழப்போராட்டத்தின்கடந்தஅத்தியாயம்ஆயுதங்கள்மவுனிக்கப்பட்டதாகஅறிவுப்புவெளியிடப்பட்டபோதேமுடிவுக்குவந்துவிட்டது. அதில்இருந்துஇன்னொருபோராட்டவடிவம்முகிழ்ந்திருக்கவேண்டும். ஆனால்அப்படியொன்றும்நிகழவில்லை. The Battle of Algiers என்றபடம்அல்ஜீரியவிடுதலைப்போராட்டம்பற்றியது 1966இல்வெளியானது. அன்ரன்பாலசிங்கம்தமிழ்படுத்தலில்புலிகளேதொண்ணுறுகளில்அந்தபடத்தைதிரையிட்டதாகச்சொல்கிறார்கள். அந்தபடத்தின்இறுதிக்காட்சிகளைச்சொல்கிறேன்.
தமிழகத்தின் சில வாய்ச்சொல் வீரர்களின் புரூடாக்களையும், ஈழத்து அரசியல் தலைவர்களின் காலம் கடத்தும் வாக்குறுதிகளையும் தானே நாங்கள் பத்தாண்டுகளில் கடந்திருக்கிறோம். ஆகவே இது தேக்க நிலை என்று நீங்கள் சொல்லுகிற என் ஜி ஓ க்கள் சொல்லக் கூடும்.
“இப்போதைக்கு ஒன்றும் சிக்கலில்லை” என்றேன். கை குலுக்கிவிட்டு அவர் புன்னகைக்குப் புன்னகைத்தேன். முப்பது வயதுக்குள் இருக்கக்கூடிய ஒடிசலான உடல் தோற்றம் கொண்ட பெண்மணி. கோதுமை நிறம் கொண்ட தேகத்தில் மணிக்கட்டு வரை நீள்அங்கி அணிந்திருக்க கைகள் மட்டும் வெளித்தெரிந்தன. அவர் சாய்ந்து பார்த்த விதத்தில் ஒரு மனநல மருத்துவருக்கு உரிய தொழில் நேர்த்தியிருந்தது. பொன்னிறமான முடியை வாரிக் கொண்டையாக முடிந்திருந்தார். வெண்ணிற சட்டகங்கள் இடப்பட்ட மூக்குக்கண்ணாடி விளிம்பில் வெளிச்சம் பட்டு ஒளிர்ந்து துடித்தது. அந்த அறை நாலடிக்கு குறைவான அகலத்தில் இருந்தது. பழுப்பு நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்ட சுவரில், கடற்கரையில் சிறுவன் ஒருவன் தனியே திகைத்து நடப்பது போல ஓவியம் மாட்டப்பட்டிருந்தது.
முதல் தடவையாக பல்கலைக்கழக மனநல ஆலோசனைப் பிரிவுக்கு வருகிறேன். பெரும்பாலும் மாணவர்கள் மன அழுத்தம், தனிப்பட்டப் பிரச்சினைகளுக்கு உள சிகிச்சைக்காக இங்கே வருவார்கள். கூம்பு வடிவ கட்டடத்தின் தோற்றமே உளச்சிகிச்சை மையத்தை வித்தியாசமாக வளாகத்தில் காட்டியது. எத்தனையோ முறை இக்கட்டடத்தைக் கடந்து சென்று இருக்கிறேன். இன்றுதான் முதன்முதலாக இணையத்தில் சிகிச்சைக்கான அனுமதி பெற்று உள்ளே நுழைந்தேன். வரவேற்பு மையத்தில் கொடுக்கப்பட்ட படிவத்திலுள்ள மூன்று பக்கங்களில் மனநலம் பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தேன். சீரான நித்திரை வருகிறதா, கவலையாக உள்ளதா, உடலை தன்விருப்பாக துன்புறுத்தத் தோன்றுகிறதா போன்ற கேள்விகள், அதற்கான வீரியத்தின் அளவை இலக்கங்களில் வளையமிட வேண்டும்; சில சொற்களில் விபரிக்கவும் வேண்டும். என் கோணலான கையெழுத்தில் நிரப்பிய அந்தப் படிவத்தை புரட்டிப் பார்த்துவிட்டு மேசையில் மடிக்கணினி அருகே வைத்தார்.
“என்னுடையை பெயர் கிளாரா ஸ்பொளடிங். என்.எஹ்.எஸ் மனநல மருத்துவராக இங்கே வாரத்துக்கு இரண்டு நாட்கள் பணிபுரிகிறேன். சரி ஹரி, நீங்கள் பல்கலைக்கழகத்தில் என்ன துறை, படிப்பெல்லாம் எப்படிச் செல்கிறது?”
“மருத்துவப் பீடம்; படிப்பு நன்றாகச் செல்கிறது”
“நல்லது. சரி உங்களுக்கு எந்த வகையில் நான் உதவ முடியும்.? உங்களது பிரச்சினையை மனம் விட்டுச் சொல்லலாம்,”
“எனக்கு சமீப காலமாக அதிகமாகக் கோபம் வருகிறது,”
“எதனால், குறிப்பாக எவர் மீது?”
“எதனால் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் அம்மா மீது வருகிறது,”
“அப்படி அம்மா மீது என்ன கோபம்?”
“ஹ்ம்ம்…”
“ஹேய் நீங்கள் என்னிடம் மனம்விட்டுப் பேசலாம். மிக இளையவர் நீங்கள். இந்த வயதில் எல்லோருக்கும் வரக்கூடியதுதான். இது இயல்பானது!”
மருத்துவர் என்னை இலகுவாக்கச் சொற்களை அலங்கரித்து விரித்துத் தடவிச் சொன்னாலும் அங்கிருக்கும் நம்பகத்தன்மை என்னை ஈர்த்தது. மெல்ல உடலைச் சாய்த்து இலகுவானேன். மருத்துவ பீட மாணவன் ஆகையால் எனக்கு இங்கிருக்கும் நடைமுறையும், நுட்பமான நடிப்பும் நன்கு தெரியும். இருந்தும் அதை விரும்பினேன். என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க விரும்பினேன்.
“எங்கள் குடும்பம் மிக விசித்திரமானது,”
“குடும்பங்களுக்கு தனித்தனி இயல்புகள் இருக்கும். இது பல்வேறு கலாச்சார பின்னணி கொண்ட மக்கள் வாழும் நாடு அல்லவா?”
“உண்மைதான், சில விடயங்களில் அடிப்படையே தவறி இருந்தால் கஷ்டம் இல்லையா?”
“புரியவில்லை ஹரி, சரி நீங்கள் சொல்ல விரும்புவதை நண்பியிடம் சொல்வது போல சுதந்திரமாக என்னிடம் சொல்லலாம்” கண்ணாடி சட்டகத்திற்குள் கிளாராவின் கண்கள் விரிந்தன.
“பெரும்பாலான நாட்களில் பாடசாலை முடிந்து வீட்டுக்கு என் இளைய சகோதரியுடன் வரும்போது அப்பா தூக்கி எறிந்த பழக்கூடையிலிருந்து சிதறிய பழங்கள் தரையில் அனேகமாக வீழ்ந்திருக்கும். ஒவ்வொரு சண்டையின் போதும் அப்பா தனது கட்டுப்படுத்த முடியாத மூர்க்கத்தை வெளிக்காட்ட அதைச் செய்வார். ஜன்னலை நோக்கிக் கைக்கு அகப்படும் பொருட்களை மேசையிலிருந்து தூக்கி வீசுவார். அவை பட்டுச் சிதறி தரையெங்கும் பரவும். அப்பா சென்றவுடன் அம்மா அவற்றைப் பொறுமையாகப் பொறுக்கி, மேசைத்துணி விரிப்பைக் கசங்கல் இல்லாமல் சீராக விரித்து எடுத்து வைப்பார். சிதைந்த பழங்களையும், நொறுங்கிய கோப்பைகளையும் அப்புறப்படுத்தி மீண்டும் சளைக்காமல் அலங்கரிப்பார். அம்மாவை அப்பா அடித்ததை சிறுவயதில் பலமுறை பார்த்து இருக்கிறேன். அப்போதெல்லாம் அம்மாவின் விழிகளில் குமிழ் கொள்ளும் விழிநீரைப் பார்க்க முடியாத வண்ணம் கேசம் கலைந்து விழிகளை மறைந்திருக்கும்.
என் பதின்ம வயதில் அப்பா ஒருமுறை அம்மாவை அடித்துத் தரையில் வீழ்த்தி விட்டார். நான் கோபம் கொண்டு அப்பாவின் இடுப்பைப் பிடித்து இழுத்துத் தள்ளிவிட்டேன். நிலை தடுமாறி பிடித்துக்கொள்ள ஏதும் இன்றி சுவரில் சாய்ந்து ஒற்றைக் கையை ஊன்றி நின்று என்னைப் பார்த்தார். விழிகளில் அதிர்ச்சி இருந்தாலும் அவசரமாக அவற்றை கோபமாக மாற்றினார். நான் அம்மாவை அணைத்துக் கொண்டு “இப்போது நீங்கள் வீட்டை விட்டு உடனே கிளம்புங்கள். அம்மாவை மீண்டும் அடித்தால் பொலிசாரை அழைத்து வரச்சொல்வேன்” என்றேன். அப்பா அதிர்வுகள் உடலில் படர்ந்து செல்ல என்னைப் பார்த்தார். அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. திரண்ட கோபத்தை அள்ளியெடுத்து அம்மா மீது காட்டக் கையை ஓங்கினார். எனக்குள் மூர்க்கம் எங்கிருந்தோ சட்டென்று வந்தது. எனது இடது காலால் அவர் காலை தள்ளி, நெஞ்சைப் பிடித்து அழுத்தி சுவருடன் சாய்த்தேன். நிலை தடுமாறி விழுந்தார். விழப்போன அவரை என் கைகள் தாங்கச் சென்றன, இருந்தும் என்னால் பிடிக்க முடியவில்லை. என் கண்களைப் பார்க்க அவர் கண்கள் தடுமாறின. அவர் விழுந்தவுடன் அவர் மீது அச்சம் தான் கிளர்ந்தது. அப்பாவின் எதிர்வினைக்காகப் பயந்தேன். ஆனால், அவர் கண்களிலிருந்த திகைப்பு என்னை சமாதானப்படுத்தியது. கொஞ்சம் திருப்தி. கொடூரமான திருப்தியது. உள்ளூர மகிழ்ந்தேன். அதுவே எனக்குப் பெரிய தெம்பைக் கொடுத்தது.
தரையில் வீழ்ந்திருந்த அம்மா எழுந்திருக்கவில்லை. வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஒரு பக்கம் சாய்ந்தார். முகம் தரையின் பக்கம் திரும்பியிருந்தது. வலி பொறுக்க முடியாமல் அழுதிருக்க வேண்டும். அம்மாவின் தேகம் அதிர்ந்தவாறிருந்தது. இடுப்பின் பின்பகுதியிலிருந்து இரத்தம் கசிந்து பரவியது. அந்த இரத்த(த்)தின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ளும் வயதில்லை அப்போது. ஆனால் மிகுந்த ஒவ்வாமையை அந்த இரத்தம் கொடுத்தது. அப்பா ஒரு கணம் திகைத்து பின்னர் சுதாகரிந்து அம்மாவை இருகரம் கொண்டு தூக்கினார். அம்மா எதுவும் பேசாமல் வயிற்றை மட்டும் பிடித்துக் கொண்டிருந்தார்.
“இன்று அந்த நாட்கள் என்று ஏன் முன்னமே சொல்லவில்லை?”, என்பது மட்டுமே அப்பாவிடம் இருந்து வந்த வார்த்தைகளாக இருந்தன.
அன்றிலிருந்து அப்பா அம்மாவை அடிப்பது வெகுவாகக் குறைந்து இல்லையே என்று சொல்லும் அளவுக்குச் சென்றுவிட்டது. எனக்கும் அப்பாவுக்கும் இடையே விரிதல் சன்னமாக வளர்ந்து இட்டு நிரப்ப முடியாதவாறு பிளந்து சென்றது. அதை இருவரும் உணர்ந்தோம். மின்கலத்தின் இருமுனை போல ஒவ்வொரு திக்கில் இருந்தோம்.
அம்மாவும், அப்பாவும் இலங்கையிலிருந்து அகதிகளாக இங்கிலாந்துக்கு வந்து குடியுரிமை பெற்றவர்கள். நானும் எனது இளவயது சகோதரியும் இங்கேதான் பிறந்து வளர்ந்தோம். அப்பா முரட்டு மனிதர். என்ன கோபம் என்றாலும் அம்மா மீதுதான் காட்டுவார். அம்மா எல்லாவற்றுக்கும் அப்பாவுக்கு பயப்படுவார். எதிர்த்து இரண்டு வார்த்தைகள் பேசக்கூட திராணியும் சத்தும் இருக்காது. ஆரம்பத்தில் அம்மாவின் பயந்த சுபாபம் மீது இருந்த இரக்கம் எனக்கு காலப்போக்கில் எரிச்சலைத் தரத் தொடங்கியது. எதிர்த்துப் பேசவும் குரலை உயர்த்திக் கதைக்கவும் அம்மாவுக்கு சொல்லிச் சொல்லியே எனக்கு அலுத்து விட்டது. என்னுடைய பாடசாலை நண்பர்களின் பெற்றோர்களைப் பார்க்கும்போது எனக்குள் பொறாமையும் கவலையும் பரவும். எனக்கு இப்படிப் பெற்றோர்கள் இல்லையே என்று தோன்றும்.
அப்பா தேவைப்பட்டால் கோட் ஷூட் அணிவார். ஆங்கிலத்தில் உரையாடுவார். தபால் நிலையத்துடன் சேர்ந்து இயங்கும் தனது சிறிய பல்பொருள் அங்காடிக் கடையை இரண்டு இலங்கையைச் சேர்ந்த ஊழியர்களை வைத்து திறம்பட நடந்துவார். ஆனால் அவரது மூளையின் பல பகுதி இந்த நாட்டுடன் ஒன்ற முடியாதவை. என்னையும் சகோதரியையும் தனது இருண்ட மூளையின் பாதிப்பகுதியிலும் இங்கிலாந்தில் ஊன்றிய மிச்சப்பகுதியிலும் வைக்க முயன்று தடுமாறிப் போவார். என்னுடையை பதினான்காவது வயதிலிருந்து என் போக்கை எனது இஷ்டப்படி அமைக்கத் தொடங்கியபோது அப்பா அடைந்த பதற்றம் என்னை இரசிக்கச் செய்தது.”
“உங்கள் மீது கோபம் வந்தால், அப்பா உங்களை அடிப்பது இல்லையா?”
“மிகச்சிறு வயதில் அடித்திருக்கிறார். பிற்பாடு குரலை உயர்த்திப் பேசுவார். என் மீது எழும் கோபத்தை அம்மா மீதுதான் வன்முறையாகக் காட்டுவார்”
“மிகச் சிறுவயதில் கூட அப்பா உங்கள் மீது அன்பாக இருந்தது இல்லையா?”
“ம்ம்… இருந்தார். அப்பா என்னையும் என் சகோதரியையும் அன்பில்லாமல் வளர்த்தார் என்று சொல்ல இயலாது. அவர் அன்பை வெளிக்காட்டும் விதம் நிறைய பரிசுப் பொருட்களை வாங்கித் தருவதூடாக வெளிப்படும். சிறுவயதில் கோபமாகப் பேசினாலோ அல்லது மூர்க்கம் கொண்டு அடித்தாலோ பின்னர் அதற்காக வருத்தப்படுவார். வருத்தப்பட்டு இருக்கிறார். ஆனால், அதை அம்மாவின் ஊடாகவே அறிய நேரும். அப்பா தன்னிடம் வருத்தப்பட்டார் என்று அம்மாதான் சொல்வார். அப்போது அப்பாவின் மீது வாஞ்சை பிறக்கும். பின்னர் பொடிப்பொடியாக உடைந்து விடும்”
நான் சொல்லச் சொல்ல கிளாரா சில குறிப்புகளை நோட்டில் வேகமாக குறித்துக் கொண்டிருந்தார்.
“கடைசியாக எப்போது அப்பா உங்கள் மீதும் கோபம் கொண்டார்?”
“மூன்று வாரங்கள் முன்னர்”
“எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா?”
“அன்று அப்பா என் மீது கோபம் கொண்டது எனது நண்பியை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன் என்பதல்லாமல் அவளை எனது அறைக்குக் கூட்டிச்சென்று பேசி(க்)கொண்டிருந்தேன் என்பதற்காக. என்னுடன் வெளிப்படையாக எரிந்து விழாமல் அம்மா மீது என் மீதான சினத்தை காட்டித் தன் இயலாமையை தீர்த்துக் கொள்கிறார். இத்தனைக்கும் என் சிநேகிதி மிக இனிமையும், பண்பும் நிறைந்தவள். என்னுடன் பல்கலைக்கழகத்தில் படிப்பவள்”
“அப்பா மீதுதானே உங்களுக்கு கோபம் வரவேண்டும். எதற்கு அம்மா மீது வருகிறது?”
“அதைத்தான் என்னால் யாருடனும் பகிர முடியவில்லை. மிகுந்த தொந்தரவைத் தருகிறது”
“நீங்கள் உங்கள் பிரச்சினையைச் சொல்வதில் எதற்கும் தயங்கத் தேவையில்லை ஹரி. நான் உங்களுக்கு உதவவே இருக்கிறேன். என்னால் முழுமையாக உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் ஒரு மருத்துவ மாணவர், உங்களுக்குத் தெரியும் இங்கே நம்பிக்கையும், மனம்விட்டுப் பேசுவதும் அவசியமானது. நான் இத்துறையில் முறையாகப் படித்தவள். இவ்வாறான பல்வேறு சிக்கல் கொண்ட பல மாணவர்ளை இங்கே சந்தித்துச் சிகிச்சை அளித்திருக்கிறேன். உளவியல் அழுத்தங்களுக்குள்ளிருந்து மீட்டிருக்கிறேன். நீங்கள் என்னை முழுமையாக நம்பலாம். சொல்லுங்கள்”
“ஒரு குறுந்தகட்டால் நான் நிலையிழந்து விட்டேன்”
“குறுந்தகடு?”
“ஆம், அப்பாவின் அறையினுள் இருந்து அந்த குறுந்தகட்டைக் கண்டுபிடித்தது மிகத் தற்செயல். பொதுவாக நான் அப்பாவின் அறைக்குள் நுழைவதில்லை. சிறுவயதில் அடிக்கடி சென்று இருக்கிறேன். வளர்ந்த பின்னர் செல்வதில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை. ஏனோ செல்லப் பிடிக்கவில்லை. அப்பாவுடன் பேச்சுக் குறைந்த பின்னர் ஒருநாள் அந்த அறைக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. கதவு பூட்டி இருக்கவில்லை. உள்ளே சென்றேன். விதவிதமாக பல பழைய காலணிகள், முன்சில்லு கழட்டப்பட்ட நிலையில் நீலநிறத்தில் சைக்கிள் ஒன்று, அதன் மேல் சில ஆடைகள். தரையெங்கும் காகிதங்களும் கடிதாசிப் பெட்டிக்களுமாக இருந்தன. அப்பாவின் மனம் போல், பிடிவாதம் போல் அந்த அறையிருந்தது. மெல்ல மெல்ல அறைக்குள் சென்றேன். ஒழுங்கின்மையாகவிருந்த அந்த அறையில் அப்பா தங்குவதோ உறங்குவதோ இல்லை. அதன் அருகே தள்ளியிருக்கும் அறை இன்னும் விலாசமானது. அம்மாவும், அப்பாவும் அங்கு தான் உறங்கச் செல்வார்கள். அம்மா இருப்பதாலோ என்னவோ அந்த அறை ஒழுங்காகத் தூய்மையாக இருக்கும். ஆனால், அவர்கள் தங்கியிருக்கும் தூய்மையான அறைக்குள் நான் செல்வதில்லை. மீண்டும் மீண்டும் அப்பாவின் தனியறைக்குள் நுழைந்தேன்.
பழைய ஒளிப்படக் கருவிகள், ஒளிப்பட நாடாக்கள் என்று பல பாவனையில் இல்லாத உபகரணங்களை பெட்டிகளுக்குள் தடித்த வயர்கள் தெரிய புதையுண்டு இருந்தன. அவை எல்லாம் முன்னர் அப்பா நடாத்திய ஒளிப்படப் பதிவெடுக்கும் நிறுவனத்தின் பழைய உபகரணப் பொருட்கள். அங்கிருந்த புத்தகத்திற்குள் அதைக் கண்டுபிடித்தேன். தூய்மையான மெல்லிய பேழைக்குள் வைக்கப்பட்ட குறுந்தகடு. அதனைப் புரட்டிப் பார்த்தேன். எந்தவிதக் கீறலும் அல்லாமல் பாவிக்கும் நிலையில் இருந்தது. கணினியில் அதனைச் செலுத்தி இயக்கிப்பார்க்கும் எண்ணம் எழுந்தது. பின்னர் அதைப்பற்றி முற்றாக மறந்து விட்டிருந்தேன். சில நாட்களின் பின்னர் கணினியை இயக்கி குறுந்தகட்டைச் செலுத்தி இயக்கிப் பார்க்கும் உவகை எழுந்தது.
என்னுடைய கணினியில் செலுத்தி இயக்கிப் பார்த்தேன். அப்பாவினதும், அம்மாவினதும் பழைய புகைப்படங்கள் இருந்தன. ஒவ்வொன்றையும் தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். புன்னகை விரிய சட்டை தொளதொளக்க அப்பா நிற்க அருகில் அம்மா காதில் தோடு மின்ன சேலையில் இருக்கும் புகைப்படங்கள், என்னுடையதும் இளைய சகோதரியினதும் சிறுவயதுப் புகைப்படங்கள், விளையாட்டுப் பொம்மைகள் சூழ அப்பாவின் மடியிலும் தரையிலும் நாங்கள் இருக்கும் படங்கள். என்னை மறந்து ஆனந்தமாக அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இவையெல்லாம் ஆல்பங்களில் இல்லாத படங்கள். சில படங்கள் இலங்கையில் எடுக்கப்பட்டவை. நந்தியாவட்டை வெள்ளைப் பூக்கள் பூத்த மரங்களின் கீழேயும் கிணற்றுக்கட்டுகள் அருகேயும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அவற்றை எல்லாம் அப்பா நினைவிலிருந்து அழியாமல் செல்ல ஆவணப்படுத்தியிருந்தார் போல.”
அங்கே எனது பேச்சை நிறுத்தினேன். தொடருங்கள் என்ற ரீதியில் கிளாரா என்னை ஊற்றுப் பார்த்தார். நான் அவர் விழிகளைத் தவிர்த்து விட்டு தொடர்ந்தேன்.
“அப்போதுதான் அந்தக் கோப்பில் படங்களுடன் ஒரு ஒளிநாடாவும் பதியப்பட்டு இருந்ததைக் கவனித்தேன். சாதாரணமாக அதனை இயக்கினேன். அப்போது எனக்குள் ஒரு அதிர்வு எழுந்தது. அதுவொரு பாலியல் படம். நிர்வாணமாக ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் காணொளி. இது எப்படி இதற்குள் என்ற ஆச்சரியமும் திகைப்புமாக உறைந்து போனேன். நிலையாக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஒளிப்படக் கருவியால் படம்பிடிக்கப்பட்டு இருந்தது. ஆணுக்கு மேல் பெண்ணொருவர் இயங்கிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அதைக் கண்டுபிடித்தேன். அந்த ஆண் எனது தந்தை. எனது உடல் சிலிர்த்தது. அந்தப் பெண் யார் என்று பார்த்தபோது எனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. அது எனது அம்மாதான். அம்மாவின் சாயலிலுள்ள வேறு பெண்ணா என்று திரும்பவும் நோக்கினேன். இல்லை என் அம்மாவே தான். எனது அம்மா வெறிகொண்டு தந்தை மீது இயங்கிக் கொண்டிருந்தார். இதுவரை நான் புரிந்து வைத்திருந்த அம்மா அல்ல திரையில் நான் பார்ப்பது. முற்றிலும் ஆக்ரோஷமாக தனது ஆக்கிரமிப்பில் ஓர் ஆணைப் பந்தாடிக் கொண்டிருக்கும் பெண்ணாகத் தெரிந்தார். நிஜமாகவே அம்மாவைப் பார்த்து பயப்பட்டேன். ஒன்றரை நிமிடங்கள் இயங்கக்கூடிய அந்தக் காணொளியை முழுவதுமாகப் பார்வையிட்டேன். மரக்கட்டை போல என் அப்பா படுக்கையில் படுத்தபடியே இருந்தார். அவரிலிருந்து எந்தவிதமான அசைவும் இருக்கவில்லை. இறந்த பிணம் போலவே இருந்தார். இருவரையும் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
அன்று முழுக்க யோசிக்கவே திராணியற்று எனது படுக்கையில் படுத்திருந்து அந்தக் காணொளி பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். ஆக்ரோஷமான அம்மாவின் உடல் மொழி என்னை அரித்துக் கொண்டிருந்தது. துணுக்குற்றுத் தூக்கம் கொள்ளாமல் விழித்து எழுந்தேன். தேகம் முழுவதும் கொதித்து உருகி வழிந்தேன். நிலை கொள்ளாமல் தவித்தேன்.
மீள மீள என் அப்பாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவர் அமைதியாக நிலம் போல் இருக்க, புயலில் அறைபட்டு ஆடும் மரம்போல் இயங்கிக் கொண்டிருந்த அம்மாவின் சித்திரம் என்னைப் புரிந்துகொள்ள முடியாத வெளிக்குள் தள்ளியது. நான் ஏன் தொந்தரவுக்குள் உள்ளாக வேண்டும். காணக்கூடாத காட்சியைக் கண்ணுற்றேன் என்றா அல்லது அம்மா மீதிருந்த விம்பம் மாறிவிட்டது என்றா எனக்குத் தெரியவில்லை. உணர்வுகளால் சிதைந்து அலைகழிந்தேன். அந்த கலவிக் காட்சியை வைத்து ஒட்டுமொத்தமாக அவர்களைப் புரிந்துகொள்ள முயன்றேன். என்னை நுண்மையாக்கி, கூர்படுத்தி மனதை பிளந்து பகுத்துச் சென்றேன். அகம் எங்கோ முட்டி நகராமல் நின்றது. அங்கே கொப்பளித்தது சினம். என் அம்மா மீது வெறுப்பும் கோபமும் கிளர்ந்தது. அன்றிலிருந்து தான் வீட்டில் பிரச்சினை.”
“ம்ம், உங்களுடைய தொந்தரவு புரிகிறது. நிச்சயம் எதிர்பார்க்காத ஒன்றுதான். இது உங்களுக்கு வீட்டில் என்ன வகையான பிரச்சினையைத் தோற்றுவித்தது?”
“அம்மா பேசுவதும் வீட்டில் நடமாடுவதும் போலி நடிப்புப் போல் தோன்றத் தொடங்கியது. எல்லாமே நாடக பாவனையென. பயந்த சுபாவம் கொண்டவர் போல் இருப்பதும் அப்பாவை எதிர்க்காமல் இருப்பதும் அவர் விரும்பி அணிந்த வேடம் என்று தோன்றியது. உள்ளூர அதற்காக நடித்து அதுவாகவே ஆகிவிட்டாரா அல்லது புன்னகையுடன் அதை உள்ளூ(ர) இரசித்து மகிழ்கிறாரா தெரியவில்லை. ஆனால் ஒன்று முன்னம் போல என்னால் அம்மாவை பார்க்கவோ, அவருடன் பேசவோ முடியவில்லை.”
கிளாரா குறிப்பு நோட்டை மூடி வைத்துவிட்டு, “அதிகம் யோசிக்க வேண்டியதில்லை ஹரி. இத்தனை வெறுப்பு தேவை இல்லை. இதை இப்படிப் பார்க்கலாம், இது அவர்கள் அந்தரங்கம் சார்ந்தது. அதற்குள் சங்கதிகள் தலையிட முடியாது. இதை யோசித்து துயர் அடைய ஏதும் இல்லை. அந்தக் ஒளிப்படக் காட்சி அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது. சரி, அந்தக் காணொளியை அவர்கள் தான் எடுத்தார்களா?”
“ஆம், என் அப்பா அதை எடுத்திருந்தார்”
“அப்படியா, அதனை அவரிடமே கேட்டீர்களா?”
“ஆம். அம்மா மீதான வெறுப்பு கட்டுக்கடங்காமல் வளர்ந்து சென்றது. குரலை உயர்த்திப் பேசாத நான் அம்மாவுடன் எரிந்து விழுந்தேன். என் கண்களில் அவர் தென்படும் போதெல்லாம் அதிகம் வெறுத்தேன். அவர் சமைத்ததை அவர் முன் உண்ண(ப்) பிடிக்கவேயில்லை. ஒருமுறை இரவு உணவு உண்ணும் போது ‘என்னடா பிரச்சினை?” என்று கேட்டு என் தலையைத் தடவினார். எனக்குள் முகிழ்ந்த ஒவ்வாமை சினமாக மாறியது. அவர் கையை தட்டிவிட்டது மட்டுமல்லாது சாப்பாட்டுத் தட்டை விசிறி எறிந்தேன். தட்டு உடைந்து உணவுடன் தரையில் தெறித்திருந்தது. அம்மா அரண்டு போனார். எதுவும் பேசாமல் என் அறைக்குள் எழுந்து சென்று விட்டேன்.”
“உன் அப்பாவுக்கு வரும் அதே கோபம் போல”, என்று கிளாரா சொல்லும்போது ஒரு திடுக்கிடல் எழ நிமிர்ந்து பார்த்தேன்.
“ஆம், அந்தக் கோபம் தான் எனக்கு பிரச்சினையே. அன்று அப்பா என்னை நேருக்கு நேராகப் பார்த்து அழைத்தார். நான் மறுப்பு ஏதும் சொல்லாமல் அவரிடம் சென்றேன். உண்மையில் அப்படியொரு அழைப்பை உள்ளூர எதிர்பாத்து இருந்தேன் போல. சிறிய ஆசுவாசம் கிடைத்தது. ‘நீ சிறிய வயதிலிருந்து அம்மா பிள்ளைதானே, எதற்கு அம்மா மீது இத்தனை கோபம் சமீப காலமாக?’ என்று கேட்டார். இதற்காகவே காத்திருந்தது போல அந்த குறுந்தகட்டை எடுத்து அவர் முன்னம் வைத்தேன். பின்னர் அதில் நான் பார்த்ததை சுருக்கமாகச் சொன்னேன். அப்பா அதிர்ச்சி அடைவார் என்று நினைத்தேன். அல்லது சங்கடம் கொள்வார் என்று எதிர்பார்த்தேன். மாறாக அவர் நிதானமாகவும் தெளிவாகவும் பேச ஆரம்பித்தார்.
“இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்த பின்னர் நான் ஆரம்பித்தது சிறிய ஒளிப்பட நிறுவனம். அப்போதுதான் ஒளிப்பட கருவிகள் மக்கள் பயன்பாட்டில் வந்து கொண்டிருந்தது. அனைத்து நிகழ்வுகள் சடங்குகளை மக்கள் படம் பிடிக்க விரும்பினார்கள். அதனைக் கணித்து என் வியாபாரத்தை நடாத்தினேன். சிறப்பான வரவேற்பு இருந்தது. இயல்பிலே ஒளிப்படங்கள் மேல் ஆர்வம் இருந்ததால் இன்னும் திறமையாக நடாத்த முடிந்தது. அப்போது நீங்கள் பிறக்கவில்லை. ஒவ்வொரு முறையும் குழந்தை பிறக்காமல் தள்ளித்தள்ளியே சென்றது. இது உன் அம்மாவுக்கு அதிக கவலையைக் கொடுத்தது. அவள் பிள்ளை வேண்டும் என்று ஏங்கத் தொடங்கியிருந்த காலம். எங்கள் இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் மருத்துவ ரீதியாக இல்லை. விரைவில் சரியாகும் என்று நம்பினேன். அப்போதுதான் கரு உண்டாகும் அந்தக் கணத்தை அழியாமல் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. படு சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றினாலும் எனக்குள் அதைச் செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது. உன் அம்மாவிடம் சொன்னபோது அதை மறுக்கவில்லை. வேடிக்கையாக அதை ஏற்றுக் கொண்டாள். பிற்பாடு ஒளிப்படம் பிடித்த பல காணொளிகளை அழித்தேன். இதை மட்டும் விட்டு வைத்தேன். காரணம் இது நீ தோன்றிய கணம்.” என்றார். எங்கள் இருவருக்கும் இடையில் மௌனம் மட்டுமே அப்போது இருந்தது. நான் வேறு எதுவும் பேசவில்லை.
அப்பா இதனை எங்கோ பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும். சுழன்று என் கைக்கே தற்செயலாக வந்துவிட்டது. அதன் பின்னர் எனக்கும் அப்பாவுக்கும் இடையிலிருந்த இடைவெளி மெலிதாகச் சுருங்கி வருவதுபோலத் தோன்றியது. அப்பாவும் நானும் அதிகம் பேசிக்கொள்ளா விட்டாலும் ஒரே மேசையில் இரவு உணவை உண்கிறோம். எங்களுக்கு இடையே அம்மா ஒரு தடையாக இருப்பதில்லை.”
“இப்போது அப்பாவிடம் நெருக்கமாக இயல்பாக பேச முடிகிறதா?”
கிளாரா எழுதித் தந்த மருந்துகள் மூளையின் மின்ரசாயனச் செயல்பாடுகளைக் குறைக்கும் மாத்திரைகள். சிந்திக்கும் வேகத்தை குறைக்கும். இதனைத் தொடர்ந்து உள்ளெடுத்தால் மந்தமாகி விடுவேன். எந்த வேலையிலும் ஆர்வம் காட்ட முடியாமல் போகும். வன்முறை எதையாவது நான் கையிலெடுப்பேன் என கிளாரா எண்ணுகிறாரா தெரியவில்லை. இன்னும் வாரத்துக்கு ஒருமுறையாக ஏழு தடவை தொடர்ச்சியாக கிளாராவைச் சந்திக்க வேண்டும். நான் சொன்னவற்றை வைத்து என்னை ஆராய்வார்கள். எனக்கு என்ன சிக்கல் என்று கண்டுபிடித்து, அந்த மையத்தைக் கலைக்கும் விதமாக பல்வேறு உரையாடல்களைத் தொடுப்பார்கள். அந்த உரையாடல்கள்தான் எனக்குத் தேவையா எனத் தெரியவில்லை.
000
சைக்கிள் நிறுத்தத்திற்குச் சென்று இரும்புக் கேடயத்தில் பிணைக்கப்பட்ட என் சைக்கிளை விடுவித்து ஏறிமிதித்துப் புறப்பட்டேன். வெளிக்காட்சிகள் எல்லாம் ஒருபெரிய மௌனப்படம்போல ஓடிக்கொண்டிருந்தன. அம்மாவின் நினைவுகள் வந்தன. சிறுவயதில் அம்மாவுடனே எப்போதும் இருப்பேன். எனக்கு மூன்றரை வயது இருக்கும். ஈரம் பொதிந்த கடற்கரை நிலம், என் கால்கள் புதையப் புதைய அப்பாவின் கையைப்பிடித்து நடந்தவாறு இருந்தேன். சட்டென்று பெரிய அலை எழுந்து உடைந்து வழிந்து வந்த வேகத்தில் என்னை சாய்த்தது. அரைக்கணத்திற்கும் குறைவான பொழுது உப்புத்தண்ணீர் மூக்கில் நுழைய தத்தளித்தேன். அடுத்த அரைக்கணத்தில் அம்மாவின் இடுப்பில் இருந்தேன்.
நான் சோர்வுடன் வீட்டுக்குள் நுழைந்த போது அப்பா அம்மாவுடன் வாய்தர்க்கத்தில் இருந்தார். என்ன பிரச்சினை என்று நான் புரிந்துகொள்ள முற்படவில்லை. ஏதாவது ஒரு நொண்டிக் காரணமாக இருக்கும். அம்மா மௌனமாகவே இருந்தார். எனக்கு அந்த மௌனம் ஒரு நடிப்புப் போலத் தோன்றியது. எங்கேயோ சுரந்த இரக்கம் தடைபட்டு நின்றது. இருவரையும் அவர்களின் உலகத்திலே விட்டுவிட்டு விலகிச் செல்லவே விரும்பினேன். மாடிப்படியிலுள்ள எனது அறைக்குள் நுழைய முற்படும்போது கீழே பெரிய சத்தம் கேட்டது. அம்மாவின் அலறல். என்னை மீறி கீழே படிகளின் மீது தாவி ஓடிச்சென்றேன். அப்பா, அம்மாவை மூர்க்கமாக அடித்திருக்க வேண்டும். அம்மா தரையில் வீழ்ந்திருந்தார். அவர் கன்னங்கள் தடித்து சிவந்திருந்தன. முடிக்கற்றைகள் குழம்பிப்போய் ஒரு பக்கம் சாய்ந்திருந்தன. அப்பாவின் கண்களும் என் கண்களும் சந்தித்துப் பிணைந்து விலகிக் கொண்டன. அனிச்சையாக உடல் திரும்ப, வாசல் கதவைத் திறந்து கொண்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டை விட்டு வெளியேறினார். அம்மா அருகே சென்றபோது அதைக் கவனித்தேன். தரையில் இரத்தம். அவரது இடுப்பின் பின்பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்தது. அம்மாவின் தோள்மூட்டைப் பிடித்துக் தூக்கினேன். எனது தோளை அவரது கைகள் ஆதரவாகப் பற்றிக்கொண்டன. “ஐயோ அம்மா, என்ன ஆகிவிட்டது?”
“ஒன்றும் இல்லை, இதுதான் என் கடைசி மாதவிடாயாக இருக்க வேண்டும். அவ்வப்போது வந்து நீண்ட நாட்களாக வராமல் இருந்தது. இப்போது கடைசியாக… இனிமேல் ஒரு போதும் வராது. இதற்கான வயதை நான் கடந்து விட்டேன்” என்று அம்மா மெலிதாக ஆங்கிலத்தில் சொன்னபோது அவர் என் கண்களைப் பார்த்தார். என் கண்கள் ஒரு கணத்தில் அஞ்சி விலகிக் கொண்டது. ஏன் இத்தனை வெளிப்படை, அதற்கு தயார் இல்லாததால் அரண்டு சுருண்டு கொண்டேன்.
அம்மாவை குளியறையில் விட்டுவிட்டுத் தரையில் படர்ந்திருந்த இரத்தத்தை சுடுதண்ணீர் நிறைத்து, சுத்திகரிப்பான் கலந்து மொப்பரால் துடைத்துச் சுத்தம் செய்தேன். பளபளப்பாகிய ஈரத்தரையில் என் முகம் தெரிந்தது. அரைக்கணம் பார்த்து புன்னகைத்துக் கொண்டேன். மிகக் குரூரமான விடுதலையை அடைந்தது போலத் தோன்றியது. உடனே உடலில் அலையலையாக கசப்பு எழுந்து பற்றிக் கொண்டது.
முருங்கைப் பூக்கள் உதிர்ந்து காற்றில் பறக்கும் இந்தக் கோடை காலக் காலையில் முடிக்காத கவிதையைக் கிழித்தெறிகிறேன் எதற்காகக் கவிதை? யாருக்காகப் பாடல்? எதற்குத் தோத்திரமும் பிரார்த்தனையும்?
உயிரில் மூண்டெரிகிற அக்கவிதையில் காணாமலாக்கப்பட்ட மகள் என்னை அமைதிப்படுத்த விம்மலை அடக்கிக் கொண்டு சிரிக்கிறாள். அதை மீறித் துயரத்தின் நிழல் நெடுமரங்களாக அசைந்தாடுகிறது எங்கும்.
அவளுக்கென ஆக்கப்பட்ட சோறு இதோ உலர்ந்த பருக்கைகளாகி முற்றமெங்கும் சிதறுகின்றன அப்படியே அது உலகம் முழுவதும் பரவுகிறது “சோற்றுப் பருக்கைகளால் உலகம் முழுவதையும் மூடிச் செல்கிறாய்“ என்று கைது செய்யப்படலாம் நான்.
தேடிக் கண்டடைய முடியாத மகளின் பசிக்கு வேறெப்படி நான் இந்தச் சோற்றை ஊட்ட முடியும்?
முற்றத்தில் அதைக் கொத்திச் செல்லும் காக்கை, குருவிகளிடம் கேட்கிறேன் “காக்கை, குருவியெல்லாம் எங்கள் ஜாதி… என்றும்மைப் பாடித் திரிந்த இனிய தோழியல்லவோ அவள்! அவளிடம் இந்தச் சோற்றுப் பருக்கைகளைச் சேர்த்து விடுங்கள் அல்லது அவளின் நிமித்தமான பிதுர்க்கடனாக இதை ஏற்றுக் கொள்க” என்று.
இதோ அவள் முற்றத்தில் நட்ட மாமரம் பழுத்துச் சொரிகிறது அந்தப் பழங்களின் வாசனை அவளைத் தேடியலைகிறது. தாங்க முடியாத அவளின் நினைவுகளோடு அந்தப் பழங்களை மரத்தின் அடியில் புதைக்கிறேன். என்னிதயத்திலிருந்து பீறிட்டெழும் துயரத்தைப்போல பழங்களின் வாசனை கிளர்ந்து கிளர்ந்து மேலெழுகிறது அதுதான் உன்னுடைய வாசனை மகளே அதை எங்கே நான் புதைப்பேன்? அந்த வாசனை பழங்களைப் போல இனிப்பதில்லை.
“அம்மா” என்றொரு சொல் அல்லது “நான் இங்கிருக்கிறேன்” என்றொரு வார்த்தை சொல்! நீண்டெரியும் எனதிந்தத் தூக்கமற்ற நாட்களும் பசியும் தாகமும் அலைவும் முடிவுற்று விடும்.
இந்தக் காலம் உனக்காகவும் இல்லை எனக்காகவும் இல்லாமலாயிற்றுப் பெண்ணே! அது நம்மை விட்டுச் சென்று விட்டதடி நம்மைக் கொல்லாமற் கொன்று விட்டதடி…
***
2.
இதோ இந்த வங்கக் கடலின் கரையில்தான் நாங்கள் அன்றிருந்தோம் புரண்டு புரண்டு குமுறியபோதும் கரை மீற முடியாத அலைகள் மீண்டும் மீண்டும் கடலிலேயே கரைந்து அழிந்தன.
அன்று நடத்தப்பட்ட ஆயிரமாயிரம் கொலைகளுக்கும் அந்தரிப்புகளுக்கும் முன்பாக சாட்சிகளாக நிறுத்தப்பட்டோம். வழியும் விதியுமற்று கையறுநிலைக்காளாகி குமுறும் அலைகளோடு நின்றோம் செத்தழிந்தோம் மிஞ்சியவரெல்லாம் கரையடங்கும் அலைகளோடு கரைந்தொடுங்கினோம்.
இன்று மீளவும் அந்தக் கொலைகளின் நினைவுகளோடும் துயரோடும் அதே கரையில் தீரா அலைகளோடு நிற்கிறோம்
பத்தாண்டுகளாகிய பின்னும் கொதிப்பாறா நினைவுகளில் இந்தக் கரையும் கரை நீளப் பூத்துக் கிடக்கும் மணலும் தகிக்க மொட்டைப் பனைகள் இன்னும் அப்படியே நிற்கின்றன நாமும்தான்.
ஒரு கொலைக்கும் விசாரணையில்லை நியாயமில்லை தீர்ப்பில்லை தோழ.
ஏதொன்றும் எந்தக் கணக்கிலும் இல்லாமல் காலமாகிற்றா? அந்தக் காலமும் நம் கண்ணீரும் காற்றோடு கரைந்து போயிற்றுப் போமோ!
வண்ண கொடிகளில் வானுயரப் பறக்கும் இந்த உலகத்தின் நீதியை அதன் கருணை மிகுந்த கண்களை எப்படிப் புரிந்து கொள்வதென்று தெரியவில்லை
உலகம் எந்தக் கொந்தளிப்புமின்றி ஆழ்துயில் கொண்டிருக்கிறது ஆமாம், “உறங்குவது போலும் சாக்காடு..”
கொலைக்குக் கொலைதான் தீர்ப்பென்ற கால நியதி இதுவென இந்த அலைகள் சொல்கின்றனவா இதுவே உண்மையென இந்த மணல்வெளி உரைக்கிறதா?
***
3.
இன்று நகரம் காலவரையற்றுத் திடீரென மூடப்பட்டது மூடப்பட்ட நகரத்திலிருந்து திடீரென பறவைகளின் குரல் உயர்ந்தது திடீரென ஒளி கூடியது தெருக்களில் தங்கள் வீடுகளில் உள்ள பூக்களையும் செடிகளையும் கூட ஆச்சரியத்தோடு பார்த்தனர் எல்லோரும்
இத்தனை நாளும் எங்கிருந்தன என்று தெரியாமல் ஏராளம் பறவைகள் சுவர்களிலும் கூரைகளிலும் வந்தமர்ந்தன.
தினமும் எல்லோரும் வீடுகளில் பொழுது முழுதும் ஒன்றாகக் கூடியிருந்தனர் அமைதியாகச் சமையல் நடந்தது குளியல், பிரார்த்தனை, பரிமாறுதல், படுக்கை, தூக்கம், பேச்சு, புத்தகம் படித்தல் எல்லாமும் கூட மிக அமைதியாகவே நிகழ்ந்தன காலம் வேகமிழந்து இப்படியொரு யோகம் சித்திக்கும் என்று நேற்றிரவு கூட யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை அமைதியென்றால் அப்படியொரு அமைதி தேனில் குழைத்து வாயில் ஊட்டுகிறது.
வல்லரசு சிற்றரசு எல்லாம் இந்த அமைதியில் மயங்கியும் முயங்கியும் கிடக்கின்றன. இப்படியே இந்த அமைதி வளர்ந்து உலகப் பேரமைதியாகி விடுமோ என்றொரு எண்ணம் முளைக்கிறது
அமைதிக்கும் உள்ளிருத்தலுக்கும் அடையாளமாக ஆமைகளின் சித்திரத்தை தீட்டிக் கொண்டிருக்கிறான் மகன் ஆமைகளைப் பற்றி டிஸ்கவரிச் சனலில் ஏதோவொரு நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கிறது Bear Grylls ஒரு ஞானியின் வாக்கினைப்போல ஆமைகளின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார் ஆமைகள் எவ்வளவு அழகாக வாழ்கின்றன எவ்வளவு அழகாக உறங்குகின்றன ஆமைகள் மட்டுமல்ல, நண்டுகளும் எலிகளும் கூடத்தான். சமயங்களிலெல்லாம் வளைகளில் ஓடிச் சென்று மறைந்து விடுகின்றன. நாங்களும் ஆமைகளாயினோம் இது லொக் டவுண் யுகமல்லவா! செத்துக் கிடக்கும் தெருக்களைப்போலவே கடற்கரைகளும் உறைந்து போயின. கடலில் அலைகள் அசைவதை ஏனின்னும் யாரும் தடுக்கவில்லை? அரச கட்டளை பற்றியும் சமூகப் பொறுப்புப்பற்றியும் அலைகளின் சிந்தனை என்ன? ஊரடங்கி வீடுகளில் உறைந்திருக்கும்போது நிலவு எப்படி மேலேறி வருகிறது? ஆனால், அந்த நிலவு தங்கத்தில் அல்லவா உருக்கி வார்க்கப்பட்டிருக்கிறது ஒரு தேவதூதனாகி அது நம்முடைய மடியில் இறங்குகிறது வா வா நிலாவே அருகே வா என்று பாடுகிறோம் இதோ எங்களோடு வந்து விருந்துண் என்று அழைக்கிறோம் இதுதான் இன்றைய நம் விடுதலைப்பாடலா?
சேர்த்து வைத்த புத்தகங்கள் எல்லாம் எழுந்து வருகின்றன ஒவ்வொன்றாய் மறந்த உறவினர்கள் தொலைபேசிகளில் கொண்டாடுகிறார்கள் மூடப்பட்ட நகரத்திலிருந்து தப்பிச் சென்றது புகையிரதமொன்று அதைக் கண்காணிக்கத் தவறினர் என்ற குற்றச்சாட்டில் நாற்பது காவலரும் தலைமை அதிகாரியும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அனுமதியின்றித் தப்பிச் சென்ற புகையிரதத்தைக் கைது செய்வதற்கு படையணியொன்றை அனுப்பி வைத்தது அரசாங்கம். தப்பிச் சென்ற புகையிரதமோ தலைமறைவாகி விட்டதால் அதைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை என்று சொல்கிறார்கள். தலைமறைவாகிய புகையிரதத்தைக் கண்டு பிடிக்கவில்லை என்று அந்தப் படையணியையே நீக்கிவிட்டார் நாட்டின் அதிபர் தற்செயலாக அதைக் கண்டு பிடித்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட வேண்டும் என்று மருத்துவ அறிவிப்புச் சொல்கிறது.
இதற்குள் அந்தப் புகையிரதம் நகரத்தின் முடிவில் உள்ள ஆற்றில் நீராடுவதாக யாரோ உளவுப் பிரிவுக்குத் தகவல் கொடுக்கிறார்கள். யாருடைய கண்களிலும் சிக்காமல் நதியோடு கலந்து போகிறது புகையிரதம்.
அடுத்து வரவுள்ள தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்று மறந்து போய் விட்டது பலருக்கும். அது கூட நல்லதுதான். லொக் டவுண் இப்படிப் பலதையும் மறக்கடித்து விடுவதற்கு நன்றி
மூடப்பட்ட நகரத்திற்கு யாரும் வரவும் முடியாது நகரத்திலிருந்து யாரும் வெளியேறிச் செல்லவும் முடியாது.
மாபெரும் பூட்டோடு வளர்ந்து கொண்டேயிருக்கிறது இந்த நெடுங்கதவு.
சாமுவேல் கிழவர் இப்போது கடவுளாகப் பரிணாமம் எடுத்திருந்தார். சிலுவையில் அறையப்பட்ட ஏசுவை உயிர்ப்பித்த சக்திதான் தன்னுள்ளும் இறங்கியிருப்பதாக நம்பினார். நித்தம் நகரும் இரவின் நாட்குறிப்புகள் அவரது நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தின. இத்தனை பிரம்மாண்டமாய் இவ்வளவு நேர்த்தியாய் படைப்புக்கு உயிர் கொடுப்பவன் நிச்சயம் தேவனாகவோ இல்லை தேவதூதனாகவோ தானே இருக்க முடியும்…?
“நானும் காலையிலேந்து கேக்கேன், என்னதான் முடிவு…?” சுருள்சுருளாய் அடர்ந்திருக்கும் நெஞ்சுமுடியின் மேல் விழுந்து கிடக்கும் சிலுவையை உள் பனியனின் மேல் எடுத்துப்போட்டபடியே வாசல் படியில் நின்றுகொண்டு சார்லஸ் கேட்ட அன்று சாமுவேல் பதில் ஏதும் சொல்லவில்லை. பலநாட்களுக்குப் பின் ஊருக்கு வந்திருக்கும் மகனின் கேள்விகளை சாமுவேல் தவிர்க்கவே நினைத்தார். கேள்விகள் தான் சச்சரவுகளின் தொடக்கப்புள்ளி. வீட்டு வாசலில் இருக்கும் மணல் மேட்டில் இரு கால்களையும் ‘வி’ வடிவில் விரித்து கறுப்பு பச்சைக் கட்டம் போட்ட சாரத்தைக் கால்களினிடையே திணித்து செய்யது பீடியைப் புகைத்தபடியே, வீட்டை ஓட்டிப் போகும் குண்டுக்குழிச் சாலையை பதில் பேசாமல் சாமுவேல் பார்த்தபடியிருந்தார்.
ஊருக்குள் ஒன்றிரண்டு இருசக்கர மோட்டார் வண்டியும், காலி தூக்குச்சட்டி, கசங்கிய துண்டு சகிதமாக வேலை முடித்து வரும் ஆட்களும், மேய்ச்சல் முடித்து ஆட்டுமந்தையை ஓட்டிப் போகும் இசக்கியும் தெரிந்தனர்.
வானம் கொஞ்சம் கொஞ்சமாய் நீலத்தை வெறுக்க பொழுது சாயத் தொடங்கியிருந்தது. சோப்பு நுரையாய் மேகங்கள் அங்குமிங்குமாய் சிதறியிருந்தன. சாமுவேல் தன் முறுக்கேறிய ஒல்லியான மேல் உடம்பில் கம்பளியைச் சுற்றியிருந்தாலும், மிதமான காற்று வீசியதும் வயதான காதுக்குள் மார்கழி மாதக்குளிர் ஓவென கேலி செய்துவிட்டுப் போனது.
அவரது கால்களுக்கடியில் மரச்சிராய்களும் மரத்துகள்களும் அங்கங்கே கூட்டப்படாமல் கிடந்தன. அதில் சிறு மரத்துண்டை எடுத்து, வாசல் மண்தரையில் கைபோன போக்கில் ஏதோவொன்றை வரைய முயன்று, பின் திருப்தியடையாதவராய் வரைந்ததை இடது கையால் கலைத்துவிட்டு மரத்துண்டை வீசி எறிந்தார். மகனின் கோபமும் அதற்கான காரணமும் அதன் பொருட்டுத் தன் நிலைப்பாடும் சாமுவேல் கிழவருக்குத் தெளிவாகத் தெரிந்திருந்ததால் பதிலற்ற மௌனத்தால் அவனது கோபத்தை மெல்லக் கடக்க நினைத்தார்.
“நான் பாட்டுக்கு நாய் மாதி கத்துதேன்!, நீ பாட்டுக்கு உனக்கென்னனு இருக்க…!!” சார்லஸின் கறுத்த முகம் கோபத்தில் இறுகி மேலும் கருமையைக் கூட்டிக் காட்டியது. முப்பது வயதிலேயே தலைமுடியைக் கணிசமாய் இழந்திருந்தான். முன்கோபக்காரன். எப்போதும் கடுகடுவென இருக்கும் அவனது முகம் வெடிப்பு விழுந்த கரிசல் மண்ணை நினைவுபடுத்தும்.
“இந்த வயசுல இனி என்னால ஊரவிட்டு வந்து சென்னைல இருந்துக்கிட முடியாது!!”
வாசலில் சங்கிலி போட்டுப் பிணைக்கப்பட்டிருக்கும் தள்ளுவண்டியின் சக்கரத்தினடியில் நெட்டையும் குட்டையுமாய்ப் பாதி உடைந்தும் உடையாமல் இருக்கும் ஈர்க்குச்சி வாரியலை வைத்து மரக்குப்பைகளைத் தூர்த்து ஒதுக்கித் தள்ளியபடியே கிழவர் பதில் சொன்னார். அறுபதைத் தாண்டியும் விறுவிறுவென வேலை பார்க்கும் கிழவரின் கைகால் நரம்புகள் ஈரம் உலர இறுக்கிப் பிழியப்பட்ட துணியைப் போல் முறுக்கிக் கொண்டிருக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாய் வானில் வெளிச்சம் காணாமல் போய்க் கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்தார். இருட்டில் சார்லஸ் நிற்பது செங்குத்தான நிழலாய்த் தெரிந்தது. அவன் புருவங்களை உயர்த்தி முறைத்துக் கொண்டிருந்தான். வாசல் குண்டு பல்பைப் போட வீட்டுக்குள் நுழைந்தார். சார்லஸும் பேசியபடியே பின்தொடர்ந்தான்.
“வாங்குற சம்பளம் பட்டணத்துல கைக்கும் வாய்க்குமே சரியாருக்கு!. புள்ள வேற ரெண்டாப்பு வந்துட்டான். இதுல மாசாமாசம் ஒனக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு அனுப்புதேன். நீ என்கூட வந்தா அந்தக் காசாச்சும் மிச்சமாகும், புரியாம மாட்டேனு சொல்லுத!“
“நான்தான் எனக்குத் துட்டு அனுப்ப வேணாம்னு சொல்லுதேன்ல”
“அப்படியொன்னும் ஒன் காசு தேவையில்ல!” என்று கறாராய்ப் பதில் சொல்லும் நிலையில் அப்பா இல்லை என்பது சார்லஸ்க்கும் ஒன்றும் சொல்லாமலிருக்கும் சாமுவேலுக்கும் தெரியும்.
வாசலில் நிற்கும் தள்ளுவண்டியின் கீழ்த்தட்டில் சுருட்டி வைத்திருக்கும் பழைய துண்டை எடுத்து வண்டியைத் துடைத்துவிட்டு நீலநிற தார் பாயால் வண்டியை மூடிக் கொண்டிருந்தார் சாமுவேல்.
“ஒன்ன பாக்க அடிக்கடி சென்னைலேந்து வேற வரணும், பஸ் காசு எவன் தரான்? இதுல பேரனக் கூட்டி வரலியானு வேற கேட்க… ரெண்டு பேரு வந்து போனா என்ன ஆச்சு? ஒன்னக் கண்டுக்க மாட்டேன்னா சொல்லுதேன். நீ இங்க தனியா இருக்குறதுக்கு இந்த வூட்ட வாடகைக்கு விட்டுட்டு என்கூட வந்துரு… மாசச்செலவு கொறையுங்கறேன்… நீ வீம்புக்கு மாட்டேங்க…!”
சாமுவேலின் ஏறிய நெற்றியில் புருவங்கள் தாராளமாய் மேலே போக “அது எப்படிய்யா முடியும்? அப்போ தொழிலு…?”
“ஆமா பெரிய தொழிலு…வயத்தக் காயப்போட்டுட்டு பொம்ம செஞ்சு ஊரூரா விக்குற தொழிலு? எவன் வாங்குதான் இந்த காலத்துல இந்தப் பொம்மைய? நீ மட்டும் தனி உலகத்துல வாழுத?”
சார்லஸ் சொல்வதைப் போல் சாமுவேலின் உலகம் விசித்திரமானது. அங்கு மனிதர்களுக்கு இடமில்லை. ஆனால் அவனை விட மேலான பொம்மைகளால் நிறைந்தது. கைதட்டிச் சிரிக்கவோ பதிலுக்குப் பேசவோ சப்தம் போடவோ குதித்தோடவோ தானாக எதுவும் செய்யத் தெரியாத மரபொம்மைகள்! மரபொம்மைகள் என்றால் சாமி பொம்மையோ அரசியல் தலைவர்களின் உருவங்களோ அல்ல.
சிறுபிள்ளைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், தலையாட்டி பொம்மைகள், நடைவண்டி, சொப்புச்சாமான், பெரிய உருண்டைத் தலையும் கைகால் இல்லாத பலூன் மனிதர்கள், ரயில் வண்டி, மாட்டு வண்டி, வண்ண வண்ண பம்பரம், மிருக பொம்மைகள்…. அதிலும் குறிப்பாக அவருக்குப் பிடித்தது ஆனை பொம்மை… மரபொம்மை செய்யும் நேர்த்தியும் யானை மீதான ஈர்ப்பும் சாமுவேலுக்கு சிறுவயதிலேயே அப்பாவிடமிருந்து தொற்றிக்கொண்டது.
“இம்முனுபூண்டு மிருகத்த பொம்மையாக்குறதுல என்னடே இருக்கு?, அத்தாதண்டி ஆனைய மரத்துல செய்யணும். அதயும் எல்லாவனும் செய்தானோ, ஆனா வேல சுத்தமில்ல..! கண்ணுக்குள்ள நிக்குற மாதி, நிசமா முன்ன நின்னு தும்பிக்கைய ஆட்டுது மாதித் தோனணும், அப்பத்தான் கை நின்னு பேசுதுனு அர்த்தம். இதே சோலியா இருந்தா எல்லா வந்துரும்..!.” சாமுவேலின் சிறுவயதில், பெரிய வெள்ளை மீசையை முறுக்கியபடியே அவர் அப்பா அடிக்கடிச் சொல்வார்.
சாமுவேலின் இரண்டு அறைகள் கொண்ட ஓட்டுவீட்டில், பொம்மைகளுக்கென்று ஒரு தனிஅறை! அந்த உள் அறையின் அலமாரி அடுக்குகளிலும் தகரப்பெட்டியின் மேலும் கீழும் மர நாற்காலியின் கால்களுக்கு இடையேயும், தரையில் விரித்திருக்கும் கோணித்துணியிலும் அவை ஒன்றோடொன்று இடித்துக்கொண்டும் சரிந்து சாய்ந்து கொண்டும் மௌனமாய் தங்களுக்குள் பேசியபடி ஒற்றை ஜன்னல் வெளிச்சத்தில் நனைந்தபடியிருக்கும். மழைக்காலம் என்றால் தான் பிரச்சனை. மழைத்தண்ணீர் உள்ளே இறங்காமலிருக்க சாமுவேல் ஜன்னலை அடைத்து விடுவார், பொம்மைகளுக்கு இருட்டில் சிறைவாசம் தான்.
லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு பேருந்து நிறுத்தம் எதிரே தினசரியை ஒருநாள் முழுதும் புரட்டிக்கொண்டு நினைப்பு வரும்போதெல்லாம் பீடியைப் புகைத்தபடி, பக்கத்து டவுனுக்குத் தள்ளுவண்டியில் பொம்மைகள் விற்றுவருவார். பெரிதாய் லாபம் ஏதுமிருக்காது. பாதிவிலைக்குப் பேரம் பேசுவார்கள். தங்கமே ஆனாலும் தள்ளுவண்டிக்கு வந்துவிட்டால் அதுதான் நிலைமை. விற்காத பொம்மைகளை திரும்பத் தள்ளிக்கொண்டு ஊருக்கு வருவதற்குப் பதிலாக அவர்கள் கேட்கும் காசுக்குக் கொடுத்துவிட்டால் வண்டி தள்ளும் பாரமாவது குறையும். போகும் விலைக்குக் கொடுத்துவிட்டு கோயிந்தன் கடையில் மீன்குழம்பு மட்டும் தூக்குச் சட்டியில் வாங்கிவருவார். பழைய நண்பர் என்ற முறையில் சாமுவேலுக்கான பிரத்யேக சலுகை அது. மீன்குழம்புக்கு சாமுவேலிடம் காசு வாங்க மாட்டார். குழம்பில் மீனும் இருக்காது. வீட்டுக்கு வந்து சோறு மட்டும் பொங்கிக் கொண்டால் போதும்.
ஆனால் சாமுவேலின் பொம்மைகளுக்கும் ஒருகாலத்தில் அப்படியொரு மவுசு. எப்போதும் வீட்டைச் சுற்றிப் பொடிசுகள் கூட்டம் முட்டிமோதி நின்று கொண்டிருக்கும். ”தூரப்போங்கலே! அங்குட்டு வெளிச்சம் வரமாட்டேங்கு.!..” என்று அவர் கூட்டத்தை விரட்டி விடும் வரை.
டவுனில் பஸ் ஸ்டாண்ட் பக்கம் கடை வைத்திருந்தார். கடைவாசலில் பெரிய மரஆட்டோ, இரண்டடுக்குப் பேருந்து, மூன்றுசக்கர நீல மஞ்சள் ரோஜா நிறங்கள் பூசிய நடைவண்டியைத் தவிர்த்து ஏதோவொரு யானை பொம்மை ஒன்று எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும். கடையின் முகப்பில் இருபக்கமும் அடைப்பு கிடையாது என்பதாலும் வாசலில் தொங்கும் பெரிய மரபொம்மைகள் சாலைத்திருப்பத்தில் இருந்தே தெரியும். அப்படித் தொங்கவிடும் எந்த பொம்மையும் அதிகபட்சம் ஒருவாரம் பத்துநாள் தான், அதற்குள் விற்றுவிடும்.
கலர் கலரான பிளாஸ்டிக் பொம்மைகளைப் பற்றி முதன்முதலில் கேள்விப்பட்ட போது சாமுவேல் வேடிக்கையாகத்தான் சிரித்தார். அது ஏற்படுத்தப்போகும் சுனாமி மாற்றத்தைப் பற்றியோ அதில் அடித்துச் செல்லப்படப்போகும் தன் தொழிலைப் பற்றியோ மூழ்கப்போகும் பொம்மைக்கடை பற்றியோ அவர் அறியாதவராகவே இருந்தார். கடையும் தொழிலும் சிறுத்து ஒடுங்கிக் காணாமல் போய்த் தள்ளுவண்டியில் தெருவுக்கு வந்து அவரும் அவர் செய்யும் மரயானையும் மெலிந்து வருடங்கள் இருக்கும்.
“வாய மூடியே சாதிச்சுட்ட!” ஆணியில் தொங்கும் அரைக்கைச் சட்டையை எடுத்து உதறி நடந்தபடியே பொத்தான்களைக் கோபத்தில் வேகமாய்ப் போட்டுக்கொண்டு சார்லஸ் கிளம்பினான்.
சார்லஸ் பதில் ஏதும் சொல்லாமல் போய்க்கொண்டிருந்தான். “இந்தா, இத பேரன்கிட்ட கொடு…” மேசையில் பழைய செய்தித்தாளுக்குள் சுருட்டி வைத்திருந்ததை மகனிடம் நீட்டினார். போகும் வேகத்தில் வாங்கிப் பிரித்துப் பார்த்தவன் “இம்புட்டு நேரமா கத்திட்டிட்டுக் கிடந்தேன், திரும்பவும் பேரனுக்குனு ஆனை பொம்மையக் கொடுக்க!” சுற்றியிருக்கும் செய்தித்தாளைக் கிழித்தெறிந்து பொம்மையை வீசி எறிந்தான். காரைபெயர்ந்த தரையில் பக்கவாட்டில் விழுந்த பொம்மை சறுக்கியபடி சுவரில் மோதி உடைந்து போனது.
தும்பிக்கை உடைந்து தரையில் கிடக்கும் மரயானையைக் கிழவரின் கண்கள் அசைவற்றுப் பார்த்தன. காட்டில் வேட்டையாடப்பட்டு இறந்து கிடக்கும் யானை போல் அந்த உடைந்த பொம்மை அசைவற்று விகாரமாய்க் கிடந்ததைக் கிழவர் மௌனமாகப் பார்த்தபடியே இருந்தார். இருவருக்கும் பேச்சு மறந்துபோனது. சிறிது நேரம் உடைந்த பொம்மையையும் அப்பாவின் முகப்போக்கையும் மாறிமாறிப் பார்த்தபடி நின்றிருந்த சார்லஸ் எதுவும் பேசமுடியாமல் திரும்பிப்போனான்.
கிழவர் மெல்ல முணுமுணுத்ததார் ”தும்பிக்கை இழந்த ஆனை அடையாளம் இழந்த மனுசன் மாதிரி…!”
கரிய பெரிய ஆண் வாரணம்! தன் நீண்ட வலுவான வெள்ளைத் தந்தத்தால் இரவின் அடர்ந்த துகள்களைக் கீறி எறிந்தபடி ஓடிக் கொண்டிருக்கிறது. நிற்காமல் விசிறும் அதன் சாம்பல் நிறக் காதுகளுக்குள் தொடர்ந்து கேட்கிறது கொட்டு சப்தம். கானகமே இடிந்து விழும்படியான ஓசை அது. பாறைகள் அதிர ஓடி மலை உச்சியை அடைந்த வாரணம், தன் சிறிய கண்களால் சாமுவேலைத் திரும்பிப் பார்க்கிறது. அந்தச் சிறிய கண்கள் ஏதோ சொல்ல விழைந்த தருணத்தில் யாரோ அதை விரட்டுவதைப் போல… மொத்த கானகமே கறுப்பு உருவம் கொண்டு அதைத் தள்ளியதைப் போல… அந்தக் கருத்த பேருடல் மலை உச்சியில் இருந்து பிளிறியபடி செங்குத்தாய்ச் சாயும்போது சாமுவேல் கட்டிலில் பதறி எழுந்து உட்கார்ந்தார்.
தூரத்தில் தென்னை மட்டை விழும் சப்தம். கண்ணில் தென்படுவதை எல்லாம் இருட்டு விழுங்கியிருந்தது. இரவுப்பூச்சிகளின் சீரான ரீங்காரம். அறையின் மின்விளக்கை இட்டுப் பார்த்தார். மணி பதினொன்று. அலமாரியில் சரித்து வைத்திருக்கும் உடைந்த யானை பொம்மையின் மரக்கண்கள் அவரை அசைவற்றுப் பார்த்தபடியே இருந்தன. கனவில் பார்த்த களிறின் அதே பரிவு குழைந்த பார்வை… எதையோ சொல்ல விரும்பும் மௌனப்பார்வை!
மண்பானையில் ஒரு குவளைத் தண்ணீர் குடித்து முடித்ததும் கனவின் பிம்பம் உடைந்த போனது. மேற்கூரையின் இடைவெளியிலிருந்து குளிர்ந்த காற்று வீசியது.பெட்டியின் மேலிருக்கும் குளிர் குல்லாவை எடுத்து அணிந்து கொண்டு மின்விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தார்.
கண்கள் தூங்க மறுத்தன. விட்டத்திலும் வேழத்தின் அதே சிறிய கண்கள்… அதே மௌனப்பார்வை. மீண்டும் மெல்ல முணுமுணுத்தார் ”தும்பிக்கை இழந்த ஆனையும் அடையாளம் இழந்த மனுசனும் ஒன்னு…!”
உடம்பில் குளிர் ஏற கண்களை இறுக மூடியபடி கம்பளிக்குள் முகத்தைப் புதைத்தார். சில நிமிட ஓட்டத்திற்குப்பின் மீண்டும் தூக்கம் தலைக்கேறியது.
கதவு தட்டும் சப்தம்….!!
போர்வையை விலக்கி எழுந்து உட்கார்ந்தார். எந்தவொரு அவசரமும் பரபரப்புமற்ற சீரான கதவு தட்டும் ஓசை. இத்தனை இனிமையாய் பொறுமையாய்க் கதவு தட்டப்படுமா என்ன?
யாராக இருக்கும்? ஒருவேளை ஊருக்குப் போன மகன் மனசு கேட்காமல் திரும்பி வந்திருப்பானோ? மின்விளக்கை இட்டார். நேரம் பன்னிரெண்டைக் கடந்திருந்தது. கம்பளியை மேலுக்கு சுற்றியபடி எழுந்து கதவைத் திறந்தார்.
தூக்கிவாரிப் போட்டது!
காய்ந்த களிமண் நிறத்தில் பெரிய வேழம் ஒன்று பின்னால் திரும்பி நின்றுகொண்டிருந்தது, தன் சிறிய வாலால் வாசல் கதவைச் சீரான இடைவெளியில் தட்டியபடி..!.
சாமுவேல் உடம்பின் அத்தனை வியர்வைச் சுரப்பிகளும் ஒருசேர உச்சவேகத்தில் இயங்கின. கனவுதான் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கண்ணை மூடித் திறந்தார். அதே காட்சி! தன் சாம்பல் நிற காதுகளை விசிறியபடி பின்னால் திரும்பி நிற்கும் வேழம்… திரும்பவோ பிளிறவோ இல்லை…. இரவுப்பூச்சிகளின் ஓசையைவிட அவரது இதயத்துடிப்பு சப்தமாய்க் கேட்டது.
வேகமாய்க் கதவைச் சாத்தி உள்பக்கம் தாழிட்டுக் கொண்டார். குளிர் குல்லாவைக் கழற்றித் தூக்கி எறிந்தார். பதட்டம் பயம் வியப்பு எதுவென்று சொல்ல முடியாத உணர்வு!. குளிர்ந்த பானைத் தண்ணீர் தொண்டைக் குழியைக் கடந்ததும் உடம்பு நிதானித்தது. காடோ மலையோ இல்லாத கிராமத்தில் எப்படி ஆனை? ஒருவேளை பெரிய எருமையாக இருக்குமோ? ஆனால் கொம்பில்லை….வேறு ஏதாவது அமானுஷ்யம்!!
உடம்பு மேலும் ஜில்லிட்டது. உள்ளடங்கிய நெஞ்சுக்கூட்டில் தொங்கும் பாசிமாலையின் சிலுவையை எடுத்து கீழ்உதட்டின் மேல் வைத்து சில நிமிடங்கள் கண்கள்மூடி ஜபித்தார்.
கதவுத் தட்டும் சப்தம் கேட்டு கொண்டேயிருந்தது.வீட்டின் மூலையில் கிடந்த பெரிய மரக்கட்டை ஒன்றை கையில் எடுத்து கொண்டார். அத்தனைப் பெரிய களிறை இந்தச் சிறிய மரக்கட்டை என்ன செய்துவிட முடியும்… அதெல்லாம் யோசிக்கவில்லை.கதவை அரைவிட்ட வடிவில் திறந்தார். கருத்த தடிய சணல் கயிற்றைப் போன்ற வால்பகுதியின் மயிர்கற்றைகள் முகத்தில் பட்டன. கனவில்லை! நிஜம்தான்.
கட்டையை மேலே ஓங்கி உதடு ஜபித்தபடி பக்கவாட்டில் முன்னேறினார். கோடுகோடாய்ச் சுருக்கங்கள் தழதழக்கும் அதன் மேலுடம்பில் தொங்கும் மணிகளின் ஓசையும் சாமுவேலின் இதயத்துடிப்பும் ஒரே விசையில் ‘கணகண’வென அடித்தன. முன்னால் சென்று பார்த்தார். தும்பிக்கை அறுந்த யானை!
உடம்பு நடுங்கியது. கையிலிருக்கும் மரக்கட்டை கீழே விழுந்தது.வேழத்தின் சிறிய கண்கள் சாமுவேலைத் திரும்பிப் பார்த்தன. அத்தனை ஆழமான மௌனப்பார்வை அந்தச் சிறிய கண்களில்….
மூர்ச்சைக்கு முந்தைய நிலையில் அவரது உடல்… ஒரே ஓட்டமாய் உள்ளே நுழைந்தார். சுற்றிவிடப்பட்ட நாணயமாய்ச் சுழன்ற கிழவரின் பார்வை அலமாரியில் சரிந்துகிடக்கும் உடைந்த பொம்மை மீது வீழ்ந்தது. தும்பிக்கை உடைந்த மரயானை; இருபக்கமும் தொங்கும் அதே மணிகள்…
தலை கிறுகிறுத்தது. கதவுத் தட்டும் சப்தம் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. கண்கள் செருகி படுக்கையில் விழுந்தார். கண் விழித்தபோது பொழுது புலர்ந்திருந்தது.
கதவை கொஞ்சம் கொஞ்சமாய்த் திறந்து பார்த்தார். எதிர் சாலையில் ஒன்றிரண்டு சாம்பல் கறுப்பு நிற மாடுகள்… வெளியே வந்து பார்த்தார். வாசலில் மரக்கட்டை அதே இடத்தில் கிடந்தது. ஆனால் அத்தனை பெரிய உருவத்தின் கால்தடம் ஏதுமில்லை. நம்ப மறுத்து குறுகலாகவும் வளைந்தும் ஓடும் பக்கத்துத் தார்சாலைக்குப் போய் பார்த்தார். உலோக யானை ஒன்று வந்து போனதைப் போல் தார்சாலை முழுதும் குண்டுகுழிகள்… ஆனையின் சாணப் பிண்டங்களோ அது உடைத்துப்போட்ட மரக்கிளைகளோ எங்குமில்லை!
எத்தனை முயற்சித்தும் துதிக்கை அறுந்த வேழம் நினைவுகளில் மீண்டெழுந்து கண்முன் வந்து கருப்பாய் நின்றது. அன்றைய தினம் சாமுவேல் தள்ளுவண்டியில் பொம்மைகள் விற்க வெளியே போகவில்லை. உள் அறையில் அடுக்கி வைத்திருக்கும் மரக்கட்டைகளில் வழவழப்பானதை எடுத்து வந்து வாசல் நிலைபடியில் உட்கார்ந்தார்.
அன்றைய விடியலைப் போன்றதொரு புத்தம் புதிய மரயானை ஒன்று செய்யத் தொடங்கினார். அழகாய்… நேர்த்தியாய்… கம்பீரமாய்… முழு நீளத்துதிக்கையுடன்….அதன் பேருடலை மறைக்கும்படி நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய அலங்காரத் துணி… துதிக்கையின் பாதிவரை நீளும் நெட்டிப்பட்டம்…
கிழவரின் பலமணி நேரங்களை அந்த மரவேலை விழுங்கிய பின் வண்ணம் பூசப்படாத வெள்ளை நிற மரஆனை நிலைப்படியில் நின்று கொண்டிருந்தது. வேலை முடிந்த பிற்பாடுதான் கவனித்தார். இருட்டு எப்பவோ கவியத் தொடங்கியிருந்தது. அதுவரை மறந்து போயிருந்த பசியும் தாகமும் நினைவுக்கு வந்தன. சாப்பிட்டுவிட்டுக் கதவை அடைக்கும் முன் ஒருமுறை வீட்டைச் சுற்றிப் பார்த்தார். தெருவிலும் ஆட்கள் இல்லை. இருட்டின் ஜாடியில் எந்தவொரு பூதமும் ஒளிந்திருக்கவில்லை. செய்து முடித்த புது வெள்ளைமர வேழத்தை தகரப்பெட்டியின் மேலே வைத்தார். ஜபித்து விட்டுப் படுத்தவர் அப்படியே கண் அயர்ந்தார். முழுநாளின் வேலை அயர்ச்சி அவரை ஆழ்ந்த தூக்கத்தின் அடிமட்டம் வரை மூழ்கடித்தது.
வாசல்கதவு சீரான இடைவெளியில் மெதுவாய்த் தட்டப்படும் அரவம்! கனவுலகின் உயரமான படிக்கட்டில் நின்று கொண்டிருக்கும் அவரது உள்ளுணர்வு அந்த மெல்லிய ஒலியை உணர்ந்து கனவிலிருந்து பிரித்தெடுக்கச் சில நிமிடங்கள் பிடித்தன. தூக்கம் விழித்தெழுந்து கட்டிலில் உட்கார்ந்தார்…
நேற்று கேட்ட அதே சப்தம்! பின்னிரவு கடந்திருந்தது. கதவுக்கு மறுபக்கம் காத்திருப்பது எது? அந்தக் கேள்வி எழுந்த விநாடியில் மீதமிருக்கும் சொற்ப தூக்கத்தையும் கண்கள் உதறிக் கொண்டன. குளிர்ந்த நீரை முகத்தில் இரண்டு மூன்று முறை தெளித்துக் கொண்டார். ஒரு பக்கமாய் காதை வைத்து கதவில் சாய்ந்து கேட்டுப்பார்த்தார். செவிக்குள் ஓங்கி அடித்தது கதவு தட்டும் ஓசை!.
எச்சரிக்கையாய் கையில் மரக்கட்டையை எடுத்து கொள்ளவோ வாசல் மின்விளக்கை இடவோ அரைவிட்ட வடிவில் கதவைத் திறந்து எட்டிப்பார்க்கவோ பயத்தில் கண்களை இறுக மூடிக்கொள்ளவோ தோன்றவில்லை. வெளியே காத்திருக்கும் காட்சி எதுவாயினும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தோடு ஒரே வீச்சில் கதவை முழுதாய்த் திறந்தார்.
பௌர்ணமியின் அப்பழுக்கற்ற ஒளியில் நிலவிலிருந்து இறங்கி வந்ததைப் போல் பிரம்மாண்ட வெள்ளை நிற வேழம்! வீதியை நோக்கி நின்றபடி மத்தகத்தை இடதும் வலதும் ஆட்டிக்கொண்டு குடிசையின் வாசலில் அதன் பெருத்த பின்பக்கம் தெரியும்படி திரும்பி நின்று கொண்டிருந்தது. ஜபிக்கவும் உதடு மறந்து போனது. தான் செய்யும் களிறு இத்தனை பிரம்மாண்டமானதா? முதன்முறை யானையைப் பார்க்கும் சிறுவனின் உற்சாகத்தோடும் இனம்புரியாத அச்சத்தோடும் தன் உறைந்த பார்வையை அதன் உடலெங்கும் செலுத்தினார்…
மர யானையில் அவர் பொறித்திருந்த சூரியகாந்திப்பூ வேலைப்பாடுடன் கூடிய அதே அலங்காரத் துணி! குளிர்க்காற்று முகத்தில் வீசியது. முன்னால் சென்று பார்த்தார். அதன் பரந்த நெற்றியில் மரயானையில் செய்த அதே நெட்டிப்பட்டம்!! அறுபடாத துதிக்கை… சின்னச்சின்ன வெள்ளைக் கிறுக்கல்களாய் சுருக்கமேவிய தோல். பல மரக்கட்டைகளை ஒன்றாய் இறுகக்கட்டிய உறுதியான கால்கள். தன் நீண்ட வெள்ளைத் துதிக்கையைத் தரையோடு உரசியபடி வெண்ணிற வாரணம் உயிர்ப்பு வழியும் தன் சிறிய கண்களால் மௌனமாய் அவரைத் திரும்பிப் பார்த்தது. பிளிறவில்லை…
சாமுவேல் கிழவர் இப்போது கடவுளாகப் பரிணாமம் எடுத்திருந்தார். சிலுவையில் அறையப்பட்ட ஏசுவை உயிர்ப்பித்த சக்தி தான் தன்னுள்ளும் இறங்கியிருப்பதாக நம்பினார். நித்தம் நகரும் இரவின் நாட்குறிப்புகள் அவரது நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தின. இத்தனை பிரம்மாண்டமாய் இவ்வளவு நேர்த்தியாய் படைப்புக்கு உயிர் கொடுப்பவன் நிச்சயம் தேவனாகவோ இல்லை தேவதூதனாகவோ தானே இருக்க முடியும்…?
பகலில் உருப்பெறும் அவரது கற்பனைகள் இரவில் உயிர் பெற்று வந்தன. படைப்புலகின் எல்லையைத் தாண்டி பறக்கத் தொடங்கினார். இயற்கை சொல்லும் நியமமும் வரம்பு மீறும் அவரது கற்பனையும் ஒன்றோடொன்று மல்லுக்கட்டிப் பார்த்து முடியாமல் இறுதியில் கைகோர்த்துச் சமரசம் செய்து கொண்ட புள்ளியிலிருந்து அவரது படைப்புகள் உயிர்பெறத் தொடங்கின. தினமும் வெவ்வேறு யானைகள்… ஒவ்வொரு விதமாய்…
யானையின் படைப்பு இலக்கணத்துக்கு உட்படாத பொம்மைகளைச் செய்யத் தொடங்கினார். வேழத்தின் கருத்த உடலில் சேவலின் சிவப்புக் கொண்டையோடு; நாயைப் போல் சுருண்ட வாலோடு; ஒளியும் இருட்டும் புணர்ந்தது போன்ற கருப்பு வெள்ளை நிறத்தில், செங்குத்தாய் கீழ்நோக்கி நீளும் தந்தங்களோடு, காற்றில் துடுப்பிடும் பெரிய வெள்ளைச் சிறகுகளோடு!!
ஆனால் தான் உயிர்ப்பிக்கும் இயற்கை நீதிக்கு முரணான படைப்புகள் அழகிலும் வனப்பிலும் சற்றும் குறைந்ததாய் இருக்கக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தார். அவரது கற்பனையை நிதர்சனத்தில் சுமந்துவந்த வாரணங்களும் அவர் எதிர்ப்பார்ப்பை விட மேலானதாகவும் பிரமிப்பூட்டுவதாகவுமே இருந்தன. வேழத்தின் ஸ்பரிச வெப்பத்தை ஒவ்வொரு குளிர்ந்த இரவிலும் அவரால் உணர முடிந்தது. சொரசொரவென இருக்கும் அதன் உடலைத் தடவிப் பார்க்கும்போது அவரது உள்ளங்கை அணுக்கள் சொன்னது அந்த உணர்வு மெய்யென்று. பரிவு ததும்பும் வேழத்தின் சிறிய கண்களுக்கு சாமுவேல் கிழவரும் பழகிய பாகனாகவே தெரிந்தார்.
தினமும் சொல்லி வைத்தாற்போன்று பின்னிரவில் களிறு தோன்றிக் கதவைத் தட்டும்…! சாமுவேல் பார்வையிடத் தயாராய் வாலை ஆட்டியபடி பின்னால் திரும்பியபடி நிற்கும். சாமுவேலும் தான் செய்த மரயானை சதை உருவில் எந்தளவு நுட்பமாய் வந்திருக்கிறது என்று வெளியே வந்து பார்ப்பார். தன் படைப்பின் நேர்த்தியை பார்வையிட வரும் சிற்பியைப்போல்….
கருவிழிகள் அச்சத்தில் உருளவோ, தொண்டைக்குழி காயவோ, உதடு ஜபிக்கவோ தேவையற்றதாகிப் போனது. தினமும் மரபொம்மையைப் பின்னிரவின் இருட்டில் நிஜமாய்ப் பார்ப்பது அவருக்கு ஒரு சாதாராண நிகழ்வாகிப் போனது, ஏதோ பட்டனைத் தட்டியதும் சுழலும் மின்விசிறியைப் போல…
வேலைக்குப் போகவும் மறந்திருந்தார். தள்ளுவண்டி தூசி படிந்தும் தார்ப்பாயால் மூடப்பட்டும் பழைய ரப்பர் சக்கரங்கள் சங்கிலியால் கட்டப்பட்டும் அதே இடத்தில் அப்படியே நின்றிருந்தது. பசியும் தாகமும் தேவையற்ற பாரமாகிப் போனது. பேருக்கு கிடைப்பதை சாப்பிட்டபடி வீட்டு வாசல்படியில் அமர்ந்து, பழைய ரேடியோவை பக்கத்தில் வைத்துக்கொண்டு அன்றாடமும் மரயானை செய்யும் வேலை தான். ஏன் யானை மட்டும்? என்ற கேள்வி இதுவரை அவரது கைவிரல்கள் கேட்டதில்லை.
“ஆனைய பாத்தியா…?”
“நம்ம ஊரு கோயில்ல ஏது ஆனை?”
“கோயில்ல இல்ல நம்ம ஊரு தெருல…!”
“ஆனைலாம் சின்னவயசுல ஊருக்குள்ள பாத்தது. இப்போலாம் எங்குட்டு வருது? நீ ஏன் திடீர்னு ஆனைய பாத்தியான்னு அடிக்கடி வரவன் போறவன்கிட்டெல்லாம் கேக்க? நேத்து முருகேசன்கிட்ட கேட்டியாக்கும்?. அவன் ஊர் முழுசும் சொல்லிட்டுத் திரிதான்….” கழுத்தில் தொங்கும் பழுப்புநிறத் துண்டைச் சரிசெய்து கொண்டு மிதிவண்டியில் ஒற்றைக்காலை ஊன்றி நின்றபடியே துரை கேட்டபோதும் கிழவர் ஏதும் சொல்லாமல் சிரிக்க மட்டும் செய்தார். உயிர் கொடுக்கும் கடவுளின் மெத்தனச் சிரிப்பு.
ஊர் முழுதும் கிழவரின் போக்கு பேச்சுப்பொருளாகத் தொடங்கியிருந்தது. நாசுக்காக முணுமுணுத்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது காதுபடவே சப்தமாய்ப் பேசிக் கொண்டனர். “பெருசு மரபொம்மைகளோட ஒத்தையா இருக்குல அதான் புத்தி பேதலிச்சுட்டு..!.”
கிழவரின் கைவிரல்களில் மரவேழம் நித்தம் ஒன்று உயிர்பெறுவதை அவர்கள் அறியவில்லை. மகனைத் தொலைபேசியில் அழைத்துத் தன் கைசெய்யும் மாயத்தைப் பற்றிச் சொன்னார். கண்டுகொள்ளப்படாத மரப்பொம்மைகள் உண்மையில் உயிரற்றதில்லை என்று வாதிட்டார். பேரனைக் கூட்டி வந்தால் அவனுக்கு இரவு உயிர்பெறும் யானையைக் காட்டுவதாக அழுத்தமாய்ச் சொன்னார்.
பேரனைப் பார்ப்பதற்கும் தன் தனிமையைப் போக்குவதற்கும் கிழவர் ஏதோ உளறுகிறார்… என்று தோன்றியது மகனுக்கு. ஒருவேளை அவர் விருப்பம்போல் தன் மகனோடு ஒன்றிரண்டு நாட்கள் அங்கு சென்று தங்கி வந்தால் அப்பாவின் மனநிலை தேறும் என்று நினைத்தவன் இரண்டுநாட்கள் கழித்து வருவதாகச் சொன்னான். அப்பாவிடமிருந்து கைப்பேசியை வாங்கிய பேரன் கேட்டான் “தாத்தா இந்தவாட்டி ஊருக்கு வந்தா எனக்கு என்ன செஞ்சு தருவ?”
“பஞ்சவர்ண ஆனை”
பஞ்சவர்ண வேழம் செய்து முடிக்க இரண்டு நாட்கள் பிடித்தன. நீலநிற துதிக்கையும் பச்சை மஞ்சள் வெள்ளையும் மேவிய பெருத்த உடலும் சிவப்புநிற நீண்டத் தந்தங்கள் கொண்ட பஞ்சவர்ண வேழம்!
தாத்தா செய்யும் பஞ்சவர்ண மரயானையை வேடிக்கைப் பார்த்தபடியே கன்னத்தில் கைவைத்துச் சம்மணமிட்டுப் பக்கத்தில் அமர்ந்திருந்தான். அவனுக்குப் பொம்மை செய்யும் மரவாசமும் இழைப்புளி மரத்துண்டில் ஏற்படுத்தும் சப்தமும் பிடித்திருந்தது. அப்பாவைப்போல் ஏறிய நெற்றியில் சுருக்கங்கள் விழக்கேட்டான்…
“தாத்தா இது கீ கொடுத்தா ஓடுமா…?”
“இது என்ன பிளாஸ்டிக் பொம்மையா…? உயிரோட வரப்போற மரபொம்மை!”
“நெஜமா ஆனை ராத்திரி உயிரோட வருமா?”
“கட்டாயம் வரும் மக்கா… தாத்தா சொல்லுதேம்ல…” மறுபடியும் தலைகுனிந்து அதன் வாலுக்கு நீலவண்ணம் கொடுக்கத் தொடங்கினார்.
“கிழவனுக்கு ஏதோ ஆயிட்டு…!.” சார்லஸ் முணுமுணுத்துக் கொண்டான். அப்பாவின் இந்த பொம்மை விளையாட்டில் அவனுக்குப் பெரிதாய் நாட்டமோ எதிர்ப்பார்ப்போ இல்லை.
பஞ்சவர்ண வேழத்திற்காக அவர்கள் காத்திருந்த அன்றைய இரவு ஒரு கிழட்டு ஆமையைப்போல் மெதுவாக நகர்ந்தது. சார்லஸ் பொம்மைகள் இருக்கும் அறையில் பாயை விரித்து சீக்கிரமே படுத்துத் தூங்கிவிட்டான்.
“ஆனை எப்போ தாத்தா வரும்??”
“நடுராத்திரிக்கு மேல…”
தாத்தாவும் பேரனும் ஆளுக்கு ஒரு கறுப்புக் கம்பளியைச் சுற்றிக்கொண்டு கதவைப் பார்த்தபடியே தரையில் உட்கார்ந்திருந்தனர். வாசல் மின்விளக்கை அணைக்கவில்லை, ஒரு நொடியும் சிந்திவிடாமல் வேழத்தின் ஐந்து நிறங்களையும் பார்க்கத் தோதுவாய் மஞ்சள் வண்ணம் பரப்பியபடியே வாசலில் குண்டுபல்ப் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது.
கதவின் இடுக்கு வழியே சாமுவேல் கிழவர் கண்களைச் சுருக்கிப் பார்த்தார். நிலைகொள்ளாத மனதோடு கதவைத் திறந்து வெளியே போய்ப் பார்த்தார். இரவுக்காற்று களிறின் பிளிறலாய்ச் சப்தம் எழுப்பியது. தூரத்தில் தெருநாய்கள் ஊளையிட்டன. தெருமுனை வரை நடந்து பார்த்துவிட்டு வந்தார். பல்லாயிரம் வாரணத்தைப்போல் கரிய இருள் அவரை மௌனமாய்ப் பின்தொடர்ந்தது. எந்தவொரு அசைவோ சப்தமோ இல்லை. மீண்டும் குடிசைக்குள் நுழைந்து குந்தி உட்கார்ந்து கொண்டார். பேரன் அவனையே அறியாமல் உட்கார்ந்தபடி தூங்கிப்போயிருந்தான். சாமுவேலின் கிழட்டுக் கண்கள் மரக்கதவைப் பார்த்தபடியே இருந்தன. உலகின் தட்டப்படாமல் இருக்கும் ஒரே கதவு இதுதான் என்று தோன்றியது.
“தாத்தா உனக்கு ராத்திரி ஆனை காட்டினாரா…?” மறுநாள் சார்லஸ் தன் மகனிடம் சிரித்தபடி கேட்டான்.
“ஏன் தாத்தா, பொய் சொன்ன…?. ஆனை கட்டாயம் வரும்னு நெனெச்சேன் தெரியுமா? ஊர்ல பிரெண்ட்ஸ்ட்டல்லாம் கூட சொல்லிருந்தேன்!”
சாமுவேல் பதில் ஏதும் பேசவில்லை. மேஜையில் இருக்கும் பஞ்சவர்ண யானையையும் மோட்டுவளையையும் மாறி மாறிப் பார்த்தபடியே இருந்தார். தன்னை ஏமாற்றிய கடவுளையும் மரபொம்மைகளையும் அவர் வாய் பழித்தபடியிருந்தது.
மகன் பேரனைக் கூட்டிக்கொண்டு பட்டணம் கிளம்பிப் போனான். சாமுவேல் செய்தித்தாளில் சுருட்டிக்கொடுத்த மரயானை பொம்மையைக் கூடப் பேரன் வாங்கிக் கொள்ளவில்லை. சுருங்கிய முகத்துடன் ‘போ தாத்தா ஏமாத்திட்ட…!’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
அன்றிரவு பல மாதங்களுக்குப் பிறகு சாமுவேல் மது அருந்தினார். அவரது உள்ளடங்கிய வயிற்றில் கடுங்கறுப்புத் திரவம் முறுக்குக் கம்பியாய் இறங்கி மன ஓட்டத்தில் துளையிட்டது. ஏமாற்றிய மர ஆனையின் நினைவு மீண்டும் மூளையைக் குடைந்தது. கழுத்தைச் சாய்த்து ஒரே வீச்சில் மீதமிருக்கும் மதுவைக் காலிசெய்தார்.
“நானா உங்கிட்ட ராத்திரி வரச்சொல்லிக் கேட்டேன்.. நீங்களே தான தினமும் வந்தீங்க…!”
அலமாரியிலும் மேசையிலும் அடுக்கியிருக்கும் மரபொம்மைகள் பதிலேதும் சொல்லவில்லை. மறுமொழி பேசிப்பழகாதவை எப்போதும் போல் இன்றும் மௌனம் காத்தன. கோபமும் போதையும் ஒன்றாய்ச் சேர்ந்து சாமுவேலுக்குத் தலைசுற்றியது. உலகில் உள்ள அத்தனை யானைகளையும் கழுவேற்ற நினைத்தார். சுற்றும் முற்றும் பார்த்த அவரது கண்கள் பேரன் விட்டுப்போன பஞ்சவர்ண மரவேழத்தின் மீது விழுந்தது. பொம்மையை வேகமாய் கையில் எடுத்து சுவற்றில் தூக்கி எறிந்தார். உடம்பெங்கும் கீறலோடு வெடிப்போடு கீழே விழுந்தது. மறுபடியும் எடுத்தெறிந்தார். கிழித்துப் போட்டக் காகிதத்துகள்களாய் யானை பொம்மை துண்டுதுண்டாய் உடைந்து விழுந்தது. இன்னும் கோபம் அடங்காதவராய் உடைந்த துண்டுகளை எட்டி மிதித்துவிட்டு படுக்கையில் விழுந்தார்.
வீட்டுக்கூரை கீழிறங்கி தன்னைக் கட்டிலில் போட்டு அமுக்குவதாய்த் தோன்றியது. கண்களை இறுக மூட முயற்சித்தும் முடியாமல் தொண்டைக்குழியில் புரட்டி எடுக்கவும் எழுந்து உட்கார்ந்தபோது தரையைக் கவனித்தார்.
யானையின் அழுகிய இறந்த சடலத்தை ஓநாய்க்கூட்டம் குதறியெடுத்ததைப் போல் மரயானை அலங்கோலமாய்த் தரையில் உருக்குலைந்து கிடந்தது. உருவம் சிதைந்து போன யானை பொம்மையை உறக்கம் கலைந்து மிரட்சியோடு கிழவர் பார்த்துக்கொண்டிருக்கும் அதே வேளையில்….வாசல் கதவு தட்டும் சப்தம் கேட்டது.
***
விஜய ராவணன், சமீப காலமாக சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் இவர் தம் கதைகளுக்காக ‘கலை இலக்கியப் பெருமன்றத்தின்’ 2018ஆம் ஆண்டு விருது பெற்றுள்ளார். தொடர்ந்து அரூ, கணையாழி போன்ற இதழ்களில் இவரது வெளியாகியுள்ளார். தொடர்புக்கு – penavummayum@gmail.com
கில்லியர்மோ தெல் தோரோ (‘த ஷேப் ஆஃப் வாட்டர்’ இயக்குனருடன் ஒரு நேர்காணல்):
நேர்கண்டவர்கள் : கிறிஸ் பீச்சம், மார்கஸ் ஜேம்ஸ் டிக்சன் -தமிழில் : பாரதிராஜா
(மீள் …)
கில்லியர்மோ தெல் தோரோ இதுவரை அவரது வாழ்க்கையில் ஒரேயோர் அகாடமி விருதுகளுக்கான பரிந்துரை மட்டுமே பெற்றுள்ளார் – “பான்’ஸ் லேபரிந்த்”-க்கான சிறந்த மூலத்திரைக்கதை (2006) – ஆனால் விரைவில் இதில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படலாம். அவரது 2017 திரைப்படமான “த ஷேப் ஆஃப் வாட்டர்” – இன் தயாரிப்பு, இயக்கம், மற்றும் எழுத்துக்காக சமீபத்தில் ‘கோல்டன் குளோப்’ மற்றும் ‘கிரிட்டிக்ஸ் சாய்ஸ்’ விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். உண்மையில், ஒளிபரப்புத் திரைப்பட விமர்சகர்களின் (Broadcast Film Critics) 14 பரிந்துரைகள் மற்றும் ஹாலிவுட் வெளிநாட்டுப் பத்திரிகைக் கழகத்தின் (Hollywood Foreign Press) 7 பரிந்துரைகளுடன் இந்தத் திரைப்படம்தான் அந்த ஆண்டில் ஒட்டுமொத்த விருதுகளுக்கான பரிந்துரைகளில் முன்னணி வகிக்கிறது.
அவருடனான நம் சமீபத்திய உரையாடலில், இதை “துன்ப காலங்களுக்கான ஒரு மாயக் கதை” என்று குறிப்பிடுகிறார். இந்தப் படத்தில், நடிகை சாலிஹாக்கின்ஸ், பனிப்போர் காலத்தில், ரகசிய அரசாங்க இடம் ஒன்றில், நிலத்திலும் நீரிலும் வாழும் ஓர் அரிய வகை மனிதன் மீது காதலில் விழும் ஓர் ஊமைத் தூய்மைப் பணியாளராக நடித்துள்ளார். டக்ஜோன்ஸ், ரிச்சர்ட்ஜென்கின்ஸ், ஆக்டேவியாஸ்பென்சர், மைக்கேல்ஷானன்மற்றும்மைக்கேல்ஸ்டுல்பர்க்ஆகியோரும் நடித்துள்ளனர்.
கோல்டு டெர்பி (மார்கஸ் டிக்சன்): சரி, கில்லியர்மோ தெல் தோரோ. அப்படியானால், உங்கள் புதிய படம், “த ஷேப் ஆஃப் வாட்டர்”, டிசம்பர் மாதத்தில் வெளிவருகிறது, எனவே உங்கள் ரசிகர்கள் நிறையப்பேர் இன்னும் அதைப் பார்க்கவில்லை. இந்தப் படத்தின் கதை என்ன என்று சொல்வீர்கள்? ஏனென்றால், இது மிகவும் சிக்கலானது, மிகவும் படைப்பாற்றலுடையது மற்றும் அசலானது. உண்மையிலேயே இது போன்ற எதுவும் இதற்கு முன்பு நாம் பார்த்ததில்லை.
கில்லியர்மோ தெல் தோரோ: “த ஷேப் ஆப் வாட்டர்”-இன் கதை ஓர் எளிமையான கதை எனலாம். ஓர் அரிய வகை உயிரினமான நீரிலும் நிலத்திலும் வாழும் மனிதன் ஒருவன் மீது காதலில் விழும் பெண் ஒருத்தி பற்றிய கதை – துன்ப காலங்களுக்கான மாயக் கதை. 1962, பனிப்போர்க் காலத்தில் ஒரு இரகசிய அரசாங்க இடத்தில் தூய்மைப் பணியாளராக இருக்கிறாள் அவள். கதை எளிமையானது, எனவே பாத்திரங்களைச் சிக்கலானவையாக அமைத்து, அவர்களுக்கு இடையிலான உறவாடல்களைக் கருவின் எடையாக்கி, அதை வைத்து நாம் கூத்தடிக்கலாம் என்று அப்படிச் செய்தேன். இது பரபரப்பு, இசை, நாடகம், உணர்ச்சி, உயிரினம் என்று அனைத்தும் கலந்த ஒரு படம். இது காதல் மீது காதலும், திரைப்படம் மீது காதலும் கொண்ட ஓர் அழகான படம்.
கோ.டெ. (மார்கஸ்): பல ஆண்டுகளாக நிறையத் திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறீர்கள் நீங்கள், ஆனால் இது உங்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக இருக்கும், இல்லையா?
கி.தெ.தோ.: “த ஷேப் ஆஃப் வாட்டர்”, நான் எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். அதற்கடுத்து, “டெவில்’ஸ் பேக்போன்,” “பான்’ஸ் லேபரிந்த்,” “கிரிம்சன் பீக்,” “பசிஃபிக் ரிம்”, “ஹெல்பாய் II” ஆகியவை வரும்.
கோ.டெ. (மார்கஸ்): ஓ, ஏற்கனவே பட்டியல் தயாராக வைத்திருக்கிறீர்கள் போலயே! ?
கி.தெ.தோ.: ஓ ஆமாம், ஆனால் அது என் வேதனை அனுபவத்தின் வரிசை. பார்க்கத் துன்பமூட்டுபவை, ஆனால் அவைதான் வேண்டும் என்று மனம் விரும்பும், அவைதான் நாம் விரும்புபவை. இன்னொரு வகை, பார்க்கத் துன்பமூட்டுபவையாகவோ அல்லது அப்படி இல்லாமலோ இருக்கலாம், ஆனால் அவை நாம் அவ்வளவு வேண்டுமென்று ஆசைப்படுபவையாக இராது, அவற்றை நாம் குறைவாகவே விரும்புவோம், ஆனால் இதெல்லாம் கதைசொல்லிக்குத்தான். பார்வையாளனுக்கு எதுவும் பிடிக்கலாம். எனக்கு அதில் பிரச்சனையில்லை.
கோ.டெ. (மார்கஸ்): நீங்கள் கதையெழுதும் முறை பற்றியும் கூற முடியுமா? வனேசா டெய்லருடன் இணைந்து எழுதுகிறீர்கள். இந்தக் கதையையும் யோசனையையும் கொண்டு வர எவ்வளவு காலம் ஆனது?
கி.தெ.தோ.: யோசனை பல பத்தாண்டுகளாக என்னிடம் இருந்தது, ஆனால் 2011, டிசம்பரில்தான் அது எனக்குத் தெரிந்தது. அதற்கான சாவி தானே வந்து விழுந்தது. “ட்ரோல்ஹண்டர்ஸ்” தொடரில் என்னுடன் இணை எழுத்தாளராக இருந்த டேனியல் க்ராஸ், ஒரு படு இரகசிய அரசாங்க இடத்தில் பணிபுரியும் ஒரு தூய்மைப் பணியாளர் பற்றிய இந்தக் கருத்தை வைத்திருந்தார், இரகசிய அரசாங்க இடத்துக்குள் சென்று (இதை நான் ஏற்கனவே ‘ஹெல்பாய்’ மற்றும் ‘ஹெல்பாய் II’ படங்களில் செய்திருக்கிறேன்), இந்த அரிய உயிரினத்தைக் கண்டறியும் (ஆனால் ஓர் உளவாளி அல்லது விஞ்ஞானியின் கண்கள் வழியாக அல்ல) இந்தத் திட்டம் எனக்குப் பிடித்திருந்தது. கட்டடத்தின் முன் கதவு வழியாக அன்றி, கட்டடத்தின் பின்கதவு வழியாக, கழிவறைகளைச் சுத்தம் செய்கிற, குப்பைத் தொட்டிகளைக் காலி செய்கிறவர்களோடு சென்று செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதுதான் இதில் முக்கிய அம்சம். பின்னர் 2012-இல் எழுதத் தொடங்கினேன், கிட்டத்தட்ட 2014-இல், ரஷ்ய உளவாளிகள் வரும் உட்கதை தவிர, நீங்கள் இப்போது காண்கிற காட்சியமைப்புகள், கதாபாத்திரங்களுடன் முழுக்கதையும் இருந்தது. மூலப்படிவத்தில் அது மிகமிகச் சிறியதாக இருந்தது. அதை நான் [ஃபாக்ஸ்] ‘சர்ச்லைட்’டிடம் எடுத்துச் சென்றேன், பின்னர் நாங்கள் வனேசா டெய்லரிடம் சென்றோம், நான் எழுதியிருந்த எல்லாப் பக்கங்களையும், காட்சித் தாளையும் (Beat Sheet), இன்ன பிறவற்றையும் அவரிடம் காட்டினோம்.
நாங்கள் சந்தித்தோம். “இந்தப் பனிப்போர் மற்றும் ரஷ்ய உளவாளி படலத்தில் மேலும் சேர்த்து அல்லது விரிவாக்கி, அதை ஒரு முக்கியப் பாத்திரமாக்கி, அந்தக் கெட்டவன் மேல் இன்னும் அழுத்தத்தைப் போட்டு, அப்படி இப்படி மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார் அவர். கருத்துக்கள் பரிமாறத் தொடங்கினோம். அடுத்து கோப்புகளும் பரிமாறிக்கொண்டோம். என் கோப்புகளை அவரிடம் தருவேன், பின்னர் அவர் ஈவிரக்கமின்றி அவற்றை மாற்றியெழுதுவார், பின்னர் நான் அவருடைய கோப்புகளைப் பறித்துக்கொண்டு, ஈவிரக்கமில்லாமல் மாற்றியெழுதுவேன், இப்படி மாற்றி மாற்றி முன்னும் பின்னும் அனுப்பிக்கொள்வோம். நாங்கள் எப்போதாவதுதான் சந்தித்துக்கொண்டோம். எங்கள் சந்திப்புகள் பெரும்பாலும் எப்போதும் கோப்புகள் வழியேதான் நிகழ்ந்தன. பின்னர் அவர் ஒன்றரை அல்லது இரண்டு வரைவுகள் வரும்வரை அதில் வேலை செய்தார். அதன் பின்பு, அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு நானாகவே தனியாக அதில் வேலை செய்தேன்.
கோ.டெ. (மார்கஸ்): திரைக்கதை எழுதும் கதையைக் கேட்டால், நீண்ட காலம் எடுத்திருப்பதாகவும், உங்கள் வாழ்க்கையில் இது ஒரு பெரும் முதலீடு போலவும் தெரிகிறதே. இயக்குவதைவிட திரைக்கதை எழுதுவதை அதிகம் அனுபவிக்கிறீர்களா அல்லது இது முற்றிலும் வேறுபட்ட ஒரு பகுதி என்று நினைக்கிறீர்களா?
கி.தெ.தோ.: ஒன்று சொல்லவா, திரைக்கதை எழுதுவது, உங்களோடு கூட்டாளி ஒருத்தர் இருக்கும் போது இன்பமாக இருக்கலாம், ஆனால் தனியாக இருந்தீர்கள் என்றால் அதுவே கொடுமையானதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கும். திரைப்படம் எடுப்பதிலேயே மிகவும் மிரட்சியூட்டும் பகுதி அதுதான் என்று நினைக்கிறேன். ஆனாலும் ஒருவகையில் அதுதான் மிகவும் முக்கியமானதும் கூட. ஏனென்றால், அதுதான் அடிப்படை. நீங்கள் இசை எழுதுகிறீர்கள், பின்னர் நீங்களே இசையை நிகழ்த்துகிறீர்கள், உங்களோடு இசைக்கலைஞர்கள் இருக்கிறார்கள், இது இயக்குதல் – இசையமைத்தல் ஆகிறது. இது மிகவும் எளிது. ஆனால் எழுதுதல் அப்படியல்ல, வெற்றுப் பக்கம் என்பது உண்மையிலேயே மிகக் கொடுமையானது, ஆனால் இன்னொருவரோடு சேர்ந்து செய்தால் அதுவே மிக மிக மேலான அனுபவமாகி விடுகிறது.
கோ.டெ. (கிறிஸ் பீச்சம்): இந்தப் படத்தின் காலகட்டம் மிகவும் முக்கியமானது. இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு உங்களை எது வழிவகுத்துக்கொண்டு வந்தது, அதற்குள் வேறு என்ன படங்கள் கொணர விரும்பினீர்கள்?
கி.தெ.தோ.: ம்ம்ம், 1962-ஐ ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால், அது அமெரிக்கா பல வகைகளில் தன் தொன்மத்தை வரையறுக்கத் தொடங்கிய ஒரு மிக முக்கியமான காலம். இரண்டாம் உலகப் போரில் இருந்து வெளியே வருகிறீர்கள், எல்லாமே அளவிலாமல் கொட்டிக் கிடக்கிறது, செல்வம் – புறநகரப் பகுதிகளில் கொட்டிக்கிடக்கும் செல்வம், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கார், தொலைக்காட்சி, தானாகவே சுத்தம் செய்து கொள்ளும் அடுப்புகள், அழகழகு உட்பாவாடைகள் மற்றும் சிகைத்தெளிப்புகள், விண்வெளிப் பந்தயம், வெள்ளை மாளிகையில் கென்னடிகள், ஓரளவிற்கு மேடிசன் அவென்யூவால் உருவாக்கப்பட்ட மேன்மை பற்றிய புனைவு, சராசரி அமெரிக்கனின் நடத்தைகளைத் திரைப்படங்கள் செய்ததைவிடப் பல மடங்கு தொலைக்காட்சிகள் செய்யத் தொடங்கிவிட்டன. திரைப்படங்கள் சரிய, தொலைக்காட்சி மேலெழுகிறது. ஓவியமாக வரையப்படும் விளம்பரங்கள் என்பதிலிருந்து புகைப்பட விளம்பரங்கள் என்பதை நோக்கி விளம்பரங்கள் மாறத் தொடங்குகின்றன. பின்னர், எனக்கு இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் கருத்தளவில் இதுதான் இந்த இலக்கியல் மாயக்கதைக் காலத்தின் கடைசி ஆண்டு, ஏனென்றால் அதன்பின்பு குறுகிய காலத்தில் கென்னடி சுட்டுக் கொல்லப்படுகிறார், வியட்நாம் பிரச்சனை பெரிதாகிறது, அப்படியே ஒவ்வொன்றாகச் சிதையத் தொடங்குகிறது, ஆனால் அது ஒரு மாயை. நீங்கள் ஒரு சிறுபான்மையினராக இருந்திருந்தால், ஒரு பெண்ணாக இருந்தால், தவறான பாலினத்தவராக, சமூக வர்க்கத்தவராக, பாலியல் விருப்பம் உடையவராக இருந்தால், 1962 மிகவும் கடினமாக இருக்கும். நான் இப்போதைப் பற்றிப் பேச விரும்பினேன், ’62 பற்றி அல்ல. இது இப்போதைப் பற்றியதுதான், உருவகமாக அல்லது கதையாக, நீதிக்கதையாக, விரும்பத்தக்க அல்லது வெறுக்கத்தக்க ஒன்றாக, நாமல்லாத பிறர் பற்றிய நம் கருத்தை மறைமுகமாகக் குறிப்பிடுவதற்காக ’62 ஐப் பயன்படுத்துகிறேன். இந்தப் படத்தின் அழகு என்னவென்றால், இது சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமை பற்றி மட்டும் பேசவில்லை, உண்மையிலேயே குரலற்றவர்களுக்குக் குரல் கொடுக்கிறது. முற்றிலும் அந்நியரான இந்த உயிரினத்தைக் காப்பாற்றும் பொருட்டு கட்புலனாகாத மக்கள் குழு ஒன்றைத் திரட்டுகிறது. இந்தக் கூட்டம் நாமல்லாத மற்றொன்றிற்குள் இருக்கும் அழகையும் தெய்வீகத்தையும் அன்புக்குரிய தன்மையையும் காண்கிறது. இப்போதைக்கு, என்னைப் பொருத்தமட்டில் இது ஒரு பெரும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கதை என்பேன்.
மிகவும் துன்பகரமான காலங்கள் இவை. உண்மையில், “தி ஷேப் ஆஃப் வாட்டர்: துன்ப காலங்களுக்கான மாயக் கதை” என்றுதான் திரைக்கதை அழைக்கப்பட்டது, ஏனென்றால் இப்போது எது பற்றியும் கோளாறு சொல்லி – சந்தேகம் எழுப்பித் தன்னை ஒரு பேரறிவாளனாகக் காட்டிக்கொள்ள முடியும். ஆனால், சமூக ஊடகங்களிலும் சரி, தனிமனிதர்களுடனான உறவாடல்களின் போதும் சரி, உணர்வுபூர்வமாக இருப்பது இப்போது ஆபத்தானதாக – உண்மையிலேயே பெரும் ஆபத்தான ஒன்றாக இருக்கிறது. மிகவும் எச்சரிக்கையோடு இருக்கிறோம். உணர்ச்சிகளைக் கண்டு மிகவும் பயப்படுகிறோம், எனவே உணர்ச்சிபூர்வமான ஒரு திரைப்படத்தை, நம் சமூகத்தைப் பீடித்திருப்பதாக நான் நம்பும் அவநம்பிக்கையையும் கொந்தளிப்பையும் நாம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதில் இருக்கும் சந்தேகத்தையும் குணப்படுத்தும் மருந்தாக இருக்கும் திரைப்படம் ஒன்றை, உருவாக்க விரும்பினேன். இந்தப் பிரச்சனைகள் எவற்றையும் நேரடியாகக் கையாள விருப்பமில்லை நமக்கு. ஏனென்றால் அதுவே… சமூக ஊடகங்களில் ‘தாம் தூம்’ என்று வெடித்துப் பெரும் வாதமாகி விடுகின்றன. ஒரு நடுப்புள்ளியைக் கண்டுபிடிக்க வழியே இல்லை. எனவே நான் ஒரு மாயக்கதை மூலம் இதைச் செய்ய விரும்பினேன். ஏனென்றால் “ஒரு ஊர்ல, 1962-ல, ஓர் ஊமைப்பெண் இருந்தாளாம்” என்று சொல்லும்போது, மக்கள் தங்கள் எச்சரிக்கை உணர்வைக் குறைத்துக்கொண்டு, கலந்துரையாடலை ஏற்றுக்கொள்வார்கள், அதற்குள் என்ன அரசியல் தூண்டல் இருந்தாலும்.
கோ.டெ. (கிறிஸ்): இந்த எல்லா உணர்ச்சிகளையும் – எல்லாவற்றையும் பேசாமலேயே தெரிவிக்கிற ஒருவராக நடிக்க நீங்கள் சாலி ஹாக்கின்ஸைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். படத்தின் பெரும் பகுதி அதைத்தான் சார்ந்திருக்கிறது. அப்படி உங்களை அவரிடம் இட்டுச் சென்றது எது?
கி.தெ.தோ.: சாலிக்கு, மைக்கேல் ஷானனுக்கு, ஆக்டேவியா ஸ்பென்சருக்கு, டக் ஜோன்சுக்கு என்று இவர்களுக்காகவே நான் குறிப்பாக இந்தத் திரைப்படத்தை எழுதினேன். நான் பல படங்களில் அவரைப் பார்த்தேன், முதலில் “ஃபிங்கர்ஸ்மித்” (Fingersmith) என்று ஓர் அழகான விக்டோரியன் திரில்லர் படத்தில் அவரைப் பார்த்தேன். அந்தப் படத்தில், அவர் மற்றொரு பெண்ணின் மீது காதலில் விழுந்து, அவர்கள் ஓர் அழகான வாழ்க்கை வாழ்வார்கள், அதில் அவரின் நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது என்று நினைத்தேன். சிமிட்டல்கள் இல்லாத, கிச்சுக்கிச்சுகள் இல்லாத இயல்பான நடிப்பு. அது அவரது பாத்திரத்தின் ஒரு பகுதியாகவே செய்யப்பட்டது. அப்படிப்பட்ட கதையை அப்படித்தான் கையாண்டிருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஏனென்றால், பாத்திரத்தோடு தோலும் சதையுமாக ஒன்றி இருக்க வேண்டும். அது ஒரு பொருள் அல்ல. எனக்கு மிகவும் பிடித்துப் போனது, அடுத்து அவர் “சப்மெரின்” என்ற ஒரு படத்தில் துணை வேடம் செய்ததைப் பார்த்தேன். அவரைப் பார்த்தேன், அதில் அவரின் தோற்றத்தைப் பார்த்தேன், “அப்படியே கச்சிதமாக இருக்கிறாரே” என்று நினைத்தேன், ஏனென்றால் பெரும்பாலானவர்கள் நடிகர்களை அருமையான வசனம் பேசுபவர்களாகவும் நடிப்பைக் கொட்டுபவர்களாகவும் பார்க்கிறார்கள், ஆனால் உண்மையில் எனக்கோ, ஒரு நடிகர் என்பவர் நன்கு கவனிப்பவர் – பார்ப்பவர். அவர்கள் இன்னொரு நடிகரைக் கவனிக்கும் போதும் பார்க்கும் போதும், அதுதான் ஒரு நடிகரின் பெருமதிப்புக்குரிய வளமாகிறது.
எனவே நான் அவருக்காகவே எழுதினேன், பேச்சில்லாமல், ஊமையாக, ஏனென்றால், என்னைப் பொருத்தமட்டில், காதல் என்பது நம்மைப் பேச்சுமூச்சில்லாமல் ஆக்குவது. அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன சொல்லிக்கொண்டார்கள் என்பதைப் பற்றியதல்ல இது, ஒருவரையொருவர் எப்படி அடையாளம் கண்டுகொண்டார்கள் என்பதைப் பற்றியது. நீருக்கான பூதக்கடவுளான இந்த உயிரினம், அவளிடம் ஏதோவொரு சாரத்தை அடையாளம் கண்டுகொள்கிறது, அவள் அவனிடம் தன்னையே அடையாளம் கண்டுகொள்கிறாள், அப்படியே ஓர் அழகான மாயாஜாலத்துக்கான சாத்தியம் உருவாகிறது, பின்னர் சாலியிடம் பேசியபோது, ஹேரல்ட் லாய்ட், பஸ்டர் கீட்டன், [சார்லி] சாப்ளின் ஆகிய ‘பேசா நகைச்சுவை’ நடிகர்கள் கொண்ட ப்ளூ-ரே செட் ஒன்று கொடுத்து, மிக முக்கியமாக அவரிடம் ‘லாரல் அண்ட் ஹார்டி’-யில் ஸ்டான் லாரலைப் பார்க்கச் சொன்னேன், ஏனென்றால் அந்த மனுஷனால் வாய் திறவாமல் ஒரு படுநேர்த்தியான நிலையை நடிப்பில் கொண்டுவர முடியும். அவையனைத்தையும் அவர் பார்த்தார் – படித்தார். அவருடைய நடத்தை, படத்தில் வரும் மற்ற எந்தப் பாத்திரத்தை விடவும் மாறுபட்டிருக்கும். வேறு எந்த நடிகரும் அவரைப் போல் நடந்து கொள்வதில்லை. சிறிது அந்த இடத்திற்குப் பொருந்தாதவராகவும், மிகவும் தனிச்சிறப்போடும் இருப்பார், இது அத்தனையையும் வார்த்தைகள் இல்லாமல் சொல்வது மிகவும் முக்கியம் என்று கருதினேன்.
கோ.டெ. (கிறிஸ்): உங்கள் நண்பர்கள், அல்ஃபோன்சோ [கோரன்] மற்றும் அலெயாண்ட்ரோ [ஜி. இனாரிட்டு], இருவருமே சமீபத்திய ஆண்டுகளில் ஆஸ்கார் விருது வென்றவர்கள். முதலில், அவர்கள் ஆஸ்கார்களைக் கையில் எடுத்தபோது உங்கள் உணர்ச்சி என்னவாக இருந்தது?
கி.தெ.தோ.: உன்னதம். உண்மையான உன்னதம், ஏனென்றால், ஒரு கட்டத்தில் நாங்கள் அனைவருமே பரிந்துரைக்கப்பட்டு, “பான்’ஸ்” (Pan’s) மூன்று ஆஸ்கார்களை வென்றது, “சில்றன் ஆஃப் மென்” (Children of Men) மற்றும் “பேபல்” (Babel) ஆகிய படங்களும் இருந்தன, அப்போதுதான் நினைத்தோம், நாங்கள் மூவருமே நினைத்தோம், ஏசுவே, சிறந்த இயக்குனர், சிறந்த படம் அல்லது சிறந்த வெளிநாட்டுப் படம் என்று வென்றிருந்தால் மெக்சிகோவுக்கு என்னவொரு சிறப்புச் சேர்ந்திருக்கும் என்று. மற்ற விருதுகள் கிடைத்தன, ஆனால் இந்த விருதுகள் கிடைக்கவில்லை. பின்னர் அல்ஃபோன்சோவுக்குக் கிடைத்தபோது, நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். சரி, எல்லாம் முடிந்தது.
கோ.டெ. (கிறிஸ்): அலெயாண்ட்ரோவிடம்தான் அத்தனை உள்ளனவே, உங்களுக்கு ஒன்று கடனாகக் கொடுக்கலாமே.
கி.தெ.தோ.: அலெயாண்ட்ரோவிடம் ஒரு முழு வரிசையே உள்ளது, நட்பின் சிறப்பே என்னவென்றால் நண்பர்களுக்கு நடக்கும் நல்லவை எல்லாம் நமக்கு நடப்பது போலவே இருக்கும். அல்ஃபோன்சோ வென்றபோது என் தாய் மெக்சிகோவிலிருந்து என்னை அழைத்து, “உன் சகோதரன் வென்றுவிட்டான்” என்றார். அதுவும் அவ்வளவு மகிழ்ச்சியோடு.
கோ.டெ. (கிறிஸ்): நீங்களும் அவர்களின் குழுவில் இணைந்து உங்கள் முதல் விருதைப் பெறுவது உங்களுக்கு எப்படி இருக்கும்?
கி.தெ.தோ.: அருமையாக இருக்கும். பாருங்கள், எனக்கு எது அருமை என்றால், இதைத் தெளிவாகச் சொல்ல வேண்டியது மிகவும் முக்கியமும் கூட, இரண்டு முறை என் படங்கள் பேசப்பட்டதில், தனக்கே உரித்தான தனித்தன்மையோடுதான் பேசுபொருளாயின. பீத்தோவனின் வாழ்க்கையையோ அதி-எதார்த்தமான சமூக நாடகக் கதையையோ எடுத்து நான் இந்த இடத்துக்கு வரவில்லை. மற்ற பாணிகளைப் போலன்றி, கலைப்படங்களின் பாணியில், மதிப்பு மிக்க கதைகளாகத் தன்னை முன்னிறுத்துபவையாகவும், அழகையும் ஆற்றலையும் திரைப்பண்போடு வெளிப்படுத்தும் மதிப்புமிக்க – கலைத்திறனுடைய வழிகளிலும் படங்கள் எடுக்க 25 ஆண்டுகளாக, அதாவது கால் நூற்றாண்டு காலம் போராடிக்கொண்டிருக்கிறேன். எனவே, “பான்’ஸ் லேபரிந்த்”-க்குப் பிறகு, “ஷேப் ஆஃப் வாட்டர்” போன்ற ஒரு படத்துடன் மீண்டும் இங்கே வந்து நிற்பது, இந்த உரையாடலுக்கு மத்தியில், இந்தக் ‘கலப்பில்’ (mix) வந்து நிற்பது, அதுதான் எனக்கு அர்த்தமுள்ளது. முற்சார்போடு அணுகப்படும் இந்தப் பாணிப் படங்களில்தான் இன்னும் என் உழைப்பைச் செலுத்துகிறேன். சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது, அதுவும் படம் பார்க்கும் முன்பே. அது எனக்குப் பிரச்சனையில்லை. எனவே அது கடவுள்களின் கைகளில் இருக்கிறது. இங்கு வந்து நிற்பதே எனக்கு சுகமாக இருக்கிறது.
கோ.டெ. (கிறிஸ்): உங்களுக்கு இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதால், அதனினும் முக்கியமாக அவர்கள் நீங்கள் செய்யும் வேலையைச் செய்யும் துறையிலேயே இருக்கிறார்கள் என்பதால், நீங்கள் ஒரு வேலையில் இருக்கும்போது, ஒருவருக்கொருவர் உதவும் பொருட்டு ஒருவரையொருவர் தொடர்பு கொள்வீர்களா? “ஏய், இது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்றோ அல்லது எல்லாம் முடிந்து தயாராக உள்ளபோது அவர்கள் எப்போது வந்து பார்ப்பார்கள் என்று துடிப்பதோ உண்டா?
கி.தெ.தோ.: ம்ம்ம், அல்ஃபோன்சோ, அலெயாண்ட்ரோ, ஜிம் கேமரோன், ஜெ.ஜெ. ஆப்ராம்ஸ் என்று எனக்கு ஐந்தாறு இயக்குனர் நண்பர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அனைவருமே ஒருவரையொருவர் தொடர்பு கொள்வோம். “இதைப் படித்துப் பார்ப்பாயா?” அல்லது, “என் வெட்டைப் பார்த்துச் சொல்லேன்!” என்று எப்போது வேண்டுமானாலும் என்னை அழைத்துக் கேட்கலாம் என்று அவர்களுக்குத் தெரியும். எங்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம் என்னவென்றால், தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளின் போது, நீ என்னிடம் எது வேண்டுமானாலும் சொல்லலாம். இரக்கமில்லாமல் விமர்சிக்கலாம். $150,000 மதிப்புள்ள ஒரு விஷுவல் எபெக்ட் காட்சியைக் காட்டி, “இது உண்மையிலேயே படுகேவலமாக இருக்கிறது” என்று சொல்லலாம். ஆனால், படம் முழுக்க எடுத்து முடித்தபின், “அருமையான பணி” என்றுதான் சொல்வோம். (சிரிக்கிறார்). அடுத்து அது பற்றிப் பேசமாட்டோம்.
கோ.டெ. (கிறிஸ்): பணி நடந்துகொண்டிருக்கும் போது, நீ என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.
கி.தெ.தோ.: ஆம், கொடுக்கவும் செய்வோம். மிகவும் ஈவிரக்கமில்லாமல் நடந்து கொள்ளவும் செய்வோம் (சிரிக்கிறார்). ஒருவருக்கொருவர் இரக்கமில்லாமல் நடந்துகொள்வோம். இது மிகவும் முக்கியமான ஒன்று என்று கருதுகிறேன். ஏனென்றால், நாங்கள் வாழும் துறையில், எல்லாமே ஆகா – அருமை என்று சொல்லும் குமிழி போன்ற கூட்டம் ஒன்றை மிக எளிதாக உருவாக்கிக்கொள்ள முடியும், பின்னர் அப்படியே அழிந்தும் போக முடியும். இது, இப்போதும் பெவிலியன்ஸ் – ரால்ஃப்’ஸ் கடைகளுக்குப் போய், நானே எனக்கான மளிகை சாமான்களை வாங்கிக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் என்று எண்ணுகிறேன். ஏனென்றால், அதுதான் எனக்கு மறை கழன்று விடாமல் பார்த்துக்கொள்வது. மறை கழன்று போதல் மிகவும் எளிதானது.
கோ.டெ. (கிறிஸ்): ம்ம்ம், வாழ்த்துக்கள், கையில் அருமையான படம் ஒன்றை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது அசலானதாகவும் படைப்புத்திறனோடும் இருக்கிறது. அது மட்டுமில்லை, வேறு எந்தப் படமும் இந்தப் படம் போல இல்லை.
கி.தெ.தோ.: நன்றி, மக்கள் இதைக் குணப்படுத்தும் ஆற்றல் மிக்க ஒரு குட்டிக்கதையாகவும் அனுபவித்து, இப்போதைய முக்கியத் தேவையாக இருக்கிற மிக மிக விந்தையான அரசியல் உருவகமாகவும் சிந்திக்கத் தூண்டப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
கோ.டெ. (மார்கஸ்): சரி, கிளம்பும் முன், இந்த ஒரு கேள்வியை மட்டும் கேட்டுக் கொள்ளவா? உங்கள் அடுத்த திட்டம் என்ன? மக்கள் என்ன எதிர்பார்க்கலாம்?
கி.தெ.தோ.: ம்ம்ம், என் வாழ்வில் முதன் முறையாக – இதற்கு முன்பு நான் இதை ஒருபோதும் செய்ததில்லை – இயக்குவதில் இருந்து ஓராண்டு காலம் இடைவெளி எடுத்துக்கொண்டேன், ஏனென்றால் இந்தப் படம் இன்னமும் மிகவும் வலி மிக்கதாயும் மிகவும் மனதுக்கு நெருக்கமாகவும் மிகவும் அழகானதாகவும் இருக்கிறது. அது உலகத்துக்குள் தன் முதல் சில அடிகளை எடுத்து வைப்பதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று எண்ணினேன், பின்னர் சிறிது காலம் எடுத்து, சில நூல்களைப் படித்து, ஒரு குழல் சுருட்டு பிடிக்க வேண்டும், நான் புகைப் பிடிப்பதில்லை, ஆனால் இப்போது ஒருவேளை ஆரம்பிக்கலாம், அது பற்றி யோசிக்க வேண்டும், ஏனென்றால் அவ்வளவு வேகமாகப் போகிறோம், சிறிது வாழவும் வேண்டுமே. எனவே, அங்கே இங்கே என்னைப் பார்த்தீர்கள் என்றால் நான் இன்னும் வாழ்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
–பாரதிராஜா – பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அரசியல், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு இவர் இயங்கும் தளம். தொடர்புக்கு -bharathee@gmail.com
அதுவரையிலான தன் வாழ்நாளில் அவன் ஒருபோதும் அந்த நகரத்து புறநகர் சாலை இப்படி ஆளரவமற்று வெறித்து இருந்து பார்த்ததில்லை. நியான் விளக்குகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த நள்ளிரவு குளிருக்கு இதமூட்டிக் கொண்டிருந்தன. முழங்கையிலும் காலிலும் ஏற்பட்டிருந்த சிராய்ப்புகளில் இருந்து குருதி சொட்டிக் கொண்டிருந்தது. உரக்கச் சிரித்தான். முஷ்டி மடக்கி நடுவிரலை நீட்டி ஓலமெழுப்பினான்.
பிராகிருதிஸ்தான்வாசிகளின் மொழியில் அவனொரு ‘வீடற்றவன்’. உயர்ந்து செறிந்த கட்டிடங்களுக்கு இடையே இருக்கும் இருண்ட மூலை முடுக்குகள், சந்துகள், இடுக்குகள், கைவிடப்பட்ட பாலங்கள், இடிபட்ட கட்டுமானங்கள் கட்டி முடிக்கபடாத அடுக்குமாடி கட்டிடங்கள் இவைதான் அவர்களின் வசிப்பிடம். மூன்று நாட்களுக்கு முன் அவனிருந்த முடுக்கிற்குள் பிராகிருதிஸ்தானின் ராணுவ கறுப்பு வண்டி வந்து நின்றது. முழு போதையில் உறங்கிக் கொண்டிருந்த வீடற்றவர்களை கவச வீரர்கள் வண்டியில் அடைத்து கொண்டு சென்றார்கள். வெளிச்சத்தில் நிற்கவைத்து அவர்களின் ஆடைகளை களைந்தார்கள். துவண்ட குறியை தலைகவிழ்ந்து பார்த்தபோது இயல்பாக அவன் கண்கள் அருகாமையில் இருப்பவனின் இடுப்பை நோக்கி கவிந்தது. தனக்குள்ளாக சிரித்துக் கொண்டான். நீலநிற சட்டையும் காற்சட்டையும் அணிவிக்கப்பட்டது. வரிசையில் நின்ற அவர்களிடமிருந்து சோதனைக்கான குருதி உறியப்பட்டது. “
முகமூடி அணிந்த வெள்ளையாடை மனிதன் அமர்ந்தபடி கேட்டான்.
“பேரென்ன?”
“ஜான்”
அங்கே சிரிப்பொலி எழுந்தது.
“என்ன ஜான்?” மீண்டும் சிரித்தார்கள்.
கண்கூசச் செய்யும் வெளிச்சம். எவரையும் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. எதிரே அமர்ந்திருப்பவனின் மூக்கை குத்த வேண்டும். ஆனால் உடலில் ஆற்றல் வற்றி கரங்களையும் கால்களையும் வெறும் நிழலென உணர்ந்தான்.
கையை மெல்ல பக்கவாட்டில் விரித்து
“செயின்ட் ஜான் தி ஹோம்லெஸ்” என சொன்னபோது சிரிக்க முயன்றான்.
அப்போது அவர்கள் சிரிக்கவில்லை. சில நொடிகள் நீண்ட அசௌகரியமான மௌனத்திற்கு பிறகு..
“வருக ஜான் தி 798. வீடற்றவர்கள் எல்லோரும் ஜான்களே. கடவுளின் பிள்ளைகள். கடவுள் பொழிந்த விந்து மழையில் உதித்த காளான்கள் போலும்.” என்றது மற்றொரு குரல். மீண்டும் வெடித்து சிரித்தார்கள். குரல் வந்த திசையை நோக்கி திரும்பக்கூட அவனால் இயலவில்லை. அவனுடைய உடற்சூடு பரிசோதிக்கப்பட்டது. ரத்த மாதிரியில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவனை அங்கிருந்து ஒரு அறைக்கு அழைத்து சென்றார்கள்.
கவசவீரன் முணுமுணுப்பது அவனுக்கு கேட்டது. “முட்டாள் அரசு. இதற்கு இவர்களை கொன்றுவிடலாம். ஒரேயொரு தோட்டா செலவு”. நகரத்தில் தொற்று பரவத் தொடங்கிய காலம் அது. திக்கு திசை தெரியாமல் இறப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்த போது மக்கள் அது வீடற்றவர்களிடம் இருந்து பரவுவதாக செய்திகளை பரப்பினர். அவர்களை சோதித்து அப்புறப்படுத்தக் கூறி நகரசபையின் முன் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு அளித்த உத்திரவாதத்தின் பேரில் இவர்களை சோதனைக்கு அழைத்து வந்தனர்.
அவனுக்கு மூன்று வேளையும் கனவினிலும் எண்ணியிராத உணவை அளித்தார்கள். பழச்சாறுகள் கொடுத்தார்கள். மாத்திரைகளை விழுங்கச் செய்தார்கள்.. மணிக்கொரு முறை அவனை சோதனை செய்ய மருத்துவர்கள் செவிலிகள் என எவரேனும் வந்தபடி இருந்தார்கள். அவனுக்கு உண்மையில் எதுவுமே செய்யவில்லை. தொண்டையில் லேசாக நெருடியதற்கு அப்பால். ஒரு சின்ன கோலிக்குண்டு அல்லது எதையும் மரிக்காத மீன் முள் ஒன்று தொண்டையில் கிடப்பது போல. உணவு உண்ணும் முன் தனக்கு இந்த கிருமியை அளித்த கடவுளுக்கு நன்றி தெரிவித்தான். முதல்நாள் இரவு அவனுடைய அன்னை கனவினில் வந்தாள். அவனுடைய வாழ்க்கையை எண்ணி பெருமித கண்ணீர் உகுத்தாள். சிறுவனாக இருந்த அவனை அணைத்துக் கொண்டு முத்தமிட்டாள். அவளுடைய உதடுகளில் இருந்து வரும் புளித்த வாடையை அணுக்கமாக உணர்ந்தான். குளிரோ அச்சமோ இல்லாமல் அமைதியாக உறங்கினான். மறுநாள் காலை உணவு கொண்டு வந்து அளித்தார்கள். மீண்டும் சோதனைகள், மருத்துவர்கள், செவிலிகள். கூண்டுப்புலி போல சுற்றி வரத் தொடங்கினான். அவனுக்கு உணவளிக்க வந்த கவசவீரனிடம் “எனக்கு ஒன்றுமில்லை, எப்போது என்னை வெளியே விடுவீர்கள்?” எனக் கேட்டான். சற்று நேரத்தில் அவன் பயன்படுத்திக் கொள்ள என்று தொடுதிரை டேப்லெட் ஒன்றை கொண்டு வந்து கொடுத்தான். அவனுக்கு அதை என்ன செய்வதென்று தெரிந்திருக்கவில்லை. போராடி அதன் காமெராவை இயக்க கற்றுக் கொண்டான். மழிக்கப்பட்ட தன் முகத்தை விதவிதமாக தற்படம் எடுத்துக் கொண்டான்.
அன்றிரவு அவன் கனவில் கறைபடிந்த பற்கள் உடைய கறுப்பு கிழவன் அவருடைய கிதாருடன் வந்தார். உறக்கமின்றி தவித்த அவனை உறங்க வைக்க சிறுவயதில் கதை சொல்லி இசைத்த அதே பாடலை அன்றிரவும் இசைத்தார். அது ஆஸ்கர் பீட்டர்சனின் பாடல். “ஒவ்வொரு இதயமும் ஒவ்வொரு இதயத்துடனும் சேர்ந்து ஒன்றாக விடுதலையை கோரினால் மட்டுமே நாம் விடுதலை அடைவோம்.”. இனம் புரியாத கண்ணீரை அந்தக் கிழவனின் குரல் கொணரும். கரைந்து அழுதபடி உறங்கிப் போனான். பிராகிருதிஸ்தான் நகரத்து ஓடையில் புழுத்துக் கிடந்த கிழவனின் சடலத்தை சிறுவனாக தான் கண்டது மனதில் உதித்ததும் திடுக்கிட்டு எழுந்தான். அவனால் ஒருகணமும் அங்கு தரித்திருக்க முடியவில்லை. வெளியேற வழியின்றி அவன் மனம் தவித்தது. உயரே தெரிந்த சிறிய சாளரத்தில் நீல வெளிச்சம் ஊடுருவியது. உணவு கொண்டு வந்த கவச வீரனிடம் “என்னை எப்போது வெளியே விடுவீர்கள்?” என்று உரக்க கேட்டான். பதிலேதும் சொல்லாமல் வெளியேறினான். மருத்துவரிடமும் செவிலியிடமும் அதையே கேட்டான். எவரும் அவனை பொருட்படுத்தவில்லை. அன்றைய இரவை எண்ணியதும் அவனுக்குள் அச்சம் மேலெழுந்தது. மாலை அவனை நோக்கி வந்த செவிலியைப் பார்த்தான். கண்கள் மட்டுமே தெரிந்தது. “சட்டென தலையை மறைத்திருந்த பாதுகாப்பு ஆடையை விலக்கிவிட்டு மன்னிக்க வேண்டும்” என சொல்லி அவள் கண்ணை நோக்கி நேராக காறி உமிழ்ந்தான். நிலைகுலைந்த அவளை தள்ளிவிட்டு வெளியேறினான். பதுங்கிப் பாய்ந்து பிடிபடாமல் பெரும் அமளி துமளிக்கு இடையே தப்பித்து வெளியேறினான். மருத்துவமனைகளைத் தவிர வேறு எங்குமே நடமாட்டம் இல்லை என்பதை கவனித்தான்.
அந்த சாலையில் அங்குமிங்கும் ஓடினான். சாலையோரங்களில் புதர் மண்டிக் கிடந்தது. நகரத்தை ஒருநாளும் அவன் அப்படிக் கண்டதில்லை. சாலையின் நாற்திசையை நோக்கியும் காறி உமிழ்ந்தான். நடுச்சாலையில் காற்சட்டையை இறக்கி விட்டு சிறுநீரால் எழுதினான். மருத்துவமனை சட்டையையும் கிழித்து எறிந்தான். சாலையோர புதருக்கு சென்று கரத்தை அடிவயிற்றுக்கு கீழே கொண்டு சென்றபோது உடலில் ஆவேசம் பற்றிக் கொண்டது. சில கணங்களுக்கு பின் உடல் தளர்ந்து எடை குறைந்து மிதப்பதாக தோன்றியது. ஆழ்ந்த அமைதியை உணர்ந்தான். அப்போது கணுக்கால் அருகே சுரீர் என ஒரு உணர்வு ஏற்பட்டது. புதருக்குள் ஒரு பாம்பு சரசரப்பதை அவனால் காண முடிந்தது. வலி கால்முழுக்கப் பரவி தசைகளை இறுக்குவதை உணர்ந்தான். மீண்டும் மருத்துவமனை திசை நோக்கி சில அடிகள் ஓடினான். ஓட ஓட வலி அவனை இறுக்குவதை உணர்ந்தான். அசைய முடியாத அளவிற்கு உடல் இறுகியதும் அவன் நின்று கொண்டிருந்த நடுச்சாலையில் கைவிரித்து கால் பிணைந்து தலை சாய்த்து படுத்தான். அது ஒரு நாற்சந்தி. சிக்னல் விளக்குகள் மினுங்கி அணைந்தபடி இருந்தன. நட்சத்திரங்களில் இருந்து அவனுடைய அன்னை இப்போது அவனை நோக்கினால் அவளுக்கு தான் என்னவாக தென்படுவேன் என கற்பனை செய்து பார்த்தான். லேசாக சிரித்தான்.
காலை தொலைக்காட்சி செய்திகளில், மரித்து பல மணிநேரங்கள் நாற்சந்தியில் கிடந்த ஆண் பிணம் அழுகாததற்கு காரணம் என்னவாக இருக்கும் என விஞ்ஞானிகளும் அறிஞர்களும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்..
***
2. தலையாட்டி
தன் எதிரே போடப்பட்டிருந்த யாருமற்ற மடக்கு நாற்காலியை வெறித்திருந்தான். நல்ல வெளிச்சம் மட்டும் இல்லையென்றால் அது ஒரு ராணுவ விசாரணை அறையை ஒத்திருக்கும் என தோன்றியபோது அவன் உடல் சிலிர்த்து அடங்கியது. அவனிருப்பது தலைநகரின் தலைமை மருத்துவமனையில் என்பதை பதட்டமடையும் தோறும் மீண்டும் மீண்டும் தனக்குள்ளாக சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். ஆனால் அவன் ஏன் அங்கு அழைத்து வரப்பட்டான் என்று தான் அவனுக்கு விளங்கவில்லை. நோய் தொற்றுக்கான பரிசோதனைகள் எதிலும் சிக்கலில்லை என்றான பின்னரே அவனுக்கு பயண ஒப்புதல் அளித்திருந்தார்கள். அந்த தேசத்தின் மறு எல்லைக்கு அவன் பயணிக்க வேண்டி இருந்தது. கிளம்ப இருந்தவனை தான் கவசவீரர்கள் வண்டியில் ஏற்றி இங்கு அழைத்து வந்துவிட்டார்கள். அவனுடைய பயண அனுமதி இனி செல்லாது. திரும்பவும் செல்வதாக இருந்தால், மீண்டும் பரிசோதனை செய்து அனுமதி பெற வேண்டும். பயணிக்க அனுமதி வழங்கப்பட்ட பனிரெண்டு மணிநேரத்திற்குள் பயணத்தை தொடங்கியிருக்க வேண்டும்.
நாளை காலை நடக்க திட்டமிடப்பட்டிருந்த தன்னுடைய திருமணத்திற்கு தன்னால் இப்போது செல்ல முடியாது என்பதை உணர்ந்து கொண்டதும் நெஞ்செலும்புகள் சுருங்கி இதயத்தை நசுக்குவதாக உணர்ந்தான். நாற்காலியில் நன்றாக சாய்ந்து கொண்டான். அவனுக்காக காத்திருக்கும் செல்வியை எண்ணிக் கொண்டான். அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்த காலக்கட்டத்தில் திரையரங்குகளில், உணவு விடுதிகளில், பேருந்துகளில் என மக்கள் கூட்டம் கூட்டமாக காலையிலும் மாலையிலும் அலைந்து கொண்டு தான் இருந்தனர். உலகம் இயல்பானதாகத்தான் இருந்தது. இடைக்காலத்தில் தான் இத்தனை சிக்கல்களும். அவனுள் ஊறியிருந்த உற்சாகம் வற்றியிருந்தது. நான்கு மணிநேரமாக வெறுமே அந்த அறையில் அமர்ந்திருந்தான்.
அவனொரு அகதி. சொந்த நாட்டில் இனச்சண்டையில் வீடிழந்து உறவிழந்து கள்ளத்தோணியில் அந்த நாட்டில் கரையொதுங்கியவன். விடுதலை இயக்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையே போர் உக்கிரமாக நடந்து வந்த காலத்தில் இவனுடைய பகுதி இயக்கத்தால் கைவிடப்பட்டு ராணுவத்தின் ஆளுகைக்கு சென்றது. அதற்கு பின்பான தீவிர கண்காணிப்பு நாட்களில் ஒருமுறை அவர்கள் தெருவோரத்தில் ஒரு வெள்ளை சிற்றுந்து வந்து நின்றது.
ராணுவத்தினர் அத்தெருவில் ஒவ்வொரு வீடாக சென்று, கதவைத் தட்டி அனைவரையும் வெளியே வரச் செய்தனர். வெள்ளை வண்டியில் வெள்ளை சாக்கை முகமூடியாக தரித்த ஒரு உருவம் அமர்ந்திருந்தது. இரு துளைகள் வழியாக கண்கள் மட்டும் தென்பட்டன. வரிசையில் ஒவ்வொருவராக அதன் முன் சென்றார்கள். அது ஒவ்வொருவரையும் கண்டு இல்லை என தலையாட்டியது. அவனுக்கு முன் மூவர் நின்றிருந்தனர். நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தது. உடல் கூசியது. அவனுடைய வாய்ப்பு வந்ததும் உற்று நோக்கிய அவ்வுருவம் ஆம் என தலையசைத்தது. அந்த கண்களில் ஏதேனும் தெரிகிறதா என நோக்கினான். அவனால் அதை எவரென கண்டுகொள்ள முடியவில்லை. “ஐயா எனக்கும் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை” என கெஞ்சினான். அவ்வுருவத்தை நோக்கி மன்றாடினான். அது தலையை திருப்பிக் கொண்டது. அவனை ஏற்றிக் கொண்டு வெள்ளை வண்டி கிளம்பியது.
அதற்கு பின் அந்த தீவு தேசத்தில் பல சிறைகள், விதவிதமான சித்திரவதைகள். அந்தக் கண்களில் விதவிதமான உணர்வுகளை ஏற்றி காலம் தள்ளினான். அவற்றில் ஒரு மன்றாட்டு இருந்ததாக எண்ணிக் கொண்டபோது தன்னை ஒரு தியாகியாக எண்ணினான். இரண்டு மூன்று நாட்கள் அந்த உணர்வு எல்லா வலியையும் கடக்க உதவியது. பின்னர் அதுவும் சலித்தது. அந்தக் கண்களில் விரோதத்தை கற்பனை செய்தபோது வெளியே சென்று அவர்களை பழி தீர்க்கும் உணர்வுகள் அவனை சிலநாட்கள் உயிர்த்துடிப்புடன் வைத்திருந்தன. விதவிதமான எதிரிகளை கற்பனை செய்தான். கணக்கு வாத்தியார், ட்யுஷன் வாத்தியார், எதிரணி ஆட்டக்காரன் என பலரையும் கொடூரமாக பழி தீர்த்தான். பலநாட்கள் கையறு நிலையில் வெறுமே உழன்று கொண்டிருந்தான். உயிருக்கு இறைஞ்சுவதை தவிர வேறு உணர்வுகள் ஏதுமில்லை.
போர் முடிந்தது. ராணுவம் அறுதி வெற்றியை நாட்டிய பின் எப்போதும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் எனும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டான். எஞ்சியிருந்த சொத்துக்களை விற்று ஏஜெண்டிடம் பணம் செலுத்தி அந்த நாட்டில் குடியேறினான்.
நாற்காலியில் இருந்து எழுந்து சாளரத்தின் அருகே சென்றான். கண்ணாடி கதவிற்கு அப்பால் நகரத்தின் எந்த சலனமும் கேட்கவில்லை. தாவாங்கட்டை அரித்தது. அணிந்திருந்த முகமூடியை இறக்கிவிட்டு சொரிந்து கொண்டான். இப்படிச் செய்வது குற்றமா என்றொரு குழப்பம் அவனுக்கு எழுந்தது. பையில் வைத்திருந்த கை சுத்திகரிப்பு திரவத்தை எடுத்து துடைத்துக் கொண்டான். அறையின் கண்ணாடி இழு கதவுகளை பிளந்து கொண்டு வெள்ளையுடை நபர் ஒருவர் வந்தார். அவர் கையில் ஒரு கோப்பு இருந்தது. நாற்காலியில் அமர்ந்தார்.
“பெயரென்ன?”
“நந்தன்’
“நல்லது திரு நந்தன். நீங்கள் இங்கே எதற்கு வரவைக்கப்பட்டிருக்கிறீர்கள் என தெரியுமா?”
“தெரியவில்லை”
“இரண்டு நாட்களுக்கு முன் உங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவருக்கு இன்று காலை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே அவரளித்த தகவலின் பேரில் உங்களை இங்கே அழைத்து வந்தோம்.”
“ஐயா நான் நேற்றுதான் பயண அனுமதி பெற்றேன். எந்த சிக்கலும் இல்லை என்றால் தானே அனுமதிப்பார்கள்.” எனச்சொல்லி அனுமதி சீட்டுகளை நீட்டினான்.
“தயவு செய்து அதை உள்ளேயே வைத்திருங்கள்.” என சைகையால் வேகவேகமாக மறுத்தார். “மேலும் அது இப்போது பயனில்லை.”
“இப்போது என்னதான் தீர்வு? எனக்கு நாளை காலை திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது”
“மன்னிக்க வேண்டும் நந்தன், அரசின் சட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். நாங்கள் அவர்களுக்கு உங்களை பற்றி தெரியப்படுத்தி விடுகிறோம். பதினான்கு நாட்கள் நீங்கள் தனிமையில் கண்காணிக்கப்படுவீர்கள். நோய் நிலையை பொருத்து அடுத்த முடிவு எடுக்கப்படும். உங்களின் நன்மை பொருட்டும் மக்களின் நன்மை பொருட்டும் இதை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோருகிறோம். நன்றி”
என சொல்லி கோப்பை மூடி எழுந்தார்.
திகைப்புடன் அவர் கிளம்பி செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான். அறையை விட்டு வெளியேற இருந்தவரை நோக்கி.
”ஒரேயொரு நிமிடம், என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக சொன்னவர் யாரென கூற முடியுமா? எனக்கு அப்படி எவரையும் நினைவில் இல்லை.”
சிலநொடிகள் அவனை உற்று நோக்கிய பின் கோப்பை திறந்தார். “மிஸ். தீபா” என்றார். “உங்களுடைய ரகசியங்களில் அரசு குறுக்கிடுவதாக எண்ணக் கூடாது, மன்னிக்க வேண்டும், இரண்டு நாட்களுக்கு முன் உங்களுடன் உறவு கொண்டதாக அவர் அளித்த தகவலின் பேரிலேயே நீங்கள் தனிமைபடுத்தப் பட்டிருக்கிறீர்கள்.” என்றார்.
சாத்தியமே இல்லை என அதை மறுத்து வாதாட ஆவேசமாக எழுந்தான். ஆனால் அது வியர்த்தம் என்றுணர்ந்த போது மெளனமாக மீண்டும் இருக்கையில் அமர்ந்தான். அவனை கவச வீரர்கள் அங்கிருந்து மற்றொரு அறைக்கு கொண்டு சென்றார்கள்.
நான்கு மாதங்களுக்கு முன் அவனுடனான உறவை முறித்துக் கொண்ட தீபா அவனுடைய திருமணச் செய்தியை அறிந்து கொண்டதாகவும் அதற்காக இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள். கண்ணை ஒரு கணம் மூடித்திறந்த போது தீபா அவனை நோக்கி சிரிப்பதை காண முடிந்தது. காலை ஓங்கி தரையில் உதைத்தான். கவசவீரர்கள் அவனை நின்று நோக்கினார்கள். ஒன்றுமில்லை என தலையாட்டி விட்டு தலைகுனிந்து தொடர்ந்து நடந்தான். மீண்டும் கண்மூடி திறந்தபோது துலங்கிய தீபாவின் முகத்தை பார்த்து அப்போது அவனும் புன்னகைத்தான்.
***
3. வசுதைவ குடும்பகம்
“சிவன் ராத்திரியோட குளிரு சிவசிவான்னு போயிரும்னு சொல்வாய்ங்க. என்னத்த போவுது. வெய்யில் மண்டைய பொளக்குது ஆனா ஒரே கூதலா இருக்கு.” பெருமாள் காதை மறைத்து கட்டியிருந்த அரக்குநிற கம்பளித்துண்டை இறுக்கிக் கொண்டு பெஞ்சில் அமர்ந்தார். “துளிக்கூண்டு இஞ்சி சேத்து டீயை போடு. ரவையிலேந்து தொண்ட கவ்வுது.” என செருமினார். வையாபுரிபட்டியில் மொத்தமே இரண்டு கடைகள். ஒன்று அந்த டீ மற்றும் பலகாரக்கடை மற்றொன்று பலசரக்கு கடை.
காமாட்சி சுந்தரம் (தற்போது சிங்கப்பூர் சுந்தரம்) சொந்தமாக மாடு வைத்திருப்பவர். ஊரிலிருந்து திரும்பியவர் பாலை என்ன செய்வதென்று தெரியாமல், ஊருக்கு வந்து செல்லும் ஒரே சிற்றுந்து நிற்கும் மருதமர நிழலிலேயே பொழுதை போக்க கடை போட்டார்.
பேரனோடு கட்டிட வேலைக்கு புறப்பட்டு வந்த மருதாயி பேரனுக்கு குக்கீஸ் வாங்கி கொடுத்தார். “வானொலியில் அன்றைய நாளுக்கான ஆன்மீக நற்செய்தியை சுவாமி சார்வ பௌமர் மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். “வசுதைவ குடும்பகம்.. இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியும், புல்லும் புழுவும், எலியும் பூனையும், நாயும் நானும் நீங்களும், ஆம் நாமெல்லாம் ஒரு குடும்பம், இந்த உலகமே ஒரு குடும்பம்.” அந்த சொல்லை நினைவுகூர முயன்றார். வாசுதேவன் குடும்பம் என உதடுகள் உச்சரித்தபோது அதில் ஏதோ ஒரு பிழை என தோன்றியது. .
வயசாளிகள் வழக்கம்போல் கண்ணாடி லோட்டாவில் தேநீரை அவ்வப்போது உறிஞ்சியபடி தினத்தந்தியை விரித்துகொண்டு உலக நிலவரங்கள் குறித்தும், உள்ளூர் தொடுப்புகள் குறித்தும் பேச தொடங்கினார்கள். “சுந்தரம், இந்த வைரஸ் காச்ச பத்தி ஒரே அமளிதுமளியா இருக்கே, எந்த பக்கத்த திருப்புனாலும், டிவிய பாத்தாலும் அதையே பேசுறாய்ங்க” என்றார் பெருமாள்
கடையில் தொங்கிக்கொண்டிருந்த லேஸ் பாக்கெட்டை வாங்கிக்கொடுத்து அழுது கண்ணை கசக்கிய சிறுமியை ஆற்றுப்படுத்தினார் ஒரு தந்தை. எதிரே அமர்ந்திருந்த சுப்பையா“ஆமா, சாதா காச்ச சளி மாரிதான் இருக்குமாம். ரெம்ப சனம் செத்துருச்சுன்னு சொல்றாய்ங்க.” எனச்சொல்லி பையில் வைத்திருந்த கைபேசியில் ஒலித்துக் கொண்டிருந்த ‘வாழநினைத்தால் வாழலாம்’ பாடலை நிறுத்திவிட்டு ஒரு காணொளியை காட்டினார் “பெருமாளு என்ன கருமாந்திரத்தையோ இந்த சப்ப மூக்கனுங்க திங்குராய்ங்க” என்றார். பெருமாள் அந்த கைபேசியை பார்த்துவிட்டு “இது எம்புட்டு ரூவா? முந்தானா ஊருலேந்து வந்த கோவால பாக்க காரைக்குடி போனோம்ல, நீ வெச்சுக்க மாமான்னு இந்தமாதிரி ஒன்ன கொண்டாந்து கொடுத்தான். நமக்கு ஒரு இழவும் வெளங்கல. சின்ன குட்டிக்கு கொடுத்துட்டேன்” என்றார். “வெலை என்னத்த கண்டேன், மருமவன் வாங்கியாந்து கொடுத்தான், அப்புடியே பழகிகிட வேண்டியதுதான்”.என்றார் சுப்பையா.
சாலையில் விரைந்து கொண்டிருந்த செல்லத்தை கவனித்த சுந்தரம் “அக்கோவ், உனக்கொரு பொட்டி வந்துருக்கு. நேத்தே வந்துருச்சு” என்றபடி டேப் ஒட்டியிருந்த பெட்டியை அளித்தார்.
பட்டுச்சீலையுடன் வந்த பாலாயி கழுத்தில் மின்னிய புதிய சங்கிலியை பார்த்து என்னவென்று விசாரித்தார் மருதாயி. “இதுவாக்கா தம்பி அனுப்பிச்சது. ரெண்டு பவுனு.” என்றாள். கட்டிட வேலைக்கு அழைத்து செல்ல வந்த சின்ன யானையில் மருதாயியும் பேரனும் ஏறிக்கொண்டார்கள். “நாளைக்கு வேலைக்கு வாறன் மேஸ்திரியாண்ட சொல்லிட்டேன்.. ஏம்பல்ல கல்யாணம்” என்று முன்னிருக்கையில் சொல்லிவிட்டு பேருந்துக்காக நின்றாள். வடை மாஸ்டர் கையை அவனுடைய ஜீன்ஸ் கால் சட்டையில் துடைத்துக் கொண்டு இரு வயசாளிகளுக்கும் இரண்டு தட்டில் வடை சட்னி வைத்துக் கொடுத்தான். “பச்ச தவளைய திங்கிரானுவ மனுஷனுவலா இவனுவ”. “நம்மூரு சாம்பார் ரசம் எல்லாம் அப்படி விக்குதாம், வாங்கி வாங்கி குடிக்கிறானுவ” “நம்மளை எல்லாம் ஒரு நோயும் அண்டாது, நம்ம சாப்பாடு அப்புடி|” “அப்புறம் இந்த வெயிலுக்கு எந்த வைரசு மைரசு ஒன்னும் வராது இருவரும் சிரித்தார்கள். சுந்தரமும் சேர்ந்து கொண்டார்.
சின்ன யானையில் இருந்து அரைலிட்டர் செவன்-அப் போத்தல்களை இறக்கினார்கள். “காஞ்சிவரத்துல யாருக்கோ வந்துருக்காம், அப்புறம் கோயம்புத்தூர்ல வந்துச்சுன்னு சொன்னாய்ங்க”
“வையாவுரிபட்டிக்கு வரணும்னா புதுப்பட்டில இறங்கி, பஸ்சு மாறி ‘பவானிய பிடிச்சு வாரதுக்குள்ள வைரசுக்கு அந்து போயிரும்” என்றதும் பேருந்துக்கு நின்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.
பவானி மினி பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் கண்ணில் அந்த வெள்ளை வாகனம் தென்பட்டது. மருதமர நிழலில் நின்ற வெள்ளைநிற ஜிப்சி வண்டியில் அரசு சுகாதாரத்துறை என ஒட்டியிருந்தது. பச்சை நிற முகமூடி அணிந்த மூவர் அதில் அமர்ந்திருந்தனர். மடியிலிருந்த தாளை சரிபார்த்துக் கொண்டு ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டி நேரே சுந்தரத்தை பார்த்து முன்னிருக்கையில் அமர்ந்திருப்பவர் கேட்டார். “இங்க ராமதுரை வீடு எங்க இருக்கு?” சுந்தரம் பவ்யமாக எழுந்து வந்தார் முகமூடிக்குள் இருந்து அவர் குரல் கம்மலாக கேட்பதாக தோன்றியது சுந்தரத்திற்கு. “தெக்கால ஒரு எட்டு போனப்பொறவு திடலுக்கு அந்தாண்ட இருக்கும் சார். அய்யாவோட மவள கட்டுனவர் தான் அவரு, இவரும் அங்கனதான் இருக்கார்” என பெருமாளை கைக்காட்டினார் சுந்தரம். பெருமாள் பீதியில் எழுந்து நின்றார் “அய்யா, என்ன விஷயமுங்க, எந்த தப்பு தன்டாவுக்கும் போறது இல்லைங்க” என்றார். “ஃபோன் அடிச்சு அடிச்சு பாத்தோம் எடுக்கவே இல்ல. முந்தாநாள் மதுரைக்கு ஷார்ஜாலேந்து வந்த கோபால பாக்க போனீங்களா?”
“ஒன்னுமில்ல அவரு வந்த பிளேனுல மூனு பேருக்கு காச்ச கண்டுருக்கு. அவருக்கும் நேத்துலேந்து ஒடம்பு சுகமில்ல. டெஸ்டுக்கு போயிருக்கு அதான் இங்க சோதிச்சுட்டு போலாம்னு வந்தோம்” என்றார். பெருமாள் உடல் நடுங்கியபடி வழிகாட்ட முன்னே நடந்து சென்றார். அவருடைய சிந்தனைகள் எங்கெங்கோ சென்றன. ‘விளங்கியம்மா இன்னும் ஒரேயொரு தொப்பம் பாக்க விடு’ என மனமுருக வேண்டிக் கொண்டார்.
வண்டி கிளம்பியதும் சுந்தரம் சாமான்களை உள்ளே வைத்துவிட்டு படலை இறக்கிவிட்டு “பனையூர் காமட்சியாத்தா” என முனகியபடி நேராக கோவிலிருக்கும் திசையில் விரைந்தார். மனமுருக வேண்டிக்கொண்டு மதியத்திற்கு மேல் கடைக்கு திரும்பியபோது மருத மரத்தைச் சுற்றியும் கடையை சுற்றியும் வெள்ளை தூள் தூவப்பட்டிருந்தது. மருதமர நிழலில் முகக்கவசமும் கையுறையும் அணிந்து காவலர்கள் தடுப்பரண் அமைத்து அமர்ந்திருந்தார்கள். அவர்களை கடந்து செல்லும்போது பொத்துக்கொண்டு வந்த புகைச்சல், இருமலை சுந்தரம் மிகவும் சிரமப்பட்டுத்தான் அடக்க வேண்டியிருந்தது. ஊரின் இரண்டு வழிகளிலும் தடுப்பரண் போடப்பட்டதும் சுந்தரத்திற்கு தன்னுடைய ஊர் தக்குனூன்டாக சிறுத்து விட்டதாக தோன்றியது.
***
சுனில் கிருஷ்ணன் – ஒரு ஆயுர்வேத மருத்துவரும் கூட. யுவபுரஸ்கார் விருதாளர் மூன்று கட்டுரைத்தொகுப்புகள், தொகுப்பு நூல்கள், சிறுகதைத் தொகுப்பு, அண்மையில் இவரது நாவல் நீலகண்டம் வெளியானது.
ஷானின் வெட்டாட்டத்திற்கு பின் என்கிற எதிர்பார்ப்பு அவருக்கு நிறையவே அழுத்தம் கொடுத்திருக்கும். அதை எதிர்கொள்வது ஒருவித போதையும் கூட. இந்நாவலை அவர் எழுத எடுத்துக்கொண்ட சிரமங்கள், கள ஆய்வு, வாசிப்பு என உழைப்பைக் கொட்டி எழுதி முடித்திருக்கிறார். அது வெற்றியும் அடைந்திருக்கிறது. முதல் காரணமே இந்த நாவலின் கேன்வாஸ் குறித்த அவரது நம்பிக்கை. இரண்டு பாகமாய் வெளியிடும் திட்டம், ஆகவே நிறுத்தி நிதானமாக முதல் பாகத்தில் நிறைவான ஓட்டங்களை எடுத்துள்ளார்.
தமிழுக்கு டான் பிரவுன்கள் தேவை என்கிற கட்டுரை குறித்து பேசிக்கொண்ட நினைவுகள் வந்து போயின.
தங்கம் – தமிழில் பெரிதாக treasure hunt படங்கள் கூட வெளி வந்ததில்லை. சிவப்பு நிற வண்ணத்தை பாய்ச்சியபடி க்ளோசப் முகத்தால் மிரட்டும் வில்லன்கள் என்னதான் தங்கக்கட்டிகளைக் கடத்தினாலும், கதாநாயகியைக் கடத்தியதற்காகவோ, கதாநாயகனின் தந்தையை கொன்றதற்காகவோ தான் கொல்லப்படுவார். ஆனால் இந்திய மனதின் மிகப்பெரும் ஆசைகளில் ஒன்றாக தங்கம் எத்தனை நூறு ஆண்டுகளாய் இருந்து வருகிறது. தங்கத்திற்கான உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தை இந்தியா எனச்சொல்கிறார்கள்.
ஒரு பதிப்பாளனாக மட்டுமல்லாது, வாசகனாகவும் வெகுஜன இலக்கியங்கள், வெகுஜன அறிவியல் நூல்கள் மீது பெரும் நம்பிக்கை உள்ளவன் என்கிற வகையில் இவ்வகையிலான நாவல்கள் இன்னும் கணிசமாக எழுதப்பட்டால் தமிழில் வாசிப்பதற்கான புதிய வாசகர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவு கூடும். கல்லூரி நாட்களில் சுஜாதாவை வாசிப்பது ஒரு தனி பிம்பத்தைக் கட்டமைப்பது போன்ற சூழல். மாதத்திற்கு ஒன்றிலிருந்து ஐந்து எழுதும் வகையறாக்களை இதில் சேர்த்துக்கொள்ள முடியாது, அதற்கு இணையாக தீவிர இலக்கியத்தில் எழுதித்தள்ளும் இயந்திரங்களும் இருக்கின்றன என்பதையும் கருத்தில் கொண்டே இவற்றைச் சொல்கிறேன்.
பொன்னியை வாசிப்பது என்பது ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட்டில் அந்தி மாலையிலிருந்து இரவு வரை நண்பருடன் அமரும் வைன் டின்னர் போன்றது. ஒரு பாஸ்கெட் நிறைய நான்களை ஆர்டர் செய்துவிட்டு முழுமையாக போத்தலையும், ‘நான்’களை முழுமையாகத் தீர்க்கத் தேவைப்படும் கால அளவே.
உலகில் உள்ள அரசாங்க பெட்டகங்களில் இருந்தெல்லாம் தங்கங்களைக் கொள்ளை அடிக்கும் க்ரைம் காட்சிகள் ஒருபுறம், பொன்னி சுரங்கங்களை அமைப்பதற்கான முயற்சியும், இடர்களும் என ஒருபுறமும், மற்றொரு புறத்தில் பொன்னியைக் கொல்வதற்கான முயற்சியும் பொன்னியை வேவு பார்க்கும் முயற்சியும். இவை எல்லாமும் இரணிய சேனை என்கிற சோழர் காலத்திலிருந்து தங்கப்புதையலை பாதுகாக்கும் நாவலின் பிரதான பாத்திரங்களை ஒன்றிணைக்கும் ஃப்ளாஷ்பேக் இந்நாவலின் பெரும்பலம்.
நாவலின் ஆன்மா கோலார் தங்க வயல் செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம், ஷானின் உழைப்பும் எழுத்துத்திறனும் அதை கச்சிதமாகக் காட்சிப்படுத்தியது. கோலாரில் தங்க உற்பத்தி குறைந்து வந்த காலக்கட்டம் அது, கிட்டத்தட்ட 8000 டன்கள் வரை சுரண்டி முடிக்கின்ற காலத்தில் explorationக்காக வரும் ஜேம்ஸ் துரையின் பின்னணியிலிருந்து தொடங்கும் கதை, அவரது காதல், சூழ்ச்சி என்கிற வெவ்வேறு முனைகளில் இருந்து ஒரு மையத்தை நோக்கி கதை நகர்கிறது. கதையின் மையம் என்னும் கண்டுபிடிக்கப்படாத தங்கப்புதையல்கள் குறித்த ரகசியம்.
தற்காலத்தில் நடக்கும் கதையின் மையமும் இரணிய சேனை பாதுகாத்து வரும் அந்த ரகசியம் தான். கொலை முயற்சி, சூது, தங்கச் சுரங்கம் பற்றிய தகவலகள், ஆளுமை மிக்க கதாபாத்திரங்கள், காதல் காட்சி என எல்லா விதத்திலும் திறம்பட கையாண்டிருக்கும் ஷான் ஆச்சரியப்படுத்திய ஒரு விசயம் அரசியல்.
பொதுவாக liberated எண்ணம் கொண்ட ஷானின் கட்டுரைகள் முகநூல் பதிவுகள் அறிவியல் மற்றும் மானுடத்தின் மேன்மைகளுக்கான அறம் என்று அவர் நம்புகிற சுதந்திர மனநிலையில், பிரதேச உணர்வு, இன உணர்வுகளைக் கடந்தது. நாவலின் பிரதான பாத்திரமான பொன்னியை (ஸ்பாய்லர் அலெர்ட்***) உலகமே வியக்கும் குற்றங்களை செய்தும் அவற்றை நியாயப்படுத்தி கோலார் தங்க வயலை மீண்டும் செயல்பட வைக்கும் செலுத்து விசை(driving force)ஒரு இன உணர்வை, பிரதேசத்திற்கான உணர்வைக் கொண்டது இதையே கொஞ்சம் Zoom Out செய்து பார்த்தால் தேசியம் அல்லது தேசபக்தி என்றும் கருதலாம். ஆனால் அவற்றின் சுத்தத்தன்மை குறித்த எந்த ஐயப்பாடும் எவர் ஒருவருக்கும் வந்துவிடாது, கோலார் தங்க வயலின் வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு இனத்து மக்கள் மீது மட்டும் தழும்பும், விரக்தியுமே எஞ்சியிருப்பதை தன் கள ஆய்வு மற்றும் வாசிப்பின் வழி அவர் உறுதி செய்துள்ளதே. இப்படியான பாவங்களை சுமந்து நிற்கின்ற ஒரு நிலத்தின் மீது மக்களுக்கு இருக்கின்ற பற்றும் உணர்வும் தங்கத்தை விட ஒருபடி மேலானது என்பதை பிரதான கதாப்பாத்திரங்களான பொன்னி, பொன்னியின் சகோதரர்கள் மற்றும் அவர்களைக் கொல்ல திட்டமிடுபவர்கள் இருவரது நோக்கிலும் இருப்பதை ஆசிரியர் சித்திரப்படுத்தியிருப்பது வாசிப்பை உணர்வுபூர்வமாக மாற்றி இருக்கிறது.
எல்லோருமே மெச்சிய கதாபாத்திரம் செல்லம்மா, பெண்களை மதிப்புடன் விரும்புகிற கலைஞன் தனித்த வெற்றி பெறுவான் என்பது எனது நம்பிக்கை. ஐரோப்பாவின் கடற்கரை ஒன்றில் நடந்துவரும் பொன்னியாக இருக்கட்டும், பழங்குடியின செல்லம்மாவாக இருக்கட்டும் பாத்திரப்படைப்பில் கம்பீரமாக சித்தரித்ததும் இந்நாவலின் வெற்றிக்கு ஒரு காரணம். துரையின் கடிதத்தை சென்னைக்கு அஞ்சல் செய்யக் கிளம்பும் அவரது உதவியாளர் பழனி வீட்டை விட்டுக் கடந்து சென்றதும், சைக்கிளை விட்டு இறங்கி அக்கடிதத்தை வாசிக்க ஆரம்பித்த இடத்தில் இருந்து பழனியின் கதாபாத்திரம் தனி ஆவர்த்தனம் நடத்துகிறது. கிட்டத்தட்ட 20 பாத்திரங்களை அவர்தம் பின்னணிக் கதையோடு மிகச்சரியான அளவிற்கு தைக்கப்பட்டுள்ள இப்புனைவு எல்லா தரப்பு வாசகனுக்கும் பிடித்த நூலாக இதைக்கருத வைக்கும். இதில் தங்கச் சுரங்கங்கள் பற்றி ஷான் தரும் தகவல்கள் பிரதான காரணியாக அமைந்துள்ளது. மிக பிரம்மாணடமான நாவலாக இதை மாற்ற வைத்ததும் இதுவே. ஆப்பிரிக்காவில் செயற்படாமல் இருக்கின்ற தங்கச்சுரங்கம், கோஸ்ட் மைனர்ஸ் என நம்மை ஒரேமூச்சில் வாசிக்க வைக்க அவர் நிறையவே உழைத்திருக்கிறார். ஆய்வு, உழைப்பு எல்லாமே கைகூடியும் வந்திருக்கிறது.
காட்சிப்பூர்வமாக என்றால் முழுமையாகத் திரைப்படம் என்று சொல்ல முடியாது, வெட்டாட்டத்திலும் இவ்வகையிலான விளக்கம் தான். ஒரு திரைக்கதை ஆசிரியராக அவருக்கு இது மிக நன்றாகத் தெரிந்திருக்கும். இது ஒரு நல்ல கிராஃபிக் நாவல் போன்ற என்கிற உவமை சரியானதாக இருக்கும். சித்திரங்கள், வசனங்கள், வடிவமைப்பு என இவையெல்லாம் ஷானின் ஆக்கம் இதை motion, animate செய்து உள்வாங்கிக் கொள்வது
வாசகனின் கற்பனை. அந்த இடைவெளியை விடத் தெரிந்த வெற்றிகரமான எழுத்தாளன் ஷான். (பல இலக்கிய க்ளைம்களில் இந்த வித்தை தெரியாமல் தாங்கள் பார்த்த அயல் தேசத்து திரைப்படம் பல்லிளிக்கும் என்பதைக் கனிவுடன் கூறிக்கொண்டு)
இப்படியான ஒரு நாவலுக்கு தேவைப்படும் உழைப்பு ஒரு எழுத்தாளனுக்கே பெரும் transitionஐ கொடுத்திருக்கும் (நாவல் எழுதத் தொடங்கும் முன்னரும் பின்னருமாக) என்கிற ஒரு எண்ணமும் வந்துபோனது. மில்லிமீட்டர் அளவில் லாஜிக் இடித்தல்கள் இருந்தாலும் கொசுவைப்போல் அடித்து விட்டு வாசிக்கலாம். நாவலின் மிகப்பெரும் பலமாக இருப்பதும் அதேபோல் படைப்பின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது நிலம் குறித்த மக்களுக்கான அசலான உணர்வும், வேட்கையும் தான். ஏனெனில் தங்கத்திற்காக எத்தனை ஆசைப்படும் இம்மக்களுக்கு நிலம் தான் முதல் கனவு.