Home Blog Page 91

ரக்த மணம் – சுரேஷ் பிரதீப்

0
ஓவியம் - ஜியோகொமொ பாட்ரி

1

புதிய அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. பழைய அரசாங்கத்தை எதிர்த்து நடந்த நீண்ட கிளர்ச்சியின் போது இந்த அரசில் நிதியமைச்சராக பொறுப்பேற்றிந்த அவரை பாராட்டி நான் சில வருடங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரைகள் காரணமாக எனக்கு அவருடன் தொடர்பு ஏற்பட்டிருந்தது. நான் நினைத்துக் கொண்டிருந்த அளவு அவர் ஒன்றும் நல்லவரில்லை என்று தெரிந்து நான் விலகிவிட்டாலும் அவரைப் பற்றிய என் சொற்கள் ஒரு வலி நிவாரணியாக அவருக்குள்ளே தங்கிவிட்டிருந்தன என்று நினைக்கிறேன். கிளர்ச்சி வென்ற மறுநாள் வேலை இல்லாமல் விட்டேற்றியாக சுற்றிக் கொண்டிருந்த எனக்கு புதிய அரசாங்கத்துக்கான பணத்தினை அச்சிடும் தொழிற்சாலைக்கு மேலாளராக நான் நியமிக்கப்பட்டிருக்கும் பணி ஆணை வந்தது.

2

பணம் அச்சடிக்கும் பணிகள் அதன்போக்கில் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் எவ்வளவு நோட்டுகள்  அச்சிடப்படுகின்றன என்ற கணக்கு அன்று மாலை எனக்கு வரும். அதில் எந்த நோட்டுக்கட்டையும் பிரித்துப் பரிசோதிக்கும் அதிகாரம் எனக்கு இருந்தது. நான் அமர்ந்திருக்கும் விசாலமான அறைக்குள் இருந்த தடித்த கதவுகள் கொண்ட மிகப்பாதுகாப்பான அறையில் பணக்கட்டுகளை வைப்பார்கள். இரவுப்பணிக்காக வரும் இன்னொரு மேலாளரிடம் நான் பொறுப்பினை ஒப்படைத்து புறப்பட வேண்டும். பணத்தை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பது அவரது பணி. எனக்கு பகலில் பெரிதாக வேலை ஒன்றும் இருக்காது. நோட்டுகள் அச்சடிக்கும் இந்த கட்டிடம் புது அரசாங்கம் கிளர்ச்சி குழுக்களில் ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் இடமாக இருந்தது. புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டதும் பழைய அரசின் தலைவருடைய ஆசிரியரின் முகத்துடன் அச்சடிக்கப்பட்ட நோட்டுகளின் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இன்றைய தலைவரின் ஆசிரியர் என்று நம்பப்படுகிறவரின் முகத்துடன் புது நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் நாடு முழுவதும் தொடங்கின. தலைநகரின் மையத்திலும் அதேநேரம் புழக்கம் குறைவாகவும் இருந்த இந்த கட்டிடம் நோட்டுகளில் பெரும்பகுதியை அச்சடித்தது என்றாலும் மேலாளரான நான் பகல் முழுக்க வெறுமனே அமர்ந்திருந்தேன். ஒரு வாரத்திலேயே என் வேலை வெறுமனே அதிகாரம் செய்வதுதான் என்று தெரிந்துவிட்டது. ஆனால் அந்த அறிதல் ஏற்பட்ட மறுநாளில் இருந்து மனதில் சஞ்சலம் கலந்த பயம் ஏற்படத் தொடங்கியது. கனத்த மௌனத்துடன் நிலைத்திருக்கும் என் அலுவலக அறை என் பயத்தை பல மடங்கு உயரச் செய்தது. கட்டிடத்தைவிட்டு நான் வெளியேறிச் செல்ல யாரிடமும் அனுமதி கேட்க வேண்டாம் என்றாலும் பயத்தின் காரணமாக நான் வெளியே செல்லவில்லை.

பனிமூடிய சிகரங்களும் நிலத்தடி வசிப்பிடமும் – பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

0

சைகள் குறைந்திருந்த சர்ச் வீதியில் ஒரு பூனைக்காக நான் காத்திருந்தேன்.  அப்பூனை ஒரு பிரித்தானியர் கால பங்களாவின் இடப்பக்கத்தில், மூட முடியாதபடி உடைந்திருக்கும் மரக்கதவுகளை உடைய சாளரத்தின் நூற்றாண்டு கால இருளிலிருந்து வெளியே குதித்து, அவசரமேயில்லாமல் நடந்து சுற்றுச்சுவரில் துருப்பிடித்து ஒட்டிக் கொண்டிருக்கும் வெளிப்புறக் கதவருகே வந்து நிற்கும்.  அதன் முகத்தில் எந்தச் சலனத்தையும் எதிர்பார்க்க முடியாது.  இந்த உலகில் அதன் தேவைகளென்று எதுவுமேயில்லை என்பதைப் போல அசைவின்றி நிற்கும்.  பூனையின் நிதானத்திற்கு பழகிவிட்ட நான், என் கையிலிருக்கும் அலுமினிய உறையைப் பிரித்து கோழி இறைச்சித் துண்டுகளை அதனருகே வீசுவேன்.  அந்தப் பூனைக்கு ஒரு வழக்கமிருக்கிறது.  இறைச்சித் துண்டுகளைச் சுற்றி நடந்து சிதறிக் கிடக்கும் துண்டுகளில் முதலில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தின்று முடித்ததும் என்னைப் பார்க்கும்.  அப்போது நான் அங்கிருந்து நகர்ந்துவிட வேண்டும்.  மிகத் தாமதமாகத்தான் பூனையின் இந்த வழக்கத்தை கவனித்தேன் (எவையெல்லாம் நம்முன்னே தொடர்ந்து நிகழ்கின்றனவோ அவற்றில் நமது கவனம் குவிவதற்கு வெகு காலமாகிறது).  இன்று அந்தப் பூனையைக் காணவில்லை.  சர்ச் வீதியிலிருக்கும் எனது ஒரே பிணைப்பு அதுதான்.  அதை விட்டால் கடந்த பத்தாண்டுகளாக ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் நான் செல்லும் “பனை” எனப் பெயரிடப்பட்டிருக்கும் ஒரு மதுபான விடுதி.  அதற்கு எதிரே தான் வீதியின் மறுகரையில் இருளிலிருந்து தோன்றும் பூனை வசிக்கும் பங்களா இருக்கிறது.  வெகு அரிதாகத்தான் அதில் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்.  அல்லது அதைப் போன்ற சிதிலமடைந்து கொண்டிருக்கும் இடத்தில் வசிக்கும் துயரத்தை மனிதர்கள் யாருக்கும் வழங்க விரும்பாத நான் அந்தப் பூனை மட்டுமே அங்கே வசிக்கிறதென்று நம்ப விரும்புகிறேன்.  நாயோ, பூனையோ சிதிலங்களின் மீது கால்வைத்து நடப்பதைப் பார்ப்பதே துயரத்தை அதிகரித்து விடுகிறது.

       கையிலிருக்கும் இறைச்சித் துண்டுகளை உறையோடு குப்பைத் தொட்டியில் வீசினேன். குப்பைத் தொட்டியைச் சுற்றிலும் மூச்சடைக்கச் செய்யும் வீச்சம். எதிர் நடைபாதையில் மோமோஸ் வேகவைக்கப்படும் தள்ளுவண்டியிலிருந்து நீராவி எழுந்து, வளைந்திருக்கும் விளக்குக் கம்பங்களின் தலையிலிருந்து பொங்கும் ஒளியில் கரைவதைப் பார்த்தேன்.  மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகேயிருந்த தள்ளுவண்டியைச் சுற்றி சில இளம்பெண்கள் நின்றிருந்தனர்.  அவர்களுடைய ஆடைகள் முழுக்க மேற்கத்திய பாணியிலிருந்தன.  பாக்ஸர் ஷார்ட்ஸ் அளவிலான கீழாடை அணிந்த பெண்கள் இப்போது அதிகமாகியிருக்கிறார்கள் (நான் இந்த வீதியில் நுழைந்த நாட்களில் வெளிர் நீலநிற ஜீன்ஸ் கால்சட்டையும், வெள்ளை அல்லது கருப்பு நிற சட்டையுமே இளம்பெண்களின் உடையணியும் பாணியாக இருந்தது). யாராவது ஒருவர் கால மாற்றத்தை உற்றுக் கவனிக்க விரும்பினால் அவர்கள் பெண்களின் உடைகளைத் தான் முதலில் கவனிக்க வேண்டும். அவர்களது வெண்ணிறக் கால்களின் பச்சை நரம்புகள் உடலைச் சுற்றிப் படர்ந்து விளக்குக் கம்பங்கள், கட்டிடங்கள், மரங்களென சகல உயரங்களையுமே மூடுமென்ற எனது உறக்கம் வராத இரவுநேரக் கற்பனையை ஒவ்வொரு முறையும் வெண்ணிறக் கால்களின் பச்சை நரம்புகளைப் பார்க்கும் போது நினைப்பேன்.  பச்சை நரம்புகள் என்னுடைய போர்வைக்குள் நுழைந்து சர்ச் வீதியின் மணங்களோடு என் மீது இலை பரப்பி மலர் விரிக்கும் இரவுகளில் பெண்ணுடலின் பிரத்யேகமான தசைகள் எனது கண்களின் மீது அசையும்.

       மீண்டும் மதுபான விடுதிக்குத் திரும்பி குளிர்ச்சியாக ஒரு பியரை அருந்த விரும்பினேன்.  ஆனால் இன்று வராமல் போன பூனையைப் பார்க்கும் வரை நேரம் கடத்தவே அங்கே செல்ல விரும்பினேன் என்று உணர்ந்தேன்.  எத்திசையில் செல்வதென்று குழம்பினேன் (பிரிகேட் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் எனது காருக்குச் சென்றால் வேறெங்கும் போகாமல் ஃபிரேஸர் டவுனிலிருக்கும் எனது அடுக்குமாடிக் குடியிருப்பிற்குத் திரும்புவேன்).  பர்ட்டன் சென்டரின் உறுதியான தோற்றமும், வீதியை நிறைத்திருக்கும் மரங்களின் நிழலும் எனது குழப்பத்தை மேலும் அதிகரித்தன.  இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த இருசக்கர வாகனமொன்று அதன் ஆசனவாயிலிருந்து வரும் உறுமலோடு வேகமாகச் சென்றது.  எதிர்காலம் என்ற ஒன்றில் நான் நுழைந்து வழி தெரியாமல் நிற்பதைப் போல உணர்ந்தேன்.  நேரம் கடந்து விட்டதால் சர்ச் வீதியிலிருக்கும் புத்தகக் கடைகளில் ஏதாவது ஒன்றிற்கு செல்லவும் முடியாது.  மெட்ரோ இரயில் நிலையத்தின் சுவரில் அடர்த்தியான நிறத்தைப் பின்னணியாகக் கொண்டு வரையப்பட்டிருக்கும் சிறுவர்களின் முகங்களைப் பார்த்தேன்.  இரயில் நிலையத்தின் படிக்கட்டுகள் சர்ச் வீதியில் இறங்கிய நாட்களுக்கு முன்பிருந்தே இங்கே வருகிறேன் என்பதால் இந்த ஓவியம் வெறும் நிறமாகத் துவங்கி உருவங்களாக மாறி முற்றுப் பெற்றது வரை நான் பார்த்திருக்கிறேன்.  இனி அவை வளர முடியாது.  வளர்ச்சியென்ற ஒன்றை அறிந்தேயிராத ஓவியச் சிறுவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படவும் மாட்டார்கள்.

  என்னைப் போலவே எல்லோரும் சர்ச் வீதிக்கு வருகிறார்கள்.
  நோக்கமுள்ளவர்கள்
  வேடிக்கை பார்ப்பவர்கள்
  ஊர்சுற்றிகள்
  சுற்றுலா வந்தவர்கள்
  இப்படியெல்லாம் இங்கே விஷயங்கள் இருக்கின்றனவென்று பார்க்க வந்தவர்கள்
  மேலும் பலரும்

இப்போது தெருவில் யாரையும் காணவில்லை.  அங்குமிங்கும் நின்று கொண்டிருக்கும் ஒரு சிலரோ பொருட்படுத்த தக்க எண்ணிக்கையில் இல்லையென்பதால் அவர்கள் அங்கே இல்லை என்றே எடுத்துக் கொள்ளலாம்.  கண்களை மூடிக்கொண்டு பார்வையை தலை நரைத்த காலங்களில் நிலைநிறுத்தும் பழைய சோசலிஸ்ட்டுகளும் இந்தியா காஃபி ஹவுஸ் வாசலிலிருந்து கலைந்து சென்றிருந்தார்கள்.  மெட்ரோ இரயில் நிலையத்தில் ஒரு பெண் தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.      

நெடுநிலத்துள் – அகரமுதல்வன்

4
ஓவியம் வல்லபாய்
நெடுநிலத்துள் - ஓவியம் : வல்லபாய்
ஓவியம் : வல்லபாய்

வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் அம்மம்மாவின் குடிசைக்கு முன்னால் சனங்கள் குழுமியிருப்பார்கள். உடல்நிலை சரியில்லாத குழந்தைகளை தமது மடியில் கிடத்தி நிலத்தில் அமர்ந்திருக்கும் இளந்தாய்மார்கள் அம்மம்மாவிற்காக காத்திருப்பார்கள். மனக்குறை, ஏதென்று தெரியாத பயமும் பதற்றமும் பீடித்தவர்கள் உட்பட பக்தர்களும் வந்துசேர பூமியில் இருள் பூக்கத்தொடங்கியிருக்கும். குடிசையின் வலதுபக்கத்தில் நிற்கும் மிக உயரமான பனையிலிருந்து கூட்டமாய் கிளிகள் சத்தமிட்டு பறக்கும். சாதுவான காற்றிலும் காவோலைகள் உரசி அந்தப் பொழுதின் மகத்துவத்தை ஒரிசையாய் உய்விக்கும். அம்மம்மா குடிசையினுள்ளே இருக்கும் சாமிகளுக்கு பூசை முடித்துவிட்டு, கற்பூரம் எரிந்தபடியிருக்கும்    திருநீற்று தட்டோடு குழுமியிருக்கும் சனங்களுக்கு முன்னால் வந்துநிற்கையில், “அம்மாளாச்சி” என்று உருகியழுது கும்பிடுவார்கள்.

அம்மம்மாவை நானும் இந்தப் பொழுதுகளில் மூக்குத்தி அம்மன் என்று தான் அழைப்பேன். அவளின் மினுங்கும் மூக்குத்தியின் ஒளியே கடவுளை மறுப்பதற்கு ஒரு போதும் இடமளியாது. நெற்றியின் திருநீற்றுப் பூச்சு வசீகரமான புலரியை பெருங்கனிவாய் எல்லோருக்கும் நினைவுபடுத்தும். கையை நீட்டித்  “தா” என்று கேட்டதும் ஒடித்துவைத்திருந்த வேப்பிலைக்கட்டை உடனேயே எடுத்துக் கொடுப்பாள் ஒருத்தி. விரிக்கப்பட்ட ஓலைப்பாயில் அம்மன் சப்பாணி கட்டியிருந்ததும் ஒவ்வொருவராக அவளிடம் நீறுபோட்டுச் செல்வர்.அம்மாளாச்சி.. அம்மாளாச்சி என்று மனதுக்குள் உச்சரித்தபடியேயிருக்கும் சிலரோ அம்மனிடமிருந்து  ஆறுதலான வார்த்தைகளைக் கேட்பதற்காக தமது மனக்குழப்பங்களை கூறுவார்கள். காய்ச்சல் வந்த குழந்தைகளை அம்மனின் வேப்பிலையால் அடித்து தண்ணீர் தெளித்து நலம்பெற முண்டியடிப்பார்கள்.

க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி-2020

15

யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்துகின்ற இப்போட்டி, தமிழ் நவீன இலக்கிய உலகின் முன்னோடிகளின் ஒருவரான க.நா.சு அவர்கள் பெயரில், ‘க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி-2020’ என அறிவிக்கப்படுகிறது.

நோக்கம்

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இந்த உலகத்தின் எல்லா நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றை ஒவ்வொரு தனிமனிதனும் சந்திக்க வேண்டியிருக்கிறது. கொரோனாவின் நோய் தாக்கத்தை, தனிமைப்படுத்தப்பட்ட மனிதர்களை, வறியவர்களின் இடப்பெயர்வை, எதிர்கால அச்சத்தை, பொருளாதார வீழ்ச்சியை, அரசின் நடவடிக்கைகளை கதைகளின் வழி பதிவு செய்வது.

விதிமுறைகள்

  • இந்தச் சிறுகதைப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். (குறுநாவல் போட்டியில் கலந்துகொள்பவர்களும், சிறுகதைப் போட்டியிலும் கலந்து கொள்ளலாம்).
  • சிறுகதையின் மையம் கொரோனா பாதிப்பைச் சுற்றிலும் மட்டுமேஇருத்தல் வேண்டும்.
  • சிறுகதையானது யதார்த்தம், மாய யதார்த்தம், அறிவியல் புனைவு என எவ்வகையிலான கதையாகவும் இருக்கலாம்.
  • ஒரு நபருக்கு ஒரு சிறுகதை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
  • ஒரு சிறுகதையின் அளவு அதிகபட்சம் 2000 வார்த்தைகள் வரை இருக்க வேண்டும்.
  • சிறுகதையினை மின்னஞ்சலில் யூனிகோட் வடிவத்தில் மட்டுமே (WORD.DOC) –ல் அனுப்ப வேண்டும்.
  • கையெழுத்து பிரதி மற்றும் பிடிஎஃப் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி editor@yaavarum.com
  • படைப்பினை அனுப்புவதற்கு கடைசி நாள் ஜூன் 31 ஆம் தேதி, 2020.
  •  போட்டி முடிவு வெளியாகும் வரை நடுவர்கள் யார் எனக் கண்டறிவது, அவர்களோடு தொடர்பு கொள்வது என எவ்வித நடவடிக்கைகளிலும்
    ஈடுபடக்கூடாது.

உறுதிமொழி

  •  படைப்பை அனுப்பியதில் இருந்து, போட்டி முடிவு வெளியாகும் வரை அதனை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சிற்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்புவதாக இல்லை என உறுதிமொழி அளிக்க வேண்டும்.
  • ஏற்கனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்கிற உறுதிமொழியும் இருத்தல் வேண்டும்.
  • மேலும் படைப்பானது தனது சொந்த கற்பனையில் உருவானது என்றும் அது, எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிறஉறுதிமொழியும் இணைந்திருக்க வேண்டும்.

தேர்வும் பரிசும்

  •  இப்போட்டியின் முடிவில் மொத்தம் 10 சிறுகதைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு சிறுகதைக்கும்
    தலா ரூபாய் 5 ஆயிரம் வீதம் வழங்கப்படும். நடுவர்கள் பத்துக்கும் குறைவான சிறுகதைகளையே பரிசுக்குரியன எனத் தேர்ந்தெடுத்தால், அவற்றுக்கு மட்டுமே பரிசு வழங்கப்படும். அறிவிப்பின்படியான மிச்சத் தொகை, அடுத்த போட்டிக்குரிய தொகையுடன் இணைக்கப்படும்.
    “புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி -2020” பரிசு வழங்கும் விழாவில், சிறுகதைகளுக்கான ‘க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி-
    2020’க்கான பரிசும் வழங்கப்படும்.
  • நடுவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது.
  • இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைத் தொகுப்பை யாவரும் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வெளியிடும்.

தாதா மிராசி

2

கருப்பு வெள்ளை யுகத்தின் ஆளுமைகள் – 1

‘புதிய பறவை’ எனக்கு பிடித்த படம். அந்தப் படம் போல படத்தின் இயக்குனர் பெயரும் ஈர்த்திருந்தது. நமக்கு அறிமுகம் இல்லாத ஒரு பெயர். அதனாலேயே அவர் பெயர் நினைவில் நின்றுவிட்டது.

பின்னாட்களில் தான் அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதெல்லாம் தெரிந்தது. ‘புதிய பறவை’ படத்தை இயக்கிய இயக்குநரின் மற்றப் படங்கள் எப்படியாக இருக்கும் என்கிற ஆர்வம் தான் அவர் இயக்கிய படங்களைத் தொடர்ந்து பார்க்கத் தூண்டியது. தமிழ், இந்தி, தெலுங்கு படங்கள் இயக்கியிருக்கிறார். நான் தமிழ்ப் படங்களை மட்டும் பார்த்திருக்கிறேன்.

புதுமைப்பித்தன் குறுநாவல் போட்டி – 2020

16

போட்டிக்கான கடைசி தேதி மாற்றம்

 

 

 

 

 


*

யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்துகின்ற இப்போட்டி, எழுத்தாளர் புதுமைப்பித்தனின் பெயரில், ‘புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி-2020’ என அறிவிக்கப்படுகிறது.

நோக்கம்

• புதிய படைப்பாளர்களைக் கண்டுபிடிப்பது, படைப்புத் திறனை ஊக்குவிப்பது, படைப்பு வெளியை விரிவடையச் செய்வது, வாசிப்புச் சூழலை வளர்த்தெடுப்பது ஆகிய நோக்கங்களை பிரதானமாக முன்வைத்து இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்

• இந்த குறுநாவல் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

• ஒரு நபருக்கு ஒரு குறுநாவல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

• குறுநாவலின் அளவு குறைந்தபட்சம் 10 ஆயிரம் வார்த்தைகள் முதல் 12 ஆயிரம் வரை மட்டுமே இருக்க வேண்டும்.

• குறுநாவலை மின்னஞ்சலில் யூனிகோட் வடிவத்தில் மட்டுமே (WORD.DOC) –ல் அனுப்ப வேண்டும். கையெழுத்து பிரதி மற்றும் பிடிஎஃப் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

• மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி puthumaipithan.award@gmail.com

• படைப்பினை அனுப்புவதற்கு கடைசி நாள் ஜூலை 31 ஆம் தேதி, 2020.

• போட்டி முடிவு வெளியாகும் வரை நடுவர்கள் யார் என கண்டறிவது, அவர்களோடு தொடர்பு கொள்வது என எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.

உறுதிமொழி

• படைப்பை அனுப்பியதில் இருந்து, போட்டி முடிவு வெளியாகும் வரை அதனை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சிற்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்புவதாக இல்லை என உறுதிமொழி அளிக்க வேண்டும்.

• ஏற்கனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்கிற உறுதிமொழியும் இருத்தல் வேண்டும்.

• மேலும் படைப்பானது தனது சொந்த கற்பனையில் உருவானது என்றும் அது, எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியும் இணைந்திருக்க வேண்டும்.

தேர்வும் பரிசும்

• இப்போட்டியின் முடிவில் மொத்தம் 10 குறுநாவல்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு குறுநாவலுக்கும் தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் வழங்கப்படும். நடுவர்கள் பத்துக்கும் குறைவான குறுநாவல்களையே பரிசுக்குரியன எனத் தேர்ந்தெடுத்தால், அவற்றுக்கு மட்டுமே பரிசு வழங்கப்படும். அறிவிப்பின்படியான மிச்சத் தொகை, அடுத்த போட்டிக்குரிய தொகையுடன் இணைக்கப்படும்.

• தேர்ந்தெடுக்கப்படுகிற ஒவ்வொரு குறுநாவலும் தனித்தனி நூலாகப் பிரசுரிக்கப்படும்.

• நடுவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது.

• இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் குறுநாவல்களின் முதல் பதிப்பை யாவரும் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வெளியிடும்.

******

ஸ்டீஃபன் ஹாக்கிங் (நேர்காணல்)

0

ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் நேர்காணல்

மொழிபெயர்ப்பு : பாரதிராஜா

 

அண்மையில் மறைந்த  பிரபல இயற்பியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங் ‘த கிராண்ட் டிசைன்’ என்று ஒரு புதிய நூல் எழுதியுள்ளார்.  இந்த நூல் வெளியீட்டை ஒட்டி நடந்த சுவாரஸ்யமான கேள்வி பதில்களில் ஒரு பகுதி

 

கடவுள் இல்லையென்றால், அவரின் இருப்பு பற்றிய கோட்பாடு எப்படிக்  கிட்டத்தட்ட மொத்த உலகுக்குமானதானது? – பசந்தா போரா, பேசல், ஸ்விட்சர்லாந்து

கடவுள் இல்லையென்று நான் சொல்லவில்லை. கடவுள் என்பது, நாம் இங்கே இருப்பதற்கான காரணத்திற்கு மக்கள் கொடுத்துக்கொண்ட பெயர். ஆனால் அந்தக் காரணம், இயற்பியலின் விதிகளே ஒழிய நாம் தனிப்பட்ட முறையில் உறவு கொண்டாடிக்கொள்ளும் ஒருவர் அல்ல என்று நான் எண்ணுகிறேன். தனிமனிதரல்லாக் கடவுள்.

 

பிரபஞ்சத்துக்கு முடிவு இருக்கிறதா? அப்படி இருந்தால், அதற்கு அப்பால் என்ன இருக்கிறது? – பால் பியர்சன், ஹல், இங்கிலாந்து

பிரபஞ்சம் எப்போதும் கூடிக்கொண்டே செல்லும் விகிதத்தில் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மென்மேலும் வெறுமையும் கறுமையும் அடைந்து என்றென்றைக்கும் அது விரிவடைந்து கொண்டேதான் செல்லும். பிரபஞ்சத்துக்கு முடிவு இல்லையென்ற போதிலும், அதற்கு ‘பெரு வெடிப்பு’ (Big Bang) என்றதொரு தொடக்கம் இருந்தது. அதற்கு முன்பு என்ன இருந்தது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான விடை, தென் துருவத்துக்குத் தெற்கே எதுவும் இல்லை என்பது போல, பெரு வெடிப்புக்கு முன்பு எதுவும் இல்லை  என்பதே.

 

அடைய முடியாத தொலைதூர வெளிகளுக்கெல்லாம் பாய்ச்சல் நிகழ்த்துகிற அளவுக்கு நெடுங்காலம் மனிதகுலம் தாக்குப் பிடிக்கும் என்று எண்ணுகிறீர்களா? – ஹார்வி பெத்தியா, ஸ்டோன் மௌண்டைன், ஜோர்ஜியா

சூரிய மண்டலத்தில் குடியேற்றம் அமைக்கும் அளவுக்குத் தாக்குப் பிடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது என்று எண்ணுகிறேன். ஆனாலும், சூரிய மண்டலத்தில் பூமி அளவுக்கு ஏதுவான வேறு இடம் எதுவும் இல்லை. எனவே பூமியை வாழத்தகாததாக்கிவிட்டால் அதன்பின்பு தாக்குப் பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. நீண்ட கால உயிர்வாழ்வை உறுதி செய்ய, நாம் விண்மீன்களை அடைந்தாக வேண்டும். அதற்குக் காலம் பிடிக்கலாம். அதுவரை எஞ்சியிருக்க முடியும் என்று நம்புவோம்.

 

உங்களுக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோடு உரையாட வாய்ப்புக் கிடைத்தால் , அவரிடம் என்ன சொல்வீர்கள்? – ஜூ ஹுவாங், ஸ்டாம்ஃபர்ட், கனெக்டிகட்

அவர் ஏன் கருந்துளைகளை (Black Holes) நம்பவில்லை என்று கேட்பேன். ஒரு பெரிய விண்மீன் அல்லது வாயு மேகம் தன் மீதே நொறுங்கி விழுந்து கருந்துளை உருவாக்கும் என்று அவரது சார்பியல் கோட்பாட்டின் களச் சமன்பாடுகள் பொருள்குறிக்கின்றன. இது ஐன்ஸ்டீனுக்குத் தெரியும். ஆனால் எப்போதும் பொருண்மையைத் தூக்கி வீசிவிட்டு கருந்துளை உருவாவதைத் தடுக்கும் விதத்தில் வெடிப்பு போல ஏதோவொன்று நிகழுமென்று எப்படியோ அவரையே அவர் நம்பவைத்திருந்தார். அப்படியொரு வெடிப்பு நடக்காவிட்டால் என்ன செய்வது?

 

உங்கள் வாழ்காலத்தில் நீங்கள் காண விரும்பும் அறிவியல் கண்டுபிடிப்பு அல்லது முன்னேற்றம் எது? – லூக்கா சான்சி, ஆல்ஸ்டன், மாசேச்சுசெட்ஸ்.

அணுச்சேர்க்கை நடைமுறையில் ஒரு திறன் வாயில் (Source of Power) ஆவதைப் பார்க்க விரும்புகிறேன். அது மாசுபாடோ உலக வெம்மையோ இல்லாமல் வற்றாத ஆற்றல் வழங்குவதாக இருக்கும்.

 

மரணத்துக்குப் பின் நம் உணர்வு நிலைக்கு என்ன நடக்கும் என்று நம்புகிறீர்கள்? – எலியட் கிபர்சன், சியாட்டில்.

மூளை என்பது ஒரு கணிப்பொறி போலவும் உணர்வு நிலை என்பது ஒரு கணிப்பொறி நிரல் போலவும் என்று எண்ணுகிறேன். கணிப்பொறியை அணைக்கும் போது அதுவும் செயல்படுவதை நிறுத்திக் கொள்கிறது. கருத்தியல்படி, அதை ஒரு நரம்பு வலையமைப்பில் மறுவுருவாக்க முடியும். ஆனால் அதற்கு ஒருவரின் மொத்த நினைவுகளும் தேவைப்படும் என்பதால் மிகவும் கடினம்.

 

நீங்கள் ஒரு சிறந்த இயற்பியல் அறிஞர் என்ற வகையில், உங்களிடம் இருக்கும் மக்களுக்கு வியப்பூட்டத்தக்க சாதாரணமான ஆர்வங்கள் எவை? – கேரல் கில்மோர், ஜெபர்சன் சிட்டி, மிசோரி.

பாப், பாரம்பரிய, ஓபரா என்று எல்லா விதமான இசையையும் ரசிப்பேன். என் மகன் டிம் உடன் ஃபார்முலா ஒன் பந்தயத்திலும் ஆர்வம் பகிர்கிறேன்.

 

உங்கள் உடல் குறைபாடு, உங்கள் படிப்புக்கு உதவியதாகவோ தடையாக இருந்ததாகவோ உணர்கிறீர்களா? – மரியன் விக்குலா, எஸ்பூ, பின்லாந்து

‘இயக்க நரம்பணு நோய்’ (Motor Neuron Disease) பெற்ற வகையில் நான் ஒரு துர்பாக்கியசாலி என்ற போதும், மற்ற எல்லாவற்றிலும் நான் பெரும் பாக்கியவான். உடல் ஊனம் என்பது ஒரு பெரிய ஊனமாக இல்லாத சில துறைகளில் ஒன்றான கருத்தியற்பியலில் பணிபுரிந்த, புகழ்பெற்ற நூல்கள் வழியாகப் பெரும்பேறு பெற்ற அதிர்ஷ்டசாலி நான்.

 

வாழ்வின் மர்மங்கள் அனைத்துக்கும் மக்கள் உங்களிடம் விடை எதிர்பார்ப்பது ஒரு மாபெரும் பொறுப்பு போலப் படுகிறதா? – சூசன் லெஸ்லீ, பாஸ்டன்

கண்டிப்பாக என்னிடம் வாழ்வின் பிரச்சனைகள் அனைத்துக்கும் விடைகள் இல்லை. இயற்பியலும் கணக்கியலும் பிரபஞ்சம் எப்படித் தொடங்கியது என்பதை நமக்குச் சொல்லலாம் என்றாலும், அவற்றால் மனித நடத்தையைக் கணிக்க முடியாது. ஏனென்றால் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய சமன்பாடுகள் நிறைய்ய இருக்கின்றன. மனிதர்களைச் சரிக்கட்டுவது எது என்று புரிந்து கொள்வதில் மற்ற எவரையும் விட நான் சிறந்தவன் அல்லன், முக்கியமாகப் பெண்களை.

 

இயற்பியலில் புரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் மனிதகுலம் புரிந்து கொள்ளும் நாள் என்று ஒன்று என்றாவது வரும் என்று எண்ணுகிறீர்களா? – கார்ஸ்டன் குர்ஸ், பாட் ஹோனஃப், ஜெர்மனி

அப்படியேதும் நடந்திடாது என்று நம்புகிறேன். எனக்கு வேலையில்லாமல் போய்விடப் போகிறது.

 

-
  பாரதிராஜா
  bharathee@gmail.com

 

Young carers are sacrificing ambitions to look after

0

Sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.

The art to never being late?

0

Sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.

Women shouldering ‘cost and burden’

0

Sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.